~

கொழும்பு துறைமுக நகர சட்ட மூலத்திற்கு மக்கள் வாக்கெடுப்பு மிகவும் அவசியம்..!! காரணம் இதோ..!!

-அரசியல் யாப்பு நிபுணர், ஜனாதிபதி சட்டத்தரணி, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்னவின் ஆய்வு

(லங்கா ஈ நியூஸ் - 2021, ஏப்ரல் , 19 பிற்பகல் 06.20) கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்ட மூலம் 2021 ஏப்ரல் 8 ஆம் திகதி முழு நாட்டு மக்களும் சித்திரை புது வருடத்தை கொண்டாட தயாராகிக் கொண்டிருந்த போது பாராளுமன்றில் திடீரென சமர்பிக்கப்பட்டது. சட்ட மூல ஆவணத்தின் யாப்பு ரீதியான தகைமை குறித்து உயர் நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்த உள்ள ஒரு வார காலத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் அரச விடுமுறை தினங்கள் மூன்று போன்றவை கழிக்கப்பட்டு,  நீதிமன்ற விடுமுறை பெற்றிருந்த சட்டத்தரணிகளைச் தேடிச் சென்று எதிர் மனு தாக்கல் செய்ய நாட்டு பிரஜைக்கு இரண்டு நாட்கள் மாத்திரமே எஞ்சி இருந்தது. எனவே இதனை எதிர்பாராமல் செய்ததாக கருத முடியாது. இது நன்கு சிந்தித்து செய்யப்பட்ட செயல் ஆகும். சட்ட மூலத்தை ஆராய்ந்து அதன் நன்மை தீமைகளை விவாதிக்க சரியான கால நேரம் வழங்கப்படாமல் செயற்பட்டமை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலையை வெளிப்படுத்தி உள்ளது. (அது தொடர்பான அறிக்கை புகைப்பட வடிவில் கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது.) 

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் அதிக அளவான விசேட பொருளாதார வலயங்களை காணக் கூடியதாக உள்ளது. அவை உருவாக்கப்பட்டிருப்பதன் பிரதான நோக்கம் விசேட முதலீடுகளை கொண்டு வருவதற்கே. முதலீடு செய்யும் வர்த்தகர்களுக்கு பல சலுகைகள் கிடைப்பதால் அவர்களின் உற்பத்தி உலக சந்தையில் போட்டித் தன்மை கொண்டதாகக் காணப்படும். அத்துடன் இவ்வாறான வர்த்தக வலயங்களில் மோசமான விடயங்களையும் காண முடியும். எனினும் இந்த கட்டுரையின் நோக்கம் கொழும்பு நகர ஆணைக்குழு சட்ட மூலத்தின் யாப்பு ரீதியான ஏற்புடைமை தொடர்பான விவாதத்தை ஏற்படுத்துவது மாத்திரமே. 

அதிக அதிகாரம் கொண்ட ஆணைக்குழு...

கொழும்பு துறைமுக நகரத்தின் நிர்வாகம், ஒழுங்குமுறை மற்றும் அதற்கு உள்ளே மற்றும் அதற்கு உள்ளே இருந்து வௌியில் முன்னெடுக்கும் வியாபாரம் மற்றும் செயற்பாடுகளுடன் இணைந்ததான அனைத்து விடயங்களையும் நிர்வாகம் செய்வதற்கு அதிக அதிகாரம் கொண்ட ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகர பகுதியில் உள்ள காணிகளை குத்தகைக்கு கொடுக்கவும் அந்த பகுதியில் உள்ள மாடி வீடுகளை உரித்துக் கொடுக்கவும் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் உண்டு. 'ஒற்றை சாளரம்' என்ற அடிப்படையில் செயற்பட்டு நகரிற்குள் ஐக்கிய முதலீடு வசதிகளை செய்து கொடுக்குமாறு சட்ட மூலம் வலியுறுத்துகிறது. நகர ஆணைக்குழுவிற்கு எந்த ஒரு சட்டத்தின் கீழும் உள்ள ஒழுங்குமுறை ஆதிக்க அதிகாரங்கள் மற்றும் காரியங்களை செயற்படுத்துவதுடன் அனைத்து ஒழுங்குமுறை அதிகாரங்களும் ஆணைக்குழு கேட்டுக் கொள்ளும் விடயங்கள் குறித்து முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதுடன் அதற்கு தங்களது இணக்கத்தையும் வழங்க வேண்டியது கட்டாயமாகும். 

அரசியல் யாப்பின் 12 (1) சரத்து மீறப்பட்டுகிறது...

