~

ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் மறைந்திருக்கும் சக்தி தற்போதைய அரசாங்கமா..? தற்போதைய அரச புலனாய்வு பணிப்பாளர் காத்தான்குடி சென்று சஹரானை சந்தித்தது ஏன்..?

- எழுதுவது ரசல் ஹேவாவசம்

(லங்கா ஈ நியூஸ் - 2021 மார்ச் , 10 முற்பகல் 10.30 ) கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கையில் இடம்பெற்ற மிகவும் கொடூரமான கூட்டுக் கொலையான 2019 ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து தற்போதைய அரசாங்கம் தான் தோன்றித் தனமாக தகவல்களை மறைத்து வருகிறது. அதன்படி பிரதிவாதிகள் மற்றும் முறைப்பாடு செய்தவர்கள் ஆகிய இரு தரப்பினர் சார்பிலும் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு குழப்பங்களின் சாதனையை முறியடித்து வருகிறது.

பூரண அதிகாரம் கொண்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய இந்த ஜனாதிபதி ஆணைக்குழு சுமார் 15 மாதங்கள் விசாரணை நடத்தி அறிக்கை தயாரித்து ஆடிய ஆட்டமும் இல்லை கொட்டிய மேலமும் இல்லை என்றவாறு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

2021ம் ஆண்டு ஜனவரி 27ம் திகதி தமது பணிகளை நிறைவுக்கு கொண்டு வந்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை மக்களிடம் வௌிப்படுத்த தாமதித்து மேலும் காலம் கடத்தும் நோக்கில் நிபுணர் குழு தயாரித்த அறிக்கையை ஆராய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அபூர்வமான அமைச்சர்கள் அடங்கிய குழுவை நியமித்தார். அவ்வாறு நியமித்த குழுவில் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அமைச்சர் உதய கம்மன்பில, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, அமைச்சர் ரமேஸ் பத்திரண மற்றும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஆகியோர் அடங்குவர். இந்த 'நிபுணர்கள்' கொண்ட அமைச்சர்கள் குழுவை ஜனாதிபதி நியமிக்க பிரதான காரணம், நீதிபதிகள் இணைந்து விசாரணை நடத்தி தயாரித்து வௌியிட்ட அறிக்கையை மக்கள் மயப்படுத்துவதற்கு முன்னர் 'ஆழமாக பரிசீலனை' செய்வதற்கு ஆகும். படித்தவர்கள் புத்திசாலிகள், நிபுணர்கள் ஆகியோரின் முதுகில் ஏறி பதவிக்கு வந்த ஜனாதிபதிக்கு நிபுணர்களாக இந்த அமைச்சர்களே தெரிந்துள்ளனர்.

ஆனாலும் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் சமூகத்தில் உள்ள பலரதும் கடும் எதிர்ப்பு விமர்சனம் காரணமாக ஜனாதிபதி நியமித்த ஆழமாக ஆராயும் குழு பலமிழந்து போனது. இந்த எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் இறுதி விசாரணை அறிக்கையின் ஒரு பகுதியை மாத்திரம் கார்டினல் மெல்கம் ரஞ்சித் மற்றும் பாராளுமன்றிற்கு வழங்க முன்வந்தனர்.

தாக்குதலை பின்நின்று நடத்தியது யார் ..? தாக்குதல் நடத்தியவர்களுக்கு உதவி ஒத்துழைப்பு வழங்கியது யார் ..? தற்கொலை குண்டுதாரியான சஹரானுக்கு மேல் உள்ள தலைவர் யார் ..? போன்ற முக்கிய கேள்விகளுக்கான பதிலை கண்டறிய விசாரணை இடம்பெறவில்லை.

