~

சதோசயில் விஸ்கி திருடியது இராணுவம்..! உத்தரவு வழங்கியது சவேந்திர சில்வா..! சட்டத்துடன் விளையாடும் மோசமானவருக்கு எதிராக 14 குற்றச்சாட்டுகள் இதோ..!

-வௌியிடுவது கீர்த்தி ரத்நாயக்க

( லங்கா ஈ நியூஸ் - 2021, ஜூன், 15 , பிற்பகல் 4.55 ) திருட்டு மற்றும் மோசடி நடவடிக்கைகளை வாழ்க்கையில் பழக்கமாக வைத்துள்ள நிர்வாகிகள் சிலர் ஆட்சி செய்யும் நாட்டில் குற்றச் செயல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் சட்ட ஏற்பாடுகள் உருவாகுவதை தடுக்க முடியாது. அது மாத்திரம் அன்றி குற்றங்கள் வர்ணிக்கப்படும் கலாசாரமும் உருவாகும். இன்று இலங்கையில் இவ்வாறான ஒரு அவல நிலையே ஏற்பட்டுள்ளது.

மது போத்தல் திருட்டு சிறியது அல்ல, 89 போத்தல்கள்..

கொரோனா வைரஸை ஒழிக்க பயணத் தடை விதித்து நாட்டை 'லொக் டவுன்' செய்தது நிறைவேற்று ஜனாதிபதி ஆகும். ஆனால் பொலிஸ் துறைக்கு பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகரவும் அழகுக் கலை நிபுணர் சந்திமால் ஜயசங்கவும் இணைந்து ஜனாதிபதியின் உத்தரவை ஐந்து சதத்திற்கு கூட மதிக்காமல் விருந்து நடத்தினர். சரத் வீரசேகர - சந்திமால் ஜயசிங்கவின் விளையாட்டு ஓய்வதற்கு முன்பு கொரோனா ஒழிப்பு செயலணியின் பொறுப்பாளரும் நாட்டின் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா சட்டத்துடன் புதிய விளையாட்டு போட்டுள்ளனர். அநுராதபுரம் சத்தோச சுப்பர் நிலையத்தின் மது விற்பனை பிரிவில் இருந்து 89 மது போத்தல்கள் திருடப்பட்ட சம்பவத்தை வழி நடத்தியது இராணுவத் தளபதி சவேந்திர சில்வா என தற்போது தெரிய வந்துள்ளது. இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட இந்த மது போத்தல்கள் திருட்டு தொடர்பில் மேலதிக விசாரணை நடத்த மேலதிக கலால் ஆணையாளர் நாயகம் ஒருவர் தற்போது அநுராதபுரம் பகுதிக்குச் சென்றுள்ளார்.  விசாரணை அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சதோச அமைச்சர் பந்துல குணவர்த்தனவிற்கும் கையளிக்கப்படவுள்ளது.

நாட்டு மக்கள் நடு வீதியில் உயிரிழக்கும் போது விநோத விருந்து..

1964 ஆம் ஆண்டு பிறந்த சவேந்திர சில்வா தற்போது 57 வயதை கடந்துள்ளார். இன்னும் இரண்டு மாத சேவை காலமே அவருக்கு எஞ்சி உள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் சவேந்திர சில்வா ஓய்வு பெற வேண்டும். ஆனால் சவேந்திர மற்றும் மனைவி சுஜீவா ஆகியோர் பிரபுக்கள் மனநிலை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இருவர் ஆவர். இவர்கள் இருவருக்கும் VVIP சலுகைகள் வசதிகள் இன்றி வாழ் முடியாது. தற்போது சவேந்திர சில்வா மீண்டும் ஒரு சேவை நீடிப்புக் கோரிக்கையை முன் வைத்துள்ளார். ஆனால் அதனை வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விரும்பவில்லை. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அண்மையில் பரிகாரம் தேடி ஞானா அக்காவை தேடி அநுராதபுரம் சென்றுள்ளார். சவேந்திர மற்றும் மனைவி சுஜீவா இருவரும் செல்லும் வழியில் விருந்து ஏற்பாடு செய்ய மறக்கவில்லை. அநுராதபுரம் சதோச மது விற்பனை நிலையத்தை உடைத்து விஸ்கி திருடிச் செல்லப்பட்டது அந்த விருந்துக்கு ஆகும். ஐயோ ...! மக்கள் நடு வீதியில் இறக்கும் போது இராணுவத் தளபதி அரசாங்க உத்தரவையும் கணக்கில் எடுக்காது விருந்து ஏற்பாடு செய்து விநோதமாக இருக்கின்றனர்.

