- ரசல் ஹேவாவசம் கேட்கிறார்
(லங்கா ஈ நியூஸ் - 2021 , ஏப்ரல் 13 , பிற்பகல் 12.15) இலங்கையில் உயிர்த்த ஞாயிறு மிளேச்சத் தனமான தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டு வருடங்கள் நெருங்குகிறது. இந்த தாக்குதல் தொடர்பில் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான மேலதிக விசாரணை நடத்தி குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு தண்டனை வழங்கும் திட்டம் இன்னும் ஆமை வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளை கண்டு பிடித்து உடனடியாக தண்டனை வழங்குவதாக தேர்தல்கள் காலத்தில் வாக்குறுதி அளித்து முழு நாட்டு மக்களையும் ஏமாற்றி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம், கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் (2019.04.24) கைது செய்யப்பட்ட நவுபர் மவுலவி என்ற அடிப்படைவாத கருத்துக்களை பரப்பும் சொற்பொழிவாளரை ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என அறிவித்து முழு குற்றத்தையும் அவர் மீது சுமத்தி நாடகம் ஒன்றை அரங்கேற்றி வருகிறது.
தற்போதைய அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடத்துவதற்கு பதிலாக குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை முழுமையாக ஏமாற்றி வருகிறது. அத்துடன் மிளேச்ச தாக்குதல் குறித்த குற்றவாளிகளை எப்படியாவது வௌிக் கொண்டு வர வேண்டும் என கருத்து வௌியிடும் நபர்களை பின்னால் விரட்டிச் சென்று குற்ற விசாரணை திணைக்களத்திற்கு (CID) அவ்வாறான நபர்களை அழைத்து பல்வேறு வகையில் அச்சுறுத்தல் மற்றும் பயமுறுத்தல்களை செய்து வருகிறது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார இந்த தாக்குதல் தொடர்பில் லங்கா ஈ நியூஸ் எழுத்தாளரின் கட்டுரையை அடிக் கோடிட்டு பேசியதால் அவரை சிஐடி விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் முதலில் கேள்வி எழுப்பி விசாரணை நடத்த வேண்டியது எம்மிடமாகும். நாம் வௌியிட்ட தகவல் படி தற்போது அரச புலனாய்வு சேவை (SIS) பிரதானி சுரேஸ் சாலி மற்றும் ஆளுநர் முஸம்மில் ஆகியோர் சஹரான் ஹாசிமை மலேசியாவில் வைத்து சந்தித்ததாக முன்வைத்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தோ அல்லது அதனை நிராகரித்தோ, தௌிவுபடுத்தியோ விளக்கமளித்தோ சுரேஸ் சாலி அல்லது முஸம்மில் ஆகியோர் எமக்கு பதில் எதனையும் அனுப்பி வைக்கவில்லை. குறைந்தது இது பொய்யான தகவல் என முகநூல் அல்லது கூகுல் புளொக்கர் பிரிவுக்கோ முறைப்பாடு அல்லது கொமென்ட் எதுவும் பதிவு செய்யவில்லை.
எழுத்தாளர் முன்வைத்த விடயத்தின் உண்மை தன்மையை நிரூபிக்க எம்மிடம் உறுதியான சாட்சியும் உள்ளது. அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியது போல இராணுவ புலனாய்வு பிரிவினரால் சஹரான் குழுவினருக்கு சம்பளம் வழங்கப்பட்டிருந்தால் அப்போது இராணுவ புலனாய்வு பிரதானியாக இருந்தது அப்போதைய பிரிகேடியர் சுரேஸ் சாலி அல்லாது வேறு யார்? அவர் சிஐடி பிரிவில் செய்துள்ள முறைப்பாட்டின் படி சஹரானை சந்தித்ததே இல்லை என்ற கருத்து முற்றிலும் பொய்யானது தானே?
அதனால் 'திருடனின் அம்மாவிடம் அதிஷ்டம் கேட்பதற்கு' பதிலாக செய்ய வேண்டிது என்பது குறித்து விவரமாக ஒட்டு மொத்த கத்தோலிக்க சபையும் முழு கத்தோலிக்க மக்களும் முழுமையாக புரிந்து கொள்ளும் வரை ஒட்டு மொத்த இலங்கை மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை.