இதன் ஊடாக ஏனைய ஒழுங்குமுறை நிறுவனங்களுக்கு உள்ள விருப்பத் தேர்வுகள் மற்றும் அதிகாரங்கள் நீக்கப்படுகிறது. இவ்வாறு செய்வது தான்தோன்றித் தனமான செயற்பாடு என்பதுடன் அரசியல் யாப்பின் 12 (1) சரத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள சட்டத்தின் பாதுகாப்பு மற்றும் அனைவருக்கும் நியாயம் என்பதை மீறுகிறது.

இறையாண்மை, சுயாதீனம், மக்களின் இறையாண்மை என்பவை மீறப்படுகிறது...

நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிர்வாக சபை உறுப்பினர்கள்  மற்றும் கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஐவர் இலங்கை பிரஜைகளாக இருக்க வேண்டியது கட்டாயம் இல்லை. வேறு நாட்டில் பிரஜா உரிமை உள்ள நபர்களுக்கு இந்த அளவு அதிக அதிகாரங்கள் வழங்கி நமது நாட்டின் அரசியல் யாப்பின் முதலாவது சரத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள இலங்கையின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் சுயாதீன தன்மை போன்றவை மீறப்படவில்லையா என்பது இங்கு எழும் கேள்வியாக உள்ளது. அத்துடன் யாப்பின் 2 மற்றும் மூன்றாம் சரத்துக்களில் உறுதி செய்யப்பட்டுள்ள மக்கள் இறைமை இங்கு மீறப்படுகிறது. 

இலங்கை பிரஜைகளுக்கு மாற்றான் தாய் கவனிப்பு...

கொழும்பு துறைமுக நகர சட்ட மூலத்தின் 26வது சரத்தின் கீழ் உள்ள ஏற்பாடுகளின் படி துறைமுக நகருக்குள் ஆணைக்குழு அனுமதி பெற்ற நபர்களுக்கு மாத்திரமே வியாபார நடவடிக்கையில் ஈடுபட முடியும். 27வது சரத்திற்கு அமைய அனைத்து முதலீடுகளும் வௌிநாட்டு பணத்தில் மாத்திரம் இடம்பெற வேண்டும். இதற்கும் மேலான அபாயமான விடயம் என்னவென்றால் இலங்கையில் உள்ள வங்கிகளில் வைப்பில் இடப்பட்டுள்ள வௌிநாட்டு பணங்களைக் கூட முதலீட்டு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியாது. இதன் மூலம் இலங்கை பிரஜைகளிடம் உள்ள சட்ட ரீதியான ரூபா பணம் மற்றும் சட்ட ரீதியான வௌிநாட்டு பணத்தைக் கூட கொழும்பு துறைமுக நகரில் முதலீட்டுக்கு பயன்படுத்த முடியாது. இந்த சட்ட ஏற்பாடானது தான்தோன்றித் தனமான ஒன்று என்பதுடன் இலங்கை பிரஜைகளுக்கு மாற்றாம் தாய் கவனிப்பு செய்யப்படுவதால் அதன் மூலம் இலங்கை அரசியல் யாப்பின் 12 (1) வது சரத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள சம அந்தஸ்த்து பிரஜைகளுக்கு இல்லாமல் போகிறது. அத்துடன் யாப்பின் 14 (1) (உ) சரத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ள வர்த்தக வியாபாரம் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடும் சுதந்திரம் இல்லாது போகிறது.   

அடிப்படை உரிமைகளை மீறும் புதுமையான வரி...

உத்தேச கொழும்பு துறைமுக நகர சட்ட மூலத்தின் 35வது சரத்தின் கீழ் குடியுரிமை பெற்றவர்கள் அல்லது குடியுரிமை பெறாதவர்கள் துறைமுக நகரில் சேவையில் ஈடுபடும் போது அவருக்கு உரிய சம்பளம் இலங்கை ரூபாவில் அல்லாது நிர்ணயம் செய்யப்படும் வேறு ஒரு நாட்டின் பண அளகில் செலுத்தப்பட வேண்டும். இந்த சம்பள கொடுப்பனவு வருமான வரியில் இருந்து விடுவிப்பு பெறுகிறது. சட்ட மூலத்தின் 36வது சரத்தின் கீழ் துறைமுக நகரில் இருந்து பெறப்படும் இலங்கை ரூபாவை வௌிநாட்டு பணத்திற்கு மாற்றிக் கொள்ள முடியும். இலங்கை பிரஜைகளுக்கு குறித்த துறைமுக நகரித்திற்கு உள்ளே பொருட்கள், சேவைகள் மற்றும் வசதிகளை பெற்றுக் கொள்ள ரூபாவில் பணம் செலுத்த முடியும் என்ற போதும் கொள்வனவு செய்யப்படும் பொருட்களை துறைமுகத்தில் இருந்து வௌியில் கொண்டு வர மேலதிக வரி செலுத்த வேண்டும் என சட்ட மூலத்தின் 40வது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் வேறு நாட்டுக்கு விஜயம் செய்து கொள்வனவு செய்து எடுத்து வரும் பொருட்களுக்கு சுங்க வரி செலுத்துவது போலவே இது அமைகிறது ...! இந்த கட்டுப்பாட்டை நியாயப் படுத்த, சில அடிப்படை உரிமைகளை மட்டுப்படுத்த யாப்பின் 15வது சரத்தில் இடமளிக்கப்பட்டுள்ள "தேசிய பொருளாதாரம்" என்ற  ஒரு மந்திரம் போலான கோஷங்களை சட்ட மூலம் முழுவதும் காணக் கூடியதாக உள்ளது. இவ்வாறு கோஷமிடுவதன் மூலம் மாத்திரம் கட்டுப்பாடு விதிக்க முடியாது.

