(லங்கா ஈ நியூஸ் - 2021, மே , 05, பிற்பகல் 07.00) பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவல் உத்தரவு பெற்று தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதினுக்கு நேற்றைய தினம் 4ம் திகதி பாராளுமன்றம் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. இன்று 5ம் திகதியும் அவருக்கு பாராளுமன்றம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதினுக்கு பாராளுமன்ற சபை நடவடிக்கையில் கலந்து கொள்ள இடமளிக்காது உறுப்பினருக்கான வரப்பிரசாதங்களை மீறி வருவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் சுட்டிக்காட்டினார்.
அதற்கு பதில் அளித்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, உலகத்தில் எங்கும் இல்லாத உலகமே அறிந்து இருக்காத தர்க்கம் ஒன்றை கொண்டு வந்து பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு பாராளுமன்றுக்கு வர அனுமதி அளிக்கப்படுவதன் மூலம் குறித்த விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படக் கூடும் எனக் கூறினார். விசாரணைகள் முடியும் வரை ரிசாத் பதியூதினுக்கு பாராளுமன்ற சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டாம் என சரத் வீரசேகர சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார்.
அமைச்சர் சரத் வீரசேகரவின் இந்த பொறுப்பற்ற தான் தோன்றித் தனமான கருத்திற்கு எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு வௌியிட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதினுக்கு பாராளுமன்ற சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள எவ்வித சட்டத் தடைகளும் இல்லை என சட்ட மா அதிபர் குற்ற விசாரணை திணைக்கள பிரதானிக்கு தெரியப்படுத்தி உள்ள நிலையில் பொது மக்கள் பிரதிநிதிகளின் உரிமைகள் மற்றும் வரப்பிரசாதங்களை பாதுகாக்க உலக வரலாற்றில் எந்த ஒரு இடத்திலும் காண முடியாத இலங்கையின் அபூர்வ சபாநாயகரால் முடியவில்லை.
20 வது திருத்தச் சட்டடத்தின் பிரதிபலனாக நிறைவேற்று அதிகாரம் கொண்டவரால் சட்டவாக்கத் துறையான பாராளுன்றம் மற்றும் நீதிமன்றம் என்பவற்றை அடிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளமை தௌிவாகத் தெரிகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களான மக்கள் பிரதிநிதிகளின் உரிமைகளை அழிக்கும் செயற்பாடானது பொது மக்கள் உரிமைகளை அழிப்பதற்கு ஒப்பான ஒன்றாகும்.
இதோ இங்கு நீங்கள் அனுபவித்துக் கொண்டிருப்பது வேறு ஒன்றும் அல்ல உண்மையான பாசிச ஆட்சியின் குணாம்சங்களே ஆகும்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதினின் மனைவி அயேசா ரிசாத் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் வடிவம் இங்கு தரப்பட்டுள்ளது.
---------------------------
by (2021-05-06 13:05:23)
Leave a Reply