~

மகப்பேறு மருத்துவர்களுக்கு உள்ளாடை அணிவிக்கும் பொலிஸ் பொறுப்பு அமைச்சரின் வௌிவராத வண்டவாளங்கள் இதோ..! தோல்வி முள் கிரீடம் நந்தசேனவிற்கா ? வீரசேகரவிற்கா ?

- சந்திர பிரதீப்

(லங்கா ஈ நியூஸ் - 2021, ஜூன் , 08 , பிற்பகல் 9.15 ) கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்று ஒரு வருட பூர்த்தியின் போது " கோட்டா தோல்வி" என்ற கருத்து நாட்டு மக்கள் மத்தியில் பிரபலமாக பகிரப்பட்டு பதியப்பட்டது. அது நிதி செலுத்தி பிரச்சாரம் செய்யப்பட்ட கருத்து அல்ல. உண்மையில் எதிர்கட்சியால் தயாரிக்கப்பட்ட கோஷமும் அல்ல. " கோட்டா தோல்வி " என்பது சமூகத்தில் தானாக உருவாகி ஊக்குவிக்கப்பட்ட கருத்தாகும். நாட்டு மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவிடம் எதிர்பார்த்தது சுமார் 70 வருட காலமாக தோல்வியைக் கண்டு வரும் இலங்கை நாட்டின் பூரண மறுசீரமைப்பு மற்றும் நிரந்தர உண்மையான மாற்றம் ஆகும்.  (System change) என்ற பதத்தில் 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்ற கோஷம் முதன்மை பெற்று விளங்கியது. இது நிதி செலவு செய்து செய்ய வேண்டிய விடயம் அல்ல. அது தனி ஒழுக்கத்தின் ஊடாக செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனாலும் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற பதத்தை உண்மையாக்கி செயற்படுத்தும் விடயத்தில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தோல்வி கண்டுள்ளார். அது தனிப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷவின் தவறு மாத்திரம் அல்ல, சரத் வீரசேகர போன்ற புஸ் வான நபர்கள் காரணம் என்பதும் தௌிவாகியுள்ளது.

சட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பு வழங்கப்பட்ட சரத் வீரசேகரவின் மிக மோசமான செயற்பாடுகள் .

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பில் வைத்தியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மாற்றுத் திட்டங்கள் எதுவும் இல்லை என்பதால் முழு நாட்டையும் முடக்குவதற்கு தீர்மானித்து நாட்டில் வாழும் இரண்டு கோடி மக்களையும் சிறைக் கைதிகளைப் போல வீடுகளுக்குள் முடக்கி வைத்துள்ளார். பயணத் தடை சட்டங்களை மீறியதாக தெரிவித்து அமைச்சர் சரத் வீரசேகரவின் பொலீசார் சாதாரண அப்பாவி மக்களை தூக்கிச் சென்று கைது செய்கின்றனர். இந்த கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது  களுத்துறை பிரதேசத்தில் அப்பாவி இளைஞர் ஒருவர் பயணத் தடையை மீறிய காரணத்தால் பொலிஸாரினால் உயிரைப் பறி கொடுத்துள்ளார். பொது மக்கள் பசி பட்டினி கஷ்டங்களுக்கு மத்தியில் பயணத் தடை உத்தரவை கடைபிடித்து செயல்படுகின்றனர். ஆனால் பொலிஸ் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகர கொண்டாட்டங்கள் களியாட்டங்களில் ஈடுபட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளார். தமது நண்பர்களுக்கும் பார்ட்டி விருந்து நடத்த அனுமதி கொடுத்துள்ளார். சட்டம் கேலிக் கூத்தாக மாற்றப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே சட்டம் என்ற திட்டம் தவிடுபொடியாகி மண்ணோடு மண்ணாக்கப்பட்டுள்ளது. இறுதியில் வரம்பு மீறி நடக்கும் பொலீசாரை கட்டுப்படுத்த நாட்டின் ஜனாதிபதிக்கு தலையீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வேலியே பயிரை மேய்வது போன்ற செயலாக பொலீஸ் துறை அமைச்சர் சரத் வீரசேகரவின் இந்த செயல்பாடுகளால் நாட்டு மக்கள் கோபம் அடைந்துள்ளனர். 

