~

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் சாட்சி அனைத்தும் அழிப்பு...! ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் போலி ஏமாற்று நாடகம்..!

- கீர்த்தி ரத்நாயக்க பகிரங்கப்படுத்துகிறார்

(லங்கா ஈ நியூஸ் - 2021 , ஏப்ரல் 23, பிற்பகல் 05.25) இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் நூற்றுக் கணக்கான உயிர்களை பலி எடுத்ததுடன் இலங்கை அரசியலை ஆட்டிப் படைத்தது. குண்டுத் தாக்குதல் இடம்பெற்று அதில் பாதிக்கப்பட்ட நபர்களின் இரத்த வாடை காய்வதற்கு முன்னர் 2019ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாக நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ தாமரை மொட்டு கட்சியின் அனுமதி இன்றி தனிப்பட்ட தீர்மானத்தை எடுத்து அறிவித்தார். கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் ஜனாதிபதியாக வந்தால் IS பயங்கரவாதிகளின் அடி முடியை தேடி அனைத்தையும் இல்லாது செய்து விடுவார் என மக்கள் நம்பிக்கை கொண்டனர். இஸ்லாமிய அடிப்படை வாதத்திற்கு தீணி போடும் நபர்களுக்கு தராதிரம் பாராது தண்டனை வழங்கப்படும் எனவும் பாரிய இரகசியமாக உள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் மறைந்துள்ள அனைத்து முடிச்சுகளையும் அவிழ்த்து வௌிச்சத்திற்கு வரும் என மக்கள் பாரிய எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். இஸ்லாமிய அடிப்படை வாதிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என்பதுடன் அது மாத்திரமன்றி அதன் ஊடாக நாட்டில் பாரிய மாற்றம் ஏற்படுத்தப்படும் எனவும் நாட்டு மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

அண்ட சக்தியில் உயர்வடைந்த கோட்டாபய ராஜபக்ஷ..

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் உருவாகிய மக்களின் அண்ட சக்தியில் கோட்டாபய ராஜபக்ஷ உயர் நோக்கிச் சென்றார். துப்பாக்கியை கட்டிய நபர் (குண்டு வெடிக்கச் செய்த நபர்) தெரியாமல் இருந்தாலும், வேட்டையில் சிக்கியதை (சிங்கள வாக்கு) கையில் எடுக்கும் போது வேட்டைக்காரர் அம்பலத்திற்கு வந்து விடுவார் என்று தெரிவித்த போதும் சாதாரண மக்கள் அதனை நம்பவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து உண்மைகளை வெளிப்படையாக தெரிவித்து கட்டுரை எழுதிய ஊடகங்களில் லங்கா ஈ நியூஸ் இணையத்தைப் போன்று வேறு எந்த ஊடகங்களும் எழுதவில்லை. நாம் வௌியிட்ட கருத்துக்கள் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருந்த போதும் அதற்கு மக்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. விசேடமாக உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் இஸ்லாமிய அடிப்படைவாத பின்னணியின் கீழ் (தவறான கொடியின் கீழான செயற்பாடு) பாரிய தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக நாம் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி, அதாவது ஞாயிறு தாக்குதல் நடத்தப்படுவதற்கு சரியாக மூன்று மாதங்களுக்கு முன்னர் தகவல் வௌியிட்டோம். (அந்த செய்தியை இந்த இணைப்பில் படிக்கலாம் https://www.lankaenews.com/news/8840)

