- சந்திரபிரதீப்
(லங்கா ஈ நியூஸ் - 2021, மார்ச். 11 முற்பகல் , 07.50) பட்டப் பகலில் வர்த்தமானி அறிவித்தல் விடுத்து ராஜபக்ஷக்கள் செய்த தெற்கு ஆசியாவில் இதுவரையில் இடம் பெற்றிராதா பாரிய மோசடியான சீனி வரி மோசடி இதுவரையில் மோசடி இல்லை சாதாரணமாக பிஸ்னஸ் வர்த்தகரின் செயற்பாடு என தெரிவித்து கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் நிதி அமைச்சு ஊடாக அரசுக்கு 1590 கோடி ரூபா வரி வருமானம் இல்லாது போயுள்ளதென பாராளுமன்ற நிதியியல் குழுவில் இருந்து தகவல் வௌியாகியுள்ளது. பாராளுமன்ற நிதியியல் குழுவின் தலைவர் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பாவினால் 9ம் திகதி பாராளுமன்றில் இது குறித்து தகவல் வௌியிடப்பட்டது.
2020ம் ஆண்டு ஜூன் மாதம் இறக்குமதி செய்யப்படும் சீனி ஒரு கிலோவிற்கு 50 ரூபா இறக்குமதி தீர்வை அறவிட்ட நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ ஒக்டோபர் 13 ஆம் திகதி இலக்கம் 2197/12 என்ற வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒரே நேரத்தில் யாராலும் நம்ப முடியாத அளவு வெறும் 25 சதம் என்று இறக்குமதி தீர்வை வரியை குறைத்தார். அதன்போது தமது நெருங்கிய நண்பரான சஜாத் மவுசுத் ஒரு லட்சம் மெட்ரிக் டொன் சீனியை இலங்கைக்கு இறக்குமதி செய்யவென கப்பல்களில் ஏற்றி இருந்தார். ஆனால் சாதாரண நாட்களில் ஒரு மாதத்திற்கே இலங்கைக்கு 45000 மெட்ரிக் டொன் சீனி மாத்திரமே இறக்குமதி செய்யபப்படும் என சுங்கப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். எனினும் சஜாத் அவுசத் இந்த வரி மோசடி விளையாட்டை நன்கு தெரிந்து வைத்துக் கொண்டு தான் ஒரு லட்சம் மெட்ரிக் டொன் சீனியை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளார். சஜாத் மவுசாத் இறக்குமதி செய்த ஒரு லட்சம் மெட்ரிக் டொன் சீனி இலங்கை துறைமுகத்தை வந்தடைந்து விடுக்கப்பட்ட பின்னர் ஒக்டோபர் 27ம் திகதி மீண்டும் ஒரு வர்த்தமானி அறிவித்தலை விடுத்த நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ சீனி இறக்குமதி தீர்வை வரியை 40 ரூபாவாக அதிகாரித்தார். இறக்குமதி தீர்வை வரி தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் விடுத்து ஒரு மாதம் கடப்பதற்கு முன்னர் மீண்டும் தீர்வை வரியில் மாற்றம் செய்ய முடியாது என்ற போதிலும் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அதனை செய்துள்ளார்.
அதன்படி 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதியின் பின்னர் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி தீர்வை வரி வெறும் 25 சதமாகும். ஆனாலும் இந்த குறுகிய காலத்தில் வேறு எந்த வர்த்தகர்களுக்கும் விரைவாக சீனி இறக்குமதி செய்து கொள்ள முடியவில்லை. அத்துடன் குறித்த காலப் பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட சீனி பொது மக்களுக்கு நன்மை கிடைக்கும் வகையில் விலை குறைத்தும் விற்கப்படவில்லை. பழைய விலைக்கே விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன்படி சீனி இறக்குமதி தீர்வை வரி குறைக்கப்படுவது தெரிந்து ஒரு லட்சம் மெட்ரிக் டொன் சீனி இறக்குமதி செய்த வியாபாரிக்கு பாரிய லாபம் ஏற்பட்டுள்ளது. அந்த லாபம் அரசுக்கும் கிடைக்கவில்லை. இந்த செயற்பாட்டினால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நட்டம் 1590 கோடி ரூபா அதாவது 16 பில்லியன் ரூபா என நிதி அமைச்சு பாராளுமன்றில் ஏற்றுக் கொண்டது.
இந்த சீனி இறக்குமதி மோசடி விடயத்தை முதல் முதலாக பாராளுமன்றில் அம்பலப்படுத்திய மக்கள் விடுதலை முன்னணி தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க இந்த சீனி இறக்குமதி வரி மோசடி ஊடாக இலங்கை அரசுக்கு கிட்டத்தட்ட 11 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக தெரிவித்திருந்தார். எனினும் பாராளுமன்ற நிதியியல் குழுவின் தகவல் படி அரசுக்கு ஏற்பட்டுள்ள சீனி வரி மோசடி 16 பில்லியன் என தெரிய வந்துள்ளது.
மேற்கூறிய அரசுக்கு இல்லாமல் போன வரி லாபத்தில் சிறு சிறு தொகை சீனி இறக்குமதி செய்த முதலாளிகளுக்கு சென்றுள்ள நிலையில் பிரதான பங்கு லாபம் ராஜபக்ஷக்களின் வியாபார கூட்டாளி என கருதப்படும் ஷெங்ரிலா குரூப் நிறுவனத்தின் வில்மா நிறுவனம் இறக்குமதி செய்த ஒரு லட்சம் மெட்ரிக் டொன் சீனிக்கு சொந்தக்காரரான சஜாத் மவுசுனுக்கு சென்றுள்ளது.
