(லங்கா ஈ நியூஸ் - 2021 மார்ச் , 15 , பிற்பகல் 11.50) மாற்று சிந்தனை கொண்ட ஊடகவியலாளர் மற்றும் வௌியீட்டாளராக மற்றும் பதிப்பாளராக செயற்படும் சுமார் 35 வருடங்களுக்கு மேல் தொழில் அனுபவம் கொண்ட சுஜீவ கமகே என்பவர் கருத்து நிற வேனில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டு தாக்குதல் நடத்தி துன்புறுத்தப்பட்ட பின் இடை நடுவில் விட்டுச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட சுஜீவ கமகே தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
சுஜீவ கமகே தான் வசித்து வரும் மீறிகம பிரதேசத்தில் வைத்தே கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. மீறிகம சந்திக்கு அதிகாலை 6.30 மணி அளவில் கருப்பு நிற வேனில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சுஜீவ கமகேவை வேனுக்கு இழுத்துப் போட்டு அவரது கண்களை துணிகளால் கட்டி மறைத்துள்ளனர். பின்னர் அவர் மீது தாக்குதல் நடத்திய குண்டர்கள் அவர் தொடர்பு வைத்திருக்கும் நபர்கள் குறித்தும் செய்தி வழங்கும் நபர்கள் குறித்தும் அவர்கள் அதற்கு வழங்கும் பணம் கிடைக்கப் பெறும் வழி முறைகள் குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளனர். சுஜீவ கமகே தற்போது 'சியரட்ட' பத்திரிகையின் இணைய பிரிவு ஒன்றை நடத்திச் செல்வதுடன் ராஜித்த சேனாரட்னவின் மகன் சத்துர சேனாரட்ன நடத்திச் செல்லும் 'ஜனநாயக தேசிய இயக்கத்தின் வௌியீடு ஒன்றையும் நடத்தி வருகிறார். தாக்குதல் நடத்திய குண்டர்கள் சத்துர சேனாரட்ன வழங்கும் பணத் தொகை எவ்வளவு எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். தாக்குதல் நடத்திய நபர்கள் நன்கு சூடாக்கப்பட்ட இரும்பு கம்பியால் சுஜீவ கமகேவின் பின் பகுதியில் தாக்கி சூடு வைத்துள்ளனர். கேள்வி கேட்ட போது வேன் தொடர்ந்து நிறுத்தாமல் பயணித்துள்ளது. பின்னர் நண்பகல் 12 மணி அளவில் குறித்த குண்டர் குழுவால் சுஜீவ கமகே கொழும்பு தெமட்டகொட பகுதியில் இறக்கி விட்டுச் செல்லப்பட்டுள்ளார்.
பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்து சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சுஜீவ கமகே தற்போதும் அங்கு சிகிச்சைப் பெற்று வருகிறார். கடும் தாக்குதலால் சுஜீவ கமகேவின் கழுத்து பகுதி நரம்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் லங்கா ஈ நியூஸ் இணையத்திடம் தெரிவித்தார்.
சுஜீவ கமகே என்பவர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் செயலாளர்களுள் ஒருவரான சட்டத்தரணி சஞ்சய கமகேவின் சகோதரர் ஆவார். சுஜீவ கமகே முன்னாள் பிரபல கவிஞரான மாத்தறை பீ டீ எம் ஆரியதாஸவின் மகனும் ஆவார்.
இந்த சம்பவம் குறித்து பிரபல கொழும்பு குற்ற தடுப்பு பிரிவு என்ற சிசிடி விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. எனினும் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு பட்ட சந்தேகத்தில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
தனக்கு இரண்டு குணங்கள் இருப்பதாகவும் தேவை என்றால் தனக்கு பழைய பாதுகாப்பு செயலாளர் போன்று செயற்பட முடியும் எனவும் அண்மையில் ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ அம்பாறையில் வைத்து பகிரங்கமா அறிவிப்பு விடுத்தார். கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட காலத்தில் வௌ்ளை நிற வேன்களில் நபர்கள் கடத்தி தாக்கி துன்புறுத்தப்பட்டதுடன் கடத்தி செல்லப்பட்ட சிலர் காணாமல் போயுள்ள சம்பவங்கள் சுலபமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
---------------------------
by (2021-03-16 01:27:13)
Leave a Reply