- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இரண்டாம் வருட பூர்த்தியை முன்னிட்டு
(லங்கா ஈ நியூஸ் - 2021 , ஏப்ரல் , 23 முற்பகல் 07.35) இலங்கையில் மிலேச்சத்தனமாக முன்னெடுக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள பிரதான சூத்திரதாரிகள் யார் என்பதை கண்டு பிடிப்பது நம் அனைவரினதும் பொறுப்பு எனவும் தாக்குதல் தொர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட சாட்சிகள் ஊடாகச் சென்று பிரதான சூத்திரதாரிகள் கண்டு பிடிக்கப்பட வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார பாராளுமன்றில் 20ம் திகதி ஆற்றிய உரையில் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆராயவென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் தெரிவிக்கப்பட்ட சாட்சிகள் அறிக்கையில் உள்ளடக்கப்பட வில்லை என சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார, இந்த சாட்சிகள் ஊடாக பிரதான சூத்திரதாரிகளை கண்டு பிடிப்பது அனைவரினதும் பொறுப்பு என தெரிவித்தார்.
மனுஷ நாணயக்கார பாராளுமன்றில் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,
"நான் இன்று பாராளுமன்றில் ஆற்றும் உரைக்கு யாரேனும் இடையூறு ஏற்படுத்தினால் அவ்வாறு இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளை வௌியில் தெரியாமல் இருக்க தடுப்பவர்கள் ஆவர். தற்போது அரசாங்கம் தாங்கள் தெரிவு செய்து எடுத்த மவுலவி ஒருவர் மீது தாக்குதலின் பொறுப்பை சுமத்த முயற்சி எடுத்து வருகிறது. உண்மையில் செய்யப்பட வேண்டியது ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய உண்மையான நபர்களை கண்டு பிடிப்பதாகும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயவென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை பல சந்தர்ப்பங்களில் பலவாறு கருத்துக்களை வௌியிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ கருத்து வௌியிட்ட பின்னர் அவருக்கு வந்த தொலைபேசி அழைப்பு போல கர்தினால் கருத்து வௌியிட்ட பின்னர் தொலைபேசி அழைப்பு வந்து அவர் திடீரென தான் கூறிய கருத்தை மாற்றிக் கொண்டாரா என்ற சந்தேகம் இன்று நாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்கு தாக்குதல் நடத்த வந்த ஜமீல் என்ற நபர் தெஹிவளையில் வைத்து குண்டை வெடிக்கச் செய்தார். இவ்வாறு குண்டு வெடிக்கச் செய்வதற்கு முன்னர் குண்டுதாரியின் வீட்டிற்கு இராணுவ புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் இருவர் சென்றுள்ளனர். இந்த அதிகாரிகள் அங்கு சென்றமை, ஜமீல் என்ற நபர் குறித்த தாக்குதலுடன் தொடர்பு பட்டவர் என்பதை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்ததால் ஆகும். இவ்வாறு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆணைக்குழு முன் சாட்சி அளித்திருந்தார். இந்த விடயம் குறித்து மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டு உள்ளதா?
எப் தொழிநுட்ப முறை ஊடாக கண்டு பிடிக்கப்பட்ட சந்தேகநபர் ஒருவரை பொலிஸ் அதிகாரி சானி அபேசேகர கைது செய்த பின்னர் இராணுவ புலனாய்வு பிரிவு அவரை அழைத்துச் சென்றுள்ளது. இது எங்களுடைய செயற்திட்டம் எனக் கூறியே இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவர் குறித்த சந்தேகநபரை அழைத்துச் சென்றுள்ளார். குறித்த இராணுவ புலனாய்வு அதிகாரிக்கு சஹரான் ஹாசிமுடன் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு உள்ளதா?
கட்டார் நாட்டில் இருந்து வந்த மாத்தளை சின்ன சஹரான் என்ற நபரை சந்திக்க புலனாய்வு பிரிவில் " சோனிக் சோனிக்" என்று அழைக்கப்படும் நபர் சென்றுள்ளார். இந்த புலனாய்வு அதிகாரி சென்று தாக்குதலுக்கு ஐ எஸ் ஐ எஸ் இயக்கத்தின் தலைவர் அல் பக்தாதி ஏன் இன்னும் பொறுப்பு ஏற்கவில்லை என சஹரானிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது சத்தியப்பிரமாணம் இன்னும் வௌியில் வரவில்லை என சின்ன சஹரான் கூறுகிறார். அந்த சமயத்தில் அங்கிருந்து இந்தோனேசியா நாட்டிற்கு தொலைபேசி அழைத்து ஒன்று எடுக்கப்படுகிறது. சரி நாம் அந்த வீடியோவை இப்போது இணையத்தில் வௌியிடுகிறோம் என்று கூறிய பின்னரே இலங்கை தாக்குதலுக்கான பொறுப்பை அல் பக்தாதி ஏற்றுக் கொள்கிறார்.
