~

நாமலின் கருப்பு பண வழியை கண்டு பிடிப்போம்..! சீன கொலனி உருவாக்கியது உண்மையில் எதற்கு..? மயிர் சிலிர்க்க வைக்கும் வெளிப்படுத்தல்...!

- எழுதுவது விசேட எழுத்தாளர்

( லங்கா ஈ நியூஸ் - 2021, ஜூன் , 19. பிற்பகல் 05.10 ) தேர்தல் காலத்தின் போது ஒரே நாடு ஒரே சட்டம் என்று மேடைக்கு மேடை கூவிக் கொண்டு ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷ அரசாங்கம் நாட்டை இரண்டாகப் பிரித்து சீன கொலனியை உருவாக்கி உள்ள நிலையில் இந்த போர்ட் சிட்டியின் எதிர்கால உண்மையான உரிமையாளராக நாமல் ராஜபக்ஷவே இருப்பார். வேறு யாரும் அல்ல.  

அந்த கதை ஆரம்பமானது இப்படித்தான் ...

2010 ஆம் ஆண்டு காலம் வரை நாமல் ராஜபக்ஷ ஒழிந்து இருந்து ஜனாதிபதி தந்தையின் அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்து அநாவசியமாகப் பயன்படுத்தி திருட்டு வழியில் இரகசியமாக பணம் சம்பாதித்தார். ஆரம்ப காலத்தில் venture capital நிறுவனத்தின் உரிமையாளராக இருந்த நிமல் பெரேரா, நாமல் ராஜபக்ஷவின் பெயரில் கொழும்பு பங்குச் சந்தையில் பங்குகள் கொள்வனவு செய்யவென இலவசமாக கணக்கு ஒன்றை ஆரம்பித்து 15 லட்சம் பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்து ஆட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

பின்னர் நாமல் ராஜபக்ஷ மூலமாக மற்றும் அப்போதைய ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஊடக அரசின் பங்குச் சந்தை முதலீடுகள் அனைத்தையும் தான் நினைத்தது போல மேற்கொண்டு, இந்தியாவில் பங்குச் சந்தையை ஆட்சி செய்த  Harshad Mehta போல நிமல் பெரேரா இலங்கை பங்குச் சந்தையையும் தான் நினைத்தது போல ஆட்டிப் படைக்கத் தொடங்கினார். ஆனால் Harshad Mehta போன்று அல்லாமல் கருப்பு பணத்தை வௌ்ளைப் பணமாக மாற்றுவதே நிமல் பெரேராவின் வியாபார தொழிலாக இருந்தது.  EPF /ETF நிதியங்களில் உள்ள பணம், பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவின் மூலமாக தனது நண்பர்களின் நிறுவனங்களின் பங்குகளை மாத்திரமே கொள்வனவு செய்ய நிமல் பெரேரா தீவிரமாக செயற்பட்டார். பங்குகள் கொள்வனவு செய்வதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் தான் அந்த நிறுவனங்களின் பங்குகளை கொள்வனவு செய்து அதன் பின்  EPF /ETF நிதியத்திற்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதால் பாரிய அளவு லாபம் பெறப்படும்.

நிமல் பெரேரா மற்றும் தம்மிக்க பெரேரா ஆகியோர் தனிப்பட்ட ரீதியில் நெருங்கிய நண்பர்களாக இருந்து பின் வியாபாரத்தில் நெருங்கிய நண்பர்களாக மாறுவதற்கு ராஜபக்ஷக்களின் கருப்பு பணத்தை வௌ்ளை பணமாக்கும் விளையாட்டின் காரணமாக என்பது பிரசித்தமான விடயமாகும். உதாரணமாக 2010/05/02 ஆம் திகதியின் போது 7.89 ரூபாவாக இருந்த தம்மிக்க பெரேராவின் வெலிபல் நிறுவனத்தின் பங்குகளை அதே வருடத்தில் 54 ரூபா வரை உயர்த்திய விடயத்தை கூறலாம். இன்றும் book value சொத்தின் அடிப்படையில் 18 ரூபா பெறுமதியான வெலிபல் நிறுவனத்தின் பங்கு ஒன்று 125 ரூபாவாகக் காணப்படுகிறது. இந்த அனைத்திற்கும் பின்னணியில் இருந்து செயற்பட்ட நபர் நாமல் ராஜபக்ஷவே. இவ்வாறு அரச பணத்தை நண்பர்கள் வியாபாரிகளின் நிறுவனங்களை பெரிதாக்கிக் கொள்ள வழங்கியதன் மூலம் நாமல் ராஜபக்ஷ குறுகிய காலத்தில் மிகப் பெரிய பணக்கார நபராக மாறினார்.

