~

எழுத்தை நீக்கி, பக்கங்களை அகற்றி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உண்மையை மறைக்க முடியாது..! அமெரிக்காவின் FBI இங்கு வந்து மேற்கொண்ட விசாரணையின் அறிக்கை எங்கே..!

- எழுதுவது ரசல் ஹேவாவசம்

(லங்கா நியூஸ் - 2021 பெப்ரவரி 22 பிற்பகல் 2. 45) ஏப்ரல் 21ஆம் திகதியான உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற கொடூரமான இஸ்லாமிய அடிப்படைவாத தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கடந்த ஜனவரி 27ஆம் திகதி தனது விசாரணைகளை நிறைவுக்கு கொண்டு வந்தது. குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பாதுகாப்பு பிரதானிகள் உள்ளிட்ட சுமார் 450 பேரிடம் சாட்சிகளை பதிவு செய்தது. வாகனம் ஒன்றின் தடுப்பு திடீரென இருக்கம் அடைந்தது போல ஜனாதிபதி ஆணைக்குழு தனது விசாரணைகளை நிறைவுக்கு கொண்டு வந்தது. ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலை தடுக்க செயற்படாத நபர்கள் மீது குற்றம் சுமத்துவது போன்ற கோணத்தில் தயாரிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை பூரணமானதாக இல்லை என்ற போதும் தற்போதைய அரசாங்கத்திற்கு அது ஒரு 'தலையிடியான' அறிக்கையாக மாறியுள்ளது. 

ராஜபக்ச அணி அடிப்படைவாதிகளை போசனை செய்த விதம் அம்பலம்...

இலங்கை நாட்டு வரலாற்றில் நாட்டு பொது மக்களின் பணத்தை அநியாயமாக பயன்படுத்தி வீணடித்து உருவாக்கப்பட்ட அனைத்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் ஏனைய ஆணைக்கழுக்களின் மூலம் நாட்டு மக்களுக்கு அல்லது பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நியாயம் கிடைத்ததாக வரலாறுகள் இல்லை. சர்வதேசத்தின் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் அதன் அறிக்கை தற்போது கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் இருப்பை கேள்விக் குறியாக்கும் என்பதோடு (அடிப்படைவாத அமைப்புக்களை ஊட்டி வளர்த்தமை, அவர்களை போசித்தமை, உதவி ஒத்தாசை வழங்கியமை) தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலான விடயங்கள்  இருப்பதாக தெரிவித்து அந்த அறிக்கையின் உண்மையான நகலை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, பாராளுமன்றம் மற்றும் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தாமல் நகல் அச்சிடுவதை தவிர்த்து அறிக்கையில் உள்ள சில பக்கங்களை அகற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்காக கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் இதுவரை காலமும் தங்களை எதற்கும் பயப்படாதவர்கள் என்று காட்டிக் கொண்டு தற்போது தகவல் உரிமை அறியும் சட்டத்தில் சில சரத்துக்களை மீறி வருகின்றனர்.  

ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவமானது கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஜனாதிபதி பதவியை பெற்று ஆட்சியை பிடிப்பதற்கு மிகவும் ஏதுவான காரணியாக அமைந்ததோடு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இதே அரசாங்கத்தின் கீழ் வெளியாகி உள்ளமை அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.  அடிப்படைவாத செயற்பாடுகளை இவர்கள் ஊட்டி வளர்த்து போசித்தமை இதன்மூலம் தெளிவாக அம்பலமாகி உள்ளது.

நியாயத்துக்காக முன்னிற்கும் சிலர் பல வழிகளிலும் அழுத்தங்களைப் பிரயோகித்து போராட்டங்களை நடத்தி பாதிப்புக்களை எதிர்நோக்கிய நபர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க அமைதியான முறையில் தலையீடுகளை செய்துள்ளனர். 

பேராயர் கார்டினலுக்கு தற்போதைய ஜனாதிபதியை போன்று இரண்டு முகம்..