1978ம் ஆண்டு மற்றும் 1972ம் ஆண்டு அரசியல் யாப்பின் கீழ் பெரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழு அமைக்க முன்வைக்கப்பட்ட சட்ட மூல ஆவணத்தில் விசேடமாக தொழிலாளர் வகுப்புக்கு பாதுகாப்பு வழங்கக் கூடிய ஏற்பாடுகள் பல சுதந்திர வர்த்தக வலயத்திற்குள் செயற்படுத்தப்பட வில்லை என யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. அந்த சட்ட மூல ஆவணத்திற்கு எதிராக லங்கா தொழில் சம்மேளனத்தின் சார்பில் கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வா குரல் எழுப்ப முன்வந்தார். இந்த கட்டுரையை எழுதும் நபரும் சட்ட மூலத்திற்கு எதிராக குரல் கொடுத்தார். அப்போது இருந்து யாப்பு ரீதியான நீதிமன்றம் சில கட்டளை ஏற்பாடுகள் சேர்க்கப்படாமை சம அந்தஸ்த்து சரத்தினை மீறும் செயல் என்பதால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் சட்டமாக்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்தது. தனக்கு ஆறில் ஐந்து பெரும்பான்மை இருந்த போதும் அப்போதைய ஆட்சியாளரான ஜே.ஆர்.ஜயவர்த்தன ஏற்புடையது அல்லாது சரத்துக்களை சட்ட மூலத்தில் இருந்து நீக்கினார். அதனால் 1972ம் ஆண்டு யாப்பின் கீழ் மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஆனாலும் 1978ம் ஆண்டு யாப்பின் கீழ் அடிப்படை உரிமை மீறப்படும் சமயத்தில் மக்களின் இறைமையை உறுதிப் படுத்தும் 3 மற்றும் 4ம் சரத்துக்கள் மீறப்படும் என்பதால் மக்கள் வாக்கெடுப்பின் மூலம் அனுமதி பெற வேண்டும். இது தொடர்பில் 2002ம் ஆண்டு 18வது யாப்புத் திருத்தத்தின் போது பத்து நீதிபதிகள் அடங்கிய குழுவும் அண்மையில் 20வது திருத்தம் தொடர்பில் 5 நீதிபதிகள் அடங்கிய குழுவும் உறுதி செய்துள்ளது.

அரசியல் யாப்பின் 12வது சரத்தை மீறுவதன் மூலம் இலங்கை நீதிமன்றம் புறக்கணிப்பு...

கொழும்பு துறைமுக நகர சட்ட மூலத்தின் 62வது சரத்தின் படி ஆணைக்குழு தொடர்பான அனைத்து விடயங்கள் பிரச்சினைகளை நடுவர் மூலம் தீர்த்துக் கொள்ளப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். இந்த ஏற்பாட்டின் மூலம் இலங்கை நீதிமன்றம் புறக்கணிப்பு செய்யப்படுகிறது. நகருக்கு உள்ளே ஏற்பாடும் ஆணைக்குழு தொடர்பு அற்ற, வேறு அனைத்து சிவில் மற்றும் வர்த்தக வழக்குகள் ஏதேனும் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நாளுக்கு நாள் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.  வழக்கு விசாரணையை பிற்போடுவதற்கு நீதிபதி ஒருவரின் சுகயீனம் போன்ற தனிப்பட்ட விடயத்தைக் கூட காரணமாக முன்வைக்க முடியாது. இந்த சரத்து ஏற்பாடானது தான் தோன்றித் தனமான ஒன்று என்பதுடன் அதன் மூலம் அரசியல் யாப்பின் 12வது சரத்து மீறப்படுகிறது.

பாராளுமன்றின் அதிகாரம் கேலிக்கு உள்ளாகிறது...