மஹிந்தவின் சம்பிரதாயபூர்வ முறை மற்றும் நாமலின் நவீன திருப்பு முனை..

எனினும் 2010 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் பின் கருப்புப் பண நிமல் பெரேரா நாமல் ராஜபக்ஷ பெயரில் பங்குச் சந்தையில் தொடங்கிய கணக்கை உடனடியாக இரத்து செய்து கொண்டார். இதேவேளை நண்பர்களுடன் ரஸ்யாவிற்குச் சென்ற நாமல் ராஜபக்ஷவிற்கு இங்கு பெயர் குறிப்பிட்டு கூற முடியாத அவரது நண்பர் ஒருவர் மூலமாக BTC - e என்ற பெயரில் கிரிப்டோ நிதிப் பிரிவு கணக்கு ஒன்று இணையத்தின் மூலம் ஆரம்பித்து கொடுக்கப்பட்டது.

சம்பிரதாய பூர்வமான மஹிந்த ராஜபக்ஷ தான் கொள்ளை அடித்த பணத்தை தூர நோக்கு அடிப்படையில் எந்த ஒரு வங்கிக் கணக்கிலும் வைப்புச் செய்யாமல் தனது உறவினர்கள் நண்பர்கள் பெயரில் முதலீடு செய்து பாதுகாப்பு கருதி  sales contract ஒன்றை மாத்திரம் வைத்துக் கொண்டார். உதாரணமாக மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்த காலத்தில் டுபாய் நாட்டுக்கு சென்ற போது தனது சொந்த செலவில் dubai marina yacht club இல் படகு ஒன்றுடன் மொரோக்கா நாட்டின் விபச்சாரிகள் இருவரை மஹிந்தவிற்கு பெற்றுக் கொடுத்த பாரிய தர்ம காரியத்தால் மஹிந்த கொள்ளை அடித்த பணத்தில் நந்தன லொக்குவிதான என்ற நபர் Marriott Al Jaddaf Dubai என்ற நிறுவனத்தின் உரிமையாளராக மாறினார். இதற்கென 225 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிட்டார். அதன் பின் சிறிமா பண்டாரநாயக்க அவர்கள் உருவாக்கிய வானே கூட்டுத்தாபனத்தை நந்தன லொக்குவிதான என்பவரின் பெயரில் மஹிந்த ராஜபக்ஷவின் பெயரால் கையகப்படுத்திக் கொண்டார். ஆனால் இவற்றுக்கு மஹிந்தவின் கருப்பு பணமே உண்மையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.  நந்தனவின் அதிஸ்டத்திற்கு சிராந்தி ராஜபக்ஷவின் உறவினரான நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அனைத்து திருட்டுக்களையும் மூடி மறைத்து காப்பாற்றி ஹொரண பிரதேசத்தில் Ferentino Tyre Corporation (Pvt.) Ltd என்ற பெயரில் டயர் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை தொடங்குவதற்கு நந்தனவிற்கு உதவி புரிந்தார்.

இவ்வாறான வகையில் ராஜபக்ஷக்களின் கருப்பு பணத்தை வௌ்ளையாக மாற்றிய தொலைக்காட்சி, வானொலி உரிமையாளர்கள், பத்திரிகை நிறுவன உரிமையாளர்கள், குரக்கன் மா இறக்குமதி செய்வோர், மாடு வீடு கட்டும் கட்டுமான நிறுவனங்கள் என நீண்ட பட்டியலை எதிர்காலத்தில் தருகிறோம். நல்லாட்சி அரசாங்க காலத்தில் இந்த கட்டுரையை எழுதும் நபர் அனைத்து தகவல்களையும் வழங்கிய போதும் ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திபால சிறிசேன இவர்களை பாதுகாத்ததால் அவை அனைத்தும் மூடி மறைக்கப்பட்டு விட்டன.

பெரேராவின் சொத்து ராஜபக்ஷக்களின் வங்கியாக மாறியது ...

