~

அசிட் மழை..! பல வருடங்களுக்கு இருக்கும் அழிவு..! வரலாற்றில் பதிவாகும் கறுப்புக் கரை..! இரண்டு நாடுகள் விரட்டிய அழிவை நன்கு தெரிந்து கொண்டும் ஆடைக்கு உள்ளே தூக்கிப் போட்டுக் கொண்ட விதம்..! கப்பல் தீ குறித்த உண்மை கதை..!

- வௌியிடுவது கீர்த்தி ரத்நாயக்க..

(லங்கா ஈ நியூஸ் - 2021 , மே , 27, பிற்பகல் 10.30) MV X Press Pearl என்ற பெயருடைய கப்பல் இலங்கையின் தலைநகருக்கு அருகில் உள்ள கடற் பரப்பில் தீ பற்றிக் கொண்டது. இது எமக்கு தெரிந்த அளவில் இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிக பாரிய சுற்றாடல் அழிவு என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. எதிர்வரும் நாட்களில் அனைவரும் எதிர்பார்த்திராத நினைத்துப் பார்த்திராத மிக மோசமான இயற்கை பேரழிவு இடம்பெற உள்ளது. உயிரியல் விஞ்ஞான நிபுணர்களின் கருத்துகளுக்கு அமைய கடல் மற்றும் கடற்கரை வாழ் உயிரினங்களுக்கு ஏற்படக் கூடிய ஆபத்து பல வருடங்களுக்கு அல்லது தசாப்தங்களுக்கு நீக்கக் கூடும்.

கப்பல் தீ பிடித்து எரிந்துள்ளதால் எதிர்வரும் சில நாட்களில் நாட்டு மக்களுக்கு நிச்சயம் ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் சிலவற்றை இங்கு தருகிறோம்.

1. கடல் மற்றும் கடற் கரை சூழலை மீண்டும் சுத்தம் செய்ய முடியாத அளவு பாதிப்பு ஏற்படல்.
2. மீன்கள் உண்பதற்கு பொறுத்தம் அற்றதாக மாறுவது மற்றும் மீன் பிடித் தொழில் இல்லாமல் போவது.
3. அசிட் மழை பொழிதல் மற்றும் அதன் மூலம் கால்நடை, விவசாய உற்பத்திகள் அழிவடைதல் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட இரும்பு பொருட்கள் அழிவை எதிர்கொள்ளுதல்.
4. மீன் வியாபாரம் தடைப்படுவதுடன் மீனவர்கள் மாத்திரம் அன்றி நகர பகுதிகளில் இருந்து கிராம பகுதிகளில் மீன் கொள்வனவு செய்து விற்பனை செய்யும் சிறு மீன் வியாபாரியும் தொழில் ரீதியில் பாதிக்கப்படுவார்.
5. கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக இலங்கையில் தற்போதைக்கு 10 லட்சம் பேர் தொழில் இழந்துள்ளதுடன் இந்த கடல் அனர்த்தம் காரணமாக மேலும் 1 லட்சம் பேர் வரை தொழில் இழந்தோர் பட்டியலில் சேர்தல்.  

கப்பலில் இருந்து நைட்டிக் எசிட் கசிவு, இரண்டு நாடுகள் வேண்டாம் என விரட்டிய கப்பல்...