சரத் வீரசேகரவின் சகோதரரது வண்டவாளங்கள் ..

மேஜர் ஜெனரல் ஆனந்த வீரசேகர என்பவர் சரத் வீரசேகரவின் அண்ணன் ஆவார். அவர் கொப்பேகடுவ கொலை வழக்கு ஆணைக்குழுவிற்கு உதவி புரிந்துள்ளார். பாரிய செலவுகளை ஏற்படுத்திய குறித்த ஆணைக்குழு இறுதியில் வெள்ளை யானையாக மாறியது. உயிரிழந்த படை வீரரின் மனைவி என்று கூறிக் கொண்டு ஆணைக்குழு முன்னிலையில் ரோகிணி ஹத்துருசிங்க என்ற பெண் முன்னிலை ஆனார். கொப்பேகடுவ பயணித்த டிபென்டர் வாகனத்தில் குண்டு வைத்தது தனது கணவர் என குறித்த பெெண் தெரிவித்தார்.  உடல் அழகு கொண்ட ரோகிணி ஹத்துருசிங்க சில நாட்களில் நடிகை போல பிரபலம் அடைந்தார். குறித்த ரோகிணி ஹத்துருசிங்க  சில நாட்கள் திடீரென காணாமல் போனார். சில மாத காலம் காணாமல் போயிருந்த ரோகிணி ஹத்துருசிங்க வைத்தியசாலை ஒன்றில் கண்டு பிடிக்கப்பட்டார். அப்போது அவர் கர்ப்பிணிப் பெண்ணாக இருந்தார். இந்த கர்ப்பத்திற்கு ஆனந்த வீரசேகரவே காரணம் என கூறப்பட்டது. இந்த சம்பவத்தின் பின்னர் ஆனந்த வீரசேகர சிறிது காலம் சமூகத்தில் இருந்து தலைமறைவாக இருந்தார். சிறிது காலத்தின் பின்னர் சரத் வீரசேகர 'புத்தங்கள  ஆனந்த' என்ற பெயரில் பிக்குவாக வெளியில் வந்தார். 

சரத் சகோதரர்கள் இணைந்து கரன்னாகொடவிற்கு குழி வெட்டிய விதம் ..

வசந்த கரன்னாகொட என்பவர் இலங்கை வரலாற்றில் உருவான மிகவும் சிறந்த கடற் படைத் தளபதி ஆவார். அவர் கடற் படை தளபதியாக பதவியேற்ற பின்னர் இலங்கை கடற் படைக்கு பாரமாக இருந்த பல அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அதில் சரத் வீரசேகரவும் ஒருவர் ஆவார். வசந்த கரன்னாகொட மற்றும் அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட சரத் வீரசேகர சரத் பொன்சேகாவிடம் சென்று வசந்த கரன்னாகொட குறித்து பொய்யான விடயங்களைக் கூறி பெயர் போட்டுக் கொண்டார். இதனால் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கூற்றுக்கு அமைய அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் உரையாடி கிராம பாதுகாப்பு படை பொறுப்பாளராக சரத் வீரசேகரவை நியமித்தார். அன்று தொடக்கம் சரத் வீரசேகர வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக நீருக்கு அடியில் நெருப்பை கொண்டு சென்றார். வசந்த கரன்னாகொட புரிந்து நடந்திருந்தால் இன்று நாம் கூறும் இந்த வரலாறு அன்று மாறி இருந்திருக்கும். சரத் வீரசேகர, சரத் பொன்சேகாவுடன் இணைந்து கடற் படைக்கு எதிராக முன்னெடுத்துச் சென்ற சதி அந்த அளவு வலுவானது. ஆனால் இன்று சரத் சகோதரர்கள் அடித்துக் கொள்வது விதியின் வழி என்று கூற வேண்டும். 

தில்ஹானியுடன் நெருங்கி பழகுதல் .. 

