- வெளியிடுவது சந்திரபிரதீப்
(லங்கா ஈ நியூஸ் - 2021 , மே 25 , பிற்பகல் 03.45) வைத்தியர் பாதெனிய போன்றவர்களின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) அதனை சார்ந்த வைத்தியர்கள் பாரிய அளவு கொவிட் 19 தடுப்பு ஊசி மோசடியில் ஈடுபட்டு வருவதாக லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு சாட்சியுடன் தகவல் கிடைத்துள்ளது. இது மிகவும் மோசமான கேடுகெட்ட மோசடி என்பதுடன் சட்டத்தின் முன் தண்டனை கிடைக்க வேண்டிய பாரிய குற்றமும் ஆகும்.
கொவிட் வைரஸ் தாக்கல் இருந்து பாதுகாத்துக் கொள்ள முதலில் இலங்கைக்கு கொவிசில்ட் எஸ்ட்ர செனெக்கா தடுப்பு ஊசி உதவியாக கிடைக்கப் பெற்றதுடன் அதனை சுகாதார துறை ஊழியர்களுக்கு முதலில் முன்னுரிமை அடிப்படையில் வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டது.
உலகத்தில் இந்த கொவிட் 19 வைரஸ் காரணமாக பாதிப்பை எதிர்கொள்ளும் அனைத்து நாடுகளும் தடுப்பு ஊசி கிடைத்த உடனேயே அதனை கொவிட் தடுப்பு நடவடிக்கையில் நேரடியாக ஈடுபடும் சுகாதார தரப்பு சேவையாளர்களுக்கு வழங்கியது.
அதன்படி இலங்கையிலும் சுகாதார துறையில் சிரேஸ்ட விசேட வைத்திய நிபுணர் ஒருவருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு திட்டம் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது. வைத்தியர்கள், தாதி உத்தியோகத்தர்கள், சுகாதார சேவையில் ஈடுபடும் ஏனைய சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய போதிலும் கொவிட் 19 ஒழிப்பில் அடிமட்டத்தில் செயற்படும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு இன்னும் தடுப்பு ஊசி வழங்கி முடிக்கப்படவில்லை.
அரச வைத்தியசாலைகளில் பணி புரியும் வைத்தியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு மாத்திரம் கொரோனா ஒழிப்பு தடுப்பு ஊசி இரண்டாவது முறையாக வழங்குவதற்கு சுகாதார அமைச்சு அண்மையில் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், இடை வைத்திய சேவை ஒன்றிணைந்த முன்னணி, அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் மற்றும் பரிபூரண வைத்திய சேவை சங்கம் ஆகிய சுகாதார துறை தொழிற்சங்கங்கள் இன்று 25 ஆம் திகதி அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.
நிலைமை இவ்வாறு இருக்க பாதெனிய போன்றவர்களின் (GMOA) அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அஸ்டரா செனேக்கா முதலாவது தடுப்பு ஊசி வழங்கும் திட்டத்தின் போது தமது சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு மாத்திரம் அன்றி தூரத்து உறவினர்கள் மற்றும் தெரியாத நபர்களுக்கு கூட கொவிட் 19 தடுப்பு ஊசி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வைத்தியர் ஒருவரின் குடும்பம் என்று பார்க்கும் போது வைத்தியர் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளை கூறலாம். (18 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறு பிள்ளைகள் மற்றும் இளையவர்களுக்கு வைரஸ் பாரிய பாதிப்பு இல்லை என்பதால் தடுப்பு ஊசி விடயத்தில் அவர்களுக்கு கூடிய கவனம் செலுத்தப்படாது. ) சில வேளைகளில் ஒரு குடும்பத்தில் தாய் அல்லது தந்தை வசிக்கக் கூடும். ஆனால் தாய், தந்தை, மாமன், மாமி என அனைவரும் ஒரே குடும்பத்தில் வசிப்பதாகக் கூறுவதெல்லாம் பொய்யான விடயமாகும். அவ்வாறு குடும்பம் எண்ணக் கூடிய அளவு இருக்கலாம்.
ஆனால் இங்கு தடுப்பு ஊசி செலுத்த தெரிவு செய்யப்பட்ட வைத்தியர்கள் அனைவருக்கும் கணவர், மனைவி, தாய், தந்தை, மாமன், மாமி என ஒரே குடும்பமாக பதியப்பட்டு அவர்கள் அனைவருக்கும் கொவிட் 19 தடுப்பு ஊசி வழங்கப்பட்டுள்ளது.
இங்கு உள்ள பாரிய அளவு தடுப்பு ஊசி மோசடி அதுவும் அல்ல. (GMOA) அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர்கள் பலர் இரண்டு கணவர்கள், இரண்டு மனைவிகள், இரண்டு தாய், இரண்டு தந்தை, இரண்டு மாமன், இரண்டு மாமி என குறிப்பிட்டு கொவிட் தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
வெலிமட ஆதார வைத்தியசாலையில் பி.ஜி.சி.எஸ்.எம். பானெகல என்ற பெயருடைய அரச வைத்திய அதிகாரிகள் சங்க உறுப்பினராக வைத்தியர் எல்லாவற்றுக்கும் மேல் சென்று மூன்று தந்தைமார், மூன்று மாமியார் , மூன்று மாமன்மார் என்று பெயர் குறிப்பிட்டு தடுப்பு ஊசி பெற்று கொடுத்துள்ளார்.