இந்த கப்பல் தீ அனர்த்தம் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் கவனயீனம் காரணமாக இயலாமையின் பலனாக மற்றும் முட்டாள் தன்மை காரணமாக ஏற்பட்ட ஒன்றாகும். அதன் நிரூபித்துக் காட்ட எம்மிடம் சாட்சி உள்ளது. அவற்றில் சில சாட்சிகள் கீழே தரப்படுகிறது.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் மே மாதம் 10 ஆம் திகதி டுபாய் நாட்டின் 'ஜெபெல் அலி' என்ற துறைமுகத்தில் இருந்து 25 மெட்ரிக் டொன் நைட்ரிக் அசிட் அடங்கிய கொள்கலன்களுடன் 1486 கொள்கலன்களை ஏற்றிக் கொண்டு பயணத்தை ஆரம்பித்துள்ளது. கப்பல் பயணிக்கும் வழியில் இலங்கைக்கு ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் அரபிக் கடலில் ஹோமூஸ் சமுத்திரத்திற்கு அருகில் இரண்டு கொள்கலன்களில் இருந்து நைட்ரிக் அசிட் கசிவு ஏற்படுவதாக கப்பல் பணியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். நைட்ரிக் அசிட் கசிவை அடுத்து கப்பல் கட்டார் இராஜியத்தின் Hamad துறைமுகம் நோக்கி பயணிக்க முயற்சித்தது. ஆனால் எசிட் கசிவு ஏற்பட்டுள்ளதால் கட்டார் இராஜிய அரசாங்கம் குறித்த கப்பலை தமது துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி அளிக்கவில்லை. கட்டார் மறுப்பு தெரிவித்த பின் குஜராத்தில் உள்ள hazira port துறைமுகத்திற்கு கப்பலை கொண்டு செல்ல அனுமதி கோரப்பட்டது. ஆனால் அந்த முறைமுக அதிகாரிகளிடம் இருந்தும் அனுமதி கிடைக்கவில்லை.

நைட்ரிக் அமில கசிவு ஏற்பட்டுள்ளதை தெரிந்து கொண்டும் கொழும்பு துறைமுகம் அனுமதி அளித்தது...

அதன் பின் எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற கப்பல் நைட்ரிக் அசிட் கசிவு ஏற்பட்டுள்ளது தெரிந்தும் ஒரு வாரத்தின் பின் அதாவது மே மாதம் 19 ஆம் திகதி கொழும்பு முறைமுகத்திற்கு அருகில் வந்துள்ளது. கப்பலில் உள்ள நைட்ரிக் அசிட் அடங்கிய இரண்டு கொள்கலன்களில் கசிவு ஏற்பட்டுள்ள விடயத்தை கப்பல் பணியாளர்கள் கொழும்பு துறைமுக அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர். எனினும் புதுமை ஆனால் உண்மை. அசிட் கசிவினால் இரண்டு நாடுகள் அனுமதி வழங்க மறுத்த கப்பலை இலங்கை துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற கப்பல் இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டு கொழும்பு துறைமுகத்திற்குள் செல்ல தமது வாய்ப்பு வரும் வரை காத்திருந்தது. மே 20 ஆம் திகதியின் போது கப்பலின் வெப்பம் மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் ஏற்படும் பாரிய அனர்த்த நிலைமையை அறிந்து கொண்ட கப்பலின் கெப்டன் அது குறித்து உடனடியாக கொழும்பு துறைமுக அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். ஆனால் கொழும்பு துறைமுக அதிகாரிகள் 23 ஆம் திகதி வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காது இருந்துள்ளனர். தனது எச்சரிக்கை குறித்து கணக்கிலெடுக்காத இலங்கை துறைமுக அதிகாரிகளின் நடவடிக்கை குறித்து எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கெப்டன் தமது பிரதான கப்பல் நிறுவனமான   Pearl shipping agencies அதிகாரிகளுக்கு தெரிய படுத்தியுள்ளார்.

தீ பரவல் குறித்து அறிவித்தும் நான்கு நாட்கள் ஒன்றுமே செய்யாது அமைதி காத்த நாடு என்ற வரலாற்று பெருமையை பெற்ற இலங்கை பெற்றுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் கவனயீனம், இயலாமை மற்றும் முட்டாள் தனம்...

