- வௌியிடுவது கீர்த்தி ரத்நாயக்க
(லங்கா ஈ நியூஸ் - 2021 , மே 26, பிற்பகல் 10.30) சீன நாடானது வௌிநாடுகளுக்கு கடன் உதவி வழங்கும் போது கடைபிடிக்கும் கொள்கை மேற்குலக கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்டதாக அமைந்திருக்கும். மேற்குலக நாடுகள் மற்றுமொரு நாட்டிற்கு கடன் உதவி வழங்கும் போது அந்த நாட்டின் மனித உரிமை நிலைமை, ஜனநாயக பாதுகாப்பு, தொழிலாளர் சட்டம் உள்ளிட்ட பல விடயங்களை கருத்திற் கொண்டே செயற்படும். ஆனால் சீனா ஏனைய நாடுகளுக்கு கடன் உதவி வழங்கும் போது அவற்றை ஒரு சதத்திற்கும் கணக்கில் எடுக்காது. சீனா பாசிச ஆட்சி புரியும் ஆட்சியாளர்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்யவே அதிகம் விரும்புகிறது. மறுபக்கம் கடன் உதவி வழங்கும் போது சாத்தியக் கூற்று ஆய்வு அறிக்கை (Feasibility Study), திறன் ஆய்வு அறிக்கை (Capability Study) போன்றவற்றை கேட்பதும் இல்லை. கடன் வாங்குவது எதற்கு? அதனை மீள அறவிடுவது எப்படி? போன்ற விடயங்களை ஆராய்வது இல்லை. அது சீனாவிற்கு தேவையும் இல்லை. கிராமத்தில் வட்டி முதலாளியை போன்றுதான் சீனா கடன் உதவி வழங்கும். வாங்கிய கடனை செலுத்தத் தவறினால் வீடு வாசல் மாத்திரமன்றி மனைவியும் வட்டி முதலாளிக்கு சொந்தமாக்கப்படுவது போல வாங்கிய கடனை செலுத்தாவிடின் குறித்த நாட்டின் முக்கிய இடங்களை கைப்பற்றுவது சீனாவின் தந்திரோபாயமாகும்.
இலங்கையின் முழு அரச கடன் தொகையை எழுதினால் கண்டு பிடிக்க முடியாத அளவு நீண்டு செல்லும் நிலைமை உள்ளது. அதனால் இலகுவாக விளங்கும் படி கூறுகிறோம். நாட்டின் முழு அரச கடனை நாட்டில் உள்ள சனத்தொகைக்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் பிரித்தால் ஒருவர் 7 லட்சம் கடன் செலுத்த வேண்டும். தற்போது இலங்கையின் அரச வருமானம் கடன்களின் தவனைகளை செலுத்துவதற்கு கூட போதுமானதாக இல்லை. நாடு கடனை அடைக்க மேலும் கடன் வாங்கியே நிர்வாகம் செய்யப்படுகிறது. அதனால் சீனாவிடம் கடன் உதவி பெறுவதானால் சீனா கோருவதை விற்பனை செய்தாக வேண்டிய நிலை ஏற்படும்.
இந்த நிலையானது குடுகாரன் வீட்டு பொருட்களை விற்பனை செய்து குடு குடிப்பதற்கு ஒப்பானதாகும். கடந்த வாரம் 269 ஹெக்டர் காணி பரப்பளவு கொண்ட கொழும்பு துறைமுக நகரம் சீனாவிற்கு வழங்கப்பட்டது. கொழும்பு துறைமுக நகரத்திற்கு சமமான மற்றுமொரு தொகுதி நிலப் பரப்பு சீனாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக கூறினால் நீங்கள் அதனை உடனடியாக நம்ப மாட்டீர்கள். ஆனால் கதை உண்மையானதே. இரண்டு கட்டங்களாக சீனாவிற்கு தாரைவார்த்துக் கொடுக்கப்படவுள்ள இலங்கையின் பெறுமதியான நிலப்பரப்புக்கள் வருமாறு,
1. இலங்கை விமானப் படை தலைமையகம்
2. கொம்பனித் தெரு பொலிஸ், கொம்பனித் தெரு பொலிஸ் விளையாட்டு மைதானம், கொம்பனித் தெரு பொலிஸ் விடுதித் தொகுதி.
3. கொழும்பு விமானப் படை முகாம்
4. கொழும்பு விமானப் படை விளையாட்டு மைதானம் (Rifle Green Ground)
5. கொழும்பு சினமன் லேக் சைட்
6. கொழும்பு M.O.D. Cyber Operation Centre
7. இராணுவ தொலைத் தொடர்புகள் மற்றும் உபகரணங்கள் பொறியியல் ரெஜிமேந்து தலைமையகம்.