பேரரையர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தனது நிலைப்பாட்டை வெளியிடும் வகையில் 2020 12 11 ஆம் திகதி விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தி அரசாங்கம் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை பூரணமாக தனக்கு வழங்க வேண்டும் எனவும் அவ்வாறு பூரண அறிக்கையை தனக்கு வழங்கா விட்டால் நியாயமான விசாரணை இடம்பெறா விட்டால் சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட தனது மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார். கொடூரமான தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட நபர்களின்குடும்ப உறுப்பினர்களது எதிர்பார்ப்பு நட்ட ஈடு அல்லது வேறு கொடுப்பனவுகள் அல்ல எனவும் நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே எனவும் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். 

ஒரு நாட்டுக்குள் நியாயம் கிடைக்கவில்லை என்றால் உரிமைகள் உடைய உலகில் அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் மீண்டும் இடம்பெறாது தடுப்பதற்கும் அதேபோன்று பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கவும் சர்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1988 மற்றும் 1989ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற கடுமையான மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு எதிராக தற்போதைய அரசாங்கத்தின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சிரேஷ்ட அமைச்சர் வாசுதேவ நாணயக்கார போன்றவர்கள் ஆவணங்களை எடுத்துக் கொண்டு ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சென்றனர். 

கடந்த காலங்களில் மனித உரிமைகள் மற்றும் நியாயத்தை பெற்றுக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச நிறுவனங்கள் மற்றும் மேற்குலக அமைப்புகளை விமர்சனத்திற்கு உட்படுத்திய அது தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தற்போது தமது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக சர்வதேச அமைப்புகள் மீது நம்பிக்கை கொண்டுள்ளமை மிகவும் வரவேற்கத்தக்க முன்னேற்றகரமான நடவடிக்கை ஆகும்.

அவர் 'வறட்சி காலத்தில் அழும் வானத்தைப் போல' அல்லாமல் ஒரு வருடம் கடந்துள்ள நிலையிலும் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் பொய்யான கதைகளை கூறும் தற்போதைய அரசாங்கத்தின் மீது தொடர்ந்தும் நம்பிக்கை வைப்பது பயன்தராது என்பதை உணர்ந்து அவற்றை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு சர்வதேச நம்பிக்கையை நாடிச் செல்வது காலத்திற்கு பொருத்தமானதாக அமையும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்கும் விடயத்தில் சர்வதேச அளவில் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு பல வழிகளில் ஆதரவு அதிகம் உண்டு என நாம் நம்புகிறோம்.  

பேராயர் கார்டினலின் அதிரடி புது கருத்து.. 

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கடந்த 2021 02 17 ஆம் திகதி கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற தேவ ஆராதனைகளில் கலந்து கொண்டு தெரிவித்த கருத்து முற்றிலும் வேறுபட்டது. ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதால் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கும் வழக்கை கடவுளின் நீதிமன்றத்தில் காணிக்கை இடுவதாக தெரிவித்தார். 

நீர்கொழும்பு கட்டுவாபிட்டி தேவாலயத்துக்கு சென்று கருத்து வெளியிட்ட பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றாவது தமது பக்தர்களுக்கு ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தின் மீது சர்வதேசம் பிரயோகித்து வரும் அழுத்தங்களுக்கு எதிராக அண்மைக் காலங்களில் கருத்து வெளியிட்ட பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தற்போது சர்வதேச நீதிமன்றம் சென்று தமது மக்களுக்கு நியாயத்தை பெற்றுத் தருவதாக கூறுவதில் பாரிய சந்தேகம் இருக்கிறது. சர்வதேச பீதியை ஏற்படுத்தி தற்போதைய அரசாங்கத்தை பாதுகாக்கும் திட்டமாக இது இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.

குழப்பமான நிலைப்பாட்டில் உள்ள பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை..

