~

தேசபந்து ஒரு கொலைகாரன், கூலிக்கு கொலை செய்து அவர் வாஸ் சென்ற பாதையில் பயணிக்கிறார்..! சாட்சிகள் உள்ளடங்களாக, உடனே விசாரணை நடத்த வேண்டும்..!

- கீர்த்தி ரத்நாயக்கவின் உடல் மயிர் சிலிக்கும் வௌியீடு

( லங்கா ஈ நியூஸ் - 2021 , ஜுன் 21 , பிற்பகல் 05.40 )  பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பொலிஸ் கைதில் இருக்கும் சந்தேக நபர்களை கொலை செய்த போது அதற்கு லங்கா ஈ நியூஸ் எதிராக குரல் கொடுத்தது. ஆனால் பாதாள உலகக் குழு உறுப்பிகர்களை கொலை செய்தால் பரவாயில்லை என்று கூறிய நபர்களும் உள்ளனர். சட்டத்தின் நிர்வாகத்திற்கு மேல் செல்வது மாபியா இராஜ்ஜியத்தின் லட்சனமாகும். இலங்கை காட்டு சட்டம் ஆட்சி புரியும் அரசை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இலங்கை பொலிஸ் துறையில் குறிப்பிட்டுக் கூறக் கூடிய அளவு அதிகாரிகள் பாரிய வியாபாரத்துடன் தொடர்பு வைத்துள்ளனர். இவர்கள் சீருடை அணியும் குற்றவாளிகள் ஆவர். ஒரு புறத்தில் கூலிக்கு மாரடித்து மனித கொலை செய்வதுடன் மறு புறத்தில் தெரிவு செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

பொலிஸ் மாபியா இப்போது செயற்பாட்டில் - தேசபந்து தென்னகோனின் கொலைகள் தொடர்பான சாட்சி லங்கா ஈ நியூஸ் வசம் ..

தேசபந்து தென்னகோனின் 'கொலை கை' தற்போது நேர்மையாக வேலை செய்யும் பொலிஸ் அதிகாரிகளை நோக்கித் திரும்பி உள்ளது. தேசபந்து தென்னகோன் பாதாள உலகக் குழு தலைவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு நேர்மையான பொலிஸ் அதிகாரிகளை வேட்டையாடுவதான தகவல்கள் சாட்சிகளுடன் லங்கா ஈ நியூஸ் ஆகிய எங்களிடம் உள்ளது. தேசபந்து தென்னகோன் பாதாள உலகக் குழு மற்றும் போதைக் பொருள் கடத்தல் காரர்களை அழிப்பதாகக் கூறிக் கொண்டு  நாட்டிற்கு வௌிப்படுத்தினாலும் நடப்பது மாறான விடயமாகும். அது உடலில் மயிர் சிலிர்க்கும் கொடுக்கல் வாங்கல் சதித் திட்டமாகும். தேசபந்து செய்வது ஒரு பாதாள உலகக் குழுவிடம் இருந்து பணம் பெற்று மற்றுமொரு பாதாள குழுவை அழிப்பதாகும். கொஸ்கொட சுஜியிடம் பணம் பெற்று அவரது பரம எதிரியான கொஸ்கொட தாரக்கவை கொலை செய்தார். அது புத்தகம் ஒன்று எழுதக் கூடிய கதையாகும்.