எனினும் நாளுக்கு நாள் தாக்குதலின் பின்னணியில் இருந்த தரப்பு மற்றும் உதவி ஒத்துழைப்பு வழங்கிய நபர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு மிகவும் வேண்டப்பட்ட நெருங்கிய நபர்கள் என்பதை நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் விளங்கிக் கொண்டுள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சுவை மிகுந்த விடயமாக இந்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் அமைந்தது. அதன்படி சிக்கலில் தள்ளப்பட்டுள்ள நாட்டின் தேசிய பாதுகாப்பை மீள் கட்டியெழுப்புதல் புலனாய்வு பிரிவை வலுப்படுத்தும் விதம் போன்ற சூடேற்றும் கதைகளை விசித்திரமாக மேடைக்கு மேடை கூறினர். வெறும் இரண்டே வாரங்களில் ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகள் சூத்திரதாரிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்குவதாக கோட்டாபய ராஜபக்ஷ சத்திய வாக்குறுதி அளித்து சபதம் செய்தார்.

தேசிய பாதுகாப்பு என்ற வார்த்தையை தவறாக பயன்படுத்தி ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் சில பகுதிகளை அகற்றி மறைத்து வைக்க செய்த முயற்சியால் இரண்டு வாரங்களில் தற்கொலை குண்டுத் தாக்குதல் குற்றவாளிகளை பிடித்து தண்டனை வழங்குவதாக அளித்த வாக்குறுதி கோட்டாபய நந்தசேன ராஜபக்ஷவின் வெறும் வாய் வாக்குறுதி என அம்பலமாகியது.

சஹரான் என்ற மிலேச்சத்தனமான மத அடிப்படைவாதியின் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டமை தற்போதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த 2010 தொடக்கம் 2015 வரையான காலத்தில் ஆகும். ராஜபக்ஷக்கள் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்க வேண்டுமானால் மத அடிப்படைவாத அமைப்புக்களை தோற்றுவித்து அந்த அமைப்புக்களை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு வேடிக்கை பார்ப்பது அவர்களது உபாய மார்க்கமாக இருந்தது. இந்த குழப்பங்களுக்கு மத்தியில் நாடு, மக்கள் மற்றும் மதத்தை பாதுகாப்பதான போர்வையில் ஆட்சி அதிகாரத்தை பிடிப்பது தக்க வைத்துக் கொள்வது ராஜபக்ஷக்களின் திட்டமாகும்.  

சுரேஸ் சாலி காத்தான்குடி சென்று சஹரானை சந்தித்த விதம் ..

எமக்கு கிடைத்துள்ள தகவலின் படி நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் சஹரானை இராணுவ உலவாளியாக இராணுவ புலனாய்வு பிரிவின் அப்போதைய திறமையான புலனாய்வு அதிகாரியாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் கொலை செய்யப்பட்ட மேஜர் துவான் நிசாம் முத்தாலிப் என்பரே இணைத்துக் கொண்டுள்ளார். சஹரான் தனது தொடர்பை முத்தாலிப்புடன் மாத்திரமே வைத்துக் கொண்டுள்ளார். 2005ம் ஆண்டு மே மாதம் 5ம் திகதி நாராஹென்பிட்ட பகுதியில் வைத்து முத்தாலிப் கொலை செய்யப்பட்டதன் பின் சஹரான் இராணுவத்திற்கு உலவுத் தகவல் வழங்குவதை நிறுத்தியுள்ளார். யுத்தம் நிறைவடைந்து சிறிது காலத்தின் பின் ராஜபக்ஷக்கள் அடிப்படைவாத அமைப்புக்களை உருவாக்க முயற்சித்த போது காத்தான்குடி பகுதிக்கு விஜயம் செய்து சஹரானை சந்தித்தது அப்போதைய இராணுவ புலனாய்வு பிரிவில் இருந்த கோட்டாபயவின் மிகவும் நெருங்கிய அதிகாரியான தற்போதைய அரச புலனாய்வு பிரிவு பணிப்பாளர் மலே இனத்தை சேர்ந்த பிரிகேடியர் சுரேஸ் சாலி ஆவார். முத்தாலிப்புடன் இணைந்து பணியாற்றிய சாலி, சஹரானின் திறமை குறித்து அறிந்து வைத்திருந்தார். பொது பல சேனா அமைப்பை உருவாக்கியது இராணுவ புலனாய்வு பிரிவு என்பதுடன் அது தொடர்பில் சஹரானுக்கு அறிவிக்காமல் பொது பல சேனாவிற்கு எதிரான இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு ஒன்றை உருவாக்குமாறு சஹரானை தூண்டியுள்ளார். அதற்கான பணத்தை வழங்குவதற்கும் சாலி விருப்பம் தெரிவித்தார். அதன் பின்னணியில் சஹரானின் தலைமையில் உருவான அமைப்பே தவஹித் ஜமாத் அமைப்பாகும்.