கோட்டாபய ராஜபக்ஷ மீது மக்கள் மத்தியில் இருந்து எழுந்த சந்தேகம்.. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவமானது கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் மேடைகளில் மிகவும் கவரப்பட்ட 'முன்னோட்டமாக' இருந்தது. ஆனாலும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாரி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியான நிலையில்   IS பயங்கரவாத அமைப்பின் இலங்கை முகவர் யார் என்பது கண்டு பிடிக்கப்படவில்லை. பயங்கரவாதிகளுக்கு துப்பாக்கி ஆயுதங்கள், வெடி பொருட்கள், தொழிநுட்ப உதவி கிடைத்த விதம் தெரிய வரவில்லை. குண்டு வெடிப்பு நடத்திய விதம் குறித்து தகவல் இல்லை. இலங்கையில்  IS பயங்கரவாதிகளுக்கு உதவி வழங்கிய வௌிநாட்டு அமைப்புக்கள் அல்லது நபர்கள் குறித்து எவ்வித தகவல்களும் வௌியாகவில்லை. நாட்டில் தலைநகரத்திற்கு 8 தாக்குதல்கள் நடத்தப்பட்ட பயங்கரவாத வலையமைப்பின் பிரதான சூத்திரதாரி எவரும் கைது செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்டுள்ள அசாத் சாலி போன்றோர் புகழ்தேடும் அரசியல்வாதிகளே தவிர  IS பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டவர்கள் இல்லை என்பதை அனைவரும் அறிவர். இந்த பின்னணியில் கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிட்டு தம்மை ஏமாற்றியதான சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவை அழித்த விதம்..  

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி அதிகாரத்திற்கு வரும் போதும் ஞாயிறு தாக்குதல் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு துடிப்புடன் செயற்பட்டு வந்தது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த ஆணைக்குழுவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரத்து செய்யவில்லை. நல்லாட்சி அரசாங்க காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷ அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒரே வீட்டில் உணவு உட்கொண்டமை அதற்கு ஒரு காரணமாக அமைந்தது. ஆனாலும் மைத்திரிபால சிறிசேன நியமித்த விசாரணை ஆணைக்குழுவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மிகவும் சூட்சமமான முறையில் குழப்பினார். ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்களை மாற்றம் செய்யாமல் விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரி சானி அபேசேகரவை இடமாற்றம் செய்தார். ஆரம்பத்தில் இருந்தே விசாரணை நடத்திய CID மற்றும் TID பிரிவுகளைச் சேர்ந்த 71 அதிகாரிகளை நீக்கினர். அது மாத்திரமன்றி விசாரணையை தமக்கு ஏற்றாற் போல முன்னெடுக்கவென தனிப்பட்ட ஜனாதிபதி செயற்பாட்டு படையணி குழு  (Task force) அமைக்கப்பட்டது. இந்த குழு ஜனாதிபதி விசாரணை குழுவிற்கும் மேலானதாக நியமிக்கப்பட்டது. (அதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட உத்தரவு இந்த இணைப்பில் உள்ளது. (http://www.defence.lk/Article_Tamil/view_article/887)

தனது வழக்கை தானே விசாரணை செய்யும் சூட்சமமான சதி..

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்த தனிப்பட்ட ஜனாதிபதி செயலணிக் குழு உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத ஒன்றாகும். அந்த படையணி குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்திற்கு பாத்திரமானவர்கள் ஆவர்.

1. தேசிய புலனாய்வு பிரிவு பிரதானி
2. அரச புலனாய்வு சேவை பிரதானி
3. இராணுவ புலனாய்வு பிரிவு பிரதானி
4. குற்ற விசாரணை திணைக்கள பிரதானி
5. பயங்கரவாத தடுப்பு பிரிவு பிரதானி
6. பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதானி 