கப்பலின் நிலை மிகவும் ஆபத்தானது என்பது குறித்து கப்பலின் கெப்டன் இலங்கை அதிகாரிகளுக்கு அறிவித்த மே மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரையாக காலத்தில் இலங்கை அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற போதும் 23 ஆம் திகதி துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன 'நான் தீயை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கி உள்ளேன்' என்று அவரது முகநூலில் பதிவு ஒன்றை இட்டார். (ஆலோசனை வழங்கும் அளவிற்கு அவர் தீயணைப்புத் துறையில் வல்லுனர் அல்ல.) ஆனால் கப்பலின் தீயை கட்டுப்படுத்த அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

மேலும் 24 ஆம் திகதி துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன அவசர கூட்டம் ஒன்றை கூட்டி கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது குறித்து கலந்துரையாடினார். உண்மையில் அமைச்சர் அன்றுமான் ஏனையவர்களிடம் ஆலோசனைப் பெற்றுக் கொண்டார். அன்றைய தினம் கப்பல் பாரிய அளவில் தீ பிடித்து எரியத் தொடங்கியது.

இதற்கு முன்னர் இரண்டு கப்பல்கள் குறித்த சம்பவம்...

இதற்கு முன்னர் 2021 ஏப்ரல் 21ம் திகதி நைட்ரஜன் அடங்கிய 5 கொள்கலன்களுடன் சீனா நோக்கி பயணித்த BBC Naples என்ற கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டது. இந்த விடயத்தை கொழும்பு தூதரக பிரிவுகள் பூதாகரமான விடயமாக பேசியதுடன் இலங்கை பாராளுமன்றிலும் இது விடயம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு முன்னர் இலங்கையின் கிழக்கு கடற் பரப்பில் தீ பற்றி எரிந்து விபத்துக்கு உள்ளான MT New Blue Diamond கப்பல் நிறுவனத்திடம் இருந்து இதுவரை இலங்கைக்கு ஐந்து சதம் கூட நட்ட ஈடு வழங்கப்படவில்லை. கிடைக்கவே கிடைக்காது. நட்ட ஈடு பெற்றுக் கொள்ளும் விடயத்தில் கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகளை இலங்கை சரியாக கடைபிடிக்க தவறியமை இதற்கு காரணமாகும்.

தற்போது கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பிடித்து எரிந்துள்ள எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனத்திடம் இருந்தும் இலங்கைக்கு ஒரு சதம் கூட நட்ட ஈடு கிடைக்காது. எஞ்சப் போவது இலங்கை கடல் வரலாற்றிற்கு ஏற்படுத்தப்பட்ட கறுப்பு கரை மாத்திரமே. அதற்கான காரணங்கள் வருமாறு,

நட்ட ஈடு இல்லை எஞ்சுவது கறுப்பு கரை மாத்திரமே...

சாதாரணமாக கடற் சட்டத்தின் போது கப்பல் ஒன்று முழுமையாக எரிந்து அழிந்து போனால் அதில் மூன்றாம் தரப்பிற்கு ஏற்படும் பாதிப்பிற்கு நட்ட ஈடு வழங்க கப்பல் நிறுவனம் இணங்கி இல்லை. ஆனால் இவ்வாறான சந்தர்ப்பத்தில் பாதிப்பை எதிர்கொள்ளும் நாடு Protection and Indemnity ("P&I") insurance முறையின் கீழ் நட்ட ஈடு பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் இலங்கை அரசாங்கம் நட்ட ஈடு பெற்றுக் கொள்ளக் கூடிய பின்புலத்தில் இல்லை. அதற்கு காரணம் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் தீ விபத்து ஏற்படப் போகும் அபாயம் குறித்து கப்பலின் கெப்டன் இலங்கை அதிகாரிகளுக்கு அறிவித்து நான்கு நாட்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தமையாகும். அத்துடன் இலங்கை அரசாங்கத்திற்கு நட்ட ஈடு வழங்க குறித்த கப்பல் நிறுவனம் தற்போது எதிர்ப்புத் தெரிவித்து அறிவிப்பு விடுத்துள்ளது. அதன்படி  X Press Pearl கப்பலின் ஏற்பட்ட தீ விபத்து சர்வதேச பிணக்குகள் சபையில் தீர்த்துக் கொள்ளப்பட வேண்டிய வழக்காக அமையும் என்பதே உண்மை. தீ ஏற்பதுவது குறித்து அறிவித்தும் நான்கு நாட்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்த இலங்கை அரசாங்கத்திற்கு நட்ட ஈடு பெற்றுக் கொள்ள குறைந்த அளவு சந்தர்ப்பங்களே உள்ளன. அத்துடன் சர்வதேச பிணக்கு சபை வழங்கு விசாரணையின் போது இலங்கை குறித்து முன்வைக்கப்படும் சாட்சிகள் இலங்கைக்கு சர்வதேச அளவில் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை தவிர்க்க முடியாது.