அதன்படி சஹரானுக்கு மாத்திரமன்றி மேலும் சில அடிப்படைவாத அமைப்புக்களுக்கு (சிவ சேனாவும் அதில் ஒன்று) பாதுகாப்பு அமைச்சினால் சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டமை இன்று நாட்டில் அனைவரும் அறிந்த விடயமாகும்.  இதனை தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் பகிரங்கமாகவே ஏற்றுக் கொண்டுள்ளனர்.  

முப்பது வருட கால யுத்தம் முடிக்கு கொண்டு வரப்பட்ட பின்னரும் எந்த நோக்கத்திற்காக சஹரான் உள்ளிட்ட 21 அடிப்படைவாத அமைப்புக்களுக்கு பொது மக்கள் பணத்தை முறைக்கேடாக பயன்படுத்தி பாதுகாப்பு அமைச்சின் ஒதுக்கீட்டின் கீழ் செயற்படுத்தினர் .? இது எதற்காக என்று அப்போதைய பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணை ஆணைக்குழு  விசாரணை நடத்தி இருக்க வேண்டுமல்லவா .?  

ராஜபக்ஷக்களின் கடந்த கால ஆட்சியில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் குறித்து நன்கு அறிந்திருந்த ஆணைக்குழு உறுப்பினர்கள் விழிப்பாக நடந்து கொண்டார்களோ தெரியவில்லை. ஆனால் நியாயத்தை நிலைநாட்ட இவ்விடயங்கள் குறித்து அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் கட்டாயமாக விசாரணை நடத்தியே ஆக வேண்டும்.

சஹரானின் தாக்குதலின் பின்னணியில் உள்ள சக்தி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு நெருங்கிய நபர்கள் என்பது இரகசியம் அல்ல. ஆனால் ஜனாதிபதி ஆணைக்குழு இது குறித்து எந்த சந்தர்ப்பத்திலும் விசாரணை நடத்தவில்லை. அவ்வாறு செய்திருந்தால் லசந்த விக்ரமதுங்க ஊடகவியலாளருக்கு ஏற்பட்ட நிலை ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.

இந்த ஆணைக்குழு நாடகத்தின் பின்னணியில் நடப்பது என்ன என்பதை நாட்டில் உள்ள அநேகமான மக்களும் சர்வதேசமும் அறிந்த பகிரங்க இரகசியம் ஒன்று உள்ளது. அதுதான் இலங்கை அரசாங்கம் தண்டனை வழங்காத ஆணைக்குழு ஊடாக மூடி மறைக்கும் எந்தவொரு குற்றத்திற்கும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை நேரடி பொறுப்பு கூற வேண்டும் என்பதாகும்.

மைத்திரிபால சிறிசேன சிக்கியது ஏன்..?  

ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின் இறுதி பரிந்துரைகளில் இந்த கூட்டுக் கொலை தாக்குதல் நடைபெற இருப்பதை தெரிந்து வைத்துக் கொண்டும் தாக்குதலுக்கு முன்னர் 2019 ஏப்ரல் 16ம் திகதி தனது மனைவி பிள்ளைகள் சகிதம் வௌிநாட்டுக்கு தப்பிச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றச்சாட்டு சுமத்தி வழக்கு தொடுக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை வரவேற்கக் கூடியது.

