- விசேட எழுத்தாளரின் வௌியீடு
(லங்கா ஈ நியூஸ் - 2021 , ஏப்ரல் , 17. பிற்பகல் 09.50) தென் இந்திய பாதுகாப்பு பிரிவினர் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 200 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள், 60 கிலோ கிராம் ஹசீஸ் போதைப் பொருள், AK 47 ரக கைத் துப்பாக்கிகள் ஐந்து, 1000 துப்பாக்கி ரவைகள் மற்றும் தடை செய்யப்பட்ட தொழிநுட்ப உபகரணங்கள் பலவும் மீட்கப்பட்டதுடன் இந்த போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களை கடத்திச் சென்ற மூன்று இலங்கை மீன்பிடி படகுகளுடன் அதில் பயணித்த 19 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
தேடுதல் நடத்தி போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பிடிக்கப்பட்ட போது மீன்பிடி படகில் பயணித்த சந்தேகநபர்கள் போதைப் பொருட்களை கடலில் வீசி எறிந்ததாக இந்திய பாதுகாப்பு பிரிவினர் தகவல் வௌியிட்டுள்ளனர். இந்திய பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருட்களின் இந்திய பெறுமதி 3000 கோடி என்பதுடன் அதன் இலங்கை பெறுமதி சுமார் 7700 கோடி என தெரிய வருகிறது. இந்திய கேரளாவின் விசின்ஜெம் பிரதேசத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரிடம் இந்திய பாதுகாப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் பல தகவல்களை வௌிப்படுத்தி உள்ளார்.
சந்தேகநபர்கள் வௌியிட்ட தகவல்களுக்கு அமைய கண்டு பிடிக்கப்பட்ட ஹெரோயின் மற்றும் ஆயுதங்கள் இலங்கையின் தென் மாகாணத்தில் செயற்படும் பிரபல பாதாள உலகக் குழு தலைவரான 'பிரசன்ன விஜேவிக்ரம' என்ற 'பத்தேகம சுதா' என்று அழைக்கப்படும் நபருக்குச் சொந்தமானது என இந்திய தமிழ்நாடு புலனாய்வு பிரிவினர் தகவல் வௌியிட்டுள்ளனர். இவர் ராஜபக்ஷ சகோதரர் ஒருவரின் நெருங்கிய நண்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெதமுலனவிற்கு அருகில் உள்ள திஸ்ஸ 'டெமரீன் ட்ரீ' சொகுசு ஹோட்டல் உள்ளிட்ட ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் எட்டு இவருக்கு சொந்தமானது என தமிழ்நாடு புலனாய்வு பிரிவினரை சுட்டிக்காட்டி ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்த கடத்தல் கும்பல் தமது கடத்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் அதிவேக படகுகள் சிலவற்றின் புகைப்படங்களும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. இந்த அதிவேக படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் கூட புகைப்படத்தில் வௌியிடப்பட்டுள்ளது. ஹைலெவல் வீதிக்கு அருகில் உள்ள இவருக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்று ஹெரோயின் போதைப் பொருள் கடத்தல் மத்திய நிலையமாக செயற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (அதனுடன் தொடர்புடைய புகைப்படம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது)
இந்தியா ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் காரர் குறித்து இவ்வளவு தகவல்களை பகிரங்கமாக வௌியிட்டுள்ள போதும் இலங்கையின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருக்கும் பாதுகாப்பு அமைச்சரும் நாட்டின் தலைவருமான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது பாதுகாப்பு படை பிரிவினரும் எதுவும் தெரியாதது போல் எதனையும் கணக்கில் எடுக்காமல் மேலே வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்திய கடற் பரப்பில் வைத்து மார்ச் மாதம் 25 ஆம் திகதி இலங்கையின் குடு வியாபாரிகளின் போதைப் பொருள் தொகையை கைப்பற்றியதுடன் மார்ச் மாதம் 5 ஆம் திகதி லக்சாதிவிப கடற் பரப்பில் வைத்து 200 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் 60 கிலோ கிராம் ஹசீஸ் போதைப் பொருளும் கடத்திச் சென்ற 6 இலங்கையர்கள் அடங்கிய படகினையும் இந்திய கடல் பாதுகாப்பு பிரிவினர் கைது செய்தனர்.
கடந்த வருடம் நவம்பர் மாதமும் இந்தியாவின் தமிழ்நாடு கன்னியாக்குமரி கடற் பரப்பில் வைத்து 'சேனயா துவ' என்ற படகில் கடத்திச் செல்லப்பட்ட 120 கிலோ கிராம் ஹெரோயின் இந்திய பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டது. அதன் பெறுமதி இலங்கை ரூபாவில் 2600 கோடி என கணிக்கப்பட்டது.
இந்த அனைத்து ஹெரோயின் தொகைகளையும் இந்திய பாதுகாப்பு பிரிவினர் மடக்கிப் பிடித்து கைது செய்த போதும் இலங்கையின் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் அதற்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்காமல் இலங்கைக்குள் இந்த விடயங்களுக்கு பிரச்சாரம் முன்னுரிமை அளிக்காமல் அமைதி காத்து வருவதானது இந்தியாவிற்கு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.