தேசிய புலனாய்வு பிரிவு பிரதானி, அரச புலனாய்வு சேவை பிரதானி மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவு பிரதானி ஆகிய மூன்று பொறுப்புக்களையும் ஒருவரே வகிக்கிறார். அவரே சுரேஸ் சாலி. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஸ் சாலி மீது கடுமையான குற்றச்சாட்டு உள்ளது. அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியது போன்று சஹரான் குழுவினருக்கு இராணுவ புலனாய்வு பிரிவினர் கொடுப்பனவு வழங்கும் போது அந்த பிரிவிற்கு பொறுப்பான அதிகாரியாக சுரேஸ் சாலி இருந்துள்ளார். கோட்டாய ராஜபக்ஷ ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின் CID மற்றும் TID ஆகிய பிரிவுகளை மாறி மாறி நிர்வகித்தது எஸ்எஸ்பி பிரசன்ன அல்விஸ் மற்றும் எஸ்எஸ்பி நிஹால் தல்துவ ஆவர். இவர்கள் இருவரும் நாமல் குமார அரங்கேற்றிய நாடகத்தின் பிரதான பாத்திரங்களை வகித்தவர்கள் ஆவர். பயங்கரவாதி சஹரானை பின் தொடர்ந்து சென்று கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவின் பொறுப்பாளர் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வாவை சிறையில் அடைத்தது இந்த இருவரே. சஹரான் ஹாசிம் கைதாகுவதை தடுத்தது இந்த இருவருமாவர். அப்படியானால் தல்துவ மற்றும் பிரசன்னா அல்விஸ் ஆகியோர் இருக்க வேண்டியது ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவிற்கு மேல் அல்லாது வெலிக்கடை சிறையில் ஆகும்.

பொலிஸ் திணைக்கள சட்டப் பிரிவை பொலிஸ் மா அதிபரின் 'கருப்பு மகன்' என பிரபலமாக அழைக்கப்படும் எஸ்எஸ்பி ருவான் குணசேகர நிர்வகித்து வருகிறார். நல்லாட்சி அரசாங்க காலத்தில் பொலிஸ் ஊடகப் பிரிவின் பிரதானியாக இவர் செயற்பட்டார். முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் தகவலுக்கு அமைய ஞாயிறு தாக்குதல் முன்னெச்சரிக்கை கடிதம் பொலிஸ் ஊடகப் பிரிவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ருவான் குணசேகர கடிதத்தை கணக்கில் எடுக்கவில்லை. அதனால் அவரும் தாக்குதல் சந்தேகநபரே. ஜனாதிபதி ஆணைக்குழுவை கண்காணிக்கும் ஜனாதிபதி படையணி குழுவில் குற்றங்களின் சூத்திரதாரிகளை நியமித்தமை கேவலமான செயலாகும். இது நீதியின் மூலதர்மத்தின் முதல் தடையாக இருக்க வேண்டிய 'எவரும் தனது வழக்கில் நீதிபதியாக இருக்க முடியாது' என்ற கோட்பாட்டை முற்று முழுதாக மீறும் செயலாகும். 

இலங்கை அரசியலில் மிகவும் இழிவான ஜனாதிபதி பிரச்சாரம் ஒன்று..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தற்போது சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு தாக்கல் செய்யப் போவது யாருக்கு? முற்று முழுதாக விடுதலை செய்யப் போவது யாரை? என்பது தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் ஆராய்ந்து வருகிறது. நேற்று முன்தினம் பாராளுமன்றில் ஞாயிறு தாக்குதல் குறித்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார, ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கை தொடர்பில் ஆராய சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு இராணுவ புலனாய்வு பிரவு பிரதானி செல்வது குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரபல புலனாய்வு பிரிவு பிரதானி சுரேஸ் சாலி சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு செல்வது கோட்டாபய ஒப்படைத்துள்ள காரியத்தை சரிவர நிறைவேற்றுவதற்கு அல்லவா..? அப்படியானால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைகளை மறைப்பதாகத் தானே அர்த்தம்? அதனால் விசாரணை செய்ய வேண்டியது சுரேஸ் சாலியை அன்றி சுயாதீன நீதி கட்டமைப்பின் அடிப்படை மூலதர்ம கோட்பாட்டை மீறி சந்தேநபர்களை வழக்கு விசாரணை செய்யும் செயலுக்கு நியமித்த கோட்டாபயவைத் தானே? விசாரணை நடத்த வேண்டியது இலங்கை அரசியலில் மிகவும் இழிவான ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்று சாக்கு விளையாட்டுக் காட்டிய நபரை அல்லவா.?  

கீர்த்தி ரத்நாயக்க

முன்னாள் விமானப் படை புலனாய்வு அதிகாரி 

---------------------------
by     (2021-04-24 11:12:11)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links