கொஸ்கொட தாரக்க கொலை குறித்து முதலில் லங்கா ஈ நியூஸ் இணையத் தளத்திற்கு செய்தி கிடைத்தது. தாரக்க கொலை செய்யப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே எமக்கு தகவல் கிடைத்தது. கொலை சதி செயற்படுத்தப்படுவதற்கு முன்னர் 12 மணி நேரத்திற்கு முன்பதாகவே கொஸ்கொட தாரக்கவின் தாய்க்கு தகவல் வழங்க லங்கா ஈ நியூஸ் எமக்கு முடிந்தது. அது மாத்திரம் அன்றி இலங்கையில் உள்ள பல அரசியல் வாதிகளுக்கு இந்த தகவலை முன்கூட்டியே வழங்க லங்கா ஈ நியூஸ் செயற்பட்டது.  கொஸ்கொட தாரக்கவின் தாய் தாரக்க கொலை செய்யப்படுவதற்கு 9 மணி நேரத்திற்கு முன்னரே பேலியகொட பொலிஸ் நிலையத்திற்குச் சென்று தனது மகனை கொலை செய்வதை தடுக்குமாறு கோரிக்கை முன்வைத்தார். அதன் பின் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சட்டத்தரணிகள் என அனைவரும் விழிப்படைந்தனர். கொஸ்கொட தாரக்கவை தேசபந்து கொலை செய்யப் போகிறார் என்ற தகவலை நாம் வெளியிட்டமை ஆதாரங்கள் எம்மிடம் இருந்தமையின் காரணமாகவே. எனினும் அனைத்து தகவல்களும் கசியவிட்ட பின்னரும் தேசபந்து தென்னகோன் தனது திட்டத்தை கைவிடாது கொஸ்கொட தாரக்கவை கொலை செய்தார்.

தேசபந்து தென்னகோன் கூலிக்கு கொலை செய்வதை உறுதிப்படுத்த மேலும் சாட்சி..

கல்கிஸ்ஸ 'அங்சு' மற்றும் 'ரோஹா' என்ற இரண்டு பாதாள உலகக் குழு உள்ளது. அங்சு என்பவர் பிரான்ஸில் இருந்த நிலையில் ரோஹா இலங்கையில் இருந்தார். பிரான்ஸில் இருக்கும் அங்சுவிற்கு இலங்கையில் உள்ள ரோஹாவை கொலை செய்ய வேண்டிய தேவை வந்தது. ரோஹாவை கொலை செய்யும் நபர்களுக்கு 2 கோடி சன்மானம் வழங்கப்படும் என அங்சு முகநூலில் கூட விளம்பரம் செய்தார். பின்னர் அந்த சன்மான பணத்தை 5 கோடி என உயர்த்தினார். 2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி தேசபந்து தென்னகோன் வழி நடத்திய பொலிஸ் குழுவொன்று ரோஹாவை கொலை செய்தது. பேலியகொட 'ஹிட் ஸ்கொட்' பிரிவு ரோஹாவை கொலை செய்தது. ஆனால் 5 கோடி ரூபாவை வாங்கியது தேசபந்து தென்னகோன் ஆவார். ரோஹா கொலை செய்யப்பட்ட பின் அங்சு பொலிஸ் ஆசீர்வாதத்துடன் குற்றச் செயல்களில் ஈடுபட்டார்.  இவர்கள் சொயிசாபுர ஹோட்டல் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய போது பொலிஸ் அதிகாரிகள் மூவர் அந்த இடத்தில் இருந்துள்ளனர். ( கட்டுரையின் இறுதியில் உள்ள காணொளியை பார்க்கவும் ).

ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கு வந்த தொலைபேசி அழைப்பு...

அங்சுவின் இரண்டாம் நிலை நபரான 'தர்மசிறி' டுபாய் நாட்டில் இருந்தார். சொயிசாபுர துப்பாக்கிச்சூட்டை வழிநடத்தியது தர்மசிற ஆவார்.  துப்பாக்கிச் சூடு நடத்திய பின் ஹோட்டல் உரிமையாளருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து கல்கிஸ்ஸ SSP அது வெத்து வேட்டு என்று தகவல் வழங்கினார். ( வெத்து வேட்டுக்கள் என்று தகவல் வழங்கிய கல்கிஸ்ஸ SSP ரொஹான் பிரேமரத்ன இன்று CID பணிப்பாளராக உள்ளார். ) அங்சு பாதாள உலகக் குழுவினருக்கு கப்பம் கொடுக்க மறுத்ததால் குறித்த சொயிசாபுர ஹோட்டல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய சில்வாவின் தந்தை மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதும் இந்த குழுவினரே. சொயிசாபுர துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஊடகங்களில் வௌியாகி பரபரப்பை ஏற்படுத்திய போது ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் கடும் கோபமடைந்தனர். தற்போதுள்ள சட்டத்தின் படி துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதம் காட்ட அழைத்துச் சென்றிருக்க வேண்டும்.  ஆனால் அங்சுவின் குழுவினர் என்பதால் ஒரே கரண்டியில் தேசபந்துவிற்கு பறிமாற முடியவில்லை. அதற்கு காரணம் அங்சுவின் கொடுப்பனவை பெற்று செயல்படும் 'பே ரோல் - PAY ROLL ஆக தேசபந்து காணப்படுகிறார்.