இலங்கையில் ஹெரோயின் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அன்னளவாக சுமார் 65000 என கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த அன்னளவான தொகையையும் பார்க்க சுமார் 7 மடங்கு அதிகமானவர்கள் ஹெரோயின் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 80 - 90ம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கைக்கு அதிகளவு ஹெரோயின் விநியோகிக்கும் நாடுகளாக பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகியவை திகழ்ந்தன. ஆனால் இன்று அந்த நிலை மாறி உள்ளது. இலங்கைக்கு பிரதானமாக ஹெரோயின் கொண்டு வரப்படுவது ஆப்கானிஸ்தானில் இருந்து என தெரிய வருகிறது. இன்று உலகில் சுமார் 90 % ஹெரோயின் போதைப் பொருள் ஆப்கானிஸ்தானில் இருந்து விநியோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இலங்கைக்கு கீழ் மற்றும் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியா, பிலிபைன்ஸ், மலேசியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு இலங்கை ஊடாகவே ஹெரோயின் போதைப் பொருள் கடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆபிரிக்காவின் பெருந் தீவுகளுக்கு ஹெரோயின் விநியோகிக்கும் நாடுகள் வரிசையில் இலங்கை முன்னிலை பெறுகிறது. ஹெரோயின் கடத்தல் விடயத்தில் அதிகளவான கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் கடலுக்கு நடுவில் முன்னெடுக்கப்படுகிறது. போதைப் பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு (United Nations Office on Drugs and Crime) வௌியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கையின் படி இலங்கை நாடானது உலக போதைப் பொருள் வர்த்தகத்தின் மையப் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. UNODC ஆய்வு அறிக்கை குறித்து கோட்டாபய அரசாங்கத்திற்கு கவனம் இல்லை என்ற போதும் அதிகரித்து வரும் போதைப் பொருள் கடத்தல் குறித்து இந்திய அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக இந்திய புலனாய்வு பிரிவு இந்திய கடல் பகுதியில் இந்து சமுத்திர வலயத்தில் போதைப் பொருள் கடத்தும் இலங்கை நபர்கள் குறித்தும் ஏனையவர்கள் குறித்தும் தகவல் திரட்டுவது மற்றும் தேடுதல் நடத்துவதை தீவிரப்படுத்தி உள்ளது.
கடந்த வருடத்திற்குள் மாத்திரம் (2020) இலங்கை போதைப் பொருள் கடத்தல் காரர்களுக்கு எதிராக இந்திய பாதுகாப்பு பிரிவினர் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் மூலம் கிடைத்த பிரதிபலன்கள் கீழ்வருமாறு. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுள் கிம்புலா எல குணா உள்ளிட்ட குடு வியாபாரிகள் 14 பேர் அடங்குவர். இந்த நிலையானது உண்மையில் பாரிய வேலை செய்யும் கோட்டாபய ராஜபக்ஷ வீரரின் அரசாங்கம் வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயமாகும்.
இந்திய பாதுகாப்பு பிரிவினர் கடலில் கைது செய்த இலங்கை போதைப் பொருள் கடத்தல் சந்தேகநபர்களின் மொத்த எண்ணிக்கை - 112
பிடிக்கப்பட்ட ஹெரோயின் போதைப் பொருள் தொகை - 960 கிலோ கிராம்
அயிஸ் போதைப் பொருள் தொகை (Crystal Methamphetamine) - 876 கிலோ கிராம்
கெட்டமின் போதைப் பொருள் தொகை - 681 கிலோ கிராம்
தான் இயங்கி துப்பாக்கி - 29
டோலர் படகுகள் - 14
அதிவேக படகுகள் - 5
இலங்கையின் அதிஉயர் அரசியல் அதிகாரமிக்க குடு கோட் பாதர்கள் தொடர்பான கொள்கை வலுவிழந்துள்ளதால் பாதுகாப்பு படையினர் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அஞ்சுகின்றனர். இலங்கையில் குற்றம் தொடர்பில் செயற்படுத்தப்படும் நீதி இரண்டு வகையானது. பாரிய அளவு ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் நபர்கள் எறும்புகள் கூடுகளை உடைத்துக் கொண்டு செல்வது போல இருக்கையில் சட்டம் முறையாக செயற்படாது. ஆனால் ஒருவேளை குடு குடிக்கும் நபர் சட்டத்தின் பிடியில் மாட்டிக் கொள்வார்.
இலங்கை யுத்தக் குற்றம் தொடர்பில் பொறுப்புக் கூறாமை மற்றும் சர்வதேச நல்லிணக்கம் தொடர்பில் கடைபிடிக்கும் விடாபிடி கொள்கை என்பன குறித்து சர்வதேசம் இன்று கூடிய கவனம் செலுத்தி உள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை தற்போது பொறுப்புக் கூற வேண்டிய தரப்பாக மாறியுள்ளது. கடந்த வருட காலத்தில் "போதைப் பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பு (UNODC) தமது புலனாய்வு தகவல்களை செட்டலைட் தொழிநுட்பம் ஊடாக இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
எனினும் UNODC அதிகாரிகள் மற்றும் இந்திய பாதுகாப்பு பிரிவினர் கூறுவது போல உடனடியாக இவ்விடயங்களுக்கு பதில் அளிக்க இலங்கை பாதுகாப்பு பிரிவினர் தவறியுள்ளனர். இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இலங்கை செயல் திறனற்ற மாபியா அரசாக (A failed mafia state) உலக அளவில் பேசப்படும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
(இந்திய பாதுகாப்பு பிரிவினர் கைது செய்த இலங்கை படகு, ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் இந்த புகைப்படங்களில் இணைக்கப்பட்டுள்ளது.)
---------------------------
by (2021-04-18 10:15:59)
Leave a Reply