சரத் வீரசேகர 2011 ஆம் ஆண்டு யுத்தத்தை காரணமாக வைத்துக் கொண்டு "காமனி" என்ற திரைபடத்தை தயாரித்தார். யுத்தம் முடிவடைந்த பின் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய காலமாக அது இருந்தது. ஆனால் சரத் வீரசேகர தயாரித்த காமனி திரைப்படம் நாட்டில் இனவாத புன்னை நோண்டுவதாக அமைந்தது. இனவாதத்தை மீண்டும் தூண்டி அம்பாறை மாவட்டத்தில் சிங்கள வாக்குகளை பெறும் நோக்கில் சரத் வீரசேகரவின் இந்த திரைப்படம் அமைந்தது. அத்துடன் நடிகைகள் கூட இருந்து திரைப்பட தயாரிப்பு என்ற போர்வையில் சரத் வீரசேகர தனது காமப் பசியையும் போக்கிக் கொண்டார். 

திரைப்படத்தின் பிரதான நடிகையான தில்ஹானி அசோகமாலாவை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார் சரத் வீரசேகர. காமனி திரைப்படம் தயாரிக்கப்பட்ட போதும் அதற்குப் பின்னரும் கிராம பாதுகாப்பு படை பிரிவை சரத் வீரசேகர தவறாக பயன்படுத்தினார். அது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டால் சரத் வீரசேகர பாராளுமன்றில் அல்ல இன்று வெலிக்கடை சிறையில் இருந்திருப்பார். இலங்கையில் முஸ்லிம் நபர்களுக்கு எதிரான முதல் தாக்குதல் அம்பாறையில் ஆரம்பிக்கப்பட்டது. முஸ்லிம் பள்ளிகள் மீது தாக்குதல் நடத்தி சரத் வீரசேகரவே அதனை ஆரம்பித்து வைத்தார். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்  ICCPR செயற்படுத்தப்பட்டால் சரத் வீரசேகர இறுதி மூச்சு வரை சிறையில் தான் இருந்திருப்பார். 

சரத் வீரசேகர ஜெனீவா சென்று ஆடிய நாடகம் ..

சரத் வீரசேகர ஜெனீவா சென்றது மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வழங்கிய பணத்தில் ஆகும். ஜெனீவா செல்லவென சரத் வீரசேகர ஒரு தேனீருக்கேனும் பணம் செலவிடவில்லை. ஆனால் சரத் வீரசேகரவின் ஜெனீவா பயணமும் ஒரு முழுமையான ஏமாற்று நாடகமாகும். அது நாட்டுக்கு ஒரு அழிவாகும். சரத் வீரசேகர போன்ற முட்டாள்கள் ஜெனீவா சென்று உரையாற்றிய விதத்தால் இலங்கை மீது சுமத்தப்படும் யுத்தக் குற்றம் உறுதி செய்யப்பட்டது. இலங்கை ஒரு பிற்போக்குவாத நாடு என்பது சர்வதேசத்திற்கு எடுத்துக் காட்டப்பட்டது. ஜெனீவா சென்ற சரத் வீரசேகர மீது அங்கு வசிக்கும் இலங்கையர்கள் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தனர். வௌிநாட்டு பணியாளர்களின் பணத்தில் ஜெனீவா சென்ற சரத் வீரசேகர புலிகள் ஆதரவு அமைப்பு ஏற்பாடு செய்த விருந்து உபசாரத்திலும் கலந்து கொண்டார். தேசப் பற்றாளர் போன்று நடித்து சரத் வீரசேகர முன்வைத்த கருத்துக்களால் இலங்கை வௌிநாட்டவர்கள் ஏமாற்றப்பட்டனர்.   

பொலிஸ் பொறுப்பு அமைச்சர் குடுகாரர்களுடன் உறவில் ..