தற்போது ஒழிந்து இருக்கும் பிரதான சூத்திரதாரிகள் அந்த மிளேச்ச கூட்டுக் கொலை தாக்குதலுக்காக உதவி ஒத்துழைப்பு வழங்கிய நபர்களை மீண்டும் எதிர்காலத்தில் அரசியல் அதிகார தேவைகளுக்காக நிச்சயம் அரசியல் அதிகாரங்களை கைப்பற்றிக் கொள்ளவென அடிப்படைவாதிகளை பயன்படுத்தி மற்றுமொரு கூட்டுக் கொலைத் தாக்குதலை நிச்சம் நடத்தக் கூடும்.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் ராஜபக்ஷ வாத அரசியல் நிலைப்பாடு காரணமாக கத்தோலிக்க சபையின் அதிகாரம் கரைந்து சென்றுள்ளது.
பேராயர் கர்தினால் மெல்கம ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட பேராயர் சபை மற்றும் இலங்கை கத்தோலிக்க சபை பல தடவைகள் அறிக்கை வௌியிட்டு ஊடக சந்திப்பு நடத்தி ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பரிந்துரைகளை செயற்படுத்துமாறு கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்த போதும் அதனை ஒரு துளி கூட கணக்கில் எடுக்காமல் அரசாங்கம் அமைதி காத்து வருகிறது.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கடந்த உயிர்த்த ஞாயிறு ஆராதனைகளின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விமர்சனம் செய்தமையின் பின்னணியில் பல பிரச்சினைகளுக்கு முஙக் கொடுத்து மக்கள் நம்பிக்கையை நாளுக்கு நாள் இழந்து வரும் ராஜபக்ஷக்களின் அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ளவும் அரசியல் அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்ளவும் உதவி செய்ததாக நாட்டின் பெரும்பாலான மக்கள் கருதினர். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து உருவாக்கிய ஶ்ரீலங்கா பொதுஜன சுதந்திர முன்னணி கூட்டணியின் தவிசாளராக மைத்திரிபால சிறிசேனவை நியமித்த போதும் அதே கூட்டணி ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் ஒன்றாக போட்டியிட்ட போதும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை துளி அளவேனும் வாய் திறக்கவில்லை.
பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு சமூகத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளமை நியாயமான காரணங்கள் உண்டு. இரட்டை வேடம் பூண்டுள்ள பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தனது அரசியல் சார்பு நிலையினால் கூட்டுக் கொலை இடம்பெற்ற ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை ஆரம்பத்தில் இருந்தே குழப்படித்து வருகிறார். கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக கொண்டு வர பாரிய பங்களிப்பு செலுத்திய கர்தினால், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விடுக்கும் சவால் போல சத்தமாக அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நியாயத்தை நிலை நாட்டுமாறும் காலம் தாழ்த்த வேண்டாம் எனவும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சவால் விடுக்கவில்லை.
2009 ஆம் ஆண்டு LTTE இயக்கத்தை தோற்கடித்த யுத்த வெற்றியின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இருந்த ஆட்சியில் கூட்டுக் கொலை செய்த சஹரான் ஹாசிம் குழுவினருக்கு சம்பளம் வழங்கியது ஏன் ? இராணுவ புலனாய்வு அதிகாரிகள் சஹரான் குழுவுடன் இணைந்து செயற்பட்டது ஏன் ? இஸ்லாம் மற்றும் பௌத்த பெயரால் அடிப்படைவாத அமைப்புக்களை உருவாக்கி அவற்றுக்கு நிதி உதவு உள்ளிட்ட ஒத்துழைப்புக்களை வழங்கியது ஏன் ? எந்த குற்றத்தை செய்யும் நோக்கில் இவ்வாறு செய்தனர் ? என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அல்லது இலங்கை கத்தோலிக்க சபை கேள்வி எழுப்பாமல் இருந்தது ஏன் என்ற கவலை சந்தேகம் சமூகத்தில் பலர் மத்தியிலும் உள்ளது.
