லங்கா ஈ நியூஸ் விசேட பிரதிநிதி - ஜெனீவாவில் இருந்து
(லங்கா ஈ நியூஸ் - 2021 , மார்ச் 23, பிற்பகல் 05.10) இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் அல்லது மனித உரிமை மீறல் தொடர்பில் யாரேனும் நபருக்கு ஏதேனும் ஒரு நாட்டில் வழக்கு தாக்கல் செய்ய அங்கீகாரம் அளிக்கும் இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் தொடரில் முன் வைக்கப்பட்ட 'இலங்கை மனித உரிமை, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பான 40/1 என்ற பிரேரணை' இன்று 22ம் திகதி சற்று நேரத்திற்கு முன்னர் இரண்டு மடங்கு அதிக பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் உறுப்பு நாடுகள் 22 இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த நிலையில் 11 உறுப்பு நாடுகள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன. அத்துடன் இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
விசேடமாக இலங்கைக்கு அண்மையில் இந்தியா, நேபாளம், ஜப்பான் போன்ற நாடுகள் வாக்களிக்காது விலகி இருந்தன. அத்துடன் அண்டைய நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன. எதிராக வாக்களித்த ஏனைய நாடுகளாக சீனா, ரஸ்யா, கியூபா, எரித்திரியா, பொலிவீயா, பிலிபைன்ஸ், சோமாலியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் வெனிசுவெலா போன்றவை காணப்படுகின்றன. ராஜபக்ஷக்கள் தோளில் தூக்கிக் கொண்டு ஆடிய யுக்ரேன் நாடு இலங்கை மீதான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தமை விசேட அம்சமாகும். பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 22 நாடுகளில் பெரிய பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி, நெதர்லாந்து, போலந்து, டென்மார்க், ஒஸ்திரியா, ஆர்மேனியா, ஆர்ஜன்டினா, செக்கோஸ்லோவாக்கியா, பிரேசில், பெல்கேரியா, தென் கொரியா, யுக்ரேன், உருகுவே, மெக்சிகோ, மார்சல் தீவு, மலாவி, பிஜி தீவு, அய்வரி கொஸ்ட் மற்றும் பஹாமாஸ் ஆகியன அடங்கும். மனித உரிமை கவுன்ஸில் தொடர்பில் ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு எதிராக 12 நாடுகள் வாக்களித்த நிலையில் இம்முறை எதிராக வாக்களித்த நாடுகளின் எண்ணிக்கை 11ஆக குறைந்துள்ளது.
இந்த பிரேரணையை தோல்வி அடையச் செய்ய இலங்கை கோட்டாபய ராஜபக்ஷ மிருக அரசாங்கம் பாரிய அளவு முயற்சிகளை செய்த நிலையில் விசேடமாக முஸ்லிம் நாடுகளின் உதவிகளுடன் பிரேரணையை தோல்வி அடையச் செய்ய எதிர்பார்த்து இருந்தது.
இந்த பிரேரணையின் மிக முக்கிய அம்சமாக கருதப்படுவது யாதெனில் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்கு வழங்கப்படும் கீழ் காணும் பொறுப்புக்கள் ஆகும்.
"இலங்கை நாட்டுக்குள் மனித உரிமைகள் மீறப்படுதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்கள் குறித்து சாட்சி பொறுப்பை முன்னோக்கி கொண்டு செல்லும் நோக்கில் பாதுகாப்பு மற்றும் பகுப்பாய்வு செய்யும் மிக முக்கியத்துவத்தை இனங்காண வேண்டும் என்பதுடன் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்கு தகவல் திரட்டும் இயலுமை, தகவல் மற்றும் சாட்சி ஒன்றிணைத்தல், பகுப்பாய்வு செயதல் மற்றும் பாதுகாத்தல் போன்றவற்றை வலுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சுமாராக மனித உரிமைகள் மீறுதல் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுதல், பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் உயிர் தப்பிய நபர்கள் ஆகியோர் சார்பில் முன் வருதல், சரியான நீதிமன்ற அதிகாரம் கொண்டு உறுப்பு நாடுகள் உள்ளிட்ட குறித்த நீதிமன்றம் மற்றும் வேறு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் தொடர்பில் எதிர்கால பொறுப்புக் கூறல் செயற்பாடுகள் குறித்து தேவையான உபாய மார்க்கங்களை அபிவிருத்தி செய்தல்."
இந்த பிரேரணையின் பிரகாரம் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தில் இதற்கென விசேட பிரிவு ஒன்று ஏற்படுத்தப்படுவதுடன் அதற்கு சட்டத்தரணிகளும் இணைக்கப்படுவர். இந்த செயற்பாடுகளை முன்னெடுக்கவென எதிர்வரும் 22 மாதங்களுக்கு 2.8 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிட ஒதுக்கீடுக்கு அனுமதி கிடைக்கக் கூடும். எந்த ஒரு நாட்டிலும் இலங்கையின் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பில் யாருக்கேனும் வழக்கு தாக்கல் செய்வதற்கு தேவையான தகவல்கள் இந்த விசேட பிரிவு மூலம் பெற்றுக் கொடுக்கப்படும்.
