~

நாட்டு மக்களை மரணத்தில் இருந்து மீட்க வேண்டுமாயின் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்து அல்லது தொடர்ந்து 14 நாட்கள் முழு நாட்டையும் முடக்கியே ஆக வேண்டும்..! நாட்டின் அனைத்து வைத்தியர்களும் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு அழுத்தம்..!

(லங்கா ஈ நியூஸ் - 2021 , மே, 22, பிற்பகல் 06.30) நாளுக்கு நாள் மிகவும் ஆபத்தான நிலையை சந்தித்துக் கொண்டிருக்கும் இலங்கை கொவிட் 19 தொற்றில் இருந்து நாட்டு மக்களின் வாழ்வையும் உயிரையும் காப்பாற்ற வேண்டுமென்றால் 14 நாட்கள் தொடர்ச்சியான ஊரடங்கு சட்டம் பிறப்பித்து அல்லது நாட்டை முழுமையாக மூட நடவடிக்கை எடுக்குமாறு அதி கௌரவத்துடன் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக இலங்கையின் பிரதான வைத்தியர் தொழிற்சங்க பிரிவினர் நான்கு ஒன்றிணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் தொழில் ரீதியான வைத்திய துறையில் உள்ள அனைத்து வைத்தியர்களும் இந்த நான்கு தொழிற்சங்க பிரிவில் உள்ளடங்குவர். அந்த நான்கு தொழிற்சங்க பிரிவுகளாவன - இலங்கை வைத்தியர்கள் சங்கம், விசேட நிபுணத்துவ வைத்தியர்கள் சங்கம், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் அகில விஞ்ஞான குழு ஆகியவை இதில் உள்ளடங்கும்.

ஆலோசனை வழங்கி உள்ள போதும் செய்தது வேறு செயல் ...

வைத்தியர்கள் சங்க பிரதிநிதிகள் இந்த கடிதத்தை கடந்த 19 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள போதும் நேற்று 22 ஆம் திகதி ஜனாதிபதி வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைய செயற்படவில்லை. அதற்கு மாறாக தொற்று நோய் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுவதை வைத்தியர்களுக்கு தடை செய்யும் செயற்பாட்டினையே அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

கொவிட் 19 தொற்று நோயில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டுமாயின் நாட்டில் உள்ள 22 மில்லியன் சனத் தொகையில் குறைந்தது 16 மில்லியன் சனத்தொகை மக்களுக்காவது தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். ஆனால் இன்று நாட்டின் மொத்த சனத் தொகையில் வெறும் 4% மக்களுக்கு மாத்திரமே கொவிட் 19 தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு தற்போது கிடைத்துள்ள தடுப்பூசிகளை கொண்டு மொத்தம் 6% மக்களுக்கு மாத்திரமே தடுப்பூசி செலுத்த முடியும். அத்துடன் மேலும் நாட்டுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும் எவ்வித சாத்தியப்படக் கூடிய முன்னேற்ற செயற்பாடுகளையும் காண முடியவில்லை.

மலம் கிட்ட நெருங்கி வரும் வேளையில் மலசலகூடம் அமைத்தல் போன்றது ...

தற்போது கொவிட் 19 வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் மக்களை காப்பாற்றத் தேவையான வென்டிலேட்டர், ஐ சி யு படுக்கை இல்லை. கொவிட் வைரஸ் ஆரம்பிக்கப்பட்ட நாள் தொடக்கம் இன்று வரை நாட்டின் வைத்தியசாலைக்கு ஒரு ஐ சி யு படுக்கையேனும் கொள்வனவு செய்து இணைக்க இந்த அரசாங்கம் தவறியுள்ளது. மலம் நெருங்கி வரும் வேளையில் மலசலகூடம் அமைப்பதற்கு ஒப்பாக கொவிட் வைரஸ் காரணமாக மக்கள் நாளாந்தம் உயிர் பலியாகி வரும் நிலையில் சாதாரண கட்டில்கள் பத்து ஆயிரம் தயாரித்து தற்போதுள்ள கொவிட் 19 நிலையில் இருந்து நாட்டு மக்கள் காப்பாற்ற முடியாது.

இந்த நிலைமையின் கீழ் தொற்று நோயை கட்டுப்படுத்திக் கொள்ள, நாட்டு மக்களை மரணத்தில் இருந்து காப்பாற்ற வேண்டுமாயின் கொவிட் வைரஸின் ஆயுள் காலம் 14 நாட்கள் என விஞ்ஞான ரீதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் முழு நாட்டையும் 14 நாட்களுக்கு முடக்கி முறையான நடவடிக்கைகளை கையாள்வதன் மூலம் மாத்திரமே முடியும். இதனையே அனைத்து வைத்தியர்களும் ஒருமித்த குரலாக ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளனர்.

அனைத்து வைத்தியர்களின் யோசனை ...

எனினும் எழுத்து மூலம் வைத்திய சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு தமது யோசனைகளை கீழ் கண்டவாறு முன்வைத்துள்ளனர்.

