(லங்கா ஈ நியூஸ் - 2021, மே , 21 பிற்பகல் 03.30) 1815 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02 ஆம் திகதி பிரித்தானிய ஏகாதிபத்திய வாதிகளுக்கு இலங்கையின் மத்திய மலைநாட்டை காட்டிக் கொடுத்த உடரட்ட ஒப்பந்தத்திற்கு ஒப்பான ஒன்றை 2021 ஆம் ஆண்டு மே மாததம் 20 ஆம் திகதி சீன ஏகாதிபத்திய வாதிகளுக்கு நாட்டின் இதய சொத்தாக கருதப்படும் கொழும்பை காட்டிக் கொடுத்து கொழும்பு துறைமுக நகர் விசேட பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் உயர் நீதிமன்றினால் வழங்கப்பட்ட திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆவணம் மேலதிக 91 வாக்குகளால் பாராளுமன்றில் 20 ஆம் திகதி நிறைவேற்றிக் கொள்ளப்பட்டது. செய்யப்பட்ட திருத்தங்கள் என்ன என்பதை நாட்டு மக்கள் அறியாத நிலையில் மக்களுக்காக திருத்தங்கள் என்ன என்பதை ஆராய்ந்து தௌிவுபடுத்த எதிர்கட்சிக்கும் சிறிது கால அவகாசமே வழங்கப்பட்டது. நாடு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அச்சத்தில் முடங்கிக் கிடக்கும் நிலையில் இந்த சட்ட மூலம் மிகவும் அவசர அவசரமாக பாராளுமன்றில் இரண்டு நாட்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இரண்டாம் நாளான 20 ஆம் திகதி மாலை வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.
இதன்போது கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்ட மூலத்திற்கு ஆதரவாக 149 வாக்குகள் பெறப்பட்ட நிலையில் எதிராக 58 வாக்குகள் பெறப்பட்டன. பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு 150 வாக்குகள் தேவைப்பட்டன. ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு ஒரு வாக்குகள் குறைந்த போதும் சட்ட மூலம் மேலதிக 91 வாக்குகளால் நிறைவேற்றிக் கொள்ளப்பட்டது.
கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்ட மூலத்திற்கு கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் அனைத்து தேசத் துரோக பங்காளி கட்சிகளும் ஆதரவாக வாக்களித்த நிலையில் சட்ட மூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் தேசத்தின் மீது அன்பு கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரான தற்போது கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இசாக் ரஹுமான் மற்றும் புத்தளம் மாவட்ட பொது சுயேட்சை கட்சி வேட்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்து சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஆனாலும் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதின் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முசாரப் ஆகியோர் சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
சட்ட மூலத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை.
கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்ட மூலத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமா இல்லையா என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன எதிர்கட்சி பிரதம கொரடா பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்லவிடம் கேட்ட போது வாக்கெடுப்பு ஒன்றை கேட்கவில்லை எனவும் ஆனால் எதிர்ப்பை பதிவு செய்து கொள்ளுமாறும் லக்ஷமன் கிரியெல்ல சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிடம் கேட்டுக் கொண்டார்.
அதன் பின்னர் சபையில் எழுந்து உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், சட்ட மூலத்தின் மீது வாக்கெடுப்பு கோரினார். அதன்படி கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்ட மூல இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சபையில் நடத்தப்பட்டது.
அதன் பின் குழு நிலை சபை சந்தர்ப்பத்தின் போது நீதி அமைச்சர் அலி சப்ரி சட்ட மூலத்தில் செய்யப்படும் திருத்தங்கள் குறித்து முன்மொழிவு செய்தார். அதன்போது சில திருத்தங்கள் மீது எதிர்கட்சி தனித்தனி வாக்கெடுப்பு கோரிய போது அதன்படி வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டது.
சட்ட மூலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா முன்வைத்த பல திருத்தங்கள் அதிக வாக்குகளால் நிராகரிக்கப்பட்டது.
சட்ட மூலம் மீதான வாக்கெடுப்பு 20 ஆம் திகதி பிற்பகல் 04.40 அளவில் பாராளுமன்றில் ஆரம்பித்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் இலத்திரனியல் வசதி மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டது.
கொழும்பு துறைமுக சட்ட மூலம் பாராளுமன்றில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட நாளன்று காலை வேளையில் சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற நுழைவாயில் முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இடம்பெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கலந்து கொண்டனர். அதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்ட மூல ஆவணத்திற்கு தீ வைத்து எரித்து எதிர்ப்பு வௌியிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் காட்சிப் படுத்திய பதாதைகளில் "அன்று தொன் ஜூவன் தர்மபால, இன்று தொன் ஜூவன் நந்தசேன" , "நாட்டை பாதுகாக்கும் வீரர் நாடு முழுவதையும் விற்பனை செய்து முடித்தார்" , "சேர் வெட்கம் மிகவும் கேவலம்" , அழகி சிறி லங்கா நிலம் விற்பனை செய்யப்பட்டது" போன்ற வாசனங்களை காண முடிந்தது. (எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன)
கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்ட மூலத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி நாடு முழுவதும் காட்சிப் படுத்திய போஸ்டர்களை இன்று நாடு முழுவதும் இராணுவத்தினரை அனுப்பி அரசாங்கம் கருத்து எண்ணெய் தடவி மறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. சட்ட மூலம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பின்னர் பொது மக்களின் அமைதிக்கு எனத் தெரிவித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு முழுவதும் இராணுவத்தினரை கடமைக்கு அழைத்திருந்தார்.
அதன்படி, 22 ஆம் திகதியில் இருந்து ஒரு மாத காலத்திற்கு அமுலில் இருக்கும் வகையில் நாடு முழுவதும் பொது மக்கள் அமைதியை ஏற்படுத்தும் வகையில் இலங்கை இராணுவ வீரர்கள், விமானப் படை வீரர்கள் மற்றும் கடற் படை வீரர்களை கடமைக்கு அழைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள அதி விசேட வர்த்தமானி அறிவித்தவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
---------------------------
by (2021-05-23 12:52:09)
Leave a Reply