(லங்கா ஈ நியூஸ் - 2021 , ஏப்ரல் 27, பிற்பகல் 11.30) சீன நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் 'ஜெனரல் வெய் பேன்ங்' 27ம் திகதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கை நாட்டை வந்தடைந்தார். இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன நாட்டின் பாதுகாப்பு அமைச்சருக்கு கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் கூடுதல் சலுகைகளை வழங்கி இலங்கையின் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் உலக நாட்டுத் தலைவர்களுக்கு மாத்திரம் வழங்கப்படும் சலுகையை சீன நாட்டின் பாதுகாப்பு அமைச்சருக்கு வழங்கி உள்ளது. அதுதான் இலங்கைக்கு விஜயம் செய்யும் உலக நாட்டுத் தலைவர்களுக்கு மாத்திரம் வழங்கப்படும் கட்டுநாயக்க விமான நிலைய வீவீஐபி வாயில் சலுகையை சீன நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் வெய் பேன்ங்டனுக்கு வழங்கி உள்ளது.
இலங்கை நாட்டுக்கு விஜயம் செய்யும் வௌிநாட்டு தலைவர்களைத் தவிர ஏனைய முக்கியஸ்ர்களுக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விஐபி வாயில் தான் வரப்பிரசாதமாக வழங்கப்படும். விஐபி வாயில் ஊடாக நாட்டுக்குள் வரும் போது அவர் நாட்டின் சுங்க செயற்பாடுகளுக்கு உட்பட்டவராக கருதப்படுவதுடன் வீவீஐபி வாயில் ஊடாக நாட்டிற்குள் வருபவர்களுக்கு சுங்க பிரிவின் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள். தனது தனிப்பட்ட காரில் சென்று இறங்கி வீட்டுக்குச் செல்வது போல நாட்டுத் தலைவர்கள் பிற நாட்டுக்குச் செல்லும் போது வீவீஐபி வாயில் வழியாக எவ்வித தடைகளும் இன்றி நாட்டுக்குள் நுழையலாம். இந்த வரப்பிரசாதம் உலகில் நாட்டுத் தலைவர்களுக்கு மாத்திரமே வழங்கப்படும்.
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி பென்னம் பெரிய வீரர் என தன்னை அழைத்துக் கொள்ளும் கோட்டாபய ராஜபக்ஷ வீவீஐபி வரப்பிரசாதத்தை சீன நாட்டின் பாதுகாப்பு அமைச்சருக்கு வழங்கி சீனாவிடம் இலங்கை எந்த அளவு தஞ்சம் அடைந்துள்ளது என்பதை உலகத்தின் மத்தியில் வௌிச்சம் போட்டுக் காட்டி இலங்கை மக்களின் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்தி உள்ளார். இலங்கை மக்கள் கௌரவத்தை சீனாவிடம் அசிங்கப்படுத்தும் செயலையே பென்னம் பெரிய வீரரான கோட்டபய செய்துள்ளார்.
சீன நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜெனரால் வேன்ங் வன்காவன் இதற்கு முன்னர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த ஆட்சி காலத்தில் 2017ம் ஆண்டில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அப்போது நாட்டு மக்களின் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்தாமல் சீன நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் வேன்ங் வன்காவன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விஐபி வாயில் ஊடாகவே வருகை தந்தார். அவருக்கு வீவீஐபி வாயில் சலுகை வழங்கப்படவில்லை.
வெட்கம் சேர், உங்களுக்கு மாத்திரம் வெட்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் பரவாயில்லை. ஆனால் நீங்கள் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது நாட்டில் உள்ள அனைத்து பிரஜைகளையும் ஆகும்.
---------------------------
by (2021-04-28 12:16:59)
Leave a Reply