~

வீரர் போய் விட்டார்..! ஒரு சுவர் ஓவியத்திற்கு இந்தளவு பயம்..!

(லங்கா ஈ நியூஸ் - 2021 , மார்ச் 19 பிற்பகல் 03.00 இரண்டாம் இணைப்பு பிற்பகல் 05.00) வேலை செய்யும் வீரர் என்று தன்னை பெருமை பீற்றிக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி (நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ) மிரிஹானே நந்தே சிறு பிள்ளைகளின் சித்திரத்திற்கு பயப்படும் நிலையில் உள்ளார். நந்தசேன கோட்டாபய ஜனாதிபதியாக பதவியேற்று ஆட்சிக்கு வந்த நாள் தொடக்கம் இன்று வரை நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய அளவு சுற்றாடல் அழிப்புக்கு எதிராக நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க உள்ள இளைஞர் யுவதிகள் தற்போது அணி சேர்ந்துள்ளனர்.

புதிய அரசாங்கத்தின் கீழ் நாட்டில் யானை வளத்தை அழித்தல், யானை பயணிக்கும் பாதையை அழித்து சேதம் செய்தல் மற்றும் முன்னெடுக்கப்படும் பாரிய அளவான காடுகள் அழிப்பு என்பவற்றை எதிர்த்து 'இயற்கை வன ஜீவராசிகளை பாதுகாக்கும் சமூகம்' என்ற அமைப்பினால் இன்று மாலை கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட மாநகர சுற்றுவட்ட பகுதியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு இணையாக அவர்கள் விகார மகா தேவி பூங்காவிற்கு அருகில் நெலும் பொக்குன (தாமரை தடாக அரங்கு) முச்சந்தியில் "இயற்கை படுகொலையை நிறுத்து" (Stop Ecoside) என்ற பெயரிட்ட தொனிப்பொருளில் 70 அடி அகலம் மற்றும் 20 அடி உயரத்தில் பாரிய கவனயீர்ப்பு சித்தரம் ஒன்றை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்து இருந்தனர்.

மிகப் பெரிய அட்டையில் வரையப்பட்ட குறித்த கவனயீர்ப்பு சித்தரம் இரும்பு பாதாகை தாங்கியில் காட்டிப் படுத்த தேவையான பணத்தை மாநகர சபைக்கு செலுத்தி கொழும்பு மாநகர சபையிடம் உரிய அனுமதிப் பத்திரத்தினையும் பெற்றிருந்தனர். இந்த கவனயீர்ப்பு சித்தம் காட்சிப் படுத்தப்பட்ட பின் முதலில் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வந்த அதிகாரிகள் அதனை அகற்றி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். ஆனாலும் பதாதை காட்சிப் படுத்துவதற்கான அனுமதிப் பத்திரம் மற்றும் பணம் செலுத்திய பற்றுச் சீட்டு என்பவற்றை உரிய அதிகாரிகளிடம் இளைஞர்கள் யுவதிகள் காண்பித்த பின் அவர்கள் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர். எனினும் பின்னர் அங்கு வந்த பொலிஸார் அந்த கவனயீர்ப்பு சித்திரத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

நாட்டின் நிர்வாகியான ஜனாதிபதி "இயற்கை படுகொலையை நிறுத்து" என்று வைக்கப்பட்டிருக்கும் கவனயீர்ப்பு பதாதைக்கு எதிர்ப்பு என்றால் அவரது நோக்கம் "இயற்கையை படுகொலை செய்" என்பதாகவே இருக்கும்.  

வேலை செய்யும் வீரர் இளைஞர் யுவதிகளின் கவனயீர்ப்பு சித்திரத்திற்கு பயந்து வீரர் என்ற பட்டத்தையும் இழந்து விட்டார்.

மாலை வேளையில் குறித்த கவனயீர்ப்பு சித்தர பாதையை பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்ல முற்பட்ட போதும் இளைஞர் யுவதிகள் அதற்கு இடம் கொடுக்காமல் குறித்த சித்திர பாதாதை மீது அமர்ந்து எதிர்ப்பு வௌியிட்டனர்.

கீழுள்ள புகைப்படத்தில் குறித்த கவனயீர்ப்பு சித்தர பாதாதை கழற்றி அகற்றப்படுவதை காணலாம். 

---------------------------
by     (2021-03-20 06:29:26)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links