~

தப்புலவின் கூத்துடன் அசாத் சாலி கைது செய்யப்பட்டமை கோட்டாபய அரசாங்கத்திற்கு 'பெக் பயர்' ஆன விதம்..!

- முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி கீர்த்தி ரத்நாயக்கவின் வௌியீடு

(லங்கா ஈ நியூஸ் - 2021 , ஏப்ரல் 03 , பிற்பகல் 11. 20) இலங்கையின் முன்னாள் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்டு சுமார் இரண்டு வாரங்களுக்கு மேலாகி விட்டது. ' முஸ்லிம் சட்டத்தை யார் மாற்றி அமைத்தாலும் நாம் மாற்ற மாட்டோம்' என்று அசாத் சாலி வௌியிட்ட கருத்தே அவர் கைது செய்யப்படுவதற்கு ஏதுவான காரணியாக அமைந்தது. முஸ்லிம் திருமண சட்டம் தொடர்பில் அசாத் சாலி வௌியிட்ட கருத்தினை அடிப்படையாக வைத்தே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் துறைக்குப் பொறுப்பான பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். எனினும் அந்த கருத்தை அடிப்படையாக வைத்து  அசாத் சாலியிடம் ICCPR கீழ்  விசாரணை நடத்துவது பிரச்சினைக்குரிய விடயமாக அமையும் என சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா தனது நிலைப்பாட்டைக் கூறியுள்ளார். அத்துடன் அம்பாறை பகுதியில் பள்ளி ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி உடைத்தது சரத் வீரசேகர என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கும் கருத்து அடங்கிய குரல் பதிவு அப்போது சமூக ஊடகங்களில் வௌியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அந்த குரல் பதிவுக்கு அமைய ICCPR யின் கீழ் அசாத் சாலிக்கு முன்னர் சரத் வீரசேகரவை கைது செய்ய வேண்டும் என சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்தார்.

அசாத் சாலி கைது செய்யப்பட்டது ஏன் ..?

முஸ்லிம் சட்டங்கள் தொடர்பில் வௌியிட்ட கருத்தை அடிப்படையாக வைத்து அசாத் சாலியை கைது செய்வதை விட ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை அடிப்படையாக வைத்து அசாத் சாலியை கைது செய்ய முடியும் என்பது சட்ட மா அதிபர் தப்புல டி லிவேராவின் கருத்தாக இருந்தது. அசாத் சாலியின் முழுமையான ஊடக சந்திப்பு வீடியோவை பார்த்து விட்டு அதன் அடிப்படையில் அவரை கைது செய்ய முடியும் என யாரேனும் கூறினால் அவர் பைத்தியக்காரன். அதனால் சட்ட மா அதிபரின் ஆலோசனை படி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தவே அசாத் சாலி கைது செய்யப்பட்டார். தற்போது அசாத் சாலி மூன்று மாத தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். விசாரணையை முன்னெடுத்துச் செல்ல விசேட பொலிஸ் குழு ஒன்றை பொலிஸ் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகர நியமித்துள்ளார். ஆனாலும் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் குறித்து அசாத் சாலி வௌியிட்ட கருத்துக்கள் தற்போது அரசாங்கத்திற்கு தலையிடியாக/ 'பெக் பயர்' ஆகத் தொடங்கியுள்ளது. குற்ற விசாரணை பிரிவில் அசாத் சாலி வழங்கியுள்ள வாக்குமூலம் மயிர் சிலிர்க்க வைக்கும் வகையில் உள்ளது.

அசாத் சாலியை கைது செய்தது கோட்டா அரசாங்கத்திற்கு 'பென் பயர்' ஆனது ..

ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அசாத் சாலி மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டு, 2018 ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாவனெல்ல மற்றும் வனாத்தவில்லு பகுதிகளில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை விடுதலை செய்து கொள்ள அழுத்தம் பிரயோகித்தமை ஆகும். ஆனால் அது தொடர்பில் அசாத் சாலி வழங்கியுள்ள வாக்குமூலம் கோட்டா அரசாங்கத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. முஸ்லிம் இளைஞர்கள் சிலரின் விடுதலை தொடர்பில் தான் தலையீடு செய்ததாகவும் அந்த இளைஞர்களின் பெற்றோரை தன்னிடம் அழைத்து வந்தது 'மிப்லால் மௌலவி' எனவும் அசாத் சாலி வாக்குமூலம் அளித்துள்ளார். மிப்லால் மௌலவி என்பவர் பசில் ராஜாக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சுரேஸ் சாலியுடன் இணைந்து பணி புரிபவர் என அசாத் சாலி கூறியுள்ளார்.  எனினும் கைது செய்யப்பட்டிருந்த குற்றமற்ற இளைஞர்கள் சிலரை விடுதலை செய்யவென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தொலைபேசியில் உரையாடியதாக அசாத் சாலி தெரிவித்துள்ளார். அத்துடன் திகன தாக்குதல் சம்பவத்தின் பின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு தொடர்பான தீர்மானமிக்க அதிகாரத்தை தனக்கு வழங்கியதாகவும் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

மிப்லால் மௌலவி, லக்ஷமன் ஹுலுகல்ல மற்றும் பசில் ராஜபக்ஷ குறித்து வௌியானவை ...

புத்தர் மனித இறைச்சி உண்கொண்டார் என கருத்து வௌியிட்ட அப்துல் ராசிக்கின் தவஹித் ஜமாத் அமைப்பு சஹரான் ஹாசிமின் பெரிய வீடு என அசாத் சாலி தெரிவித்திருந்தார். கடந்த இரண்டு தசாப்த காலமாக தான் அப்துல் ராசிக் மற்றும் சஹரான் ஹாசிமின் அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு எதிராக போராடியதாகவும் ஆனால் சுரேஸ் சாலி அடிப்படைவாதிகளை போசித்ததாகவும் அசாத் சாலி கூறியுள்ளார். மாவனெல்ல பகுதியில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் விடுதலைக்காக நீதிமன்றில் ஆஜராகிய சட்டத்தரணிகளின் வங்கிக் கணக்கில் கோடிக் கணக்கில் பணத் வைப்பு செய்யப்பட்டதாகவும் அவை சஹரானுடன் தொடர்பு வைத்திருந்த அரசியல் பலசாலிகளிடம் இருந்து கிடைத்தவை எனவும் அதனால் தனக்கு முன்னர் அந்த நபர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என அசாத் சாலி தெரிவித்திருந்தார். ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு முன்னர் அதாவது ஜனவரி மாதம் தொடக்கம் ஏப்ரல் மாதம் வரை மிப்லால் மௌலவி, லக்ஷமன் ஹுலுகல்ல மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் கிழக்கு மாகாணத்தில் பாசிக்குடா ஹோட்டலில் செய்தவை பேசியவை தொடர்பில் தேடிப் பார்க்குமாறு குற்ற விசாரணை திணைக்களத்திடம் அசாத் சாலி கேட்டுக் கொண்டார். சஹரானுடன் தொடர்பு வைத்திருந்த கோட்டா ஆதரவு வியாபார பிரஜைகள் சிலரது பெயர் பட்டியலையும் வழங்கிய அசாத் சாலி அவர்கள் குறித்தும் விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்தார். இதன்படி அசாத் சாலியை கைது செய்தமையானது கோட்டாபய அரசாங்கத்திற்கு தற்போது தலையிடியாக/ பென் பயராக மாறியுள்ளது.

சட்ட மா அதிபர் தப்புலவின் தனிப்பட்ட விடயங்கள் ..

சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரே தற்போது வசமாக மாட்டிக் கொண்டுள்ளார். அவர் ஓய்வு பெறும் கட்டத்தை அடைந்துள்ளார். நீண்ட காலம் அவரது கள்ளக் காதலியாக இருக்கும் சட்ட மா அதிபரின் ஊடகப் பேச்சாளர் நிஷாரா ஜயரத்னவை வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடியாது. அலுவலகத்தில் விடுச் செல்வது பிரச்சினைக்குரிய விடயம். அப்படி விட்டுச் சென்றால் அவர் வேறு ஒருவருக்கு சொந்தமாகி விடுவார் என்பது உறுதி. அதனால் தப்புல டி லிவேரே சேவை கால நீடிப்பு பெறவென இரவு பகல் பாராது உழைத்துக் கொண்டிருக்கிறார். ராஜபக்ஷக்களுடன் டீல் வைத்துக் கொள்ளும் கருப்பு கோர்ட் அணிந்தவர்களுக்கு கிடைத்தது போல கிடைக்காதது அதிகம். அதனால் தப்புல டி லிவேராவின் ஆலோசனைப் பெற்று முன்னேறியவர்கள் அதிகம் இல்லை. அசாத் சாலி, ரவி கருணாநாயக்க மற்றும் எதிரிசிங்க சகோதரர்கள் கைது செய்யப்பட்ட காரணம் சட்ட ரீதியான நடவடிக்கையோ அரசியல் தேவைகளுக்கு மேலாக தப்புலவின் 'பிரைவெட் மெட்டர்ஸ்' தனிப்பட்ட விடயங்களுக்காகவே. தற்போது அசாத் சாலி, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, சமூக செயற்பாட்டாளர் ரம்சி ரசீக் மற்றும் கவிஞர் அக்தாப் ஜசீம் உள்ளிட்ட முஸ்லிம் நபர்கள் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாமல் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஒருநாள் இந்த அநியாயங்களுக்கு பாதிப்பை அனுபவிக்க வேண்டியது தப்புலவோ, ராஜபக்ஷக்களோ அல்ல நாட்டு மக்களே.

சுரேஸ் சாலி தடுமாற்றத்தில் ...

2021 ஏப்ரல் 2ம் திகதி அசாத் சாலியின் அநியாய கைது மற்றும் தடுத்து வைத்தலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் அசாத் சாலி விரைவில் விடுதலை செய்யப்படுவார் எனவும் ஆரப்பாட்டம் நடத்த வேண்டாம் எனவும் அரச புலனாய்வு  பிரிவு பிரதானி சுரேஸ் சாலி உறுதி அளித்த காரணத்தால் ஏற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். இதற்கு முன்னர் 2012ம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைய அசாத் சாலி கைது செய்யப்பட்டார். அந்த விடயம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வரை சென்றது. அப்போது தலையிட்ட சுரேஸ் சாலி 3 மாத தடுப்புக் காவலில் இருந்த அசாத் சாலியை 7 நாட்களில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தார். அவ்வாறு விடுதலை செய்யப்பட்ட அசாத் சாலி ராஜபக்ஷக்களுக்கு பயந்து ஓடி ஒழியவில்லை. அவர் மேலும் உற்சாகத்துடன் ராஜபக்ஷக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றார். அத்துடன் ஞாயிறு தாக்குதலுடன் அசாத் சாலி சம்பந்தப்பட்ட சந்தேகநபர் என கோட்டா அரசாங்கம் கூறியவுடன் சர்வதேசம் அதனை நம்பி விடாது. மேலும் சர்வதேசம் அமைதி பார்வையாளராகவும் இருந்து விடாது. இன்னும் சில நாட்களில் அசாத் சாலி குறித்து அவர்கள் குரல் எழுப்பத் தொடங்குவர். தற்போதும் ஜெனீவாவில் ஆடையில் சிறுநீர் கழிக்கும் கோட்டா அரசாங்கத்திற்கு சோதனை அதிகரிக்கும்.

கீர்த்தி ரத்நாயக்க

முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரி

---------------------------
by     (2021-04-05 15:41:25)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links