அப்போதைய அரச புலனாய்வு பிரிவு பிரதானி தனது நெருங்கிய நண்பர் சிரேஸ் பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்த்தன ஊடாக 2019 ஏப்ரல் 4ம் திகதி தாக்குதல் நடத்த தயார் நிலை காணப்பட்ட போது மைத்திரிபால சிறிசேனவிற்கு தெரியப்படுத்தினார். அதனை தெரிந்து கொண்டும் மைத்திரிபால சிறிசேன ஏப்ரல் 16ம் திகதி இந்தியாவிற்குச் சென்று திருப்பதி ஆலயத்தில் தரிசனம் செய்து இரண்டு நாட்கள் தங்கியிருந்தார். அதன் பின்னர் 2019 ஏப்ரல் 21ம் திகதி தாக்குதல் நடக்கும் வரை நாட்டின் பாதுகாப்பை சிறிதேனும் கணக்கில் எடுக்காது சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றார்.  

மைத்திரிபால சிறிசேன அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவிக்காமல் நாட்டின் பாதுகாப்பு பொறுப்பை யாருக்கும் ஒப்படைக்காமல் சஹரான் உள்ளிட்ட குழுவினருக்கு 300 அப்பாவி உயிர்களை பலியெடுக்க வழி ஏற்படுத்திக் கொடுத்தார்.  

அரச புலனாய்வு பிரிவு பிரதானி நிலந்த ஜயவர்த்தன மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதிக்கு எடுத்த தொலைபேசி அழைப்புகள் மற்றும் சஹரான் தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கிய தகவல்கள் முக்கிய புலனாய்வு இரகசியங்கள் போன்றவற்றை தனது தொலைபேசி மற்றும் மடிக்கணனியில் இருந்து அழித்துவிட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அது தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் மற்றும் குற்ற விசாரணை திணைக்களம்  (CID) ஆகியன நடத்திய நவீன தொழிநுட்ப விசாரணையின் போதும் தௌிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு நேரடி பொறுப்புக் கூற வேண்டிய நிலந்த ஜயவர்த்தனவை கடுமையாக தண்டிக்காமல் தற்போதைய அரசாங்கம் அவருக்கு சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பதவி உயர்வு வழங்கி கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாக அனுப்பியுள்ளது. (கிழக்கு மாகாணம் சஹரான் உள்ளிட்ட அடிப்படைவாதிகளின் கோட்டையாகும்)

விதி வழி போல மைத்திரிபால சிறிசேன நியமித்த விசாரணை ஆணைக்குழுவே சிறிசேனவின் குற்றச் செயல்களை அம்பலத்திற்கு கொண்டு வந்துள்ளது. மைத்திரிபால சிறிசேன தற்போது தன்னை குற்றத்தில் இருந்து தப்பிக்கச் செய்து கொள்ள ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை பதவியை பகடை காயாக பயன்படுத்தி வருகிறார். அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் யோசனைக்கு அமைய ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கை மற்றும் பரிந்துரை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுவில் முழுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. 20வது திருத்தத்தை நிறைவேற்றிக் கொண்ட கோட்டாபய ராஜபக்ஷவின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசாங்கம் இதனால் ஆடிப்போயுள்ளது.

மைத்திரிபால சிறிசேன இந்த ஆணைக்குழுவிற்கு முன்பதாக விஜித் மலல்கொட என்ற ஆணைக்குழுவை நியமித்தார். ஆணைக்குழு விசாரணை நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ ஆகியோரை குற்றவாளியாக்கி சிறிசேன அவர்களை சிறையில் அடைத்தார். அதனால் அவர்கள் தொடர்பான மலல்கொட ஆணைக்குழு விசாரணை முன்னோக்கி செல்லவில்லை. அதேபோன்று ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவையும் முன்னோக்கிச் செல்ல சிறிசேன அனுமதிக்கவில்லை.  

ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரச புலனாய்வு பிரதானி நிலந்த ஜயவர்த்தனவிடம் கேள்வி எழுப்ப பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு இடமளிக்காது சிறிசேன குழப்பினார். தாக்குதலை நடத்தவிடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க தவறிய குற்றச்சாட்டை சிறிசேன மீது விசாரணை ஆணைக்குழு சுமத்தி இருப்பது ஒருவகையில் ஆருதலாக கருத முடியும்.

