~

'உள்ளே போடுவேன்' என்று ஜனாதிபதி கோட்டா கிளி மகாராஜாவிற்கு அச்சுறுத்தல் விடுப்பு..! பைத்தியத்தை கைது செய்ததால் முழு நாடும் ஆபத்தில்..!

- எழுதுவது அலுவலக செய்தியாளர்

( லங்கா ஈ நியூஸ் - 2021, ஜூன், 17, பிற்பகல் 06.25 ) தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கடந்த மார்ச் 16 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி தனது அடிப்படை உரிமை மீறப்பட்டதாகத் தெரிவித்து அசாத் சாலி நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவின் பிரதிவாதிகளாக சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபர், இரகசிய பொலிஸ் பிரிவு பணிப்பாளர், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர  மற்றும் அமைச்சின் செயலாளர் ஜகத் அல்விஸ் ஆகியோர் பெயரிடப்பட்டனர்.

திலீப பீரிஸினால் சிஐடி பணிப்பாளர் ரொஹான் பிரேமரத்ன மீது பல குற்றச்சாட்டு ..

அசாத் சாலியின் மனு கடந்த ஜூன் மாதம் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்போது பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் சட்ட மா அதிபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையானார். அப்போது பிரதி சொலிசிட்ட ஜெனரல் திலீப பீரிஸ், குற்ற விசாரணை பிரிவின் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ரொஹான் பிரேமரத்ன மீது குற்றச்சாட்டுக்கள் தொடுத்தார். சிஐடி பணிப்பாளர் என்ன செய்வதென்று தெரியாமர் இருட்டில் தடவிக் கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தினார். குற்றப் விசாரணை பிரிவு அலைந்து திரிவதாக திலீப பீரிஸ் கூறினார். சரியா சட்டம் தொடர்பில் கருத்து வௌியிட்ட காரணத்தால் அசாத் சாலி கைது செய்யப்பட்டதாக திலீப பீரிஸ் தெரிவித்தார். அதனால் விசாரணை செய்ய வேண்டியது அது குறித்தே தவிர வேறு இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

சரத்தின் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் பொறுப்பு அற்ற செயற்பாடு ..

அசாத் சாலி கைது செய்யப்பட்ட பின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டார். அசாத் சாலி ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல், மாவனெல்ல புத்தர் சிலை உடைப்பு உள்ளிட்ட பல சம்பவங்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக சரத் வீரசேகர குறிப்பிட்டார். சரத் வீரசேகரவின் இக் கருத்து அரசியல் நோக்கம் கொண்டது என்பது புலனாகியது. பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றில் முன்வைத்த கருத்துக்களின் அடிப்படையில் நோக்கினால் சரத் வீரசேகர வௌியிட்ட கருத்து முற்றிலும் பொய்யானது மற்றும் குரோம மனப்பான்மை கொண்டதென்பது தௌிவாகிறது. சரத் வீரசேகர நாட்டை ஏமாற்றினார். குற்ற விசாரணை பிரிவை நசுக்கினார். பிரஜைகளின் அடிப்படை உரிமையுடன் விளையாடினார். இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் தேசிய பாதுகாப்பில் பேன்டி சரத் வீரசேகர அபாய விளையாட்டு விளையாடுகிறார்.

கோட்டாபய ராஜபக்ஷ சிரச உரிமையாளர் கிளி மகாராஜாவை அச்சுறுத்தினார்..

அசாத் சாலி சிறை வைக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள பிரதான சூத்திரதாரி அமைச்சர் பேன்டி சரத் வீரசேகர அல்ல. அதன் பிரதான சூத்திரதாரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே. அசாத் சாலி கைது செய்யப்படுவதற்கு முதல் நாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிரச ஊடக நிறுவன உரிமையாளர் கிளி மகாராஜாவை அச்சுறுத்தி தான் எந்தளவு பாசிச ஆட்சியாளர் என்பதை நிரூபித்துள்ளார். ஊடக சுதந்திரம் என்பது ஊடக நிறுவன உரிமையாளருக்கு உள்ள சுதந்திரம் கிடையாது எனவும் மகாராஜாக்கள் முன்னிலையில் இருந்ததாக கோட்டாபய கூறியுள்ளார். இந்த கதையை கம சமக பிலிசந்தர நிகழ்ச்சியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பகிரங்கமாகக் கூறினார். பின்னர் அதிகம் ஆட்டம் போட்டால் கிளியையும் பிடித்து உள்ளே போடுவதாக கோட்டாபய ராஜபக்ஷ கிளி மகாராஜாவிடம் கூறியுள்ளார். அந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட பின் கிளி மகாராஜா தனது ஊடக சிஈஓ அதிகாரிகளுக்கு அழைத்து அரசாங்கத்தை விமர்சித்து செய்தி வௌியிட வேண்டாம் என அறிவுரை வழங்கினார்.  அதனால் தான் சிரச ஊடக வலையமைப்பு தற்போது அசாத் சாலி குறித்து எவ்வித செய்திகளையும் வௌியிடுவது இல்லை. நாட்டில் புரையோடிப் போயுள்ள பிரதான பிரச்சினைகள் குறித்து சிரச மௌனம் காப்பது அதனால்தான்.  

சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யுமாறு நாகரிக உலகம் கோட்டாபய அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிப்பு..

தவஹித் ஜமாத் அமைப்பின் அப்துல் ராசிக் என்பவர் 'புத்தர் மனித இறைச்சி உண்டார்' என்று கூறியது நல்லாட்சி காலத்தில் அல்ல ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் ஆகும்.  அப்போது இஸ்லாமிய அடிப்படைவாதியான அப்துல் ராசிக் (சஹரான் ஹசீம் என்பவர் அப்துல் ராசிக்கின் உதவியாளர்) ராஜபக்ஷக்களின் கை பொம்மையாக இருந்தார். புத்தர் மனித இறைச்சி உண்டார் என அப்துல் ராசிக் கருத்து வெளியிட்ட போது அதனை முதல் நபராக எதிர்த்தவர் அசாத் சாலி ஆவார். சஹரான் ஹாசிம் குறித்தும் அவரது நடவடக்கைகள் குறித்து மாறி மாறி வந்த ஆறு பாதுகாப்பு அமைச்சு செயலாளர்களிடம் அசாத் சாலி எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார். ஞானசார தேரர் சிறையில் இருந்த போது அவரை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியவர் அசாத் சாலி. 2012ம் ஆண்டு அசாத் சாலியை கைது செய்து ராஜபக்ஷக்கள் தோல்வி கண்டனர். தற்போது அசாத் சாலியின் அடிப்படை உரிமை மீறல் மனுவுக்கு முன்னிலையில் கோட்டாபய தோல்வி கண்டுள்ளார். அது எந்த அளவு தூரம் சென்றுள்ளது என்றால்,  இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யுமாறு வளமான நாகரீக உலக நாடுகள் எமக்கு அழுத்தம் கொடுத்துள்ளன.  

ஜி. எஸ். பி பிளஸ் வரிச் சலுகை இழப்புக்கு அத்துமீறிய கைதுகள் காரணம் ..

இலங்கைக்கு வழங்கப்படும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை இரத்து செய்வது குறித்து மீளாய்வு செய்யவென ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றில் பிரேரணை சமர்பித்து நிறைவேற்றப்பட்டுள்ளமைக்கு பிரதான காரணம் இலங்கையில் அத்துமீறிய சட்டத்திற்கு புறம்பான கைதுகள் மற்றும் வழக்கு பதிவு செய்யாது தடுத்து வைத்தல் போன்றவை என்பதை பெயர் குறிப்பிட்டு சுட்டிக்காட்டி உள்ளனர். சிரேஸ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, சிஐடி பணிப்பாளர் சானி அபேசேகர மற்றும் முஸ்லிம் ஆசிரியரும் கவிஞருமான அக்னாப் ஜசீம் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளன. குற்றச்சாட்டுக்கள் இல்லை என்றால் எவ்வித நிபந்தனைகளும் இன்றி இவர்களை கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வௌிநாட்டு செலாவணியாக வருடத்திற்கு யுரோ மில்லியன் 2100 என்ற 5 லட்சம் மில்லியன் ரூபாவிற்கு அதிகமான சலுகைத் தொகையை நாட்டுக்கு இல்லாது செய்து கொள்ள இருப்பது கோட்டாவின் பொய் பைத்தியத்தை பழிவாங்கும் நோக்கிலாகும்.  

கோட்டா உள்ளிட்ட இந்த பைத்தியக்கார குடும்பம் மூன்றாவது முறையாகவும் நாட்டை அடிமையாக்கிக் கொள்ளவென தமது நண்பர்களான கொலையாளிகளை (சொக்கா மல்லி) பாராளுமன்றுக்கு உறுப்பினர்களாக அழைத்துள்ளதுடன் பாராளுமன்றில் உள்ள ஜனநாயக எதிர்கட்சி அரசியல் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை (ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ரசாத் பதியூதின், அசாத் சாலி) சிறை வைத்துள்ளது என்பதை மறந்து விடக் கூடாது. ரஞ்சனின் சம்பவம் வேறு என்றாலும் மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் அவர் சிறையில் உள்ளார். இவ்வாறு மேலும் சில எதிர்கட்சி உறுப்பினர்கள் பின்னால் வரிசையாக உள்ளனர்.

- எழுதியது அலுவலக செய்தியாளர்

---------------------------
by     (2021-06-17 13:10:12)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links