(லங்கா ஈ நியூஸ் - 2021, மார்ச் , 03 முற்பகல் 07.00) ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் வெடிக்கப்பட்ட குண்டுகள் சஹரான்களின் உடலில் இருந்தது என்றாலும் அதனை பின்புலத்தில் இருந்து இயக்கி வெடிக்க வைத்த ரிமோட் கன்ரோல் ராஜபக்ஷக்களின் கைகளில் இருந்தது. சஹரான்களை புலனாய்வு பிரிவுக்கு இணைத்துக் கொண்டது, இரகசிய கணக்கில் இருந்து பணம் வழங்கியது, ஆயுதம் வழங்கியது, சஹரான் வெறுப்பில் புலனாய்வு பிரிவில் இருந்து விலகி இருந்த போது அவரை சந்தித்து அடிப்படைவாத தவஹித் ஜமாத் அமைப்பை உருவாக்குமாறு கேட்டது, அடிப்படைவாத அமைப்பு உருவான பின் அலுவலக உதவி வழங்கமை மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் அதிகாரத்தில் இருந்து தூக்க எறியப்பட்ட பின் இந்த சூழ்ச்சிக்கு பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு வழங்கியது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆவார். சஹரான் ஹாசிமை கைது செய்ய இருந்த பயங்கரவாத தடுப்பு பிரிவு பிரதானி நாலக சில்வாவை தனது அடியாள் ஒருவரை ஏவி விட்டு பொய் குற்றச்சாட்டு சுமத்தி சிறையில் அடைத்து, சஹரான் குழுவினர் குண்டு வெடிக்கச் செய்யப் போவதாக 8 தடவைகள் இந்தியா வழங்கிய எச்சரிக்கையை நாய்க்கூட கணக்கிலெடுக்காது குண்டு வெடித்த போது சிங்கப்பூரிற்கு தப்பிச் சென்றவர் மைத்திரிபால சிறிசேன ஆவார். தாக்குதலுக்கு ஒத்துழைப்பு உதவி வழங்கவென மில்லியன் கணக்கில் டொலர் பெற்றுக் கொண்டதும் மைத்திபால சிறிசேனவே.
இவை அனைத்தும் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ள நிலையில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இவை குறித்து ஆராயாது வேறு பரிந்துரைகளை செய்து முட்டாள்தன அறிக்கையை வௌியிட்டுள்ளது. பொறுப்புத் தவறிய விடயத்திலேயே மைத்திரிபால சிறிசேன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் குற்றம் நடப்பதற்கு ஒத்துழைப்பு மற்றும் உதவி வழங்கியமை குறித்தே மைத்திரிபால சிறிசேன மீது குற்றம் சுமத்தப்பட வேண்டும். ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் பின்னணியில் இருந்த குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்கு பதிலாக நாட்டில் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற சம்பந்தமே இல்லாத பரிந்துரைகளை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு செய்துள்ளது. இதற்கு காரணம் கேடுகெட்ட தாக்குதலை நடத்தி இன மத அடிப்படைவாதத்தின் ஊடாக ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷக்கள் மற்றும் சிறிசேனக்களை பாதுகாக்கவே இவ்வாறு மாறுபட்ட பரிந்துரை செய்துள்ளனர்.
இந்த உண்மையை நாட்டு மக்கள் தற்போது புரிந்து கொண்டுள்ளனர். அதனால் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகளை சட்டத்திற்கு முன் கொண்டு வந்து தண்டனை வழங்குமாறு வலியுறுத்தி எதிர்வரும் மார்ச் 7ம் திகதி ஞாயிறு தினத்தன்று நாடு முழுவதும் 'கருப்பு ஞாயிறு' என்ற பெயரில் எதிர்ப்பு நடவடிக்கைகள் பலவற்றை முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்தவ தேவாலயம், இந்து கோவில், முஸ்லிம் பள்ளி மற்றும் பௌத்த விகாரைகளின் முன் இந்த கருப்பு ஞாயிறு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. இலங்கை வரலாற்றில் அனைத்து மதங்களுக்கும் ஒன்று சேர்ந்து முன்னெடுக்கும் கவனயீர்ப்பு போராட்டமாக இது பதியப்படவுள்ளது.
இலங்கையில் ஞாயிறு தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் 21ம் திகதியுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகிறது. அதுவரை இந்த போராட்டத்தை முன்னெடுக்க
---------------------------
by (2021-03-04 17:02:50)
Leave a Reply