நந்தே, குணே, சாலி போன்றவர்கள் தேசிய பாதுகாப்பு என்றால் என்னவென்று எப்போது கற்றுக் கொள்வர் ?

இந்த அழிவிற்கான பொறுப்பை, கப்பல் மூலம் டொலர் கொண்டு வரப்படும் என்று கூறிய - வெப்பம் அளவிடும் பிரிவு நூற்றுக் மேல் எனக் கூறும், 8 ஆம் வகுப்புக் கூட சித்தி அடையாத ரோகித்த அபேகுணவர்த்தன போன்ற முட்டாள் அமைச்சர் மீது மாத்திரம் சுமத்திவிட்டு ஏனைய அதிகாரிகள் தப்பிச் செல்ல முடியாது. ரோகித்த போன்ற அறிவற்றவர்களுக்கு துறைமுகம் போன்ற முக்கிய அமைச்சை பெற்றுக் கொடுத்த நபரை முதலில் குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும்.

இரண்டாவது, கப்பலின் பாதுகாப்பற்ற தன்மையை தெரிந்து கொண்டு நாட்டின் தேசிய கடற் பரப்பிற்குள் நுழைய அனுமதி அளித்த தேசிய பாதுகாப்பின் நான்கு திசைகளும் தெரியாத பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்னவிடம் விசாரணை நடத்த வேண்டும். மூன்றாவது, விபத்து குறித்து முன் கூட்டியே ஆய்வு செய்யாது மூளையற்ற வகையில் விளையாட்டு புலனாய்வு தகவல் வழங்கும் சுரேஸ் சாலியை நீக்கிவிட்டு அந்த பதவிக்கு தகுதி வாய்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும்.

54000 அனுபவம் வாய்ந்த கடற் படை வீரர்களைக் கொண்ட மற்றும் 221 படகுகளை வைத்திருக்கும் இலங்கை கடற் படை X Press Pearl கப்பல் தீ பிடித்து எரியும் வரை பார்வையாளர் போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது ஏன் என தேட வேண்டும். தேசிய பாதுகாப்பு என்பது தமிழீழ விடுதலை புலிகளை தோற்கடிப்பது என்ற மனோ நிலையில் இருக்கும் கமல் குணரட்ன விரைவில் சாதாரண மன நிலைக்கு திரும்ப வேண்டும். இனங்களுக்கு இடையில் ஒற்றுமை, சுற்றாடல் பாதுகாப்பு, சட்டத்தின் நிர்வாகம் மற்றும் நிதி பாதுகாப்பு என்பதுவும் தேசிய பாதுகாப்பின் முக்கிய தூண்கள் என்பதை ஜனாதிபதி நந்தசேன, பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன, புலனாய்வு பொறுப்பாளர் சுரேஸ் சாலி போன்றவர்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை.

- எழுதிய கீர்த்தி ரத்நாயக்க

முன்னாள் விமானப் படை புலனாய்வு அதிகாரி

---------------------------
by     (2021-05-28 22:23:12)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links