இவ்வாறு மோசடியான வகையில் தடுப்பு ஊசி செலுத்திக் கொண்ட பலரில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) வைத்தியர்களே அதிகம் உள்ளனர் என்பது விசேட அம்சமாகும்.
இங்கு மூவர் மூவராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணத்தில் ஒரே நபரின் பெயரே மூன்று முறைகள் பதிவாகி உள்ளன. ஒரே நபரின் தேசிய அடையாள அட்டை இலக்கமாகும். ஒரே நாளில் ஆகும். அப்படியானால் இது பாரிய அளவு மோசடி இல்லையா? ஒரே நபருக்கு ஒரே நாளில் இரண்டு மூன்று தடுப்பு ஊசி ஏற்றப்படுவது இல்லை. இவ்வாறு பெயர் குறிப்பிட்டு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர்கள் கொவிட் தடுப்பு ஊசியை விற்பனை செய்தார்களா? அப்படி இல்லையேல் யாருக்கு தடுப்பு ஊசி செலுத்தினர்? முதல் கொவிட் தடுப்பு ஊசி செலுத்திக் கொண்ட நபரின் சரியான பெயர் முகவரி விபரங்கள் இல்லை எனில் அவருக்கு இரண்டாம் கொவிட் தடுப்பு ஊசி எவ்வாறு செலுத்துவது? அவர்கள் தடுப்பு ஊசி பெற்றவர்கள் என்று பதிவு செய்வது எப்படி? எங்கு? அந்த நாமலின் டிஜிட்டல் தடுப்பு ஊசி காட் யாருக்கு வழங்கப்படும்?
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் போன்ற பொறுப்பு வாய்ந்த சுகாதார தொழிற்சங்க உறுப்பினர்கள் இவ்வாறு மோசடியான வகையில் தடுப்பு ஊசி செலுத்தியுள்ளதால் இந்த பாரிய மோசடி குறித்து முறையான விசாரணை உடனே ஆரம்பிக்கப்பட வேண்டும். அனுருந்த பாதெனிய உள்ளிட்ட கேடுகெட்ட அதிகாரிகள் இந்த மோசடிக்கு பொறுப்புக் கூற வேண்டும்.
01) டி.எஸ் . சேபாலி விக்ரமசிங்க என்ற பெயருடைய ஹிங்குராங்கொட இராணுவ வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியருக்கு இரண்டு தாய்மார், இரண்டு தந்தைமார், இரண்டு கணவன்மார். (கணவன்மார்களின் பெயர்கள் இல்லை)
02) உதேசினி சோமசிறி என்ற பெயருடைய அவிசாவளை வைத்தியசாலையில் வைத்தியராக கடமை புரியும் நபருக்கு இரண்டு தந்தைமார், இரண்டு தாய்மார், இரண்டு கணவன்மார்.
03) எஸ்.ஏ.எஸ்.எஸ். டிலங்கானி என்ற பெயருடைய மஹரகம அபேக்சா வைத்தியசாலையில் பணி புரியும் வைத்தியருக்கு மூன்று தாய்மார், மூன்று தந்தைமார்.
04) ஈ.என்.ஓ. பாக்யா சில்வா என்ற பெயருடைய கம்பஹா வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியருக்கு இரண்டு தாய்மார், இரண்டு தந்தைமார், இரண்டு கணவன்மார்.
05) ஜே.எ. ஹிரந்தி எஸ். விஜேசேகர என்ற பெயருடைய கம்பஹா வைத்தியசாலையில் பணி புரியும் வைத்தியருக்கு இரண்டு தாய்மார், இரண்டு தந்தைமார், ஒரு அத்தை.
06) ஆர்.எம். இரேசா பி. ரத்நாயக்க என்ற பெயருடைய வைத்தியருக்கு இரண்டு கணவன்மார்கள்.
07) அனுஜி யு. கமகே என்ற பெயருடைய கந்தவல பாதுகாப்பு வைத்தியசாலை விசேட வைத்தியருக்கு இரண்டு கணவன்மார்கள், இரண்டு தாய்மார்கள், இரண்டு தந்தைமார்கள், இரண்டு மாமாமார்கள், இரண்டு மாமிமார்கள்.
08) சுபோதி பிந்து என்ற பெயருடைய நீர்கொழும்பு வைத்தியசாலை ஈ என் டி வைத்தியருக்கு இரண்டு தாய்மார், இரண்டு தந்தைமார், இரண்டு கணவன்மார்கள்.
09) நயோமி பொன்சேகா என்ற பெயருடைய நீர்கொழும்பு வைத்தியசாலை வைத்தியருக்கு இரண்டு தாய்மார், இரண்டு தந்தைமார், இரண்டு மாமிமார், இரண்டு மாமாமார், இரண்டு கணவன்மார்கள்.
10) டபிள்யு. ஏ . அனுபமா கமகே என்ற ஶ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் வைத்தியருக்கு இரண்டு தாய்மார், இரண்டு தந்தைமார், இரண்டு மாமிமார், இரண்டு மாமாமார், இரண்டு கணவன்மார்கள்.
மேல் கூறப்பட்ட 10 மோசடி விடயங்களை மாத்திரமே நாம் சுட்டிக்காட்டி உள்ள நிலையில் இவ்வாறான கேடுகெட்ட பல மோசடி நடவடிக்கைகளில் அரச வைத்திய அதிகாரிகள் சங்க வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர். பூரண பெயர் பட்டியலை கீழுள்ள இணைப்பில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
---------------------------
by (2021-05-25 22:04:58)
Leave a Reply