நீதி தேவதையின் பாலியல் உறுப்புகளை நசுக்குதல்..

நாடு தொற்று நோயினால் அழிவுகளுக்கு முகங் கொடுத்து வரும் நிலையில் அனைத்து பிரஜைகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டத் திட்டங்களுக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். ஆனால் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சட்டத்தை நாய்க்கு போட்டுள்ளார். அநுராதபுரம் சதோச மது விற்பனை நிலைய திருட்டு மயிர் சிலிர்க்கும் கதை கொண்டது. பலர் முன்னிலையில் நீதி தேவதையின் பாலியல் உறுப்பை  நசுக்கும் செயலாகும். கொரோனா ஒழிப்பு ஜனாதிபதி செயலணயின் தலைவர் சவேந்திர சில்வா இவ்வாறு செயற்படுவது அவலமாகும். மோசமான குண்டர் அரசியல் வாதிகள் கூட சட்டத்தை இந்த அளவு கேவலப்படுத்தியது இல்லை. கீழ் கூறப்பட்டுள்ள சவேந்திர சில்வாவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முழுமையானவை அல்ல. அவர் மீது உள்ள குற்றச்சாட்டுக்களை வைத்து புத்தகமே எழுதலாம். குற்றச்சாட்டுக்களில் சில கீழ்வருமாறு,  

குற்றச்சாட்டு இல. 1

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா யுத்த காலத்தில் 58 வது படை பிரிவுக்கு கட்டளை இட்டதால் ஒரு பிரசித்தமான நபராக மாறினார் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் உண்மையான கதை முற்றிலும் வேறுபட்டது. சவேந்திர சில்வா ஒரு போராளியாக இருந்தவர். போர்க் களத்தில் அவரது வலிமை காரணமாக அல்ல மாறாக ஊடகவியலாளர் சமன் குமார ராமவிக்ரம அளித்த ஊடக பங்களிப்பே சவேந்திரவை பிரபல்யப்படுத்தியது. மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன போன்ற இராணுவ வீரர்கள் எதிரிகளை நேருக்கு நேர் எதிர் கொண்டு சண்டையிட்ட போது, சவேந்திர சில்வா மேக்கப் போட்டுக் கொண்டு கெமராக்களுக்கு முன்னால் வந்து பேசியதை செய்து கொண்டிருந்தார்.  சவேந்திராவின் போராட்டம் யுத்த கள சண்டை மூலமாக அல்ல, ஊடக நிகழ்ச்சிகள் மூலமாக இருந்தது. பத்திரிகையாளர்களும் சவேந்திர சில்வாவிடம் இருந்து கிடைத்த இலவச விஸ்கி போத்தலுக்காக சவேந்திரவை ஊதி பெரிதாகக் காட்டினர்.