1. கிரேன்ட் ஒரியன்டல் கட்டிடம்
2. கபூர் கட்டிடம்
3. யோர்க் வீதியில் அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள்
4. வௌிவிவகார அமைச்சு கட்டிடம்
5. தபால் திணைக்கள தலைமையகம்
6. பொலிஸ் தலைமையகம்
7. செத்தம் வீதியில் அமைந்துள்ள FICD தலைமையக கட்டிடம் (அது தற்போது CHEC Port City (Pvt) Ltd என்ற சீன நிறுவனத்தால் கைப்பற்றப்பட்டுள்ளது.)
8. ஹில்டன் ஹோட்டல் மற்றும் வீடுகள்
9. ஹயாத் ஹோட்டல் மற்றும் வீடுகள்
10. வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டல் மற்றும் அதற்கு அருகில் உள்ள 200 ஏக்கர் காணி.
மேலே கூறப்பட்ட இடங்கள் எந்த அளவு காணிப் பரப்பை கொண்டவை என்பதை கூகுல் செய்து தேடிப் பார்த்து உங்களால் கணக்கிட்டுக் கொள்ள முடியும். கொழும்பின் இதயமாகக் காணப்பட்ட இராணுவ தலைமையகத்தை ராஜபக்ஷக்கள் சீனாவிற்கு சொந்தமாக விற்பனை செய்துள்ளனர். தாமரை கோபுரமும் நட்டம் ஏற்படுவதால் மீண்டும் சீனாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. அதனால் மேற்கூறிய பெறுமதி வாய்ந்த காணி சொத்துக்களை சீனாவிற்கு விற்பனை செய்யாமல் இருப்பார்கள் என்ற நம்பிக்கை வைக்க முடியாது.
மேலே கூறப்பட்ட சொத்துக்களை கையகப்படுத்துவது மற்றும் சீனாவிற்கு விற்பனை செய்வது போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கும் இடைத் தரகர் பொறுப்புக்கு "செரன்திவா" என்ற பெயரில் தற்போது நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் பிரதானியாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் தலைவர் பிரபல வர்த்தகர் சிறி நிமல் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். ராஜபக்ஷ ஆட்சி யுகத்தில் இராணுவ தலைமையகத்தை விற்பனை செய்தல் உள்ளிட்ட ராஜபக்ஷக்களின் போலிக் கொடுக்கல் வாங்கல் திட்டங்களை நூற்றுக்கும் அதிகமானவற்றை முன்னெடுத்த பிரதான நபர் நிமல் பெரேரா ஆவார்.
மேற்கூறிய சொத்துக்களை கொள்வனவு செய்யும் சீன தரப்பாக China Communications Construction Company (CCCC) என்ற சீன நிறுவனம் செயற்பட உள்ளது. இந்த நிறுவனம் அமெரிக்காவினால் பிளக் லிஸ்ட் செய்யப்பட்டிருப்பதால் அவர்களது இணை குழுவான CHEC Port City Colombo (PVT) LTD என்ற நிறுவனத்தின் ஊடாக கொடுக்கல் வாங்கல்களை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொழும்பு 1 மற்றும் கொழும்பு 2 நிர்வாக மற்றும் வணிக துறைகளில் தலைநகரில் உள்ள மிகவும் பெறுமதியான இடங்களாகும். இந்த பகுதியை கொழும்பு 1 மற்றும் கொழும்பு 2 என பிரித்தானிய ஆட்சியாளர்கள் பெயரிட காரணம் தலைநகரில் உள்ள முக்கிய இரண்டு இடங்கள் இவை என்பதாலாகும். எதிர்காலத்தில் இந்த பிரதேசங்களில் அனேகமானவை சீனாவிற்கு சொந்தமானதாக இருக்கும். அத்துடன் 2021ம் ஆண்டுக்கு உள்ளேயே இந்த காணி சொத்துக்களை கொள்வனவு செய்ய சீனா எதிர்பார்த்துள்ளது. அதற்கான விருப்பத்தையும் தெரிவித்துள்ளது. அரசாங்கம் அதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
தேசப் பற்றாளர்கள் யார்? தேசத் துரோகிகள் யார்? என்று சீர்தூக்கிப் பார்ப்பதற்கு இன்னும் ஒன்றும் எஞ்சி இல்லை என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் ..!
முன்னாள் விமானப் படை புலனாய்வு அதிகாரி
---------------------------
by (2021-05-27 15:09:32)
Leave a Reply