தேசபந்து தென்னகோன் சாட்சி கட்டளைச் சட்டம், குற்றவியல் வழக்கு விதிமுறைகள், குற்றவியல் சட்டம் மற்றும் நிறுவன சட்டம் என்பவற்றை மீறியுள்ளார்...

சொயிசாபுர ஹோட்டல் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்களை காப்பாற்றவென தேசபந்து தென்னகோன் போலி நடாகம் ஒன்றை அரங்கேற்றினார். அங்சு பாதாள உலகக் குழு தலைவருடன் பேச்சுவாத்தை நடத்தி போலி சந்தேகநபர்கள் இருவர் மற்றும் துறுப்பிடித்த T 56 துப்பாக்கி ஒன்றையும் முன்னிலைப்படுத்தினார். துப்பாக்கிச் சூடு நடத்திய உண்மையான சந்தேகநபர்களை காப்பாற்றவென தேசபந்து தென்னகோனுக்கு மூன்று மில்லியன் ரூபா வழங்கப்பட்டது. ஆனால் அப்போது கஸ்கிஸ்ஸ பொலிஸ் குற்ற பிரிவு OIC பொலிஸ் பரிசோதகர் ஹெட்டியாராச்சி துப்பாக்கிச் சூடு நடத்த பயன்படுத்திய வாகனத்தின் சாரதியை கைது செய்திருந்தார். குறித்த வாகனத்தில் இருந்த GPS மென் பொருளையும் அவர் கைப்பற்றி இருந்தார். வாகனத்தின் பயண வழிகளை ஆராய்ந்த போது தேசபந்து தென்னகோனின் சூழ்ச்சிகள் தொடர்பான சாட்சிகள் அம்பலத்திற்கு வந்தன. அதன் பின் தேசபந்து மற்றும் ஐபி. ஹெட்டியாராச்சி இடையே முறுகல் நிலை உருவானது. உடனே ஐபி. ஹெட்டியாராச்சியை தேசபந்து பணி நீக்கம் செய்தார். அத்துடன் நின்று விடாமல் ஹெட்டியாராச்சியை கொலை செய்யுவும் சதித் திட்டம் தீட்டினார். ஐ.பி ஹெட்டியாராச்சி பணி நீக்கம் செய்யப்பட்டு 9 மாதங்கள் கடந்தும் இதுவரை அவருக்கு குற்றப் பத்திரிகை வழங்கப்படவில்லை. ஆகக் குறைந்தது முறையான விசாரணைக் கூட நடத்தப்படவில்லை. அது நிறுவன சட்டத்தை மீறும் செயல் என்பதுடன் அடிப்படை உரிமை மீறலாகும். அதனால் சாட்சிகள் கட்டளைச் சட்டம், குற்ற வழக்கு சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் ஆகிய அனைத்தும் மீறப்பட்டுள்ளன.  

தேசபந்துவின் மாபியாவிற்கு பலியான பொலிஸ் பரிசோதகர்..