குற்றச்சாட்டு இல. 2

அந்த நேரத்தில் சமன் குமார ராமவிக்ரம மற்றும் சவேந்திர சில்வா ஆகியோர் தமிழ் மக்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கங்களை கொழும்புக்கு கொண்டு வந்து விற்பனை செய்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.  இது குறித்த முறைப்பாடுகள் பொலிஸாருக்கு அதிக அளவில் கிடைக்கப் பெற்றன. இந்த முறைப்பாடுகளை அடுத்து மேற்கொள்ளப்பட்ட வீதிச் சோதனை நடவடிக்கையின் போது ஊடகவியலாளர் சமன் குமார ராமவிக்ரம பயணித்த வாகனத்தில் இருந்து பல கிலோ தங்கத்தை பொலிஸார் கைப்பற்றினர்.  அந்த நேரத்தில், உயர் அரச அதிகாரிகள் கூட தங்கக் கடத்தல் சம்பவத்துடன் தொடர்பு பட்டிருந்தனர். அதனால்  வடக்கில் தமிழ் மக்களிடம் இருந்து தங்கம் கடத்தி தெற்கு பகுதிக்கு விற்பனை செய்யப்படும் விடயத்தை மூடி மறைக்க வேண்டியது அவசியமாயிற்று. சமன் குமார ராமவிக்ரம தங்கத்துடன் பிடிபட்ட செய்தியை மூடி மறைத்து அவர் மடிக் கணினி மோசடியில் சிக்கியதாக பொலிஸார் தெரிவித்து கதையை மாற்றினர். இந்த குற்றச்சாட்டு காரணமாக ஊடகவியலாளர் சமன் குமார ராமவிக்ரம பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். தங்கக் கடத்தல் மோசடியில் இருந்து சுறாக்கள் தப்பிய பின்னர் ஒரு குருவியாக சமன் குமார ராமவிக்ரம மாட்டிக் கொண்டதால் கடுமையான கோபத்தில் இருந்தார். சிறிது காலத்தின் பின்னர் மேற்குலக நாடு ஒன்றுக்கு தப்பிச் சென்ற சமன் குமார ராமவிக்ரம இலங்கை இராணுவத்தால் செய்யப்பட்ட போர்க் குற்றங்கள் அடங்கிய வீடியோ ஆதாரங்களை 'கசிய விட்டார்'.

குற்றச்சாட்டு இல. 3

சவேந்திர சில்வா பட்டலந்த பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் மண்டல பயிற்சி நெறியின் போது பரீட்சை மோசடியில் ஈடுபட்டு கையும் களவுமாக மாட்டிக் கொண்டவர். சவேந்திர சில்வா moral turpitude other wise Conduct Unbecoming An Officer And Gentleman என்ற அடிப்படையில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்.

குற்றச்சாட்டு இல. 4

முஹமலையில் நடந்த 4 வது கட்ட ஈழ போரின் போது இலங்கை அரசாங்கப் படைகள் கடுமையான பின்னடைவைச் சந்தித்தன. கமல் குணரத்ன எழுதிய புத்தகத்தில் இது குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது. முஹமலை பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல்களின் போது சவேந்திர சில்வா கட்டளையிட்ட படை அணி 4 யுத்த தாங்கிகளை எதிரிகளுக்கு தாரைவார்த்துக் கொடுத்தது. அந்த யுத்த தாங்கிகளால் தாக்கப்பட்டு அரச படை வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர். அந்த அளவு உயிர் பலியும் தோல்வியும் ஏற்படக் காரணம் சவேந்திர சில்வாவின் பலவீனமான தலைமையினால் ஆகும்.

குற்றச்சாட்டு இல. 5

நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி அலுவலகத்தில் கடமையில் இருந்த போது சவேலா ரம்புக்வெல்ல ( அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள்) என்ற பெண்ணை சவேந்திர சில்வா பாலியல் வன்கொடுமை செய்ததாக குறித்த பெண் மேலதிகாரிகளிடம் முறைப்பாடு செய்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், இந்த சம்பவத்தை மூடி மறைக்க பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் காரணமாக சவேந்திர சில்வா தப்பித்துக் கொண்டார்.

குற்றச்சாட்டு இல. 6

சவேந்திர சில்வா தொடர்பான இந்த கதையை சவேந்திரவின் நண்பரும் நியூயார்க்கில் உள்ள ஒரு பிரபலமான தொழில் அதிபரும் இந்த கதையை எழுதும் எழுத்தாளரின் நண்பருமாகிய ஒருவர் கூறினார்.  சவேந்திர சில்வா நியூயார்க்கில் இருந்த போது, அவரது இரண்டு மெய் பாதுகாப்பாளர்கள் இலங்கையர்களின் வீடுகளில் பாதுகாப்பு ரோந்து பணியில் அமர்த்தப்பப்பட்டனர். அதற்காக குறித்த படை வீரர்களுக்கு வழங்கவென 100 முதல்  200 வரையான டொலர்கள் சவேந்திர சில்வாவிடம் வழங்கப்பட்டது. ஆனால் சவேந்திர சில்வா அதனை படை வீரர்களுக்கு வழங்காது தனது பையில் போட்டுக் கொண்டார்.