தாக்குதலை தடுக்க முயற்சி செய்யாது தவறிய நபர்களுக்கு மாத்திரம் தண்டனை வழங்குவது முழுமையான நியாயத்தை பெற்றுக் கொடுப்பதாக அமைந்து விடாது. அதனால் தொடர்ந்து மறைந்துள்ள சக்தி, பிரதான சூத்திரதாரி, குண்டு தயாரிக்க தொழிநுட்ப உதவி வழங்கிய நபர்கள், உதவி ஒத்துழைப்பு வழங்கிய நபர்கள் பாதுகாப்பாக உள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கிய விடயங்கள் பலவற்றை கிறிஸ்தவ பாதுகாப்பு பிரிவு பிரதானிகள் பலரும் கத்தோலிக்க சபை பேராயர்கள் பலருக்கும் வழங்கி உள்ளனர். துரதிஸ்ட வசமாக குறித்த பேராயர்கள் இதுவரையில் அதுகுறித்து எதுவும் கூறவில்லை.
அண்மையில் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் பாராளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அனுமதி பெற்று சபை முதல்வர் தினேஸ் குணவர்த்தன ஊடாக தனது பொய்களை மறைத்துக் கொள்வதற்காக பேச்சாளர் பட்டியலில் தன்னை இணைத்து அதிக நேரத்தை ஒதுக்கிக் கொண்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தொடர்ந்து ஒரு மணி நேரம் பொய்களை கூறினார். இதன் மூலம் தன்னை 'பொலனறுவை பொய்க்காரன்' என மீண்டும் சிறிசேன நிரூபித்துக் காட்டியுள்ளார்.
தான் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தகவல் அறிந்து வைத்திருக்கவில்லை எனவும் அவ்வாறு முன்கூட்டியே தெரிந்திருந்தால் நிச்சயமாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் கலந்து பேசி நாட்டில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்து தாக்குதலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்திருப்பேன் என சிங்கக் குரலில் மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றில் கர்ச்சித்தார்.
தாக்குதல் திட்டம் தொடர்பில் எதனையும் அறிந்திராத தான் ஏப்ரல் 16ம் திகதி குடும்ப சகிதம் இந்தியாவின் திருப்பதி ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு பின்னர் ஏப்ரல் 21ம் திகதி வரை சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த விடயத்தை மிகவும் வேதனையுடன் மைத்திரிபால சிறிசேன கூறினார். இவ்வாறு மிகவும் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த தன்னால் ஞாயிறு தாக்குதல் போன்ற தேசிய அழிவு குறித்து தெலைபேசி ஊடாக தகவல் கிடைத்ததும் உயிர் பாதிப்பு ஏற்படும் அளவிற்கு அதிர்ச்சி உண்டானதென மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகளில் பொய் சொல்லும் போட்டியில் ஒருவரின் திறமை வௌிபாடு போன்று மைத்திரியின் உரை இருந்தது.
ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தடுத்து நிறுத்தாமை தொடர்பில் தன் மீது குற்றம் சுமத்தி தனது அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ராஜித சேனாரத்ன ஊடக சந்திப்பு நடத்தி தெரிவித்த பாரதூரமான கருத்துகள் மக்கள் மத்தியில் நன்கு பதிவாகி தன்னை ஒரு குற்றவாளியாக அடையாளப் படுத்தியதாகவும் அதனால் சமூகத்தில் தன்னை அனைவரும் இகழ்ந்து பேசியதாகவும் மைத்திரிபால சிறிசேன கூறினார்.
செப்டெம்பர் 11ம் திகதி அமெரிக்காவை ஆட்டிப் படைத்த நிவ்யோர்க் இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பில் முன் கூட்டியே புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதும் அமெரிக்க ஜனாதிபதி உள்ளிட்ட பாதுகாப்பு பிரதானிகளுக்கு தாக்குதலை தடுத்து நிறுத்த முடியவில்லை எனவும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் குறித்த தாக்குதலை தடுத்து நிறுத்தத் தவறியதாகக் கூறி அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஸ் அல்லது பாதுகாப்பு அமைச்சர் அல்லது புலனாய்வு பிரதானி ஆகியோருக்கு எதிராக நீதிமன்றில் தண்டனை வழங்கப்படவில்லை எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். இவ்வாறான தேசிய அழிவுகளின் போது நாட்டுத் தலைவரை குற்றவாளியாக அடையாளப் படுத்துவது எதிர்கால நாட்டுத் தலைவர்களுக்கு ஆபத்தாக அமையும் எனவும் மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றில் பால் குடிக்கும் குழந்தை போல கதைத்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேச பயங்கரவாத தாக்குதல்களைக் கூட தனக்கு சாதகமாக பயன்படுத்தி திரிபு படுத்திக் கொண்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்கக் கூடிய கேள்விகள் சிலவும் எம்மிடம் உள்ளது.
01. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி தொடக்கம் சரியான புலனாய்வு தகவல் கிடைத்து இருந்தும் தாக்குதல் நடத்தப்படும் என தெரிந்து கொண்டும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி அளித்தது அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் கிடையாது மாறாக அவரே நியமித்த பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ ஆவார். அப்படியானால் அது பொய்யா ..?
02. 'தாக்குதலின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவும். வேண்டிய நாட்டுக்கு நான் தூதுவர் பதவி தருகிறேன்' என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது செயலாளர் உதய ஆர். செனவிரட்ன முன்னிலையில் தன்னிடம் கூறியதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சி அளித்தார். (ஜனாதிபதி ஆணைக்குழு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரட்னவிடம் இது தொடர்பில் கேள்வி எழுப்பவில்லை.) அவ்வாறு செய்தது ஏன் ..?
03. ஒரு ஜனாதிபதியின் கீழ் ஒரே பதவி காலத்தில் ஐந்து பாதுகாப்பு செயலாளர்கள் மாறி மாறி நியமிக்கப்பட்டு மற்றும் பதவி நீக்கி நாட்டின் பாதுகாப்பை விளையாட்டுத் தனமாக கையாண்டவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அதற்கான காரணம் என்ன ..? (அவ்வாறு நியமிக்கப்பட்ட மற்றும் நீக்கப்பட்ட நபர்கள் - உத்பல பஸ்நாயக்க, கருணாசேன ஹெட்டியாராச்சி, கப்பில வைத்தியரட்ன, ஹேமசிறி பெனாண்டோ, ஜெனரால் சாந்த கொட்டேகொட)
04. அப்போது ஜனாதிபதி பாதுகாப்பு ஆலோசகராக நியமனம் பெற்ற பொலிஸ் விசேட அதிரடிப் படையின் முன்னாள் பிரதானி சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் லெவுகேவினால் 2018 ஆம் ஆண்டு அப்போது அரச புலனாய்வு பிரிவு பிரதானியாக செயற்பட்ட நிலந்த ஜயவர்த்தன அந்த பதவியை வகிக்க தகுதி அற்றவர் எனவும் கிழக்கில் காணப்படும் அடிப்படைவாத செயற்பாடுகளை தடுத்த நிறுத்த கடுமையாக பாதுகாப்பு பிரிவு செயற்பட வேண்டும் எனவும் எழுத்து மூலம் மைத்திரிபால சிறிசேனவிற்கு தெரிவித்திருந்த போதும் சஹரான் தொடர்பில் எவ்வித விசாரணையும் செய்யாமல் செயற் திறனற்ற நிலந்த ஜயவர்த்தனவை பதவியில் இருந்து நீக்காமல் ஜனாதிபதி பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து கிழக்கு மாகாணம் தொடர்பில் அடிமட்ட மற்றும் விசேட அனுபவம் உடைய நிமல் லெவுகேவை பதவி நீக்கம் செய்தது ஏன் ..?
05. மாவனெல்ல புத்தர் சிலை உடைப்பு தொடர்பில், வனாத்தவில்லு வெடி பொருட்கள் மீட்பு தொடர்பில், மட்டக்களப்பு - வவுனதீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கொலை தொடர்பில், நாமல் குமாரவின் கொலை சதி நாடகம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நிறுத்து வைத்துள்ளமை யாருடைய தேவைக்காக மற்றும் யாருடைய அதிகார மோகத்திற்காக ..?
தற்போதைய அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியாக ' தெரிவு செய்யப்பட்டுள்ள' (அடையாளம் காணப்பட்டவர் அல்ல) மொஹமட் நவுபர் மவுலவி என்பவர் கடந்த நல்லாட்சி அரசாங்கம் காணப்பட்ட காலத்தில் ஆகும். 2019 - 04 - 24 அன்று நவுபர் மவுலவி கைது செய்யப்பட்டதுடன் தொடர்ந்து அவரிடம் CID மற்றும் TID பிரிவுகள் இரண்டு வருடமாக மாறி மாறி விசாரணை செய்து வந்துள்ளன. இவர் சஹரான் குழுவினருக்கு அடிப்படைவாத கருத்துக்களை கற்பித்ததுடன் சஹரான் குழு இரண்டாக பிளவு பட்ட பின்னர் இவரும் தனியாக பிரிந்த ஒருவர் ஆவார்.
