-கீர்த்தி ரத்நாயக்கவின் வௌிப்படுத்தல்
(லங்கா ஈ நியூஸ் - 2021 மே , 01 பிற்பகல் 04.45) பொய்யை ஆகமமாகக் கொண்டு உயிர் வாழும் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் பொய்யை மாத்திரமே சேர்த்துக் கொண்டு கொரோனா நிலையை வெற்றி கொள்ளும் நோக்கில் செயற்படுவது போல காட்டிக் கொள்வதால் தற்போது நாடு பாரிய அழிவை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது.
சீனா மற்றும் ராஜபக்ஷ அரசாங்கம் கொரோனாவை தடையமாக வைத்துக் கொண்டு பூகோல அரசியல் சதித் திட்டம் ஒன்றுக்கு தயாராகி வருவதாக நம்பகமான தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடுவதன் நோக்கமாகவே சீன பாதுகாப்பு அமைச்சர் அவசர அவசரமாக இலங்கைக்கு விஜயம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் தற்போது கொரோனா நோயாளர்கள் வைத்தியசாலைகளில் நிரம்பி காணப்படுகின்றமை, நோயாளர் கட்டில்களுக்கு பற்றாக்குறை, ஒக்சிஜன் பற்றாக்குறை ஏற்படல், வைத்தியசாலை ஊழியர்களுக்கு சுகாதார பாதுகாப்பு அங்கிகள் இல்லாமை போன்ற காரணங்களால் நோயாளர்களுக்கு வைத்தியசாலை செல்ல முடியாமல் இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ளது போன்ற நிலைமை இலங்கையிலும் விரைவில் ஏற்படும்.
இலங்கையில் மக்கள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு நடு வீதியில் இறக்கும் போது சீன நாட்டு கப்பல் ஒன்று இலங்கைக்கு வர உள்ளது. ICU கட்டில்கள், ஒன்சிஜன் தாங்கி, ஒக்சிஜன் ஜெனரேட்டல் இயந்திரம், சீன நாட்டு வைத்தியர்கள், சீன நாட்டு சுகாதார வைத்திய அதிகாரிகள், சீன நாட்டுத் தடுப்பூசி குறித்த கப்பலில் இலங்கைக்கு கொண்டு வரப்பட உள்ளது. குறித்த சீன நாட்டு கப்பலுக்கு இந்த பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.
இந்த திட்டத்தின் ஊடாக இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 'சுவசெரிய' அம்பியூலன்ஸ் திட்டம் வலுவிழந்து போகும். இவ்வாறு சீன அரவணைப்பில் இலங்கை நாட்டை மூழ்க வைத்து நாட்டு மக்களுக்கு சீனாவை பற்றிய சிந்தனையை ஏற்படுத்தி போர்ட் சிட்டி சட்ட மூலம் உள்ளிட்ட சீன - ராஜபக்ஷ குழுவின் தேவைகள் அனைத்தையும் பூர்ச்சி செய்து கொள்ள எதிர்பார்த்துள்ளனர். இதற்கு சீன சார்பு சட்ட மா அதிபர் ஒருவரும் நியமிக்கப்பட உள்ளார். இலங்கையில் உள்ள விசேட வைத்தியர்கள் எந்த அளவு எச்சரிக்கை விடுத்தாலும் அவற்றை கடுகளவேனும் கணக்கில் எடுக்காது இந்த அரசாங்கம் செயற்படக் காரணம் மேற்கூறிய சதித் திட்டத்தை செயற்படுத்திக் கொள்ள சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்கு ஆகும்.
முன்னாள் விமானப் படை புலனாய்வு அதிகாரி
---------------------------
by (2021-05-02 12:03:21)
Leave a Reply