~

சொத்து முடக்கம்..! சுற்றுலா தடை..! சர்வதேச குற்ற வழக்கு...! கோட்டா அரசாங்கத்தை கதிகலங்க வைக்கும் பிரேரணை குறித்து இலங்கைக்கு அறிவுறுத்திய ஜெனீவா..! இந்தியாவும் சிவப்பு எச்சரிக்கை..!

சந்திரபிரதீப் எழுதுவது

(லங்கா ஈ நியூஸ் - 2021, ஜனவரி 24, முற்பகல் 10.35) "மனித உரிமை மிறல் தொடர்பில் நம்பக்கூடிய குற்றம் சுமத்தப்பட்டுள்ள" இலங்கையின் சொத்துக்களை முடக்குவது மற்றும் சுற்றுலா முடக்கம் போன்ற தடைகளை விதிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிசேல் பெசலே அடுத்த மாதம் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள மனித உரிமை கூட்டத் தொடரில் பிரேரணை முன்வைத்து உலக நாடுகளிடன் கோரிக்கை முன்வைக்கவுள்ளார்.

அதற்கு மேலாகச் சென்றுள்ள மனித உரிமை ஆணையாளர் மனித உரிமைகளை மீறியவர்களுக்கு சர்வதேச குற்ற நீதிமன்றில் (ICC) குற்ற வழக்கு விசாரணை செய்யவும் யுத்தக் குற்றம் புரிந்தமை குறித்து ஆராய்ந்து பார்க்க மற்றும் சாட்சிகளை சேகரிக்க சர்வதேச பொறிமுறை ஒன்றை உருவாக்கவும் பரிந்துரை செய்யவுள்ளார்.

இந்தளவு கடுமையான குற்றச்சாட்டுக்களை சர்வதேசம் இலங்கைக்கு எதிராக இதற்கு முன்னர் சுமத்தியதில்லை.

இந்த அறிக்கை தொடர்பில் இலங்கையின் கோட்டாபய அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு பதில் அளிக்க ஜனவரி 27ம் திகதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார செயலாளர் அத்மிரால் ஜயநாத் கொலம்பகே சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரித்தானியா உள்ளிட்ட சில உலக நாடுகள் இணைந்து இலங்கைக்கு எதிராக பெப்ரவரி - மார்ச் மாதத்தில் ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் கொண்டுவரவுள்ள பிரேரணைக்கு ஆதரவு வழங்குவது குறித்து கோட்டாபய அரசாங்கம் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட 30/1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கி இருந்தது. ஆனால் கோட்டாபய அரசாங்கம் அந்த இணை அனுசரணையில் இருந்து விலகியிருந்தது. எந்தவொரு நாட்டுக்கும் இணை அனுசரணை வழங்கப் போவதில்லை என கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி அறிவித்துள்ளார்.  

இதேவேளை, அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது தனக்கு இரண்டு கதாபாத்திரங்கள் உள்ளதாகவும் நாய் போன்று கொலை செய்து இழுத்துச் செல்ல முடியும் எனவும் தூரநோக்கற்று வௌியிட்ட கருத்து இன்று அவருக்கே தலையிடியாக மாறியுள்ளதுடன் அவர் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதை உறுதி செய்வதாகவும் அந்த கருத்து அமைந்துள்ளது.

எனினும் கடந்த காலங்களை போன்று அல்லாமல் இந்தியாவும் இம்முறை பிரேரணைக்கு ஆதரவாக செயற்படும் என லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு தெரியவந்துள்ளது.  இதற்கு முன்னர் இலங்கைக்கு எதிரான பிரேரணையில் இந்தியா வாக்களிக்கவில்லை.    

அதற்கு காரணம் இந்தியா-ஶ்ரீலங்கா தொடர்பு என தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித் தேவால் கோட்டாவிடம் தெரிவித்த சிவப்பு எச்சரிக்கை..  

கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஆரம்பத்தில் கோட்டாபயவை தொலைபேசியில் அழைத்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் (இந்தியாவில் பிரதமருக்கு பின்னர் பிரபல நபர் பாதுகாப்பு ஆலோசகர்) அஜித் தேவால் இலங்கையில் யுத்தக் குற்றத்துடன் தொடர்புடைய நபர்களை அரசாங்கத்தின் உயர் பதவிகளில் நியமிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார். விசேடமாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன மற்றும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறித்தே அவர் கூறியுள்ளார். சர்வதேசத்தில் இவர்கள்  தொடர்பான பிரச்சினைகளுக்கு இலங்கைக்கு ஆதரவாக இந்தியாவினால் செயற்பட முடியாது என அஜித் தேவால் கூறியுள்ளார். தொலைபேசி உரையாடலின் போது அஜித் தேவாலின் கருத்தை ஏற்றுக் கொண்ட கோட்டாபய அதனை செயற்படுத்த இன்றுவரை நடவடிக்கை  எடுக்கவில்லை.
 
மற்றுமொரு சம்பவம் அண்மையில் இலங்கை வந்த இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் கூறிய விடயம்.

கலாநிதி ஜெய்சங்கர் கோட்டாவிற்கு விடுத்த சிவப்பு எச்சரிக்கை..

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் மாகாண சபை தேர்தலை நடத்தாது பிற்போட்டு வரும் நிலையில் மாகாண சபை முறைமைக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. தேர்தலுக்கு முன்னர் வாக்குகளை பெறவென இவர்கள் மேடையேற்றிய நாடகம் இது. ஆனால் இலங்கையில் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டது இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலமாகும். ஆனால் சரத் வீரசேகர போன்ற இராஜதந்திரம் தெரியாத முட்டாள்கள் இந்திய இலங்கை ஒப்பந்தம் தற்போது இரத்தாகி விட்டதாக கூறி வருகின்றனர்.

இது விடயம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவுடனான சந்திப்பின்போது கருத்து வௌியிட்டுள்ள கலாநிதி ஜெய்சங்கர், இலங்கையில் உள்ள இந்திய தமிழர்களின் நன்மைக்காக கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமையும் இந்திய - இலங்கை உடன்படிக்கையையும் தேவையெனில் இரத்து செய்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார். அப்படி செய்தால் இந்தியாவும் இலங்கையுடன் செய்து கொண்ட சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தில் இருந்து விலகி கச்சைத்தீவை மீண்டும் கைப்பற்றும் என ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இதற்கு மேலதிகமாக இந்தியாவின் மனதை காயப்படுத்திய மற்றுமொரு விடயமாக யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத்தூபி பலாத்காரமாக இடித்து அழிக்கப்பட்டமையாகும். இந்த விடயம் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது. இவ்வாறான விளையாட்டுக்கள் கோட்டாவை சிக்கலில் தள்ளியுள்ளது. எனினும் இலங்கை இந்திய உறவை வலுவிழக்கச் செய்ய மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் இதுவென கோட்டாபய சமாளித்துக் கொண்டார்.  

கடந்தகால விளையாட்டு..

இதுபோன்ற கடந்த காலத்தில் அரங்கேற்றப்பட்ட விளையாட்டுக்கள் பல உள்ளன. கடந்த ராஜபக்ஷ காலத்தில் ஐக்கிய நாடுகள் மனித ஆணையக பிரதிநிதி இலங்கையில் இருந்தபோது கோட்டையில் சர்வதேச நெஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் நான்கு பேர் கடத்தி கொலை செய்யப்பட்டனர். இலங்கையில் மனித உரிமை கவுன்ஸில் கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது திருகோணமலை மாணவர்கள் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஊடகவியலாளர்கள் சிலருடன் மஹிந்த ராஜபக்ஷ பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது ஊடகவியலாளர் போத்தல ஜயந்த கடத்தப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். முடியை வெட்டி வாயில் அடைந்து கால் இரண்டையும் உடைத்தனர். கலந்துரையாடலில் இருந்து ஊடகவியலாளர்களுக்கு சம்பவம் தெரியவந்து மஹிந்தவிற்கு அறிவித்த பின்னரே போத்தலவின் உயிர் காப்பாற்றப்பட்டது.

கலாநிதி ஜெய்சங்கருக்கும் கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறானதொரு விளையாட்டையே காட்டினார். ஆனால் இந்தியா அதன்மூலம் கடும் கோபமடைந்ததுடன் இதன் பின்னணியில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை  கவுன்ஸில் கூட்டத்தில் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு இந்தியா ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

சந்திரபிரதீப்

---------------------------
by     (2021-01-24 10:16:34)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links