தற்போது தேசபந்துவின் ஆசீர்வாதத்தில் கொஸ்கொட சுஜி, குடு அங்சு, தர்மே உள்ளிட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் அச்சமின்றி செயற்பட்டு வருகின்றனர். ஆனால் பாதாள உலகக் குழுவை அழிக்க முயற்சித்த கஸ்கிஸ்ஸ குற்றப் பிரிவு OIC ஹெட்டியாராச்சி பதவி இழந்து தவிக்கிறார். பொலிஸ்  துறையின் உயர் அதிகாரிகள் குற்றவாளிகளுடன் தொடர்பினை பேணி செயற்படுவது பாரிய அழிவாகும். ஐ.பி. ஹெட்டியாராச்சி தர்மபால கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். அவர் விசேட அதிரடிப்படை 42வது பயிற்சி நெறியை நிறைவு செய்து உப பொலிஸ் பரிசோதகராக உயர்வு பெற்றார். அதில் திறமையான உப பொலிஸ் பரிசோதகர் விருதினையும் அவர் பெற்றார். அவர் சிறுது காலம் பிரதமர் பாதுகாப்பு பிரிவிலும் பணியாற்றினார். 11 வருடங்கள் விசேட அதிரடிப்படையில் பணியாற்றிய ஹெட்டியாராச்சி 2012 ஆம் ஆண்டு சாதாரண பொலிஸ் சேவையில் இணைந்து கொண்டார். குற்றங்களை தேடிக் கண்டு பிடிப்பதில் ஐ.பி. ஹெட்டியாராச்சி மிகவும் திறமையான அதிகாரி. பல குற்றங்களை முறையாக தடுத்து நிறுத்தியுள்ளார்.

திறமையான பொலிஸ் அதிகாரி பணி நீக்கம், 'Most wanted' சந்தேகநபருக்கு ஆதரவு..

சொயிசாபுர துப்பாக்கிச் சூடு 2020 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி இடம்பெற்றது. ஐ.பி.ஹெட்டியாராச்சி 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் திகதி 884/2000 என்ற இலக்கத்தில் வழக்கு பதிவு செய்து மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் தர்மசிறி பெரேரா என்ற பாதாள உலகக் குழு நபருக்கு எதிராக பிடிவிறாந்து பெற்றார். ( இன்டர்போல் என்று சொல்லப்படும் சர்வதேச பொலிஸார் ஊடாக தர்மசிறியை கைது செய்யும் சூழலை உருவாக்கினார். ) தர்மசிறி பெரேரா விசா சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி டுபாய் நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். ஆனால் 'Most wanted'அதிகம் தேவைப்படும் நபரான தர்மசிறி பெரேராவை இலங்கைக்கு நாடு கடத்தி வர இலங்கை நடவடிக்கை எடுக்கவில்லை. அத்துடன் தர்மசிறி பெரேரா என்பவர் டுபாய் பொலிஸாரின் கைதில் இருந்து தப்பிச் சென்றதாகக் பொய் கூறினர். மறு பக்கத்தில் தர்மசிறி குறித்து விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரி ஐ.பி. ஹெட்டியாராச்சியை பணி நீக்கம் செய்தனர். இந்த நிலையானது மிகவும் அவலம் நிறைந்ததாகும்.  

குற்றம் ஒன்று நடந்த பின் விளம்பரம் செய்தல் மற்றும் இலங்கை சேறு ஊடகங்கள்...

இலங்கையில் பொலிஸார் மற்றும் சேற்று ஊடகங்கள் இணைந்து திட்டமிட்ட வகையில் பொய்களை மக்கள் மயப்படுத்தும் நிலைமை மிகவும் கவலைக்குரியது. தர்மசிறி பெரேரா டுபாயில் கைது செய்யப்பட்ட பின் அவரை நாட்டுக்கு அழைத்து வர தேவையான ஆவணங்களை இலங்கை பொலிஸார் சமர்பிக்கவில்லை. அதனால் டுபாய் பொலிஸாரால் தர்மசிறி பெரேரா விடுதலை செய்யப்பட்டார். ஆனால் தமது பொறுப்பை சரிவர செய்யாத இலங்கை பொலிஸார் தர்மசிறி பெரேரா டுபாயில் பொலிஸ் பிடியில் இருந்து தப்பிச் சென்றதாக பொய் கூறிய நிலையில் ஊடகங்களும் அதனை அவ்வாறே மக்கள் மயப்படுத்தின. எவ்வித ஆய்வும் செய்யாது இலங்கை ஊடகங்கள் பொலிஸ் தயாரித்த பொய் செய்தியை வௌியிட்டன. டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தப்பிச் செல்வது என்பது ஒருபோதும் நடக்காத விடயமாகும். ஆனால் இலங்கை ஊடகங்கள் அது குறித்து கேள்வி எழுப்பவில்லை. அத்துடன் கிலோ கணக்கில் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்படும் செய்திகளை ஹிரு மற்றும் தெரண தொலைக்காட்சிகளில் அடிக்கடி காண முடிகிறது. அதில் அதிகமானவை பொய். அத்துடன் குற்றம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்ட பின் இதனை செய்தது குறித்த நபர் என்று பகிரங்கப்படுத்தி பிரச்சாரம் செய்வது பாதுகாப்பு மூலதர்மங்களுக்கு மாறான செயற்பாடாகும்.