இந்த தகவல் ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட சாட்சியில் இருந்து பெறப்பட்டது. இவை குறித்து மேலதிக விசாரணை நடத்தாமல் இருப்பது தான் பிரச்சினை.
சாரா என்ற பெண் குறித்து தௌிவான தகவல் இல்லை. சாரா குறித்து டி என் ஏ பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறுகிறார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் பயங்கரவாதிகள் காத்தான்குடி பகுதி வீடு ஒன்றில் வைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய போது 19 பேர் குறித்த வீட்டில் இருந்துள்ளனர். அதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் சாரா என்ற பெண்ணின் சடலம் இருக்கவில்லை.
அர்ஜுன் மஹிகந்த என்ற பொலிஸ் அதிகாரி ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சி அளித்து, சாரா என்ற பெண் கடல் வழியாக இந்தியாவிற்கு தப்பிச் சென்று விட்டதாகவும் அது தொடர்பான சாட்சியை முன்வைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார். ஆணைக்குழு முன் இவ்வாறு சாட்சி அளித்துள்ள போது அமைச்சர் சரத் வீரசேகர சாரா குறித்து தகவல் இல்லை எனக் கூறுகிறார். அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒருவர் சாரா குறித்த தகவல்களை மறைப்பது ஏன்? சாரா குறித்து ஆணைக்குழு விசாரணை தகவல் வௌியாகியுள்ள நிலையில் தான் அமைச்சர் தகவல்களை மறைக்க முயற்சி செய்கிறார். சாரா என்ற பெண் தப்பிச் செல்ல உதவி புரிந்த பொலிஸ் அதிகாரி தற்போது பயங்கரவாத தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை தான் மறைக்கப் பார்க்கிறார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தற்சமயம் சட்ட மா அதிபர் கைகளுக்குச் சென்றுள்ளது. பொலிஸ் அதிகாரிகளே பொதுவாக சட்ட மா அதிபரிடம் செல்வர். அதுவும் தேவையான உதவிகளை செய்ய செல்வார். ஆனால் புலனாய்வு பிரிவுக்கு தலைமை வகிக்கும் ஒரு நபர் இது தொடர்பான கலந்துரையால்கள் நடக்கும் இடத்திற்கு நாளாந்தம் செல்வதாக தகவல் கிடைத்துள்ளது. அப்படியானால் ஏன் அவர் அங்கு செல்கிறார். ?
இந்த அனைத்து தகவல்களும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் வௌியானவை. சட்டத்தரணிகள் இருந்த இடத்தில் ஊடகவியலாளர்களை வௌியில் அனுப்பி விட்டு பெற்றுக் கொள்ளப்பட்ட சாட்சிகளே இவை. சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சானி அபேசேகரவை சிறையில் அடைத்து வைத்துள்ளனர். முதலாவது புலனாய்வு தகவல் ஏப்ரல் 4ம் திகதி கிடைக்கிறது. ஏப்ரல் மாத மத்தியில் சஹரான் குழுவிற்கு 430 லட்சம் பெரும் தொகை பணம் கிடைக்கிறது. இதில் இறைச்சி பரிமாறிக் கொள்கின்றனர். ஆயுதம் கொள்வனவு செய்கின்றனர். வேறு பல வேலைகளையும் இந்த பணத்தில் செய்கின்றனர். அதுபோல 2014 ஆம் தொடக்கம் சஹரான் குழுவிற்கு சம்பளம் வழங்கி உள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் நபர்களை 'எமது செயற்திட்டம்' என்று கூறி இராணுவ புலனாய்வு பிரிவினர் வந்து அழைத்துச் செல்கின்றனர். காரணம் இதனுடன் தொடர்புடைய வலையமைப்பு இருந்ததால் இவ்வாறு செய்துள்ளனர்.
