~

தேசத்துரோக போர்ட் சிட்டி சட்ட மூலத்தின் சரத்துகள் பல அரசியல் யாப்புக்கு எதிரானது ..! மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் மக்கள் தீர்ப்பு அவசியம் ..! உயர் நீதிமன்றம் கோட்டாபய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புகிறது..!

(லங்கா ஈ நியூஸ் - 2021, மே , 18 , முற்பகல் 11.50) 1815 ஆம் ஆண்டு நாட்டைக் காட்டிக் கொடுத்த உடரட்ட உடன்படிக்கைக்கு ஒப்பாக கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் இன்று பாராளுமன்றில் சமர்பித்த சீனாவிற்கு இலங்கை நாட்டை காட்டிக் கொடுக்கும் ஒப்பந்தத்தின் சரத்துக்கள் பல அரசியல் யாப்புக்கு எதிரானது எனவும் இவ்வாறு எதிராக சரத்துக்களை பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் மாத்திரம் அன்றி மக்கள் தீர்ப்பும் பெற வேண்டியது அவசியம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் தேசத் துரோக செயலை கன்னத்தில் அடித்தாற் போல வௌிச்சமிட்டு காட்டியதுடன் நாட்டு மக்களின் இறைமையை பாதுகாத்துள்ளது.

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்ட மூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன பாராளுமன்றில் சற்று முன் அறிவித்தார். அதன்படி சட்ட மூலத்தின் 3(4), 3(4), 6(1)(அ), 68(1)(ஈ), 68(3)(அ), 52(5), 71(2)(ஜ), 53(3)(ஆ), 53(2) போன்ற அனைத்து சரத்துக்களும் அரசியல் யாப்புக்கு எதிரானவை என்றும் அதனால் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதுடன் மக்கள் தீர்ப்புக்கும் சென்று அனுமதி பெற்று சட்ட மூலத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  அத்துடன் சட்ட மூலத்தின்  3(6), 30(3), 55(2), 58(1), 3(5), 3(7), 6(1)(ஆ), 30(3), 71(1), 74 (வியாக்கியானத்தின் ஒழுங்குபடுத்தல் ஆணையம்')  30(1), 33(1), 40(2), 71(2)(ஓ), 60(இ), 60(ஈ), 37, போன்ற அனைத்து சரத்துக்களும் அரசியல் யாப்பிற்கு முரணானது எனவும் அதற்கு மக்கள் தீர்ப்பு அவசியம் இல்லை என்ற போதும் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெருபான்மை பலத்துடன் அங்கீகரிக்கப்பட வேண்டும் என உயர் நீதின்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பாராளுமன்றுக்கு முன்வைக்கப்படும் சட்டத்தை சட்ட மூலமாக்க திணைக்களம் ஒன்று உள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய இந்த அளவுர சரத்துக்கள் அரசியல் யாப்பிற்கு முரண் என தெரிய வந்துள்ளமையின் ஊடாக கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக சட்டமூலம் தயாரிக்கும் திணைக்களமும் நாட்டின் அரசியல் யாப்பு பற்றி தெரியாத முட்டாள் போல செயற்பட்டுள்ளமை வௌிப்படுகிறது. தேர்தல் வெற்றியின் மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று ஒரு வருடம் கூட நிறைவு பெறுவதற்கு முன்னர் முழு நாட்டு மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் தற்போதைய சந்தர்ப்பத்தில் மக்கள் தீர்ப்பு ஒன்றுக்கு செல்வதானது தற்கொலை செய்து கொள்வதற்கு சமனாகும். அதனால் இந்த அரசாங்கம் செய்ய வேண்டியது திருத்தம் செய்யப்பட்ட கொழும்பு துறைமுக நபர் ஆணைக்குழு சட்ட மூலத்தை மீள சமர்பிக்காமல் தேசத் துரோக சட்ட மூலத்தை மீளப் பெறுவதாகும்.        

ஆவணத்தின் ஆங்கில வடிவம் வருமாறு, 

The full judgment of the Supreme Court can be downloaded below link

https://www.lankaenews.com/home/downloads/82/Determination.pdf

---------------------------
by     (2021-05-18 12:02:57)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links