தேசபந்து மற்றும் குடு சலிது - பாணந்துரையில் பட்டப் பகலில் இடம்பெற்ற கொலையை மூடி மறைத்த விதம்..

கடந்த 18 ஆம் திகதி 52 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கொண்டு சென்ற களுத்துறை தெற்கு உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த பொலிஸ் SI 'குடு சலிது'வின் சிறந்த உதவியாளர் ஆவார்.  2021 ஜனவரி மாதம் 25 ஆம் திகதி பாணத்துறை பள்ளியமுல்ல சந்தியில் பலர் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் பட்டப் பகலில் மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரி T 56 துப்பாக்கியில் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த நபரை சுட்டுக் கொலை செய்தார். இந்த கொலையை செயற்படுத்தியது குடு சலிது ஆவார். ஆனால் பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இந்த கொலையை மூடி மறைத்தார். அது 2 கோடி கொடுக்கல் வாங்கலாகும். தேசபந்து தென்னகோன் மற்றும் குடு சலிது ஆகியோருக்கு இடையில் நெருங்கிய உறவு காணப்படுகிறது. பாணந்துரை பொலிஸ் வலையத்தில் குடு தொடர்பில் சோதனை நடந்தால் குடு சலிது தேசபந்துவிற்கு நேடியாக பேசி பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வார். அந்த அளவு நட்பு இருவருக்கும் இடையில் உள்ளது.  குடு சலிதுவின் இமோ இலக்கத்தை பரிசோதித்து பார்த்தால் அவர் தேசபந்து தென்னகோனுடன் வைத்துள்ள உறவை தௌிவாக விளங்கிக் கொள்ளலாம். அத்துடன் குடு சலிது உள்ள இடத்தை அறிய வேண்டுமானால் தேசபந்து தென்னகோனிடம் கேட்டால் சரியான பதில் கிடைக்கும்.

இலங்கை பொலிஸ் குற்றங்களுக்கு கை கொடுத்து உதவும் நிறுவனம்...

தற்போது இலங்கைக்கு தேவைப்படும் முக்கிய குற்றவாளிகள் மற்றும் சந்தேகநபர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் பலருக்கு 'இன்டர்போல்' சிவப்பு பிடியாணை உள்ளது. ஆனால் இலங்கை பொலிஸார் குறித்த குற்றவாளிகள் மற்றும் சந்தேகநபர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுப்பதில்லை. அதற்கு காரணம் அடியில் வேலை செய்யும் பண கொடுக்கல் வாங்கலாகும். கீழ் காணும் பட்டியலில் கொஸ்கொட நதுன் என்பவரை தவிற ஏனைய அனைவரும் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை பொலிஸாருக்கு அவசியம் என்றால் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் மற்றும் சந்தேகநபர்களை ஒரு மாதத்திற்குள் இலங்கைக்கு அனுப்பி வைக்க லங்கா ஈ நியூஸ் ஆகிய எமக்கு முடியும். அவர்களது விபரம் வருமாறு,