ஏப்ரல் 4ம் திகதி இது குறித்த புலனாய்வு தகவல் கிடைத்து இருந்ததால் தாக்குதல் நடக்கும் வரை சந்தேகநபர்களை கைது செய்ய முடியாமல் போனது ஏன்? இந்த புலனாய்வு தகவலை தேடிப் பார்த்து விசாரணை நடத்தாது ஏன் என ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்த காலத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொறுப்பாளராக சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா தவஹித் ஜமாத் அமைப்பு குறித்த விசாரணை அறிக்கை ஒன்றை சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைத்திருந்தார். அத்துடன் சந்தேகநபர்களை கைது செய்ய ஆலோசனை கேட்டிருந்தார். அதற்கான ஆலோசனை கிடைக்கப் பெற்றிருக்கவில்லை.
நாமல் குமார என்ற நபரின் கருத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு விசாரணை நடத்தி சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வாவை கைது செய்த விடயம் குறித்து ஆழமாக கவனம் செலுத்த வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தற்கொலை குண்டுதாரி சஹரான ஹாசிமின் மனைவி பாதிமா காதியாவிடம் சாட்சி பதிவு செய்து கொண்ட போது ஊடகவியலாளர்களை வௌியில் அனுப்பியது. காதியாவின் சாட்சியில் உள்ளடங்கிய விடயங்கள் என்ன என்பது பலத்த பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. இவற்றை பகிரங்கமாக வௌியிடாமல் இருப்பது ஏன்?
த்ரீமா என்று அழைக்கப்படும் எப் ஒன்றின் மூலம் இவர்கள் தகவல் பரிமாறிக் கொண்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட நபர்கள் தாக்குதல் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் இரு குழுவாக பிரிந்துள்ளனர். ஜாஎல மற்றும் பானந்துரை ஆகிய பகுதிகளில் பாதுகாப்பான வீடுகளில் இருந்தே இவர்கள் இந்த செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்றுள்ளனர். அந்த நாட்களில் 'தாக்குதல் தாமதமாவது குறித்து பொஸ் மகிழ்ச்சி இன்றி உள்ளார்' கதைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 'பொய் விரைவில் செய்யுங்கள்' என்று சொல்லி உள்ளார். இங்கு சொல்லப்படும் 'பொஸ்' என்பவர் யார் என்று கண்டு பிடித்தே ஆக வேண்டும்.
இங்கு சொல்லப்படும் பொஸ் யார் என்பதை கண்டு பிடிக்க வேண்டும். இது போன்று தான் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை, ஊடகவியலாளர் கீத் நொயார் மீதான தாக்குதல் போன்றவற்றுடன் இராணுவத்தில் சிலருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அரச நிர்வாகத்தில் வௌியில் உள்ள இவ்வாறான குழு ஒன்று இந்த தாக்குதலுக்கு உதவி ஒத்துழைப்பு வழங்கியதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து நாம் தேடிப் பார்க்க வேண்டும்.
இந்த காலத்தில் இராணுவ புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸ் புலனாய்வு பிரிவு இடையே சில மோதல் ஏற்பட்டு இருந்தது. இந்த மோதலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமாக இருந்திருக்கக் கூடும். நாம் யாரை நோக்கியும் விரல் நீட்டவில்லை. இந்த தாக்குதலின் உண்மையான குற்றவாளி யார் என்று நாம் கண்டு பிடிக்க வேண்டும். அப்படி செய்தால் தான் தாக்குதலில் கொல்லப்பட்ட நபர்களுக்கு நியாயம் கிடைக்கும். யார் பொஸ் என்பதை கண்டு பிடித்துக் கொள்ளவே நாம் பாராளுன்றில் குரல் கொடுக்கிறோம். ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் முன்வைக்கப்பட்ட சாட்சிகளை வைத்துக் கொண்டே நாம் இந்த கருத்துக்களை வௌியிடுகிறோம். சாட்சியாக ஆணைக்குழு முன் கூறப்பட்ட விடயங்களில் அறிக்கையில் வௌிவராத தகவல்கள் சிலவற்றையே நாம் சபையில் முன்வைக்கிறோம்.
இந்த விடயங்கள் குறித்து மீண்டும் குற்ற விசாரணை திணைக்களத்திற்கு சென்று மீண்டும் முறைப்பாடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. காரணம் இவை ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சிகள் மூலம் வௌிவந்த விடயங்களாகும். இவை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிடம் உள்ளது. இந்த விடயங்கள் குறித்து ஆராய்ந்து பார்த்து ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி யார் என்பதை கண்டு பிடிக்க நடவடிக்கை எடுப்போம்."
பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவின் முழு உரை அடங்கிய வீடியோ கீழுள்ள இணைப்பில் உள்ளது.
https://www.facebook.com/manusha.nanayakkaara/videos/289930675940094/
---------------------------
by (2021-04-24 11:01:20)
Leave a Reply