குற்றச்சாட்டு இல. 7

சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட பின் அவருக்கு மேக்கப் போடுவதற்கு என தனி அறை மற்றும் பணியாளர்கள் ஒதுக்கப்பட்டனர்.  இந்த தனி அறை சவேந்திர சில்வாவின் வீட்டில் அன்றி அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ளது. சவேந்திர சில்வா கடமைக்கு வந்ததும் முதலில் மேக்கப் அறைக்குச் சென்று தன்னை அழகுபடுத்திக் கொள்வார். பின்னர் அவர் ரூ . 6,000 செலவழித்து பூச்செண்டு ஒன்றை எடுத்து புத்தருக்கு சமர்பித்து வணங்குவார். இது தினசரி நடைபெறும் நிகழ்வு என்பதுடன் இதற்கான செலவு பணத்தை பூக்கள் வழங்குவதன் மூலம் சவேந்திர சில்வாவின் மனைவி பெற்றுக் கொள்வார்.

இராணுவம் விழாக்கள், அணி வகுப்புகள் மற்றும் விருந்துகளை ஏற்பாடு செய்யும் போது சவேந்திர சில்வாவிற்கு ஒரு சிறப்பு ஒதுக்கீட்டை ஒதுக்கி வைக்க வேண்டி இருந்தது. உதாரணமாக, நிகழ்வு ஒரு களியாட்ட காட்சி நிகழ்வு என்றால் 100 ஆசனங்களை சவேந்திர சில்வாவின் நண்பர்களுக்கு ஒதுக்க வேண்டும். அதன்படி, சவேந்திர சில்வாவின் நண்பர்கள் நிகழ்வுக்கு வந்து விருந்து உண்டு விநோதம் செய்வர். சவேந்திர சில்வாவின் நண்பர்களுக்கு உணவு, பானம் மற்றும் தங்குமிடம் ஆகியவற்றை பூர்த்தி செய்து கொடுக்க பொது மக்களின் பணம் செலவிடப்படும்.

குற்றச்சாட்டு இல. 8

கர்னலாக இருந்த போது சவேந்திர சில்வா தனது வீட்டின் கூரையை சரி செய்ய வழி இல்லை என்று புலம்பிக் கொண்டே இருப்பார். ஆனால் இன்று அவர் இலங்கை பாராளுமன்றம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் மூன்று மாடி மாளிகை ஒன்றின் உரிமையாளராக இருக்கிறா். சவேந்திர சில்வாவின் வீடு ஒரு பக்கத்தில் தியவண்ணா ஓயாவை எல்லையாகக் கொண்டு அமைந்துள்ளது. நவம்பர் மாதம் 11ம் திகதி 2020 அன்று இரவு பிரபாத் மதுசங்க மற்றும் ராஜேந்திரா ஆகியோர் தியவண்ணா ஆற்றில் படகில் ஏறி மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். திடீரென்று அங்கு வந்த சவேந்திர சில்வாவின் வீரர்கள் மோட்டார் படகில் இருந்து சாதாரண படகு மீது தாக்குதல் நடத்தினர். ராஜேந்திர அங்கேயே உயிரிழந்தார். உயர் தப்பி ஓடிய மதுசங்க, சிஐபி 03 142/34 என்ற இலக்கத்தின் கீழ் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

இந்த சம்பவம் குறித்த ஹிரு தொலைக்காட்சி சில விநாடிகள் செய்தி ஒளிபரப்பியது.  அங்கு இறந்த ராஜேந்திரவின் மனைவி வௌியிட்ட கருத்து மனதை உலுக்கி எடுத்தது.