மேற்கூறியது போன்று மஹிந்த ராஜபக்ஷ பாராம்பரிய முறையில் கருப்பு பணத்தை வௌ்ளை பணமாக மாற்றிய நிலையில் நாமல் ராஜபக்ஷ அதற்கு மாறான வழியை தேர்தெடுத்து BTC -e கணக்கு ஒன்றை 2011 ஆம் ஆண்டு ஆரம்பித்து கருப்பு பணத்தை முதலீடு செய்வதில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தினார். அதன் பின்னர் நாமல் ராஜபக்ஷவின் BTC -e கணக்கிற்கு crypto நிதி பிரிவின் ஊடாக கருப்பு பணம் அனுப்பியது நிமல் பெரேரா மாத்திரம் அன்றி மஹிந்த ராஜபக்ஷவின் கருப்பு பணமும் அதன் பின் நாமல் ராஜபக்ஷவின் BTC -e கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இலங்கையில் தம்மிக்க பெரேரா மற்றும் நிமல் பெரேரா ஆகியோர் ராஜபக்ஷக்களின் வங்கியாக மாறி விட்டனர். இவர்களுக்கு இலங்கையில் பணம் தேவைப்படும் போது  BTC -e கணக்கு ஊடாக நிமல் பெரேரா அல்லது தம்மிக்க பெரேரா ஆகியோருக்கு bitcoin என்ற crypto நிதி பிரிவின் ஊடாக அனுப்பி வைப்பர். அவர்கள் இலங்கை பணத்தில் அதனை பெற்றுக் கொடுப்பர்.  இந்த உதவியால் ராஜபக்ஷக்களின் பணத்தை செயற்படுத்துவது இந்த பெரேராக்கள் வசமானது.

சில சமயம் பங்குச் சந்தையை வானத்திற்கு உயர்த்தி அவர்களுடைய பங்குகளையே அதிக விலைக்கு விற்று வேறு நிறுவனங்களை விலைக்கு வாங்குவர். பின்னர் அந்த நிறுவனங்களை வீழ்ச்சி அடைவதற்கு இடமளித்து பின்னர் அதனை தம் வசப்படுத்துவர்.

வினில் மெனிக்கின் மகனுக்கு நடந்தது என்ன ..?

நாமல் ராஜபக்ஷ ஆரம்ப காலத்தில் கருப்பு பணத்தை வௌ்ளையாக்க வினில் மெனிக் உரிமையாளருடன் இணைந்து மாணிக்க கல் கொள்வனவு செய்வதிலும் ஈடுபட்டார். நாமல் ராஜபக்ஷவின் இராஜதந்திர கடவுச் சீட்டை முறையற்ற வகையில் பயன்படுத்தி இலங்கையில் மிகவும் பெருமதி வாய்ந்த மாணிக்க கற்களை எடுத்துச் சென்று பணமாக மாற்றிக் கொண்டனர். இந்த அனைத்தையும் நாமல் ராஜபக்ஷவுடன் இணைந்து செய்த வினில் மெனிக் நிறுவன உரிமையாளரின் மகன் மிகவும் பாதுகாப்பான வாகனத்தை பயன்படுத்திய போதும் ஒருநாள் இரவு திடீரென ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்தார். அது உண்மையில் வாகன விபத்து அல்ல. கொலை ஆகும். எனினும் குடும்பத்தின் ஏனைய நபர்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் தனது உயிர் பாதுகாப்பு கருதி வினில் மெனிக் உரிமையாளருக்கு வாய் மூடி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இன்று அவர் குறித்து கதையே இல்லை. தாஜூதீனின் கார் விபத்து இந்த பின்னரே இடம்பெற்றது. அந்த  கொலையின் பல உண்மைகள் விசாரணை மூலம் தெரிய வந்ததால் தற்போது வேறு உபாய மார்க்கம் கடைபிடிக்கப்படுகிறது.

நாமலின்  bitcoin பணம் குட்டிப் போட்ட விதம்..

நாமல் ராஜபக்ஷ 2011 ஆம் ஆண்டு முதல் BTC -e கணக்கு ஊடாக bitcoin நிதி பிரிவு ஒன்றை கொள்வனவு செய்யும் போது bitcoin பிரிவு ஒன்று 600 தொடக்கம் 1000 டொலராக காணப்பட்டது. 2015 ஆம் ஆண்டு ஆகும் போது நாமல் ராஜபக்ஷவின் கணக்கில் bitcoin 880,000 காணப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாமல் வேறு ஒரு இணைய கணக்கு ஒன்றை தொடங்கினார். 2017 ஆம் ஆண்டின் பின் BINANCE என்ற பெயருடைய ஜப்பான் நிறுவனம் ஊடாக இணைய வலய நிதி பிரிவு ஒன்றை bitcoin புதிய கணக்காக செயற்படுத்திச் சென்றுள்ளார். இதேவேளை, 2020 ஆம் ஆண்டு அவசரமாக Elon Musk என்ற பெயருடைய அமெரிக்க கோடீஸ்வரர் BTC இணைய நிதி பிரிவை 1.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கு விலைக்கு வாங்கியதன் பின் இந்த இணைய நிதி பிரிவு அதாவது bitcoin ஒரு பிரிவு 54000 தொடக்கம் 64000 அமெரிக்க டொலருக்கு விற்பனையாகத் தொடங்கியது.

