~

முன்னாள் ஆளுநரின் மகன் மீது பேலியகொட பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து கொடூர தாக்குதல்..!

(லங்கா ஈ நியூஸ் - 2021 பெப்ரவரி , 26 முற்பகல் 11.50) நல்லாட்சி அரசாங்க காலத்தின் முன்னாள் மத்திய மாகாண ஆளுநர் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்தரி குணரட்னவின் இரண்டாவது மகனான சட்ட மாணவன் மிஹார குணரட்ன மீது பேலியகொட பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து பத்து பேர் அடங்கிய பொலிஸ் குண்டர் குழு மிகவும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் காயமடைந்த நபர் தற்போது ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த  சம்பவம் கடந்த 25ம் திகதி இரவு வேளையில் இடம்பெற்றுள்ளது.

மிகவும் ஆபத்தான விடயம்..

இந்த சம்பவத்தில் உள்ள மிகவும் ஆபாயகரமான விடயம் என்னவென்றால், மிஹார குணரட்ன மீது தாக்குதல் நடத்தியவர்கள் அவரை சட்டத்தரணி சரித்த குணரட்ன (மிஹார குணரட்னவின் மூத்த சகோதரர்) என தவறாக நினைத்தே தாக்குதல் நடத்தியுள்ளனர். எனவே சட்டத்தரணி என தெரிந்தும் பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து கடுமையாக தாக்குதல் நடத்தி உள்ளனர்.

லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு வந்துள்ள தகவல் படி பொலிஸாரின் கொடூர தாக்குதலின்பின்னணி இதோ..  

ஏதோ ஒரு நிதி மோசடி சம்பவம் தொடர்பில் பேலியகொட பொலிஸாரால் கடந்த 23 ஆம் திகதி ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் சட்டத்தரணியாக மைத்திரி குணரட்னவின் மூத்த மகன் சரித்த குணரட்ன பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் சிவில் உடையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விசாரணை நடத்தியுள்ளார். நிதி மோசடி காரணமாக கைது செய்யப்பட்டிருந்த போதும் சிவில் உடையில் சந்தேகநபரிடம் விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரி போதைப் பொருள் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை காட்டி அவர்களை போல போதைப் பொருள் குற்றச்சாட்டு சுமத்தி சிறையில் அடைப்பதாக மிரட்டியுள்ளார். இதன்போது சிவில் உடையில் இருந்த பொலிஸ் அதிகாரியை சட்டத்தரணி சரித்த குணரட்ன 'சார்ஜன் மாத்தியா' என அழைத்துள்ளார். அப்போது  'நான் சார்ஜன் இல்லை சிஐ ஒருவர்' (பிரதான பொலிஸ் பரிசோதகர்) என சிவில் உடையில் இருந்த அதிகாரி கோபத்துடன் பதில் அளித்துள்ளார்.  'நீங்கள் சிவில் உடையில் இருப்பதால் யார் என்று நான் எப்படி அடையாளம் காணுவேன்' என சட்டத்தரணி சரித்த குணரட்ன பதில் கேட்டுள்ளார். இதன்போது கடும் கோபமடைந்த பொலிஸ் அதிகாரி சரித்த குணரட்னவிடம் சட்டத்தரணி அடையாள அட்டையை கேட்டுள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையை சரித்த குணரட்ன சமர்பித்துள்ளார். அதன் பின் குறித்த சிவில் உடையில் இருந்த பொலிஸ் அதிகாரி சிஐ பிரதான பொலிஸ் பரிசோதகர் லின்டன் சில்வா என அடையாளம் காணப்பட்டார்.

"நீ அன்று சத்தம் போட்டாய் இப்போது எங்கே அந்த சத்தம்"

இந்த சம்பவத்தின் பின் கடந்த 25 ஆம் திகதி இரவு வேளையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு சட்டத்தரணி சரித்த குணரட்னவின் இளைய சகோதரரான மிஹார் குணரட்ன இரவு உணவு கொண்டு சென்றுள்ளார். விஹார குணரட்ன மூன்றாம் வருட சட்ட மாணவர். அப்போது இரவு 10 மணி இருக்கும். சரித்த குணரட்ன மற்றும் மிஹார் குணரட்ன ஆகிய சகோதரர்கள் இருவரும் உருவத்தில் ஒரே தோற்றம் கொண்டவர்கள். அங்கு பிரதான பொலிஸ் பரிசோதகர் லின்டன் சில்வா ' நீ அன்று என்னிடம் பாட் போட்டாய் தானே' என்று கூறி மிஹார் குணரட்னவை இழுத்துக் கொண்டு பொலிஸ் நிலையத்தின் மேல் மாடிக்கு சென்றுள்ளார். அப்போது 'நீ அன்று வாய் போட்டாய் தானே எங்கே அந்த சத்தம் இன்று..' என கேட்டபடி கடுமையாக தாக்கியுள்ளார். அங்கு சுமார் 10 பொலிஸார் சுற்றி நின்று விஹார குணரட்ன மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் மூலம் தௌிவாகும் வியடம் என்னவெனில் சந்தேகநபர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் மீது கொடூர தாக்குதல் நடத்தும் அளவு பேலியகொட பொலிஸார் துணிந்தவர்கள் என்பதாகும்.