சரத் வீரசேகரவுடன் இணைந்து செயற்படும் பலர் கடற் படையில் இருந்து தவறான செயற்பாடுகள் காரணமாக விரட்டி அடிக்கப்பட்டவர்கள் ஆவர். இந்திக்க (Intake 27)  என்பவர் அவ்வாறான ஒரு திருடன். வீரசேகரவின் அலுவலகம் திருடர் கூட்டம் நிறைந்த குகை. கடந்த பொதுத் தேர்தலில் சரத் வீரசேகரவிற்கு நிதி உதவி செய்து அனுசரணை வழங்கிய பலர் குடு வியாபாரிகள். கொஸ்கொட சுஜி அதில் பிரதான நபர் ஆவார். இனோகா ராஜபக்ஷ சரத் வீரசேகரவின் தனிப்பட்ட செயலாளர் ஆவார். அவர் கொஸ்கொட சுஜியின் சிறந்த நெருங்கிய உதவியாளர் என கருதப்படும் குடு ருவானின் தங்கை ஆவார். அண்மையில் கொஸ்கொட சுஜியின் பரம எதிரியான கொஸ்கொட தாரக்க சரத் வீரசேகரவின் பணிப்பின் பேரிலேயே கொல்லப்பட்டார். கொஸ்கொட சுஜியிடம் இருந்து கிடைக்கப் பெற்ற பாரிய தொகை பணத்திற்கு மேற்கொள்ளப்பட்ட கூலிப் படை கொலையாகவே அதனை கருத வேண்டும். 2017 ஆம் ஆண்டு மே மாதம் 13ம் திகதி கொஸ்கொட தாரக்க கொஸ்கொட சுஜியின் குடும்ப உறுப்பினர்கள் நால்வரை கொலை செய்தார். இந்த கொலைக்கு நான்கு வருடங்கள் பூர்த்தியாக நாளில் சரத் வீரசேகரவின் ஊடாக கொஸ்கொட தாரக்க கொலை செய்யப்பட்டார். 

36 வயதான மகன் மற்றும் மல்சானியின் சுந்தர கதை ..

அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்த சரத் வீரசேகரவின் மகன் சவித்ர இளமையான ஒழுக்கமாக இளைஞன் அல்ல. அவர் 36 வயதுடைய ஆண். சவித்ர ஒருபாலின நபர் ஆவார். இத்தனை வயது வரை பெண் ஒருவருடன் திருமணம் ஆகாமல் இருக்க அதுவே காரணம். ஆனால் பெற்றோரின் கட்டாயத்தில் அவர் திருமணம் செய்து கொண்டார். அழகுக் கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்க, சவித்ரவின் சிறந்த நண்பர். சவித்ரவிற்கு பெண் தோழி ஒருவரை சந்திமால் ஜயசிங்கவே தேடிக் கொடுத்துள்ளார். அந்த பெண் பியூமி ஹன்சமாலியின் நெருங்கிய நண்பி. பியூமி ஹன்சமாலி பெண் தோழி ஆனதும் சந்திமால் ஜயசிங்க ஆண் தோழன் ஆனதும் எவ்வாறான முறைகளில் என வாசகர்களே எழுதிக் கொள்ளட்டும். 

சவித்ர மல்சானி அத்தநாயக்க என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர் மகாராஜா நிறுவனத்தில் பணி புரிகிறார். மல்சானி ஊடகவியலாளர் என வௌியில் சொல்லிக் கொண்டாலும் அவர் முழு நேரமாக மகாராஜாவின் அந்தப் புரத்தில் பணி புரிந்தார். கிளி மாகாராஜாவின் இதயத்தை வென்ற அவர் இங்கிலாந்து, அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். பிரித்தானிய கவுன்ஸிலில் பட்டப் படிப்பு மேற்கொள்ள லட்சக் கணக்கில் பணம் பறித்துக் கொண்டார். லட்சக் கணக்கில் சம்பளம் மற்றும் சலுகைகளை பெற்றுக் கொண்டார். மல்சானி இறுதியில் கிளி மகாராஜாவிற்கும் கொக்கு காட்டினார். 

சட்டம் நாய் அசிங்கத்திற்கு சமனாகியமை ..