"நாங்கள் வாழ பணம் இல்லை. அதனால் தான் கணவர் மீன் பிடிக்கச் சென்றார். எங்களுக்கு ஒரு மாத குழந்தை ஒன்று உள்ளது. அவருக்கு இன்னும் ஒரு பெயர் கூட வைக்கவில்லை. கணவர் மிகவும் அன்பு கொண்டவர். சிறு குழந்தையை அவர் எப்போதும் தன் கைகளில் வைத்திருப்பார். ஐயோ இப்போது அவர் எங்களுக்கு இல்லை ... இராணுவம் ஏன் இதை செய்தது? செய்தது?''  '
குற்றம் மூடி மறைக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு இல. 9

சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக பதவி ஏற்ற பின் அவரது அலுவலகத்திற்கு மில்லியன் கணக்கான அலுவலக உபகரணங்களை கொள்வனவு செய்தார்.  அவர் கொள்வனவு செய்த நாற்காலியின் பெறுமதி ரூ .300,000 ஆகும். புத்தாண்டு பரிசு நாட்குறிப்புகள், பேனாக்கள், காலெண்டர்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் கொள்வனவில் சவேந்திர சில்வா பாரிய மோசடிகளை செய்துள்ளார். இந்த மோசடி குறித்து முன்னாள் முப்படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன சவேந்திர சில்வாவை அழைத்து முகத்திற்கு நேர் எதிர்ப்பு தெரிவித்தார்.

குற்றச்சாட்டு இல. 10

இராணுவ சிப்பாய் ஒருவருக்கு உடல் தகுதி பரிசோதனை முக்கியமான ஒன்றாகும். இராணுவத் தளபதி உள்ளிட்ட அனைத்து இராணுவ சிப்பாய்களும் Body mass index (BMI) , Army. Physical Fitness Test (APFT) பரிசோதனையில் கலந்து கொள்ள வேண்டும். தற்போது சவேந்திர சில்வாவிற்கு ஊல சதை கொண்ட உடம்பே உள்ளது. சவேந்தர சில்வாவின் உடலில் உள்ள பலம் இராணுவ அதிகாரி ஒருவருக்கு இருக்க வேண்டியது அல்ல என்பதுடன் நாற்காலியை சூடாக்கும் முதலாளியின் உடல் வலிமையே உள்ளது.

குற்றச்சாட்டு இல. 11

கொரோனா ஒழிப்பு ஜனாதிபதி செயலணியை உருவாக்கி அதன் பிரதானியாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவை நியமித்து விசேட வைத்திய நிபுணர்களை அவருக்கு கீழ் செயற்பட வைத்தமை குதிரைகளை மரம் ஏற வைத்து விட்டு எரும்புகளை ஓட்டப் போட்டிக்கு அனுப்பிய கதையாக உள்ளது. இன்று நாடு எதிர்நோக்கி உள்ள இந்த நிலைமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் செயல் திறனற்ற இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஆகியோர் பொறுப்புக் கூற வேண்டும்.

குற்றச்சாட்டு இல. 12

பங்களதாதேஷ் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 3% தொகையை பெற்றுக் கொடுப்பது ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் (UN peacekeeping forces) பணியாற்றும் அந்த நாட்டின் இராணுவ வீரர்கள் ஆவர். இந்த நடவடிக்கையானது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பாகும். இலங்கை இராணுவ வீரர்களுக்கும் அவ்வாறான ஒரு நிலைக்கு செல்ல முடிந்த போதும் அதற்கு தடையாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இருக்கிறார். யுத்தக் குற்றம் புரிந்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஒருவர் இராணுவத் தளபதியாக இருப்பதால் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படை இலங்கையை சற்று ஓரம் கட்டி வைத்துள்ளது. இது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாரிய நட்டமாகும். ஐக்கிய நாடுகள் UN மிஷனுக்குச் சென்று வீடு, வாகனம் சொத்து வாங்குவது படை வீரர்களின் கனவாகும். ஆனால் இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா இருப்பதால் அந்த கனவிலும் மண் விழுந்துள்ளது.  

