(லங்கா ஈ நியூஸ் - 2021 ஜனவரி, 22, பிற்பகல் 10.30) ஒரு முறை குடித்தால் வாழ் நாளில் கொரோனா தொற்று ஏற்படாது என கூறிய குட்டி அப்பு பூசாரியின் காளி பாணியை மூச்சு விடாமல் குடித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
22ம் திகதி மாலை நெலும் மாவத்தயைில் இடம்பெற்ற பசில் ராஜபக்ஷ தலைமையிலான கூட்டத்தின் போது இது தொடர்பில் தகவல் அறிந்தவுடன் குழப்பமடைந்த பசில் கூட்டத்தை இடைநடுவில் கைவிட்டுச் சென்றுள்ளார்.
தாமரை மொட்டு கட்சியின் மாவட்ட முக்கியஸ்தர்கள் கூட்டம் பசில் தலைமையில் இடம்பெற்று வருகிறது. இதன் களுத்துறை மாவட்ட கூட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்ற போது அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கலந்து கொண்டிருந்தார். பவித்ராவுடன் பசில் நெருங்கி இருந்து பேசியுள்ளார். இந்த கூட்டத்தில் ரோஹித்த அபேகுணவர்த்தன என்ற அமைச்சர் ரத்தரங் கலந்து கொண்டிருந்ததுடன் பவித்ராவுடன் அவரும் நெருங்கி பேசி இருந்தார். .
கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வருவதற்கு முழு உலகமும் தடுப்பூசி கண்டுபிடித்து வரும் நிலையில் ராஜபக்ஷ ஆட்சியாளர்கள் மரபுகளுக்கு பின் சென்று பவித்ரா வன்னியாராச்சி ஊடாக கங்கையில் பானை போட்டு, மூட நம்பிக்கை கொண்ட பூசாரி ஒருவரின் காளி பாணியை பிரபல்யமடையச் செய்து மக்கள் முட்டாள்களாக்கி அவர்களின் உயிர் போகும்வரை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
தன் வினை தன்னை சுடும் என்பதற்கு பவித்ராவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை சிறந்த உதாரணம்.
---------------------------
by (2021-01-23 10:53:08)
Leave a Reply