உத்தேச கொழும்பு துறைமுக நகர் சட்ட மூலத்தின் மூன்றாவது உப பிரிவில் உள்ள சரத்துக்கள் பல துறைமுகத்திற்குள் அதிகாரத்தில் இருக்காது. அதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை சட்டம், மாநகர சபை சட்டம் மற்றும் நகர, கிராம உருவாக்க கட்டளைச் சட்டம் உள்ளடங்கும். இவ்வாறு செய்வது தான் தோன்றித் தனமான செயல் என்பதுடன் அரசியல் யாப்பின் 12வது சரத்தை மீறுவதாகும்.

சட்ட மூலத்தின் 52 மற்றும் 53வது சரத்தின் ஏற்பாட்டு பிரகாரம் வருமான வரி, வௌிநாட்டு செலாவணி, சுங்கம், பந்தயம் கட்டுதல் மற்றும் சூது விளையாட்டு மூலமான வரி போன்ற சட்டங்கள் பலவற்றில் இருந்து விடுவிப்பு வழங்க உத்தேச கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவிற்கு அதிகாரம் உள்ளது. இதன் ஊடாக மக்களின் மற்றும் பாராளுமன்றின் யாப்பு ரீதியான அதிகாரம் கேலிக்கு உட்படுத்தப்படுவதுடன்  அதன் மூலம் அரசியல் யாப்பின் 3 மற்றும் 4ம் சரத்துக்களுக்கு மாறாக செயற்படுகிறது. 

அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள எதிர்ப்பு, அதனால் அரசியல் யாப்பிற்கும் எதிர்ப்பு...

இந்த உத்தேச சட்ட மூல ஆவணத்தில் சேர்க்கப்பட்டுள்ள காரணங்கள் பல மாகாண சபை விடய விதான பட்டியலில் சேரும். உள்ளூராட்சி சபைகள், உருவ வடிவமைப்பு, பந்தையம் கட்டுதல் மற்றும் சூது விளையாட்டு அதற்குள் இணையும். அரசியல் யாப்பில் 154 (3) சரத்திற்கு அமைய இவ்வாறான சட்ட மூல ஆவணங்கள் மாகாண சபைகளின் கருத்துக்களை கோர அங்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். இந்த நாட்களில் இலங்கையில் மாகாண சபைகள் செயற்பாட்டில் இல்லை என்பதால் மாகாண சபைகளின் விருப்பம் கிடைக்கவில்லை எனக் கருதி மூன்றில் இரண்டு அதிக பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

கொழும்பு துறைமுக நகரத்தை நகர சபை சட்டத்தில் இருந்து அகற்றி உள்ளமை அரசியல் யாப்பிற்கு விரோதமான செயலாகும். பெரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழுவின் பிரதேசத்திற்கு உள்ளே உள்ளூராட்சி நிறுவனங்கள் இருக்கக் கூடாது என தான் தோன்றித் தனமாக இருக்கக் முடியாது என 1978ம் ஆண்டு யாப்பு நீதிமன்றில் தெரிவித்தது. அது 1972ம் ஆண்டு யாப்பின் கீழாகும். ஆனால் தற்போது 1978ம் ஆண்டு யாப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் உள்ளூராட்சி சபை யாப்பை ஏற்றுக் கொண்டு மாகாண சபைகளுக்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால் கொழும்பு துறைமுக நகரத்தை கொழும்பு மாநகர சபை சட்டத்தில் இருந்து விடுவிப்பது அரசியல் யாப்புக்கு விரோதமான செயலாகும். 

2/3 முன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றி மக்கள் வாக்கெடுப்பிலும் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்...

மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு உத்தேச கொழும்பு துறைமுக நபர ஆணைக்குழு சட்ட மூலம் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு மக்கள் வாக்கெடுப்பிலும் மக்கள் விருப்பத்தை பெற வேண்டும் என்பது கட்டுரையாளரின் கருத்தாக அமைகிறது. அரசியல் யாப்பு விடயம் எப்படியாக இருந்தாலும் இவ்வாறான முக்கிய விடயங்கள் அடங்கிய சட்ட மூலம் பொது வௌியில் ஆழமாக விவாதத்திற்கு விடப்பட வேண்டியது அவசியமாகும். அதற்காக இதனை பாராளுமன்ற குழுவிற்கு அனுப்பி நாட்டு மக்களிடமும் சிவில் அமைப்புகளிடமும் குறிப்பாக விசேட நிபுணர்களிடமும் கருத்துக் கேட்பது மிகவும் ஊசிதமானது.

-கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, ஜனாதிபதி சட்டத்தரணி

 (இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் எதிர்ப்பு அறிக்கை கீழுள்ள புகைப்பட வடிவில் காணலாம்) 

---------------------------
by     (2021-04-19 13:57:04)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links