சவித்ர மற்றும் மல்சானி இருவரும் பயணத் தடை சட்டத்தை மீறியே திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். திருமண செலவுகளை அனுசரணை வழங்கியோர் ஏற்றுக் கொண்டனர். சந்திமால் ஜயசிங்கவும் அதில் ஒருவர். பியூமி ஹன்சமாலிக்கும் சரத் வீரசேகரவிற்கும் இடையில் பின்னிப் பிணைந்த உறவு உள்ளது. மகன் சவித்ரவிற்கு அனுசரணை வழங்கிய சந்திமால் ஜயசிங்க தந்தை சரத் வீரசேகரவிற்கு பெண்களை கூட்டிக் கொடுக்கும் தொழிலையும் செய்துள்ளார். பயணத் தடை சட்டத்தையும் மீறி சந்திமால் விருந்து ஏற்பாடு செய்தது அந்த உறவினால் கிடைத்த பாதுகாப்பில் ஆகும். ரோசி சேனாநாயக்க, புஸ்பிகா டி சில்வா போன்றவர்கள் பயணத் தடை சட்டத்தை மீறி செயற்பட இந்த உறவே காரணம். பியூமி ஹன்சமாலி ஆடைகளை வரைவழைத்துக் கொண்டது அந்த பிணைப்பு உறவு காரணமாகவே. சரத் வீரசேகர பொலிஸ் திணைக்களம் மற்றும் அமைச்சரவையில் அசிங்கம் செய்துள்ளார்.  பயணத் தடையை மீறி செயற்பட்ட  VIP நபர்களை காப்பாற்ற சரத் வீரசேகர  CCTV வீடியோ எடிடிங் செய்துள்ளார். வழக்கு பொருளான  CCTV கமரா காட்சிகளை எடிட் செய்வது தண்டனை பெறும் குற்றமாகும். அத்துடன் நீதிமன்ற உத்தரவு இன்றி மாற்றி அமைக்கப்பட்ட  CCTV கமரா காட்சிகளை ஊடகங்களுக்கு வௌியிட்டமை மற்றுமொரு குற்றமாகும். ஐயோ ..! பொலிஸ் துறைக்கு பொறுப்பான அமைச்சர் பொலிஸை நாய் அசிங்கத்திற்கு மாற்றியுள்ளார். 

சரத் வீரசேகரவை கொழும்பிற்கு அழைத்து வந்தது பாரிய  பிழை ..

சரத் வீரசேகரவை கொழும்பிற்கு அழைத்து வந்தது பசில் ராஜபக்ஷவே. கொழும்பு தலைநகர் விருப்பு வாக்கு பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வரும் விமல் வீரவன்சவை வீழ்த்தவே சரத் வீரசேகரவை பசில் கொழும்புக்கு அழைத்து வந்தார். விமல் வீரவன்சவை சரிக்கும் நோக்கில் பலமான நபராக இனவாத சரத் வீரசேகரவை பசில் பயன்படுத்தினார். அண்மை காலத்தில் இனவாதத்தை தீவிரமாக பரப்பிய நல்லிணக்கத்திற்கு பாரிய சேதம் ஏற்படுத்திய நபராக சரத் வீரசேகரவை தவிர்ந்த வேறு யாரையும் கூற முடியாது. முதல் முறையாக சரத் வீரசேகர அம்பாறை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றுக்கு வந்தார். ஆனால் அவர் தனக்கு வாக்களித்த அம்பாறை மாவட்ட மக்களுக்கு ஐந்து சதத்திற்கு கூட வேலை செய்யவில்லை. அவ்வாறான ஒரு பயனற்ற நபரை அம்பாறையுடன் இறுதி பயணம் அனுப்பாது தலைநகர் கொழும்புக்கு அழைத்து வந்தமை மிகப் பெரிய தவறாகும். வீரசேகர போன்ற வீணான நபர்களால் தனசிறி அமரதுங்க போன்ற சிறந்த நபர்கள் கொழும்பில் இருந்து பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பை இழந்தனர். சரத் வீரசேகர தனது காரியத்தை சாதித்த பின் மக்களை நினைத்துப் பார்ப்பது கிடையாது. சரத் பியூமி ஹன்சமாலிக்கு தான் அனைத்தையும் செய்தார். கஸ்டப்படும் மக்கள் பற்றி சிந்தித்து செயற்படவில்லை.  

அண்மைக் காலத்தில் சரத் வீரசேகர செய்த நாய் வேலைகள் சில .. 