குற்றச்சாட்டு இல. 13

நாட்டில் தற்போது சீனி, தேங்காய் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு செய்யும் ஏகாதிபதியாக பிரமிட் வில்மா நிறுவனத்தின் உரிமையாளர் சஜாத் மவுசுத் செயற்படுகிறார். பத்து வருடங்களுக்கு முன் இந்த இறக்குமதி துறையில் கொடி கட்டி பறந்து அதிபதியாக இருந்தவர் கலா ட்ரேடர்ஸ் உரிமையாளர் நடராஜா ஶ்ரீஸ்கந்தராஜா ஆவார். 2006 ஆம் ஆண்டு விமானப் படை அதிகாரி நிஷாந்த கஜநாயக்க தலைமையில் செயற்பட்ட கப்பம் பெறும் குழுவினால் நடராஜா ஶ்ரீஸ்கந்தராஜா என்ற வர்த்தகர் கடத்தப்பட்டார். மில்லியன் கணக்கில் அவரிடம் இருந்து கப்பம் பெற்று பின் அவரை கொலை செய்தனர். அதன் போது அவரிடம் 3000 கோடி ரூபா பெறுமதி சொத்து இருந்தது. இந்த சொத்துக்களில் அதிகமானவை கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்துடன் சவேந்திர சில்வாவிற்கும் தொடர்பு உள்ளது.  C7 Sea Fruit Bar & Coffee Lounge, No. 95, Wijerama Rd, Colombo 07 என்ற பெறுமதியான சொத்து யாரிடம் உள்ளது என்பதை தேடிப் பார்த்தால் உண்மை நிலை நன்கு விளங்கும்.

குற்றச்சாட்டு இல. 14

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தினால் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் இழந்த இலங்கை பணியாளர்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்பி வர முடியாத அளவு விமான நிலையத்தை மூடி வைத்தனர். அதன் பின் விமான நிலையத்தை திறந்து தனிமைப்படுத்தல் திட்டம் ஒன்றை உருவாக்கி அதன் ஊடாக பாரிய தொகை பணத்தை சுருட்டிக் கொண்டனர். சவேந்திர சில்வாவினால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் வௌிநாட்டில் இருந்து வரும் இலங்கை பணியாளர் சுமார் மூன்றரை லட்சம் செலவு செய்ய வேண்டும். இந்த இடி விழும் பணக் கொள்ளை மற்றும் இதன் மூலம் கொமிஷன் பணம் பெற்ற நபர்கள் தொடர்பான முழுமையான தேடல் கட்டுரை ஒன்றை விரைவில் எதிர் பாருங்கள்.

ஊழல் அதிகாரிகளுக்கு கைதட்டல் கொடுப்பதற்கு பதிலாக விரல் நீட்டுவோம்..!

இலங்கை சட்டம் ஒரு சிலந்தியின் வலையாக மாறி விட்டது.  பலவீனமான நபர்கள் எறும்புகளைப் போல சிலந்தி வலையில் சிக்கிக் கொள்கிறார்கள். சக்தி வாய்ந்தவர்கள் ஓநாய்களைப் போல சட்டத்தில் இருந்து தப்பி ஓடுகிறார்கள். பொலிஸார் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் காளைகள், புல்லும் போன்றே அவர்களுக்கு முன்னால் செயல்படுகின்றனர். நிலைமை இப்படி என்பதால் ஆடுகளின் தோல் போர்த்தி உள்ள ஓநாய்களையும் சிங்கத்தின் தோல் போர்த்தி உள்ள நரிகளையும் அடையாளம் காண நாட்டு மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும்.  ஊழல் அதிகாரிகளை ஆட்சியாளர்களை பாராட்டுவதற்குப் பதிலாக, ஆட்சியாளர்களுக்கு அதிகாரிகளுக்கு விரலை நீட்டிக் காட்டக் கூடிய முதுகெலும்பு இருக்க வேண்டும். ஏனெனில் இத்தகைய ஊழல்வாதிகள் நம் கால மக்களின் கனவுகளை மட்டுமல்ல, வருங்கால சந்ததியினரையும் சிதைத்து விடுகின்றனர்.

- கீர்த்தி ரத்நாயக்க

முன்னாள் விமானப் படை புலனாய்வு அதிகாரி

விஸ்கி திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய வீடியோ கீழே 

---------------------------
by     (2021-06-28 03:07:25)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links