மனைவி தற்கொலை குண்டு தாக்குதல்களில் கொல்லப்பட்ட நபர்களின் உறவினர்களிடமிருந்து வரும் எதிர்ப்பை சமாளிப்பதற்காக தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த அனைவரும் கடவுளின் பாதத்தை அடைந்து விட்டதாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. முன்னெடுக்கும் அனைத்து திட்டங்களும் நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் தெளிவாக தெரிவதாக பேராயர் கர்தினால் அவர்களுக்கு நினைவு படுத்த வேண்டும்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சானி ஆகியோரின் சாட்சி..

தற்கொலை குண்டு தாக்குதல்கள் தொடர்பில  அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாத வஞ்சகமான கதைகளுக்கு பதிலாக பாதுகாப்பு பிரிவு பிரதானிகள் சிலர் எடுத்துக்காட்டிய சில கருத்துக்கள் தொடர்பில் ஆழமாக கவனம் செலுத்த வேண்டும். 

குற்ற விசாரணை திணைக்களத்திற்கு பொறுப்பாக செயல்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கி, ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்திய மற்றும் இந்தத் தாக்குதல்களை திட்டமிட்ட மற்றும் அதற்கு நிதி உதவி வழங்கி ஒத்துழைத்த குழுக்களை கண்டுபிடிக்கும் வரை நாட்டின் தேசிய பாதுகாப்பு அபாயத்தில் என கூறியிருந்தார். சஹ்ரான் உள்ளிட்ட தற்கொலை குண்டு தாரர்களுக்கு நிதி உதவி மற்றும் ஒத்துழைப்புகளை வழங்கியது சர்வதேச நாடுகள் அல்ல என்பதும் உள்நாட்டில் என்பதும் இங்கே மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். 

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இறுதியாக காட்சி அளித்த குற்ற விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகர, ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் ஐஎஸ்ஐஎஸ் என்று சொல்லப்படும் சர்வதேச பயங்கரவாத அமைப்புக்கோ அல்லது வெளிநாடு ஒன்றுக்கோ தொடர்பு இருப்பதாக குற்ற விசாரணை திணைக்களத்தின் (சிஐடி) அடிப்படை விசாரணையில் இருந்து தெரியவரவில்லை என குறிப்பிட்டுள்ளார். 

குற்றவாளிகள் அரசாங்கத்திற்கு தெரிந்த மற்றும் அவர்களுடன் தொடர்புபட்ட நபர்களா? 

இந்த விடயங்களை வைத்து பார்க்கும் போது குற்றவாளிகள் புலப்படும் உண்மை யாதெனில் குற்றவாளிகள் நாட்டுக்குள் சுதந்திரமாக இருக்கின்றனர் என்பதாகும். நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது கேள்விக்குறியாக இருந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு தமது ஆட்சியின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளதாக தற்போதைய அரசாங்கம் அடிக்கடி கூறி வருவதன் பின்னணியில் சந்தேகம் இருக்கிறது. எதனை அடிப்படையாக வைத்து தற்போதைய அரசாங்கம் அவ்வாறு கூறி வருகிறது. 

குற்ற விசாரணை தொடர்பான விசேட புலனாய்வாளர்கள் சுட்டிக்காட்டும் விடயத்தின் படி மிலேச்சத்தனமான தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் வரை நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆபத்தில் என்றால் தற்போதைய கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின் கீழ் நாட்டின் தேசிய பாதுகாப்பு வலுவாக உள்ளதென அவர்கள் கூறுவது இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத குற்றவாளிகள் தற்போதைய அரசாங்கத்திற்கு நன்கு தெரிந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என்பதாலா? 

அப்படியானால் தமது ஆட்சி அதிகார தேவைக்காக எதிர்வரும் காலங்களிலும் நாட்டில் அப்பாவி மக்களை இலக்கு வைத்து மிலேச்சத்தனமான கூட்டுக் கொலைகள் இடம்பெற வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது அல்லவா? அதனால் நீதி நியாயம் தாமதமாகி செல்வதால் என்பது மற்றுமொரு பாரிய அழிவிற்கான வழியை ஏற்படுத்தும். 

தாக்குதல் தொடர்பில் தயாசிரி வெளியிட்ட கருத்துடன் இணக்கம்..