நவுபர் மவுலவி தடுப்புக் காவல் உத்தரவில் கைதாகி இருந்த போது குற்ற விசாரணை திணைக்களத்திற்கு பொறுப்பாக சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரட்ன செயற்பட்டார். இந்த ரவி செனவிரட்னவும் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின் அவசரமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்ற விசாரணை திணைக்கள பணிப்பாளராக இருந்த சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி சானி அபேசேகர ஆகியோர் ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு மேலதிகமாக சஹரானின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் பின்னணியில் பிரதான சூத்திரதாரி மற்றும் மறைக்கப்பட்ட சக்தி நிச்சயம் இருப்பது தங்களது கணிப்பு மற்றும் நம்பிக்கை என கூறி இருந்தனர்.
ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தான் சந்தேகப்படும் நபர் ஒருவரின் பெயரை எழுத்து மூலம் இரகசியமாக ஆணைக்குழுவிடம் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரட்ன வழங்கி இருந்ததுடன் அவரை கைது செய்து விசாரணை செய்வதன் மூலம் மேலதிக உண்மை தகவல்களை அறிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.
தாக்குதலுக்கு நேரடியாக தொடர்பு பட்டு உதவி ஒத்துழைப்பு வழங்கி தற்போது ஒழிந்து இருக்கும் நபர்களுக்கு தண்டனை வழங்குவதன் மாத்திரமே இவ்வாறான மிளேச்சத் தன கூட்டுக் கொலை தாக்குதல்களை தடுத்து நிறுத்த முடியும் என ரவி செனவிரட்ன மற்றும் சானி அபேசேகர ஆகிய அனுபவம் வாய்ந்த சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் இருவரும் தெரிவித்ததுடன் அதுவரை நாட்டின் பாதுகாப்பற்ற தன்மை தொடரும் எனவும் ஆணைக்குழு விசாரணையில் முன்னிலையாகி பகிரங்கமாகக் கூறினர்.
இவ்வாறு இருக்கையில் நவுபர் மவுலவியை பிரதான சூத்திரதாரியாக அவசரமாக அமைச்சர் சரத் வீரசேகர ' தெரிவு செய்தது' எந்த சாட்சியை அடிப்படையாகக் கொண்டு ..?
குறைந்தது குற்ற விசாரணை திணைக்களத்திற்கு பொறுப்பாக இருந்த சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரட்ன அன்று ஆணைக்குழுவில் இரகசியமாக எழுதிக் கொடுத்த பெயருடன் நவுபர் மவுலவியின் பெயர் பொருந்துகிறதா ..?
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் இந்த அவசர நடிப்பின் பின்னணியில் ஒட்டுமொத்த கத்தோலிக்க மற்றும் நியாயத்தை எதிர்பார்க்கும் மக்களிடம் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தை பாதுகாப்பதே என்பது எந்தவொரு சிறு பிள்ளைக்கும் விளங்கிக் கொள்ள முடியும்.
சரத் வீரசேகரவின் கருத்தை அடுத்து எமக்கு மற்றுமொரு வரலாற்று சம்பவம் நினைவிற்கு வருகிறது. 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் திகதி கொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் கொலையை மறைக்க கிருளபனை முகலன் வீதியில் கொலை செய்து கொண்டு வந்து போடப்பட்ட தமிழ் நபர் ஒருவரின் சடலத்தை லலித் அத்துலத் முதலியை கொலை செய்த நபர் என்று அடையாளப் படுத்த அன்றைய ஜனாதிபதி பிரேமதாஸவின் அரசாங்கம் எடுத்த முயற்சி மற்றும் இந்த சம்பவத்திற்கு இடையில் சமமான தொடர்பு உள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரியை பெயரிட பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அமெரிக்காவின் FBI நிறுவன அறிக்கையை கூட தனக்குத் தேவையான வகையில் திரிபுடுத்தி காட்டினார். அத்துடன் கட்டுக் கதை சோடித்து மற்றும் ஒரு பொய்யை பாராளுமன்றில் கட்டவிழ்த்து விட்டார். சஹரான் குழுவினருக்கு பாதுகாப்பு அமைச்சின் கீழ் புலனாய்வு பிரிவுக்கு தெரியப்படுத்தி சம்பளம் வழங்கவில்லை என அவர் கூறினார். அப்படியானால் அப்போது தெரியாமல் தற்கொலை தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு சம்பளம் வழங்கிய கழுதை இராணுவ புலனாய்வு பிரிவா இருந்தது.. ? அந்த கழுதை இராணுவ புலனாய்வு பிரிவு பணிப்பாளர் சுரேஸ் சாலி என்றால் இன்று அவரை அரச புலனாய்வு பிரிவு பிரதானியாக நியமித்தது ஏன் ..?