1. மொஹமட் மாஹிர் மொஹமட் நவாஸ் - ரங்கஜீவ கொலை சூழ்ச்சியின் பிரதான சந்தேகநபர்
2. கித்புலா எல குணா - சந்திரிக்காவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் சந்தேபநபர். குடு ராஜாவும் ஆவார்.
3. நல்லபெரும நந்திரிகே தனுக ரொஷான் - பாதாள உலகக் குழு தலைவர்
4. சுனில் காமினி என்ற கொட்ட காமினி - மாகாண சபை உறுப்பினர் சுனில் மென்டிஸை கொலை செய்த நபர். மங்கள சமரவீர கொலை சதித் திட்ட முயற்சியின் பிரதான சந்தேகநபர்
5. ஸ்டேன்லி கெனட் என்ற 'பும்மா' - பல கொலைகளின் சூத்திரதாரி
6. மொஹமட் அப்னாஸ் - பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு குடு கொண்டு வரும் பிரதான நபர்    
7. கமகே சுரங்க பிரதீப் என்ற 'வெல்லே சுரங்க' - பாதாள உலகக் குழு தலைவர் மற்றும் குடு வியாபாரி
8. பிரதீப் குமார பண்டார என்ற 'பொலிஸ் பண்டார' - பொலிஸில் இருந்து குடு விற்பனை செய்த இவரது வீட்டில் இருந்து 23 கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது.
9. அஹமட் சரீம் மொஹமட் சிஹாப் - 3000 கோடி பொது மக்கள் பணத்தை கொள்ளை அடித்த பிரைய்வெல்த் நிறுவன தலைவர்
10. நதுன் தர்மவிக்ரம என்ற கொஸ்கொட நதுன் ( STF නඳුන් ) - இத்தாலியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசபந்து செல்வது வாஸ் சென்ற அடி பாதையில் ...

தேசபந்து தென்னகோன் என்பவர் இலங்கையில் கூலிக்கு கொலை செய்யும் முதலாவது பிரதி பொலிஸ் மா அதிபர் அல்ல. அந்த காலத்தில் வாஸ் குணவர்த்தன என்ற மிகப் பெரிய நாட்டுப் பற்றாளர், குற்றங்களை கண்டு பிடிக்கும் உத்தம பிரதி பொலிஸ் மா அதிபர் இருந்தார். வாஸ் குணவர்த்தன கோட்டாபய ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரும் ஆவார். மஹிந்த - சிராந்தியுடனும் நெருங்கிய உறவு கொண்டவர். ஆனால் இன்று அவர் இருப்பது வௌிக்கடை சிறையில். காரணம் கூலிக்கு கொலை செய்த குற்றமாகும். மொஹமட் சியாம் என்ற கோடீஸ்வர வர்த்தகரை கடத்திச் சென்று கொலை செய்தது பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வாஸ் குணவர்த்தன செய்த கொலைகளில் மொஹமட் சியாம் ஒருவர் மாத்திரமே. தேசபந்து தென்னகோனும் இன்று வாஸ் குணவர்த்தன சென்ற பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

திருட்டு மற்றும் ஊழலை வாழ்வில் தோற்றமாக் கொண்டுள்ள சிலர் ஆட்சி புரியும் நாட்டில் குற்றங்களுக்கு உதவி புரியும் சட்ட ஏற்பாடுகள் பலஉருவாகுவதை தடுக்க முடியாது.  குற்றங்கள் பல புரியும் கலாசாரமும் உருவாகும். இன்று இலங்கைக்கும் அதே அவல நிலை ஏற்பட்டுள்ளது. சிங்கத்தின் தோல் போர்த்திய நரி போல ஆட்டுத் தோல் போர்த்திய ஓணான் போல இருக்கும் நபர்களை அடையாளம் கண்டு கொள்ளும் வல்லமை நாட்டு மக்களுக்கு ஏற்பட வேண்டும். ஊழல் வாதிகளுக்கு கை தட்டல் கொடுப்பதற்கு பதிலாக விலர் நீட்டி சுட்டிக்காட்ட முதுகெலும்பு இருக்க வேண்டும்.

- கீர்த்தி ரத்நாயக்க

முன்னாள் விமானப் படை புலனாய்வு அதிகாரி  

சொயிசாபுர துப்பாக்கிச் சூட்டு காணொளி கீழே 

---------------------------
by     (2021-06-20 20:59:43)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links