தாக்குதலின் பின்னணியில் இருந்து செயற்பட்ட தரப்பு மற்றும் தாக்குதலுக்கு உதவி ஒத்துழைப்பு வழங்கிய நபர்களை கண்டுபிடிக்கும் வரை நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆபத்தில். இந்த நிலை தொடர்ந்தால் அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள மற்றுமொரு கூட்டுக் கொலை தாக்குதல் முயற்சி இடம்பெறலாம்.

ரணில் மற்றும் சாகல ..

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு 2018ம் ஆண்டு ஒக்டோபர வரையான காலம் வரை கிழக்கு மாகாணத்தில் அடிப்படைவாத செயற்பாடுகள் இடம்பெறுவது தொடர்பில் அறிந்து வைத்திருந்ததாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் கிரிசாந்த சில்வா கிழக்கு மாகாணத்தில் சஹரான் உள்ளிட்ட அடிப்படைவாதிகளின் செயற்பாடுகள் குறித்து பாதுகாப்பு சபையில் தகவல் வௌியிட்டபோது, 'இல்லை, இல்லை.. அப்படி ஒன்றும் இல்லை' என்று கூறிய ரணில் விக்ரமசிங்கவிடம் அது குறித்து மேலதிக விசாரணை செய்திருக்கலாம். ரணில் விக்ரமசிங்கவிற்கும் சட்டம் ஒழுங்கு பொறுப்பான அன்றைய அமைச்சர் சாகல ரத்நாயக்கவிற்கும் ராஜபக்ஷ அரசாங்கத்துடன் பல தொடர்புகள் இருந்த காரணத்தால் தற்போது காப்பாற்றப்பட்டுள்ள இந்த குற்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய நபர்களை கை கழுவி தப்பிக்க விட இடமளிக்க முடியாது.  

பொது பல சேனா அமைப்பு நோக்கி விரல் நீட்டப்படுவது ஏன் ..?

ராஜபக்ஷ குடும்பத்தின் அதிகார மோகத்தை உறுதி செய்து கொள்வதன் நோக்கமாக கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த போது பொது பல சேனா உள்ளிட்ட பௌத்த பெயர் கொண்ட மத அடிப்படைவாத அமைப்புகள் பலவற்றை உருவாக்கினார் என்பது இன்று முழு நாட்டு மக்களுக்கும் தெரியும். தற்போது நாட்டில் வொயிஸ் கட் தேரர்கள் என்று அழைக்கப்படும் சிலர் எல்லா விடயத்திற்கும் மூக்கை நுழைத்து ஊடகங்களில் கருத்து வௌியிடுவதும் ராஜபக்ஷக்களின் தேவைகளை நிறைவேற்றவே.

இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சிக்கு பின்புலனான இருக்கும் சிவசேனா அமைப்பு போல பொது பல சேனா அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதே கோட்டாபய ராஜபக்ஷவின் தேவையாக இருந்தது. அதனால் இனவாத, மதவாத கருத்துக்கள் உடைய அமைப்புக்களை திட்டமிட்டு செயற்பாட்டுடன் முன்னெடுத்துச் செல்ல தேவையான நிதி மற்றும் வசதிகள் செய்து நகர பிரதேசங்களில் அலுவலகங்கள் இயங்கும் திட்டம் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்டது.  

கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் தங்களால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் இனவாத அமைப்புகள் தொடர்பில் புலனாய்வு பிரிவினருக்கு வழங்கியதுடன் அந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் சில பகுதிகளில் சிறு சிறு இனவாத செயற்பாடுகளை ஊதி பெரிதாக்கி 'பைத்தியக்காரன் கையில் பொல்லு கிடைத்தது போல' கலகொட அத்தே ஞானசார போன்றவர்கள் நாடு முழுக்க இனவாத மோதல்களை உருவாக்கினர்.

ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சஹரானின் அடிப்படைவாத அமைப்பில் இணைந்து கொண்ட முஸ்லிம் இளைஞர்களின் வாக்குமூலம் தொடர்பில் குற்ற புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தகவல் வழங்கி இருந்தனர். குறித்த இளைஞர்களுக்கு முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட வேண்டிய தேவை ஏற்படக் காரணம் பொது பல சேனா போன்ற பௌத்த அடிப்படைவாத அமைப்புக்களின் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் என்பது விசாரணையில் வௌிவந்துள்ளது.  

பொது பல சேனா அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்க வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்திருப்பது மேலும் பிரச்சினைக்கு வழி வகுத்துள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் ஒருபோதும் குறித்த பரிந்துரை நடைமுறைக்கு வராது.

தற்போதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் பௌத்த தலைவர் ஒருவரை நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வந்துள்ளதால் பொது பல சேனா அமைப்பு தொடர்ந்து இயங்க வேண்டிய தேவை இல்லை எனவும் அதனை கலைப்பதற்கு நவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தார். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதுடன் தமது அமைப்பின் எதிர்பார்ப்பு ஈடு செய்யப்பட்டதாக அவர் கூறி இருந்தார்.

ஆனால் தற்போது ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரையில் பொது பல சேனா அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ள பின்னணியில் மீண்டும் சண்டியராக மாறியுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேசத்திடம் நீதி வேண்டி சென்றால் பார்த்துக் கொள்வதாக பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கருத்து வௌியிட்டுள்ளார். ஞானசார தேரர் இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பது யாருடைய பலத்தை கையில் எடுத்துக் கொண்டு என்பது தௌிவாகிறது. தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அனுமதி பெற்றே ஞானசார தேரர் இவ்வாறு பகிரங்கமாக மிரட்டல்  விடுக்கிறார்.

கையாலாகாத எதிர்கட்சி மற்றும் நாட்டை சிரிக்க வைக்கும் சஜித்தின் முட்டாள் கதை...

ஒன்றிணைந்த எதிர்கட்சி ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க குறைந்தளவான பங்களிப்பையே செய்துள்ளது. 'தென்னை மரத்தில் இருந்து எப்போதாவது தேங்காய் விழுவது போல' ஒரிரு ஊடக சந்திப்புக்களை அவ்வப்போது நடத்தி பெயருக்கு அழுத்தம் கொடுக்கிறது. ஞாயிறு தாக்குதலுடன் இந்த அரசாங்கத்திற்கு நேரடி தொடர்பு இருப்பதை வௌிப்படையாக கூறுவதற்கு எதிர்கட்சிக்கு தைரியம் இல்லை அல்லது அச்சப்படுவது தௌிவாகிறது.  

அதற்கு மத்தியில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வருடத்தின் சிறந்த கேலியை நாட்டுக்கு வழங்கியுள்ளார். தனது தலைமையில் அமைக்கப்படும் ஆட்சியில் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதாக சஜித் பிரேமதாஸ அறிவித்தார். அதற்கு பதில் அளித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கருத்து வௌியிட்டு குண்டு வெடிப்பின் போது ஆட்சியில் இல்லாதவர்கள் போல் தற்போதை எதிர்கட்சியினர் பேசுவதாக கூறினார். பின்னர் உரையாற்றிய சஜித் பிரேமதாஸ ஞாயிறு தாக்குதல் தாம் ஆட்சியில் இருந்த காலத்தில் இடம்பெற்றதால் அதற்கான பொறுப்பை ஏற்பதாக தெரிவித்தார். அப்படியானால் சஜித் ஆட்சிக்கு வந்த பிறகு வழங்கும் மரண தண்டனை சஜித்திற்கே என்பதுதான் உண்மை.