நாட்டை ஏமாற்றும் அமைச்சர் சரத் வீரசேகர இன்று என்ன கதை சோடித்துக் கூறினாலும் ஞாயிறு தாக்குதலில் பின்னர் 2019 ஆம் ஆண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கண்டி கெட்டம்பே ராஜோபவனாராமய விகாரையின் விகாராதிபதி வண, கெப்பெட்டியாகொட சிறிவிமல தேரரை சந்தித்து தான் ஜனாதிபதி பதவியில் இருந்த போது சஹரான் உள்ளிட்ட குழுவினருக்கு சம்பளம் வழங்கியதாக பகிரங்கமாக ஏற்றுக் கொண்டார். ( ஆம் நாம் சஹரான் குழுவினருக்கு சம்பளம் வழங்கினோம் தேரர் அவர்களே. அந்த அமைப்புகளில் என்ன செய்கிறார்கள் என்று தகவல் பெறவே வழங்கினோம்) தற்போதைய அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பகிரங்கமாகவே சஹரான் குழுவினருக்கு சம்பளம் வழங்கியதை ஏற்றுக் கொண்டார். முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சிலரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி இது விடயம் தொடர்பில் இரகசிய தகவல்களை வழங்கியுள்ளனர்.
அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு முட்டாள் கதைகளை கூறி அடிப்படைவாத சஹரான் குழுவினருக்கு உதவி ஒத்துழைப்பு வழங்கி அவர்களுடன் நெருங்கி பழகிய புலனாய்வு பிரிவு பிரதானிகள் சிலரின் கொடுக்கல் வாங்கல் மற்றும் குற்றம் புரிவதற்கான நிகழ்ச்சி நிரல் போன்றவற்றை மூடி மறைக்க முடியாது என்பதை கூறி வைக்க வேண்டும். இரத்தத்தை கடலுக்கு அடியில் மறைத்தேனும் உண்மையை மூடி மறைக்க முடியாது என நினைவு படுத்த வேண்டும்.
01. முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆணைக்குழுவில் தெரிவித்த தெஹிவளை விடுதியில் குண்டு வெடிக்கச் செய்த மொஹமட் சமீல் என்ற குண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்வதற்கு முன்னர் சந்தித்த இராணுவ புலனாய்வு பிரிவு பிரதானிகள் யார் .? அது குறித்த விசாரணை எங்கே ..?
02. 2019 - 04 - 16 அன்று மட்டக்களப்பு காத்தான்குடியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை வெடிக்க வைத்து ஒத்திகை பார்த்த அடிப்படைவாதிகளான சஹரான் குழுவினர் 5 நாட்களுக்குப் பின்னர் அவசரமாக அதி சக்தி வாய்ந்த வெடி பொருட்களை பயன்படுத்தி 8 இடங்களில் கூட்டுக் கொலை செய்து குண்டு வெடிக்கச் செய்தது யாரது தூண்டுதலில் ..? சிறிய காலத்தில் தொழிநுட்ப அனுபவம் பெற்று இவ்வாறான பாரிய குண்டுத் தாக்குதல்களை இக்குழுவினருக்கு மேற்கொள்ள முடியுமானது எவ்வாறு ..?
03. சஹரானின் மனைவியான பாத்திமா காதியா என்ற பெண்ணின் சாட்சியை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஊடகங்களை வௌியில் அனுப்பி பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தி ஒரு நாளில் மாத்திரம் மட்டுப்படுத்தி சாட்சி பெற்றது ஏன் ..? இந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன் ..? எந்த உண்மையை மறைக்க இவ்வாறு செயற்பட்டனர் ..?
04. புலஸ்தினி மகேந்திரன் என்ற சாரா ஜெஸ்மின் என்ற பெண்ணின் இரகசிய காணாமல் போதல் தொடர்பில் நாட்டை ஏமாற்றி மாறி மாறி மாற்றுக் கருத்துக்களை முன் வைத்தது ஏன் ..?
05. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின் ஞாயிறு குண்டுத் தாக்குதல் மற்றும் வேறு குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்திய அனுபவம் வாய்ந்த திறமையான குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளை சிறையில் அடைத்து மற்றும் அவசரமாக இடமாற்றம் செய்வது ஏன் ..?
06. எந்த ஒரு பிரதான சூத்திரதாரியும், மறைந்திருக்கும் சக்தியும் இல்லை. அனைத்து விசாரணைகளும் முடிவுக்கு வந்து விட்டது எனக் கூறும் அரசாங்கம் தனது உண்மைத் தன்மையை நிரூபிக்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை ஒன்றை நடத்த தயாரா..?
07. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மூலம் அனைத்து முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள், பொது பல சேனா அமைப்பு உள்ளிட்ட ஏனைய அடிப்படைவாத அமைப்புக்களை தடை செய்ய பரிந்துரை செய்துள்ள போதும் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் சிலவற்றை மாத்திரம் தடை செய்து வர்த்தமானி அறிவித்தல் விடுத்தது ஏன்..? அடிப்படைவாத பொது பல சேனா அமைப்புடன் அரசாங்கத்திற்கு இருக்கும் எதிர்கால கொடுக்கல் வாங்கல் என்ன..?
மேலே கூறப்பட்ட அனைத்து விடயங்களையும் இணைத்து பார்க்கும் போது தெரிய வரும் உண்மை யாதெனில் தற்போதைய இலங்கை ஆட்சியாளர்கள் மற்றும் மதத் தலைவர்கள் இணைந்து நாட்டு மக்களை ஏமாற்றி வருவதாகும். ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளை அம்பலப்படுத்துவதை தவிர்க்க வெவ்வேறு விடயங்களை சமூக மயப்படுத்தி ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் உண்மையான குற்றவாளிகளை மறைத்து வைத்துள்ளதை முழு உலகமும் விளங்கிக் கொண்டுள்ளது.
"பாதுகாப்புக்கு போடப்பட்ட வேலியே பயிரை மேய்ந்தால் எங்கு சென்று முறையிடுவது" என்ற பலமொழிக்கு அமைய ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட நபர்களின் உறவினர்கள், காயமடைந்த நபர்கள், உடல் அவயவங்களை இழந்தவர்கள், மன உலைச்சலுக்கு ஆளனவர்கள், கத்தோலிக்க மக்கள், ஏனைய பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் இந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் நீதி நியாயம் கிடைக்கும் என்பது வெறும் பகல் கனவு என்பதை மீண்டும் நினைவு படுத்த வேண்டும். குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்குவதும் இந்த ஆட்சியில் நடக்காது.
நியாயம் கிடைக்க இறுதி எதிர்பார்ப்பு ஒழுக்கமான சர்வதேச நிறுவனங்களின் தலையீட்டில் மாத்திரமே உள்ளது.
அது வரையில் தாக்குதலின் பிரதானி சூத்திரதாரி பாதுகாப்பாக இருப்பார். பொது மக்கள் பணத்தை பயன்படுத்தி இஸ்லாம் அடிப்படைவாதிகளுக்கு சம்பளம் கொடுத்து அவர்களை போஷித்து உதவி ஒத்துழைப்பு வழங்கிய நபர்கள் மற்றும் தாக்குதல் தொடர்பில் தகவல் கிடைத்தும் கூட்டுக் கொலை இடம்பெற அமைதியாக இருந்து வழி ஏற்படுத்திக் கொடுத்த மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட நபர்கள் இணைந்தே தற்போதைய ஆட்சியை புரிந்து வருகிறார்கள் என்பதை நாம் அறிவோம்.
மனித கொலை குற்றத்தை புரிய உதவி ஒத்துழைப்பு வழங்கி ஆட்சி செய்யும் மிளேச்சத் தனமான ஆட்சியாளர்கள் உள்ள இலங்கையில் ஆட்சியாளர்கள் தங்களது அதிகார மோகத்திற்கு ஆட்சி மோகத்திற்கு மற்றுமொரு கூட்டுக் கொலை தாக்குதலை நடத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது..?
---------------------------
by (2021-04-13 03:53:31)
Leave a Reply