1. கன்னத்தில் அடித்தாவது பொலிஸ் துறையை திருத்துவதாகக் கூறினார். ஆனால் பொலிஸாரை சங்கி அணியும் நிலைக்குத் தள்ளியுள்ளார். 
2. நாட்டு பிரஜைகளுக்கு இராணுவ பயற்சி கட்டாயம் வழங்கப்படும் என்றார். 
3. புர்கா, மதராசா, மாகாண சபை என்பவற்றை தடை செய்வதாகக் கூறினார். இவைகள் சிரிப்பு வர வைக்கும் கதைகளாகின. 
4. திறமையான பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அருந்திக்க போன்ற கசிப்பு காரர்களுடன் விருந்து உண்டார். 
5. குற்றம், பாலியல் துஸ்பிரயோகம் செய்யும் நபர்களின் முகங்களை புகைப்படம் வௌியிட்டு வௌிச்சம் போட்டுக் காட்டுவதாகக் கூறினார்.  
6. பாதாள உலகக் குழு உறுப்பினர்களை ஆயுதங்களை ஒப்படைக்கக் கூறினார். 
7. கொஸ்கொட சுஜியிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அவரது பிரதான எதிரியை படுகொலை செய்ய சரத் வீரசேகர செயற்பட்டார். 
8. பொலிஸாலை கூலிக்கு கொலை செய்யும் பிரிவாக மாற்றி அமைத்தார். 
9. பொலிஸார் புஸ்பிகாவிற்கு வழங்கிய அனுசரணையால் உண்மையான உலக அழகி மகுடத்தை இலங்கை இழந்தது. (இந்த சம்பவமும் சங்கி அணியும் ஒன்றுதான்.) இதன்மூலம் சட்டம் நாயின் அசிங்கமானது. 
10. சரத் வீரசேகர "ஒரே நாடு ஒரே சட்டம்" என்ற திட்டத்தை மயிர்சிலிர்க்க வைக்கும் பொய்யாக மாற்றினார். 

தோல்வி முள் கிரீடம் வீரசேகரவிற்கா ? நந்தசேனவிற்கா ? 

கோட்டாபய  ராஜபக்ஷவிற்கு  FAIL என்ற முத்திரை குத்த முன்கூட்டியே சரத் வீரசேகர போன்ற குண்டர்கள் செயற்படத் தொடங்கி விட்டனர். கோட்டாவின் பெயர் கெட இது பாரிய தாக்கத்தை செலுத்தியது. வியத்மக என்ற கற்றவர்கள் இணைந்த அமைப்பு இறுதியில் இவர்களால் கேலியானது. ரோஹினி ஹத்துருசிங்க கர்ப்பமான பின் சிங்க நிலையில் இருந்து காணாமல் போன ஆனந்த வீரசேகர போன்று பியூமி ஹன்சமாலிக்கு சங்கி அனுப்பிய சம்பவத்துடன் சரத் வீரசேகரவின் சிங்க நிலையில் கழன்று சென்றுள்ளது. இன்று சரத் வீரசேகரவை வேண்டாம் என்று கூறுவது எதிர்கட்சி மாத்திரம் அல்ல. கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாக்களித்த 69 லட்சம் மக்களும் ஆவர். தெரிந்த வரலாற்றில் சரத் வீரசேகர அளவு மக்கள் எதிர்ப்புக்கு ஆளான அமைச்சர் இல்லை. சரத் வீரசேகர குறித்து முடிவு எடுப்பது கோட்டாபய ராஜபக்ஷவின் கைகளில் உள்ளது. சரத் வீரசேகர தொடர்ந்து இருந்தால் தோல்வி முள் கிரீடத்தை கோட்டா அணிந்து கொள்வது மாத்திரமன்றி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்பார்க்கும் திட்டங்களும்  FAIL லில் முடியும். அத்துடன் கைதட்டல்கள் சத்தம் ஆரவாரத்துடன் மேடையில் இருந்து இறங்கிச் செல்ல வேண்டிய கோட்டாவிற்கு அசிங்கமான வார்த்தைகளால் ஹூ சத்தத்துடன் இறங்கி செல்ல நேரிடும் என்பது உண்மை. 

(சரத் வீரசேகர யார் என்பதை அவரது நண்பர்கள் மூலம் பார்த்துக் கொள்ளலாம். இங்கு பதிவேற்றப்பட்டுள்ள புகைப்படத்தை பார்க்கவும்.)

- சந்திர பிரதீப் 

---------------------------
by     (2021-06-08 18:46:24)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links