2021 மே மாதம் 19ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வைத்தியர் சங்க பிரதிநிதிகள் அனுப்பியுள்ள கடிதத்தில் நாடு முகங் கொடுத்துள்ள அபாய நிலை குறித்து இதுவரை காலமும் அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் பிரதிபலன்கள் தொடர்பில் அதன் பயனின்மை தொடர்பில் விஞ்ஞான ரீதியான முன்மொழிவுகளை சுட்டிக்காட்டி உள்ளனர்.  

அது மாத்திரமன்றி விசேட வைத்திய நிபுணர்கள் அடங்கிய இந்த குழு நாடு இந்த வைரஸ் நிலையினால் எதிர் கொண்டுள்ள ஆபத்தில் இருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாத்துக் கொள்ளவென கடைபிடிக்க வேண்டிய அல்லது எடுக்கப்பட வேண்டிய அவசர கட்டாய முடிவுகள் குறித்து யோசனைகள் முன் வைத்துள்ளனர்.

01) கட்டுப்படுத்த முடியாமல் விரைவாக பரவி வரும் வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு குறைந்தது 14 நாட்கள் அவசியம் என்பது வைத்தியர்களின் கருத்து. வைரஸ் பரவலில் இன்று உள்ள நிலைமையின் கீழ் மாகாணங்களுக்கு இடையில் பயணத் தடை விதிப்பதோ அல்லது கிராம சேவகர் பிரிவுகளை முடக்குவதோ கூடிய பயன் தராது என அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

02) இந்த வைரஸ் பரவி 14 நாட்கள் உயிருடன் இருப்பதாக விஞ்ஞான ரீதியாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் 14 நாடகளுக்கு குறையாமல் நாடு முழுவதும் முடக்கப்பட வேண்டும் என்பதுடன் அந்த காலத்தில் கூட முழுமையாக வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது என வைத்தியர்கள் கூறி உள்ளனர்.

03) இடைவேளை கொடுத்து செயற்படுத்தப்படும் சிறிய கால முடக்கம் மீண்டும் மீண்டும் செயற்படுத்தப்படுவதன் காரணமாக முடக்கத்தின் பின் மக்கள் சேவை பகுதிகளுக்கு விஜயம் செய்து அங்கு பல நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் அங்கு கொவிட் 19 வைரஸ் பரவக் கூடிய அபாயம் ஏற்படும் எனவும் இந்த முறையானது ஒருபோதும் பலன்களைப் பெற்றுக் கொடுப்பதாக அமையாது எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

04) அத்துடன் தற்போது முடக்கத்தின் போது நடைமுறையில் உள்ள தேசிய அடையாள அட்டை பயன்படுத்தி வௌியில் செல்லும் முறையும் வைரஸ் பரவலை அதிகரிக்குமே தவிர கட்டுப்படுத்த உதவாது என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

05) விசேட வைத்திய நிபுணர்களின் கருத்து படி நாட்டை 14 நாட்கள் முழுமையாக முடக்கி அல்லது 14 நாட்கள் ஊரடங்கு சட்டம் பிறப்பித்து செயற்படுவதன் மூலம் கொவிட் 19 வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என யோசனை முன்வைத்துள்ளனர். இதனை 'கட்டாயம்' அரசாங்கம் செய்ய வேண்டும் என வைத்தியர்கள் அரசாங்கத்திடம் 'வலியுறுத்தி' உள்ளனர். (இவ்வாறான 'வலியுறுத்தலை' இதற்கு முன்னர் வைத்தியர்கள் செய்யவில்லை என்பது விசேட அம்சமாகும்.)  

06) முன் கூட்டியே நாட்டு மக்களுக்கு அறிவித்து 14 நாட்களுக்கு தேவையான பொருட்களை முன் கூட்டியே அவர்களை கொள்வனவு செய்ய வைத்து அதற்கான போதிய காலத்தை வழங்கி மற்றும் வைத்திய சாலைகளுக்கு தமது செயற்பாடுகளை முறையாக முன்னெடுத்துச் செல்ல கால அவகாசம் வழங்கி 14 நாட்கள் முழு நாடும் முடக்கம் என்ற தீர்மானத்தை அரசாங்கம் எடுக்க வேண்டும் என வைத்தியர்கள் சங்கம் ஒன்றிணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த கடிதத்தில் கீழ் காணும் நபர்கள் கையொப்பம் இட்டுள்ளனர்.

வைத்தியர் பத்மா குணரத்ன
தலைவர் - இலங்கை வைத்திய சங்கம்

வைத்தியர் அநுருத்த பாதெனிய
தலைவர் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்  

வைத்தியர் லக்குமார் பெனாண்டோ
தலைவர் - விசேட வைத்திய நிபுணர்களின் சங்கம்

வைத்திய கலாநிதி தமசி மக்குலோலுவ
ஏற்பாட்டாளர் - இலங்கை வைத்திய சங்கத்தின் அகில விஞ்ஞான குழு

ஆங்கில மொழியில் உள்ள குறித்த கடிதத்தின் புகைப்பட வடிவம் இங்கு தரப்பட்டுள்ளது. 

---------------------------
by     (2021-05-23 13:02:25)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links