பக்குவப்பட்ட அரசியல் தலைவர் என்றால் தற்போது செய்ய வேண்டியது நாட்டு மக்களுக்கு சிரிப்பூட்டும் நகைச்சுவை கதைகளை கூறாமல் ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்ட நபர்களின் குடும்பத்துடன் ஒட்டுமொத்த கத்தோலிக்க மக்களுடன் இணைந்து ஆட்சியை பிடிக்க ஞாயிறு தாக்குதலை பயன்படுத்தியவர்கள் மற்றும் உண்மையான குற்றவாளிகளை மறைக்க முயற்சிக்கும் தற்போதை அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டத்தை நடத்துவதாகும். அரசாங்கத்திற்கு கடும் அழுத்தங்களை பிரயோகிப்பதாகும். ஆனால் துரதிஸ்டவசமாக அவ்வாறு நடைபெறவில்லை. அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை.

ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலதிக விசாரணை நடத்த எழுப்பப்பட வேண்டிய மேலும் 7 கேள்விகள்..

01. முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் வௌிப்படுத்திய, தெஹிவல ஹோட்டலில் வைத்து குண்டு வெடிக்கச் செய்த தற்கொலை குண்டுதாரி ஜமில் மொஹமட் தாக்குதலுக்கு முன்னர் சந்தித்த இராணுவ புலனாய்வு அதிகாரி யார் .? அது தொடர்பான விசாரணை எங்கே ..?

02. சஹரான் ஹாசிமின்நேரடி தலையீட்டில் முன்னெடுக்கப்பட்ட மாவனெல்ல புத்தர் சிலை தாக்குதல், வனாத்தவில்லு வெடிபொருள் கஞ்சியம், மட்டக்களப்பு வவுனதீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கொலை போன்ற சம்பவங்கள் குறித்து யாருடைய தலையீட்டில் மேலதிக விசாரணை நடத்தப்படவில்லை ..?

03. ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் சஹரான் குழுவினரின் தலையீட்டில் கிழக்கு மாகாணத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று வெடிக்க வைத்து ஒத்திகை நடத்தி ஒரு வாரத்திற்குள் தற்கொலை தாக்குதல் வரை முன்னேறிச் சென்றது எவ்வாறு ..? தொழிநுட்ப அறிவு வழங்கியது யார் ..?

04. புலஸ்தினி மகேந்திரன் என்ற சாரா ஜெஸ்மினை கண்டுபிடிக்க அரசாங்கம் கடுகளவேனும் முயற்சி செய்யாதிருப்பது ஏன் ..?

05. தொலைபேசி மற்றும் மடிக் கணினியில் காணப்பட்ட தொழில் ரீதியான விசாரணை தகவல்கள் சஹரான் ஹாசிம் குறித்த தகவல்கள் மற்றும் இது தொடர்பிலான தொலைபேசி உரையாடல்கள் போன்ற முக்கிய தகவல்களை அழித்து இல்லாது செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முனனாள் அரச புலனாய்வு பிரிவு பிரதானி நிலந்த ஜயவர்த்தன மீது நடவடிக்கை எடுக்காமல் தற்போதைய அரசாங்கம் அவரை கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு கொடுத்து அனுப்பியது ஏன் ..?

06. முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த தாக்குதல் தொடர்பிலும் , கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த போது சஹரான் உள்ளிட்ட குழுவினருக்கு சம்பளம் வழங்கியமை தொடர்பிலும் புலனாய்வு பிரிவு தலையீடு தொடர்பிலும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட இரகசிய ஆவணத்தை ஜனாதிபதி ஆணைக்குழுவில் அறிக்கையில் இருந்து அகற்றியது ஏன் ..?

07. நியாயத்தை கேட்டு அடிக்கடி குரல் எழுப்பும் பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் இந்த கேள்விகள் தொடரிபில் பல தடவகைள் அறிவுறுத்தப்பட்டும் அது தொடர்பில் பதில் கேட்டு கேள்வி எழுப்பாமல் இருப்பது ஏன்..?

உண்மை ஒருபோதும் உறங்காது ..! உண்மை ஒரு நாள் வெல்வது உறுதி ..! ஆனால் நியாயத்தைப் பெற இயன்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் அழுத்தங்கள் பிரயோகிக்க வேண்டும்.

- ரசல் ஹேவாவசம் 

---------------------------
by     (2021-03-10 21:57:16)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links