-எழுதுவது அலுவலக செய்தியாளர்
(லங்கா ஈ நியூஸ் - 2021 , மே 23 , பிற்பகல் 07.45) தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது செயற்பட்டதன் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர் கட்சித் தலைவருமாகிய சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது மனைவி ஜலனி பிரேமதாஸ ஆகிய இருவரும் கொவிட் 19 வைரஸினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இதனால் சக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்நாட்டு வௌிநாட்டு இராஜதந்திரிகள் சிக்கலில் மாட்டியுள்ளனர்.
இன்று 23 ஆம் திகதி பகல் 1.00 மணிக்கு தனது முகநூலில் பதிவு ஒன்றை இட்டுள்ள எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தனது மனைவியான ஜலனி பிரேமதாஸவிற்கு கொவிட் 19 நோய் அறிகுறிகள் ஏற்பட்டதால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பீ சீ ஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட் 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அதனால் தானும் பீ சீ ஆர் பரிசோதனை மேற்கொண்ட போது அந்த பரிசோதனையில் தனக்கும் கொவிட் 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் ஆனால் தனக்கு எவ்வித நோய் அறிகுறிகளும் காணப்படவில்லை எனவும் சஜித் பிரேமதாஸ அறிவித்தார். " எமக்கு இதனை தோற்கடிக்க முடியும் " எனவும் சஜித் பிரேமதாஸ தனது முகநூல் பதிவில் கூறியிருந்தார்.
எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது மனைவி ஜலனி பிரேமதாஸ ஆகியோர் கொவிட் 19 தடுப்பு எஸ்ட்ரா செனெகா தடுப்பு ஊசியின் முதல் கட்டத்தை பெற்றுள்ள போதும் தடுப்பு ஊசி பெற்றவர்களுக்கு கொவிட் 19 தொற்று ஏற்படாமல் இருக்காது எனவும் ஆனால் தொற்று ஏற்பட்டால் அது ஆபத்து நிலைக்குச் செல்லாது எனவும் உதாரணங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில் எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது மனைவி ஜலனி பிரேமதாஸ இன்று தமக்கு கொவிட் 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக அறித்த போதும் அவர்கள் தமக்கு கொவிட் 19 தொற்று இருப்பதை முன் கூட்டியே தெரிந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு முன் கூட்டியே தெரிந்து வைத்திருந்தும் மற்றையவர்களை பாதுகாப்பற்ற நிலைக்கு சிக்கலில் தள்ளி தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்டு உள்ளனர். அதற்கான சாட்சிகள் இதோ.
கடந்த மே மாதம் 14 ஆம் திகதி சஜித்தின் மனைவி ஜலனி பிரேமதாஸவிற்கு சொந்தமான கொழும்பு Jaal Salon நிறுவன அலுவலக ஊழியர்கள் சிலருக்கு பீ சீ ஆர் பரிசோதனை மூலம் கொவிட் 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மே மாதம் 15ம் திகதி ஜலனி பிரேமதாஸ தனது சலூனை மூடி வைக்கத் தீர்மானித்தார். எனினும் தனது அலுவலக ஊழியர்களுக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களது நெருங்கி பழகியவர்கள் என்ற அடிப்படையில் ஜலனி பிரேமதாஸவும் சஜித் பிரேமதாஸவும் பீ சீ ஆர் பரிசோதனை செய்து கொள்ளாது மற்றும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாது 16 ஆம் திகதி தொடக்கம் தொடர்ந்து பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டு பல செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 19 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற தேசிய இராணுவ வீரர்கள் அனுஸ்டிப்பு அரச நிகழ்விலும் கலந்து கொண்டதுடன் அந்த நிகழ்வில் நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரபுக்கள், அமைச்சர்கள், இராஜதாந்திரிகள் கலந்து கொண்டிருந்தனர். இன்றைய தினம் நோய் அறிகுறி தென்பட்டு சஜித் பிரேமதாஸ மற்றும் ஜலனி பிரேமதாஸ ஆகியோர் கொவிட் 19 தொற்றினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதால் நிச்சயமாக 19 ஆம் திகதி இவர்களுக்கு கொவிட் 19 தொற்று இருந்திருக்க வாய்ப்பு உள்ளது என்பதுடன் அதனை முக்கிய பிரபுக்கள், இராஜதந்திரிகளுக்கு பரப்பி இருக்கவும் கூடும்.
அத்துடன் கடந்த 14 ஆம் திகதி தொடக்கம் தாம் இருவரும் கொவிட் 19 உறுதி செய்யப்பட்ட நபர்களின் நெருங்கிய தொடர்பாளர்கள் என தெரிந்து கொண்டே சஜித் மற்றும் ஜலனி இருந்துள்ளமைக்கு மேலே சாட்சி உள்ளது.
அதன்படி தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளை சட்டம் மற்றும் அதன் சரத்துக்களை கடைபிடிக்காது இருக்கும் போது செயற்படுத்தப்பட வேண்டிய சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு சஜித் பிரேமதாஸ மற்றும் ஜலனி பிரேமதாஸ ஆகியோர் கீழ் பணிய வேண்டும்.
தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளை சட்டத்தில் கூறப்பட்டுள்ள எந்தவொரு விதிமுறைக்கும் மாறாக செயற்பட்டால் அந்த நபருக்கு அல்லது நபர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்ய முடியும் என்பதுடன் வழக்கு விசாரணை இறுதியில் குற்றவாளியாக உறுதி செய்யப்படும் பட்சத்தில் ஆறு மாதங்களுக்கு அதிகரிக்காத கடூழிய அல்லது சாதாரண சிறை தண்டனை அல்லது தண்டப் பணம் அல்லது இரண்டும் விதிக்கப்பட முடியும்.
இது தனிமைப்படுத்தல் சட்டம் மாத்திரம் அன்றி குற்றவியல் சட்டக் கோவையின் 262 மற்றும் 264 ஆம் சரத்துக்களுக்கு அமைய தண்டனை வழங்கப்படக் கூடிய குற்றமாகும். அந்த சரத்துக்களின் அடிப்படையில் வாழ்க்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு நோயும் தொற்றக் கூடிய ஏதெனும் செயற்பாடுகள் சட்ட விரோத செயல் அல்லது கவனயீனம் காரணமாக செய்யப்பட்ட செயற்பாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கூடிய அதன் மூலம் தண்டனை விதிக்கக் கூடிய குற்றம் ஆகும்.
---------------------------
by (2021-05-24 12:23:28)
Leave a Reply