(லங்கா ஈ நியூஸ் - 2021 ஜனவரி, 27 பிற்பகல் 11.30) வியத்மக என்ற கல்விமான்கள் நிறைந்த அமைப்பின் முன்னாள் பிரதானியும் தற்போதைய நாட்டின் ஜனாதிபதியுமாகிய நந்தசேன ராஜபக்ஷ அநுராதபுரத்தில் உள்ள ஞானா அக்காவின் தேவாலயத்தில் 27ம் திகதி அதிகாலை 5 மணி தொடக்கம் சுமார் எட்டு மணித்தியாலங்கள் விசேட பூஜை ஒன்றில் கலந்து கொண்டதாக லங்கா ஈ நியூஸ் உள்ளத செய்தி சேவைக்கு தகவல் வந்துள்ளது.
ஒவ்வொரு வாரத்திலும் சனி மற்றும் புதன் கிழமைகளில் (வாரத்தில் இரு தடவைகள்) கட்டாயமாக அநுராதபுரம் ஞானா அக்காவின் ஆசீர்வாதத்தை பெற செல்வதுடன் இம்முறை எட்டு மணித்தியால பூஜையில் கலந்து கொண்டதுடன் அதன்போது ஜனாதிபதி முழந்தாளிட்டு நடந்து நேர்த்திக் கடன் நிறைவேற்றியதாக கூறப்படுகிறது.
ஒரக்கல் சிஸ்டம் குறித்து ஆர்டிபிசல் இன்டலிஜன் குறித்து வாய்க்கிழிய பேசி வியத்மக ஊடாக செயலமர்வு நடத்திய தலைவர் இன்று அநுராதபுரத்தில் பூசாரி வேலை செய்யும் ஞானா அக்காவின் தேவாலயத்திற்கு ஏமாந்துவிட்டாரா என அவரது வியத்மக அணியினரே விமர்சனம் செய்யும் நிலையில் அவை எவற்றையும் கணக்கிலெடுக்காது ஜனாதிபதி ஞானா அக்காவின் ஆலோசனையில் செயற்பட்டு வருகிறார்.
அடுத்த வாரம் இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. தற்போதும் நாட்டு வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சுகாதார ஊழியர்களும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்கும் அமைச்சரவை பத்திரமும் அடுத்த வாரம் சமர்பிக்கப்படவுள்ளது. அடுத்த மாதம் சில வாரங்களில் பாரிய அளவு வௌிநாட்டுக் கடன் செலுத்தப்பட வேண்டியுள்ளது.
இந்த சவால்களை எதிர்கொள்வது தொடர்பில் ஞானா அக்காவின் வசியத்தில் உள்ள காளி அம்மன் உள்ளடங்கிய சிவப்பு நூலின் பலன் கிடைக்கவென ஜனாதிபதி விசேட பூஜையில் கலந்து கொண்டதாக லங்கா ஈ நியூஸ் இணையத்தள உள்ளக செய்தி சேவைக்கு மேலும் தெரியவந்துள்ளது.
வளர்ச்சியடைந்த உலகத்தில் பொருளாதார அரசியல் பிரச்சினைகளுக்கு காளியிடம் இருந்து தீர்வு எதிர்பார்க்கும் மரபுநிலை முட்டாள் அடிமைநிலை ஜனாதிபதிக்கு ஒரு வால் இருந்தால் வௌ்ளியில் திருடர்களை கொன்று திண்பார்.
---------------------------
by (2021-01-29 03:39:48)
Leave a Reply