உடம்பை சொத்தாக மாற்றினர்..

எனினும் மிஹிர குணரட்ன சந்தேகநபருக்கு உணவு வழங்க சென்ற போது வாகனத்தில் சாரதியிடன் சென்றுள்ளார். பொலிஸ் நிலையத்திற்குள் உணவு வழங்க சென்ற மிஹிர குணரட்ன ஒரு மணி நேரத்திற்கு மேல் வௌியில் வராத காரணத்தால் சந்தேகம் கொண்ட சாரதி பொலிஸில் இது குறித்து விசாரிக்கவே எதுவும் தெரியாது என பதில் கிடைத்துள்ளது. எனினும் கடுமையாக தாக்கி மேல் மாடியில் இருந்து மிஹார குணரட்ன கீழே அழைத்து வரப்படுவதை சாரதி கண்டுள்ளார். நிலைமை மோசம் என அறிந்து கொண்ட சாரதி இது விடயம் குறித்து உடனடியாக தொலைபேசி ஊடாக ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரட்னவிற்கு அறிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரட்ன உடனடியாக விரைந்து பேலியகொட பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த போது மகன் விஹார குணரட்னவை அவர்கள் காட்டவில்லை. விஹார குணரட்ன பொலிஸ் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய காரணத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மறுநாள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் பொலிஸ் நிலையத்தில் மைத்திரி குணரட்னவிடம் தெரிவித்துள்ளனர். அப்போது விஹாரவை பொலிஸார் ராகம வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றிருந்தனர். சந்தேகநபரை கைது செய்த போது பொலிஸ் ஜீப் வண்டியில் தலை மோதி காயம் ஏற்பட்டதாகவும் காயத்திற்கு சிகிச்சை அளித்த பின் சந்தேகநபரை தங்களிடம் ஒப்படைகக்குமாறும் பேலியகொட பொலிஸார் ராகம வைத்தியசாலை வைத்தியர்களிடம் தெரிவித்துள்ளனர். எனினும் தாக்கப்பட்ட சந்தேகநபரை சோதித்த வைத்தியர்கள் பொலிஸாரால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தனர். அதன்போது தான் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரட்னவின் இளைய மகன் எனவும் மூன்றாம் வருட சட்ட மாணவர் எனவும் விஹார் குணரட்ன தன்னை வைத்தியர்களிடம் அடையாளப்படுத்தியுள்ளார். ராகம வைத்தியசாலை வைத்தியர்கள் நோயாளியை பொலிஸாரிடம் மீள் ஒப்படைக்கவில்லை என்பதுடன் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரட்னவிற்கும் தனது மகன் குறித்து அறிவித்துள்ளனர்.

பொலிஸாரும் தான் யார் மீது தாக்குதல் நடத்தினோம் என்பதை பின்னரே தெரிந்து கொண்டனர். கடுமையாக தாக்கப்பட்ட மிஹார குணரட்ன தற்போது ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

சட்டத்தரணிகளை இலக்கு வைத்து...

இந்த சம்பவமானது புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் சட்டத்தரணிகளை இலக்கு வைத்து பொலிஸார் ஊடாக முன்னெடுக்கும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளின் வரிசையில் ஒன்றாகும். இதற்கு முன்னரும் கைது செய்யப்படும் சந்தேகநபர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் அச்சுறுத்தப்பட்ட சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன. அண்மையில் இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் சார்பில் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று வீடு திரும்பிய சட்டத்தரணி ஒருவர் பயணித்த வாகனத்தின் நான்கு டயர்களிலும் காற்று இல்லாமல் செய்யப்பட்டது. மிக மோசமான சம்பவம் என்றால் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு மாத கணக்கில் வழக்கு இன்றி தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் ஆகும்.

பொலிஸ் துறையில் உள்ள சில முரட்டுத்தனமான பொலிஸார் எவ்வித பயம் சந்தேகம் இன்றி இவ்வாறு மூர்க்கத்தனமாக நடந்து கொள்ள காரணம் கோட்டா அரசாங்கத்தின் தமக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையினால் ஆகும். இது மிகவும் அச்சமூட்டக் கூடிய ஆபத்தான நிலை என்பதை ஒட்டு மொத்த சட்டத்தரணிகள் மாத்திரமன்றி நாட்டு மக்களும் விளங்கிக் கொள்ள வேண்டும்.  

முரட்டுத்தனமான பொலிஸாரின் கொடூர தாக்குதலுக்கு உள்ளான மிஹார் குணரட்னவின் புகைப்படங்கள் கிழே 

---------------------------
by     (2021-02-26 18:18:25)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links