நீண்ட காலமாக நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த அடிப்படைவாதிகளின் தாக்குதல் தொடர்பில் அரசியல்வாதிகள் கூறும் கேலிக்குரிய கருத்துக்கள் அடிக்கடி மேடைக்கு வருகின்றன. 

அந்த வரிசையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர அண்மையில் குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிடுகையில்,  'நாமல் குமார' என்ற நபர் வெளியிட்ட தகவல்படி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச கொலை சதி தொடர்பில் பார்க்கும் போது இவ்விரு தலைவர்களும் ஒருவர் ஜனாதிபதி பதவியில் இருந்தவர் மற்றொருவர் ஜனாதிபதி பதவியை எதிர்பார்த்தவர் எனவே இவர்கள் இருவரையும் கொலை செய்து அதிகாரத்தை கைப்பற்ற வேண்டிய தேவை யாருக்கு இருந்தது என்பது பற்றி உடனடியாக தேடிப்பார்த்து விசாரணை நடத்த வேண்டிய தேவை இருப்பதாக தெரிவித்தார். 

நாமும் தயாசிறி ஜயசேகரவிற்கும் ஒரு சவால் விடுக்க விரும்புகிறோம்.  உங்களது கட்சியை புறந்தள்ளி பதவிகள் கொடுக்கும் போதும் உங்களுக்கு அநீதி இழைத்து செயல்படும் இந்த அரசாங்கத்திற்கு சார்பாக நீங்கள் செயல்படும் நிலையில், கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் நாமல் குமார் என்ற நபரின் நாடகத்தின் திரையை திறக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நாமல் குமார வெளியிட்ட கொலை சூழ்ச்சி கருத்துக்களை மீண்டும் களத்திற்கு கொண்டு வரவும். நாமல் குமார வெளியிட்ட  கொலை சதி தகவல் தொடர்பான விசாரணையை ஞாயிறு தற்கொலைக் தாக்குதல் சம்பவத்துடன் நிறுத்தியது யார்..? ஏன் நிறுத்தினார்கள்..?

தயாசிறி ஜயசேகர மறக்காமல் இந்த கேள்விகளை கேட்க வேண்டும். இதேவேளை ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு மாதத்தின் பின்னர் நாடு முழுவதும் ஆங்காங்கே முஸ்லிம் மக்களின் சொத்துக்களை அழித்து அடாவடி தனத்தில் ஈடுபட்ட நபர்களின் பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் யார் என்பதை தேடி பார்க்குமாறு தயாசிறி ஜயசேகரவிற்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவு செய்யப்பட்ட குருநாகல் மாவட்டத்தின் ஹெட்டிபொல பொலிஸ் பிரிவு பிரதேசத்தில் அப்போது நாமல் குமார் உள்ளிட்ட குண்டர் குழுவினர் வந்து முஸ்லிம்களின் சொத்துக்களை அடித்து நொறுக்கி கலவரத்தில் ஈடுபட்டதை தயாசிறி ஜயசேகர மறந்து விட்டமை வெட்கக் கேடான விடயம். அதேபோல மினுவாங்கொடை பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகளை உடைத்து எரித்து நாசகர செயலில் ஈடுபட்டது பிவித்துரு ஹெல உறுமய என்ற உதய கம்மன்பில தலைமையிலான கட்சியின் இரண்டாம் நிலை பதவியில் உள்ள மதுமாதவ அரவிந்த உள்ளிட்ட குழுவினர் என்பதை மறந்து விட வேண்டாம். அன்று அவர்கள் யாரை பாதுகாக்க இவ்வாறு செயற்பட்டார்கள் என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டியது மிக முக்கியமான விடயமாகும். 

ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரிகளில் தயாசிறி ஜயசேகரவும் ஒருவர் என்பதை நினைவுபடுத்த வேண்டும். காரணம் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு தேவையானவர்களை அழைக்காமல் தனக்கு வேண்டப்பட்ட நபர்களை மாத்திரமே அழைத்தார். அவ்வாறு அவர் அழைத்த வேண்டப்பட்ட நபர்களில் தயாசிறி ஜயசேகரவும் ஒருவராவார். எனவே தேசிய பாதுகாப்பு வீழ்ச்சி அடைவதற்கு தயாசிறி ஜயசேகரவும் ஒரு காரணம். 

நாமல் குமாரவிற்கு சிறிசேன மற்றும் கோட்டாபயவின் அரவணைப்பு..

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் மீதான கொலை சதி தொடர்பான நாமல் குமாரவின் கதையை மைத்திரிபால சிறிசேன நன்கு அறிந்து வைத்து இருந்ததுடன் அப்போதைய முன்னாள் அரச புலனாய்வு பிரதான உள்ளிட்ட குழுவினர் ராஜபக்ஷக்களுக்கு உதவி செய்வதால் இது கூட்டாக தயாரிக்கப்பட்ட நாடகமாகும்.

அதன்மூலம் பயங்கரவாத தடுப்பு பிரிவின் (TID) பிரதானி நாலக்க சில்வாவை அவசரமாக சிறையில் அடைத்து நீண்ட காலம் அவருடன் காணப்பட்ட பகைக்கான வஞ்சத்தை 'ஒரே கல்லில் இரண்டு மாங்காய்' என நிலந்த ஜயவர்த்தன தீர்த்துக் கொண்டார்.

நாமல் குமார என்ற தனது அடியாளுக்கு மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் பல வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டதுடன் அதற்கு மேலதிகமாக கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் தாமரை மொட்டு கட்சியின் உறுப்புரிமை, தேர்தலுக்கு வேட்பு மனு உள்ளிட்ட கட்சி  சலுகைகளும் ஜனாதிபதி செயலகம் ஊடாக சொகுசு வாகனம், சாரதி மற்றும் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றில் 225 உறுப்பினர்களின் 15000 பாதுகாப்பு அதிகாரிகளும் தாக்குதல் குறித்து அறிந்திருந்தனர்..

ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பாதுகாப்புக்கு பொறுப்பாக செயற்பட்ட அனைவரும் ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளாக இருப்பதை தவிர்க்க முடியாது. அதேபோன்று மேற்கூறியது போல மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட அப்போது எதிர்கட்சி உறுப்பினர்களாக இருந்த தயாசிறி ஜயசேகர, திலங்க சுமதிபால, மஹிந்த அமரவீர, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட அனைவரும் தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டும். முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தன்னை பாதுகாப்பு கவுன்ஸில் கூட்டத்திற்கு அழைக்கவில்லை அதனால் தனக்கு இது குறித்து தெரியாது என குழந்தை போல் தப்பித்துக் கொள்ளவும் முடியாது.  
 
தீர்மானம் எடுக்கக் கூடிய நாட்டின் தலைவர் தொடக்கம் பாராளுமன்றில் உள்ள 225 உறுப்பினர்கள் மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் 15000 பாதுகாப்பு உறுப்பினர்கள் வரை ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர்

(2019.04.11) திகதி தொடக்கம் இந்த தாக்குதல் திட்டம் குறித்து அறிந்து வைத்திருந்ததாக அரச புலனாய்வு பிரிவு பொறுப்பாளர் நிலந்த ஜயவர்த்தன வெட்கமின்றி ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சி அளித்தார்.
 
வேறு ஒரு நாட்டில் இவ்வாறு குற்றம் புரிந்து 300 உயிர்கள் பலியாகி 500 பேர் வாழ்நாள் முழுக்க முடமாக்கப்பட்ட சம்பவத்திற்கு இடமளித்த கேடுகெட்ட நபர்கள் பொது மக்களின் வரி பணத்தில் தொடர்ந்து பதவிகளை வகித்து சலுகைகளை அனுபவித்து சொகுசு வாழ்க்கை வாழ அனுமதி வழங்க்கப்பட்டிருக்குமா?