அத்துடன் இந்த பிரேரணை மூலம் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து தொடர் விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்பதுடன் எதிர்வரும் 22 மாதங்களுள் மூன்று விசாரணை அறிக்கைகளை சமர்பிக்க மனித உரிமைகள் ஆணையாளருக்கு யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையானது இதற்கு முன்னர் காணப்படவில்லை. முன்னேற்றகரமான ஒன்றாகும். அதற்கு காரணம் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவது உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளமை ஆகும்.
"நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் முன்னேற்றம் உள்ளிட்ட இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அதன் மேற்பார்வை மற்றும் வௌிப்படுத்தல் செயற்பாட்டை அதிகரிக்க வேண்டும் எனவும், மனித உரிமை கவுன்ஸில் 48வது கூட்டத் தொடரில் வாய்மொழி புதுபிப்புக்களை சமர்பிக்குமாறும் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகம் கோரப்பட்டுள்ளது. அதன் 49வது கூட்டத் தொடரில் எழுத்து மூல புதுப்பிப்புக்களை சமர்பிக்கவும் மற்றும் அதன் 51வது கூட்டத் தொடரில் பொறுப்புக் கூறலை ஊக்குவித்து முன்னோக்கி கொண்டு செல்வதன் பொருட்டு மேலும் மாற்றுத் திட்டங்கள் உள்ளடங்கிய பூரண அறிக்கை ஒன்றை சமர்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்வதுடன், அந்த இரண்டு அறிக்கைகளும் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு கலந்துரையாடப்பட வேண்டும்."
இதேவேளை இந்த அறிக்கைகள் மூலம் விசாரணை செய்யக் கூடிய பொறுப்புக்கள் பல இலங்கை அரசாங்கத்திற்கு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவை வருமாறு,
09. உடனடி, விரிவான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை ஒன்றை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்வதுடன், மனித உரிமைகள் மீறப்படுதல் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை கடுமையாக மீறதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அனைத்து குற்றங்களுக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளுதல்.
10. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் தொடர்பான அலுவலகம் மற்றும் நட்ட ஈடு வழங்கும் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது போன்று அவர்களுக்கான அதிகாரத்தை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்ளுதல்.
11. மனித உரிமைகளை பாதுகாக்கும் நபர்கள் உள்ளிட்ட சிவில் செயற்பாட்டாளர்களை பாதுகாக்குமாறும், எந்த ஒரு தாக்குதல் குறித்தும் விசாரணை நடத்துமாறும், சிவில் சமூகத்திற்கு இடையூறு ஏற்படுத்தல், சோதனை நடத்துதல், பாதுகாப்பு அற்ற தன்மை மற்றும் பழிவாங்கல் அச்சுறுத்தல் இன்றி செயற்படக் கூடிய பாதுகாப்பு மற்றும் ஏற்ற சூழலை உறுதிப் படுத்துமாறும் இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்ளுதல்.
12. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை மீள் பரிசீலனை செய்யுமாறும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுவதற்கு தேவையான எந்தவொரு யாப்பையும் அரச சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய உருவாக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்ளுதல்.
13. அனைத்து மதத்தை சார்ந்த மக்களுக்கும் அவர்களது மதத்தை தெரிவிக்கும் இயலுமையை முன்னேற்றுதல் மதத்திற்கோ அல்லது நம்பிக்கைக்கோ, பன்முகத் தன்மைக்கோ சுதந்திரம் வழங்குமாறும், பகிரங்கமாக மற்றும் சமூகத்திற்கு சம அடிப்படையில் கவனிப்பு செய்யுமாறும் இலங்கை அரசாங்கத்தை கேட்டுக் கொள்ளுதல்.
14. அவர்களது கோரிக்கைகளுக்கு சரியான வகையில் பதில் அளித்தல் உள்ளிட்ட மனித உரிமை கவுன்ஸிலின் விசேட செயற் திட்டங்களுடன் இணைந்து தொடர்ந்து முழுமையாக ஒத்துழைப்புடன் செயற்படவும் இலங்கை அரசை முன்னேற்றவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மிருகத் தனமான கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் இந்த யோசனைகளை முழுமையாக புறக்கணிப்பதாக தற்போது அறிவித்துள்ள நிலையில் தற்போதைய பிரேரணையை விட பல மடங்கு வலுவான பிரேரணை ஒன்று எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெற உள்ள மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் சமர்பிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் யோசனை இதில் இல்லை. பெரும்பாலும் இந்த தீர்மானங்களை நாடுகள் தனித் தனியே எடுக்கக் கூடும்.
இலங்கை தொடர்பான பிரேரணைக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் விபரம் படத்தில் உள்ளது.
(நன்றிகள் ஶ்ரீலங்கா பிரிப், மீடியாஎல்கேடொட்கொம்)
---------------------------
by (2021-03-24 12:13:43)
Leave a Reply