அது இன்றைய காலத்தில் சாதாரணமாக bitcoin பிரிவு ஒன்று 40,000 அமெரிக்க டொலர் பெறுமதி வாய்ந்ததாக உள்ளது. இதன் அடிப்படையில் நோக்கினால் 2015 ஆம் ஆண்டு காலத்தில் நாமல் ராஜபக்ஷவின் BTC நிதிக் கணக்கில் மாத்திரம் bitcoin 880,000 இணைய நிதி நாற்பது மடங்கு தானாக அதிகரித்துள்ளது. அது மிகவும் பாரிய அளவு பணத் தொகை ஆகும். அதாவது சாதாரணமாக அமெரிக்காவின் 35 பில்லியன் டொலருக்கும் அதிக பெருமதியானது. ரூபா அளவில் பார்த்தால் 7000 பில்லியனுக்கும் அதிகம் ஆகும். ஒரு பில்லியன் என்பது 100 கோடி ஆகும். கணக்கை கோடி ரூபாவில் கூறினால்  700,000 லட்சம் கோடிக்கும் அதிகம். நாமல் ராஜபக்ஷ 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தொடங்கிய கணக்குகளுக்கு bitcoin எவ்வளவு இருந்தது என்பது இன்னும் தெரிய வரவில்லை.

அதனால் ராஜபக்ஷக்களின் ஒரு டொலரையேனும் எங்கு தேடுவது.?

நாமல் ராஜபக்ஷவிடம் பில்லியன் கணக்கில் டொலர் இருப்பதாக கூறப்பட்டாலும் தங்களிடம் இருந்து டொலர் ஒன்றை கண்டு பிடித்தால் கழுத்தை வெட்டிக் கொள்வதாக மஹிந்த ராஜபக்ஷ ஒருமுறை சவால் விடுத்தார். சரிதான் இப்படி இருந்தால் எங்கு டொலரை கண்டு பிடிப்பது. உண்மை. அவர்களிடம் டொலர் இல்லை. அவர்களிடம் இருப்பது ஒரு டொலரை 40,000 பெறுமதிக்கு மாற்றக் கூடிய எந்த நேரத்திலும் பவுனுக்கு அல்லது எந்த நாட்டு பணத்திற்கும் மாற்றக் கூடிய bitcoin மாத்திரமே இவர்களிடம் உள்ளது. ஒரு வருடமாக இலங்கையில் சிறைப்பட்டுக் கிடந்த நாமல் ராஜபக்ஷ அண்மையில் திடீரென டுபாய் என்று என்ன செய்திருப்பார் என்பதை நீங்களே நினைத்துக் கொள்ளுங்கள்.

மேற்கூறிய ராஜபக்ஷக்களிடம் உள்ள கோடிக் கணக்கான பணத்தை முதலீடு செய்ய பாதுகாப்பான ஒரே ஒரு இடமே காணப்படுகிறது. அது தான் கொழும்பு துறைமுக நகர போர்ட் சிட்டி திட்டம்.  

ஒரே தீர்வு போர்ட் சிட்டி ...

சீனாவிற்கு தமது ஊழியர்களுக்கான சம்பளம் கொடுப்பனவுனை வழங்குவதில் இலங்கையில் காணப்படும் சட்டத் திட்டங்களால் முடியாது என்றால் இதுவரையில் போர்ட் சிட்டி உள்ளிட்ட அனைத்து திட்டங்களிலும் வேலை செய்யும் சீனர்களுக்கு எவ்வாறு சம்பளம் கொடுப்பனவு வழங்கினர் ?  

கிடைக்கப் பெறும் தகவல்களுக்கு அமைய தெற்கு ஆசியாவில் முதலாவது இணைய வழி நிதி பிரிவுகள் ஊடாக கொடுக்கல் வாங்கல் செய்யும் நிலையமாக போர்ட் சிட்டி அமைய உள்ளது. அப்படியானால் தங்களிடம் உள்ள கோடிக் கணக்கான கருப்பு பணங்களை முதலீடு செய்ய வேண்டிய தேவை யாருக்கு இருக்கிறது என்பது தௌிவாகிறது. இது நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷக்களின் கருப்பு பணத்தை வௌ்ளைப் பணமாக மாற்றும் மத்திய நிலையமாகும். அரச கணக்காய்வு இன்றி துறைமுக நகர் ஒன்றின் அவசியம் நாமல் உள்ளிட்ட ராஜபக்ஷக்களுக்கே உள்ளது.

