~

'மிக் டில்' முறையில் சைனோபாம் தடுப்பு ஊசி இறக்குமதியில் 5 மில்லியன் டொலர் திருட்டு..! இதோ சாட்சி..!

- விசேட எழுத்தாளரின் வெளியீடு

(லங்கா ஈ நியூஸ் - 2021 ஜூன் , 6, பிற்பகல் 8.15) கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் செலுத்தப்படும் சைனோபாம் தடுப்பு ஊசியை இலங்கைக்கு இறக்குமதி செய்யும் நடவடிக்கையின் போது 5 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.  அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் ஊடாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஊழல் மோசடி அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் தலைவர் வைத்தியர் பிரசன்னா குணசேகரவின் நேரடி தலையீடில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த சைனோபாம் தடுப்பு ஊசியை பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து ஒன்று தலா 10 டொலர் கணக்கில் கொள்வனவு செய்த போதும் இலங்கைக்கு குறித்த தடுப்பு ஊசி வேறு வழியில் வந்துள்ளது. அதுவும் மிக் விமானம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட முறையில் இந்த ஊழல் நடந்துள்ளது. 

'மிக் டீல் மெத்தட்' முறைக்கு அமைய சைனோபாம் தடுப்பு ஊசி கொள்வனவு தொடர்பில் ஆரம்பத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. எனினும் வைத்தியர் குணசேகர முதலில், இந்த தடுப்பு ஊசி கொள்வனவு மிகவும் கண்காணிப்புடன் முன்னெடுக்கப்படும் என்று கூறினார். இந்த கொள்வனவு நடவடிக்கைக்கு உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிகள் நிதி உதவி வழங்குவதால் தடுப்பு ஊசி கொள்வனவு விடயத்தில் நடைமுறைகளை ஆழமாக அவதானித்தே கொள்வனவு முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் கொள்வனவு அவ்வாறு இடம்பெறவில்லை.  

ஒரக்கல் கொள்வனவு முறை ஊழல் ..

சீனாவின் சைனோபாம் தடுப்பூசி China National Pharmaceutical Group Co., Ltd என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. அந்த நிறுவனத்தின் கீழ் மேலும் ஐந்து மேலதிக நிறுவனங்கள் (subsidiaries) இயங்குகின்றன. அதன் பெயர் விபரங்கள் வருமாறு, 

1. China National Medicines Corporation Ltd., 
2. China National Accord Medicines Corporation Ltd., 
3. Beijing Tiantan Biological Products Co., Ltd., 
4. Shanghai Shyndec Pharmaceutical Co., Ltd., 
5. China Traditional Chinese Medicine Holdings Co., Ltd. என்பன அவையாகும். 

மேற்கூறிய எந்த ஒரு நிறுவனமும் இதுவரை மருந்துகள் கூட்டுத்தாபனத்திற்கு விருப்பம் தெரிவித்து Letter of intent (LOI) கடிதம் அனுப்பவில்லை. உடன்படிக்கை எதிலும் கைச்சாத்திடவில்லைை. ஆனால் மக்கள் வங்கி ஊடாக இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் Telegraphic Transfer (TT) முறை மூலம் 15 மில்லியன் அமெரிக்க டொலர் பணத் தொகையை  Beijing Biological Engineering Development Centre Ltd என்ற இடைத் தரகர் முகவர் நிறுவனத்தின் கணக்கில் வைப்பில் இட்டுள்ளது. அதில் 'ஒரு சைனோபாம் தடுப்பு ஊசி பதினைந்து டொலர் வீதம் கொள்வனவு செய்ய' என குறிப்பிடப்பட்டுள்ளது. 

பங்களாதேஷ் நாடு மாத்திரமன்றி பாகிஸ்தானும் மேற்கூறிய உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து ஒரு சைனோபாம் தடுப்பு ஊசியை 10 டொலருக்கு கொள்வனவு செய்துள்ளது. அதன்படி 'மிக் விமான மெத்தட்' அடிப்படையில் முதல் 5 லட்சம் சைனோபாம் கொவிட் தடுப்பூசி கொள்வனவில் 5 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்ளை அடித்துள்ளமை தெரிய வருகிறது.

இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் குணசேகர் கூறுவது போன்று இந்த தடுப்பு ஊசியை கொள்வனவு செய்யவென நிதி உதவியை உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியன வழங்குமாக இருந்தால் அவசர அவசரமாக இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் கையில் உள்ள பணத்தை (அரச பணத்தை) பயன்படுத்தி கொள்வனவில் ஈடுபட்ட வேண்டிய தேவை இல்லை. தடுப்பு ஊசி திட்டத்திற்கு ஆகக் குறைந்தது இரண்டு வீதம் 40 மில்லியன் தடுப்பு ஊசி நாட்டிற்கு தேவைப்படுகிறது. (நாட்டில் உள்ள அனைத்து மக்கள் தொகையினருக்கும் அஸ்ட்ரா  செனேக்கா தடுப்பு ஊசியை கொண்டு வராது சீனாவின் சைனாபோம் தடுப்பு ஊசிகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் முனைப்பு காட்டுவது ஒவ்வொரு தடுப்பு ஊசியிலும் 5 டொலர் பணத்தை கொள்ளை அடிப்பதன் நோக்கத்தில் ஆகும். 

எஸ்ட்ரா செனேகா கொவிட் தடுப்பு ஊசியை தனிப்பட்ட முறையில் இறக்குமதி செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பில் சிங்கப்பூரில் அமைந்துள்ள உற்பத்தி நிறுவனம் இலங்கைக்கு கன்னத்தில் அறைவது போன்ற பதில் ஒன்றை வழங்கியது. இது தொடர்பில் ஏற்கனவே லங்கா ஈ நியூஸ் செய்தி வெளியிட்டது. 

மக்கள் வங்கியில் TT  செய்யவில்லையா? 

தற்போது நாம் வெளியிட்டுள்ள தகவல் பொய் என்றால் மக்கள் வங்கி ஊடாக மேற்கூறிய நிறுவனத்திற்கு TT ஊடாக 15 மில்லியன் டொலர் செலுத்தவில்லை என்பதை வைத்தியர் குணசேகர மற்றும் இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் நிரூபிக்க வேண்டும். இலங்கையில் தடுப்பு ஊசி கொள்வனவில் மோசடிகள் இடம்பெறுவதை அறிந்து கொண்ட உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவை இதுவரையில் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்திற்கு தாங்கள் வாக்குறுதி அளித்தது போல தடுப்பு ஊசி வாங்குவதற்கான கடன் தொகையை இன்னும் வழங்கவில்லை. 

தடுப்பு ஊசிகளின் தரத்திற்கு பொறுப்புக் கூறுவது யார் ?

தடுப்பு ஊசி கொள்வனவு செய்யும் நோக்கில் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டபோது letter of intent  விருப்பக் கடிதம் கூட இருக்கவில்லை. இந்த செய்தியுடன் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில் சைனோபாம் நிறுவனம் 2021 மே மாதம் 24 ஆம் திகதியே letter of intent விருப்பம் கேட்டிருந்தது. அன்றைய தினமே அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட மிகவும் புதுமையான விடயம் ஆகும். தடுப்பு ஊசி கொள்வனவு செய்ய அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட போது குறைந்த பட்சம் உடன்படிக்கை கூட இருந்திருக்கவில்லை என்பது உண்மையான விடயம். மேலும் உலக சுகாதார நிறுவனம் சைனோபாம் தடுப்பு ஊசி தயாரிப்பு மற்றும் விநியோகத்திற்கு அனுமதி அளித்துள்ள நிறுவனங்களுக்கு மேலதிகமாக செயல்படும் நிறுவனங்களில் இருந்து 'மிக் டீல் முறையில்' கொள்வனவு செய்யப்படும் தடுப்பு ஊசிகளின் தரம் குறித்து யார் பொறுப்பு கூறுவது என்ற பிரச்சினை எழுந்துள்ளது. 

இது உலக வைரஸ் தொற்றுக்கு மத்தியில் நாடு என்ற அடிப்படையில் முன் எடுக்கப்படும் பாரிய ஊழல் மோசடி ஆகும். இது தொடர்பில் உடனடியாக சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும்.

- விசேட எழுத்தாளரின் வெளியீடு 

( இதற்கான சாட்சி கீழுள்ள படங்களில் இணைக்கப்பட்டுள்ளது )

---------------------------
by     (2021-06-06 19:52:42)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links