சஜாத் மவுசுத் என்பவருக்கு ஷெங்ரிலா ஹோட்டல் அமைப்பதற்கு காணியும் ராஜபக்ஷக்கள் ஊடாகவே கிடைத்தது. இந்த காணி விற்பனையின் தரகு பணம் நாமல் ராஜபக்ஷவின் கைகளுக்குச் சென்றது. அது மாத்திரமன்றி ஷெங்ரிலா ஹோட்டலில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய இருவருக்காக லக்சரி செலூன் அப்பாட்மென்ட் பிரிவில் இரண்டு வீடுகள் இலவசமாக ஒதுக்கப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தல் களத்திற்கு நுழைவதற்கான முதலாவது வியத்மக கூட்டம் இந்த ஷெங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்றதுடன் ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் பின்னரான விருந்து கூட்டமும் ஷெங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்றது. இவை அனைத்தும் ராஜபக்ஷக்களுக்கு சஜாத் மவுசுன் இலவசமாக வழங்கிய பரிசாகும். அதற்காக சஜாத் மவுசுனுக்கு ராஜபக்ஷக்கள் பிரதி உபகாரம் செய்துள்ளனர். அதுவே இந்த சீனி இறக்குமதி வரி மோசடியாகும்.
இது தற்போதைக்கு தெற்கு ஆசியாவில் இடம்பெற்ற பாரிய வரி மோசடியாக கருதப்படுகிறது. இதற்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற வெட் வரி மோசடி கூறப்பட்டது. அந்த மோசடியின் பெறுமதி 400 கோடி ரூபாவாகும். தற்போது இடம்பெற்றுள்ள சீனி வரி மோசடி அந்த வெட் வரி மோசடியை விட நான்கு மடங்கு அதிகமாகும்.
ராஜபக்ஷக்கள் அதிகாரத்தை கைப்பற்றவென இரவு பகல் பாராது தேர்தல் மேடைகளில் கூவிக் கூவி பிரச்சாரம் செய்த மத்திய வங்கி பிணை முறி மோசடி மூலம் அரசுக்கு ஆதாயம் இழக்கச் செய்யப்பட்டதாக அரஜுன அலோசியஸ் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை 69 கோடி ரூபா மோசடி செய்ததாகவாகும். அத்துடன் அலோசியசுக்கு சொந்தமான கோடிக்கணக்கான பணம் அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து மத்திய வங்கியால் தடை செய்து வைக்கப்பட்டுள்ளது. உண்மையைக் கூறினால் அரசுக்கு இல்லாது போன 69 கோடி ரூபாவை விடவும் இரண்டு மடங்கு பணம் அலோசியஸ் குழுவிடம் இருந்து மீளப் பெறப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிதி மோசடி அவ்வாறு அல்ல. இந்த வியாபாரம் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவின் தலையீட்டில் முன்னெடுக்க வழிசமைத்த மோசடியாகும். பட்டப் பகல் கொள்ளையாகும். இந்த சீனி வரி மோசடியில் பெறப்பட்ட 1600 கோடி ரூபாவில் ராஜபக்ஷக்களுக்கு எவ்வளவு கிடைத்தது என சஜாத் மவுசுன் மற்றும் ராஜபக்ஷக்களே அறிவர்.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் சுனாமி நிதியத்தில் மோசடி செய்தார். "சிறைக்கு செல்ல வேண்டிய நபரை நான் ஜனாதிபதி ஆசனத்திற்கு அனுப்பினேன். என்னை மன்னியுங்கள் என்னை மன்னியுங்கள் என்னை மன்னியுங்கள்" என சுனாமி நிதிய நிதி மோசடி வழக்கை தள்ளுபடி செய்து மஹிந்த ராஜபக்ஷவை விடுவித்த முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா பின்னர் பகிரங்கமாக ஒத்துக் கொண்டார். அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகி அதிகாரத்தில் இருந்த காலத்தில் ஒவ்வொரு கொடுக்கல் வாங்கலிலும் மக்கள் பணத்தை கொள்ளை அடித்து சேர்த்து வைத்த சொத்தின் பெறுமதி 18 பில்லியன் டொலர் என பிரபல "போர்பிஸ்" சஞ்சிகை தகவல் வௌியிட்டது. தற்போது வாழ்க்கையை முடித்துக் கொண்டு இறுதிப் பயணம் செல்ல இருக்கும் காலத்திலும் சீனி வரி ஊடாக 1600 கோடி ரூபா கொள்ளை அடிக்க தனது நண்பர்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
அதன்படி இந்த பாரிய வரி மோசடி குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டு நிதி அமைச்சர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்ய வேண்டும். அதற்கு பொது மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இந்த பாரிய சீனி இறக்குமதி வரி மோசடி விடயம் பாராளுமன்ற நிதியியல் குழுவில் அம்பலத்திற்கு வந்த பின்னர் சமூக ஊடகங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை 'நந்தசீனி' என்று அழைக்கின்றன. கோட்டாபய சுத்தமானவர் என்றால் தனது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷவின் நிதி அமைச்சர் மற்றும் பிரதமர் பதவியை பறித்து வேறு நபருக்கு வழங்க வேண்டும். 20வது திருத்தச் சட்டத்தின் மூலம் அதற்கான பூரண அதிகாரம் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆடை அவிழ்ந்து அசிங்கப்பட்டு அவமானப்பட்டு கேடுகெட்ட நிலையில் இருக்கும் அரசாங்கம் ஓரளவேனும் மீண்டு வர மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்து நிதி அமைச்சையாவது பிடுங்கி எடுத்து வேறு நபருக்கு வழங்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் உண்மையில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி நந்தசேன அல்ல 'நந்தசீனி' என்றே அழைக்கப்படுவார்.
---------------------------
by (2021-03-11 23:15:11)
Leave a Reply