இசார மட்டும்.. அது யாரது பணம் ?

அதற்கு தற்போது ஒரு உதாரணம் உள்ளது. போர்ட் சிட்டி அகழ்வு நடவடிக்கைகள் நல்லாட்சி அரசாங்க காலத்தில் முடிவு பெற்றது. வௌிநாட்டு முதலீட்டாளர்களுக்கு காணி விற்பனை செய்யும் திட்டமும் அந்த காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இந்த கட்டுரை எழுதும் வரை காணி வாங்கி இருப்பது ஒரு நபர் மாத்திரமே. அவர் வௌிநாட்டவர் அல்ல. அவர்தான் ராஜபக்ஷக்களின் மறைத்து வைக்கப்பட்ட கருப்பு பணத்தை வௌ்ளையாக்கும் தம்மிக்க பெரேராவிற்கு மேல் சென்று செயற்படும் இலங்கையில் அதிக பணம் படைத்தவராக மாறி உள்ள இஷார நாணயக்கார ஆவார். கடலுக்கு அருகில் துறைமுகத்திற்கு இணையாக உள்ள ஒரே ஒரு பெறுமதியான காணியை இவரே கொள்வனவு செய்துள்ளார். அதற்கு கொடுக்கப்பட்ட பணம் ராஜபக்ஷக்களின் பணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாரிய கருப்பு பணத்தை மலைபோல முதலீடு செய்து பொய் சிங்கள பௌத்த குரல் கொடுக்கும் ராஜாக்ஷக்கள் இலங்கையின் சதா கால பணக்கார ஆட்சியாளர்களாக இருப்பர். இலங்கையின் பொருளாதாரத்தை உறிஞ்சிக் குடித்து கோடிக் கணக்கில் சொத்துக் குவித்துள்ள ராஜபக்ஷக்களில் அடுத்த ஆட்சியாளரான நாமல் ராஜபக்ஷ போர்ட் சிட்டியின் உதவியுடன் மன்னராக மாறுவார்.

லசந்தவிற்கு நடந்தது எமக்கும் நடக்கக் கூடும் ஆனாலும் ...

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை மிக் விமான கொடுக்கல் வாங்கல் விடயத்தை அம்பலப்படுத்த முயற்சி செய்தமையால் என்று கூறப்பட்டாலும் நாமல் ராஜபக்ஷவின் BTC இணைய நிதி bitcoin 880,000 தொடர்பில் தகவல்களை அம்பலத்திற்கு கொண்டு வர அவர் முயற்சித்ததாக தற்போது தெரிய வந்துள்ளது. அதனால் தற்போது இதனை வௌிப்படுத்தும் எமக்கும் லசந்தவிற்கு ஏற்பட்ட நிலை ஏற்படக் கூடும். ஆனால் பல வருட காலங்கள் உயிரை பணயமாக வைத்து தேடிக் கண்டுபிடித்த உண்மை தகவல்களை வௌியிட வேண்டிய கட்டத்திற்கு வந்துள்ளோம்.

69 லட்சம் மக்களே, இந்த கட்டுரை பொய் என நீங்கள் நினைத்தால் உங்கள் அன்புக்கு உரிய ராஜபக்ஷக்களிடம் இருந்து அவர்களது கடந்த 10 வருடத்தின் சொத்துக்கள் பொறுப்புக்கள் குறித்த ஆவண அறிக்கையை பெற்றுக்  கொள்ளுங்கள். நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க பசில் ராஜபக்ஷவை பிரதமராக மாற்றுவதற்கும் கனவு கண்டு கொண்டிருக்கும் அன்புக்கு உரிய அமைச்சர்களே, உங்கள் அரசியல் எதிர்காலம் இத்துடன் நிறைவு பெறுகிறது என்பதை நினைவில் கொள்ளவும். ராஜபக்ஷ அடிமை தனத்தில் இருந்து மீண்டு எழுந்து சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் வந்துள்ளது.

- எழுதியது விசேட எழுத்தாளர்

ஆசிரியர் குறிப்பு -
இந்த கட்டுரையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள பாரிய குற்றச்சாட்டுக்களுக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பதில் அளிக்க முன்வந்தால் அதனை பிரசுரம் செய்ய லங்கா ஈ நியூஸ் தயார் என்பதை கூறி வைக்க விரும்புகிறோம்.

---------------------------
by     (2021-06-19 21:25:03)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links