மக்கள் சிந்தனைகளை மாற்றி அமைக்க கேவலமான முயற்சி..

ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றத்தில் இருந்து தப்பிக்கவும் மற்றும் அதனை மூடி மறைக்க தேவையற்ற கதைகள், நாடகங்கள், வதந்திகள் உருவாக்கப்பட்டு வருகிறது. ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் விசாரணை அறிக்கை நாட்டின் பிரதான பேசு பொருளாக மாறி விடக் கூடாது என்பதற்காக அரசியல் பழிவாங்கல் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை அரசாங்கம் களத்திற்கு கொண்டு வந்துள்ளது. நாட்டின் எதிர்கட்சி உறுப்பினர்கள் அப்பாவி மக்களின் உயிரிழப்புடன் தொடர்புடைய ஆணைக்குழு அறிக்கை பற்றி பேசாமல் தற்போது அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழு அறிக்கை பற்றி பேசத் தொடங்கியுள்ளனர். (மஹிந்த ராஜபக்ஷ போன்ற தலைவர்கள் எதிர்கட்சியில் இருந்தால் பிரஜா உரிமை பிரச்சினையை ஓரத்தில் தள்ளிவிட்டு ஞாயிறு தற்கொலை தாக்குதல் குற்றவாளிகளை தண்டிக்குமாறு வலியுறுத்தி நாடு முழுவதும் பேரணி, ஆர்ப்பாட்டம் என்பவற்றை நடத்தி இருப்பர்) திறமையற்ற எதிர்கட்சி இந்த நிலைமைகளை உணராது இருப்பது அரசாங்கத்திற்கு மிகப் பெரிய ஆசீர்வாதமாகும்.  

அரசாங்கம் மற்றும் சில குப்பை ஊடகங்கள் வேண்டுமென்றே கத்தோலிக்க மக்களின் சிந்தனைகளை திசை திருப்பும் வகையில் முத்துராஜவல பிரதேச அழிப்பு விடயத்தை முன்னிறுத்தி பிரச்சாரங்களை செய்து வருகின்றன. முத்துராஜவல பகுதியைச் சுற்றியுள்ள கத்தோலிக்க மக்கள் ஞாயிறு கொடூர தாக்குதலில் கொல்லப்பட்ட தமது இரத்த உறவுகளுக்கு நீதி வேண்டி வீதிக்கு வரவில்லை. ஆனால் அரசாங்கம் சோடித்துள்ள முத்துராஜவெல காணி பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாகனங்களில் கருப்பு கொடிகளை கட்டிக் கொண்டு எதிர்ப்பு பேரணி செல்கின்றனர். முத்துராஜவெல சுற்றாடல் அழிப்பு குறித்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் ஞாயிறு தாக்குதல் விடயத்தை மூடி மறைக்க முயற்சிக்கும் திட்டத்திற்கு அமைப்பாக ஒன்று சேர்ந்து பாரியளவு எதிர்ப்பு தெரிவிக்க வீதிக்கு இறங்க வேண்டும்.  

கீழ் காணும் முக்கிய 7 கேள்விகளுக்கு பதில் தர வேண்டும்...!

பல யுக்திகளை பயன்படுத்தி உண்மையை மறைக்க கேடுகெட்ட வகையில் முயற்சிக்கும் அரசாங்கத்திற்கு தொடர்புடைய நபர்களிடம் இந்த உபாய மார்கத்தை தோல்வி அடையச் செய்ய இதற்கு முன்னர் நாம் எழுதிய கட்டுரைகள் செய்திகள் உதவியாக இருக்கும் என்பதுடன் இந்த குற்றம் குறித்து மேலும் தௌிவுபடுத்தவும் நியாயத்தை பெற்றுக் கொள்ளவும் இந்த கேள்விகள் உதவும் என தெரிவித்துக் கொள்கிறோம்.

01. 2010ம் ஆண்டு தொடக்கம் 2014ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் சஹரானின் தேசிய தவஹித் ஜமாத் (NTJ) அமைப்பு உள்ளிட்ட 21 அடிப்படைவாத அமைப்புக்களுக்கு அப்போதைய அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக (மக்கள் பணத்தில்) சம்பளம் வழங்கியமை தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தாதது ஏன் ?

02. ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் திகதி கிடைக்கப்பெற்ற முதலாவது புலனாய்வு தகவல் குறித்து மேலதிக விசாரணைகள் நடத்தாமல் இருந்தது ஏன் ?

03. 2019.04.09. தேசிய புலனாய்வு பிரதானி ஓய்வு பெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் ஊடாக சஹரான் உள்ளிட்ட தற்கொலை குண்டுதாரிகளின் அடிப்படைவாத பயங்கரவாதிகளின் பெயர் மற்றும் விலாசம் உள்ளிட்ட விடயங்களை கடிதம் மூலம் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை தௌிவுபடுத்தாமல் இருந்தது ஏன் ?

04. விசேட பாதுகாப்பு பிரிவு பொறுப்பாளராக செயற்பட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியலால் தசநாயக்கவினால் எழுத்து மூலம் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 2019.04.11 திகதி பொலிஸ் பொதுமக்கள் பிரிவை தவிர்த்து, அமைச்சு பாதுகாப்பு பிரிவு பணிப்பாளர்,  தூதரக பாதுகாப்பு பிரிவு பணிப்பாளர், பணிப்பாளர் நீதிமன்ற பிரிவு, பணிப்பாளர் ஓய்வு பெற்ற ஜனாதிபதி பிரிவு 04 மற்றும் 05 ஆகியவற்றுக்கு மாத்திரம் அறிவுறுத்தியமை யாரின் ஆலோசனையின் பேரில் ?

05. புத்த பெருமான் மனித இறைச்சி உட்கொண்டதாக பொய் தகவலை சமூகமயப்படுத்தி மற்றுமொரு இனவாத மதவாத மோதல்களை உருவாக்க முயற்சித்த சிலோன் தவஜித் ஜமாத் (CTJ) அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துல் ராசிக் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் இடையேயும் இந்தியாவிற்கு தப்பிச் சென்ற அல்லது (புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவருக்கு தெரியப்படுத்தி மறைந்திருப்பதாக சந்தேகிக்கப்படும்) 'புலஸ்தினி மகேந்திரன்' என்ற 'சாரா ஜெஸ்மின்' ஆகியோருக்கு இடையில் காணப்பட்ட உள்ளக தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தாதது ஏன் ? (2012ம் ஆண்டு அப்துல் ராசிக் என்பவரின் தலைமையில் சிலோன் தவஜித் ஜமாத் (CTJ) அமைப்பின் பிரதான அலுவலகம் மாளிகாவத்தையில் திறந்து வைக்கப்பட்டது அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பங்களிப்பில் என்பது குறிப்பிடத்தக்கது)

06. 2015ம் ஆண்டின் பின்னர் சஹரான் என்ற அடிப்படைவாதியின் செயற்பாடுகளை நாட்டுக்கு வௌியிடுவதை தடுப்பதற்கு வடக்கு மாகாணத்தில் போலியாக LTTE அமைப்பின் மீள் உருவாக்கம் தொடர்பில் செய்தி, கதை, வதந்தி, போஸ்டர், கையேடு போன்றவற்றை தயாரித்தது யார் ? அதற்கு ஆலோசனை வழங்கியது யார் ?

07. ஞாயிறு தாக்குதல் நடைபெற்ற பின்னர் 2019.04.22 திகதி இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்காவின் FBI அமைப்பினர் மேற்கொண்ட விசாரணை அறிக்கை எங்கே.. ? FBI மற்றும் வேறு சர்வதேச விசாரணை குழுவினர் அப்போது நாட்டுக்கு வந்து நடத்திய விசாரணைகளின் அறிக்கை குறித்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணை நடத்தாமல் இருந்தது ஏன் ?

- ரசல் ஹேவாவசம்

---------------------------
by     (2021-02-22 18:31:58)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links