~

சிஐடி பிரிவுடன் இணைந்து 52 கிலோ கிராம் ஹெரோயின் சுற்றி வளைப்பை மூடி மறைக்க சூழ்ச்சி..! ஹெரோயின் தொகையின் உண்மையான உரிமையாளர்கள் ரத்தரங் ரோஹித்த மற்றும் தேசபந்து தென்னகோன்..? பொலிஸுக்குள் சொர்க்க - நரக யுத்தம் ஆரம்பம்..!

- வௌியிடுவது கீர்த்தி ரத்நாயக்க

( லங்கா ஈ நியூஸ் – 2021 ,  ஜூன் , 23. பிற்பகல் 07.45 ) 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் திகதி ஹெரோயின் போதைப் பொருள் 52 கிலோ கிராமுடன் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பொலிஸ் வரலாற்றில் 52 கிலோ கிராம் ஹெரோயின் சுற்றி வளைப்பு என்பது மிகவும் சிறிய தொகையாகும். இதற்கு முன்னர் ஹெரோயின் போதைப் பொருள் கண்டேய்னர் கணக்கில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் ஊடக சந்திப்புக்கு அழைப்பு விடுத்தது கிடையாது. ஆனால் இம்முறை 52 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்ட உடனேயே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, பதிநாயக்க உள்ளிட்ட சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் சிலர் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டனர். அதற்கு காரணம் குறித்த ஹெரோயின் போதை பொருள் சுற்றி வளைப்பை மூடி மறைக்க வேறு தரப்பில் இருந்து விடுக்கப்பட்ட அழுத்தங்கள் ஆகும். இதன் விளைவாக இலங்கை பொலிஸ் துறை சொர்க்கம் மற்றும் நரகம் என இரு பிரிவாக பிளவு பட்டுள்ளது. 

'குடு சலிது' சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் நெருங்கிய நண்பர் ...

சுற்றி வளைப்பில் கண்டு பிடிக்கப்பட்ட ஹெரோயின் போதைப் பொருள் தொகை பாணந்துரை பிரதேச பாதாள உலகக் குழு தலைவரான சலிது லக்ஷசித என்ற குடு சலிது என்பவருக்குச் சொந்தமானது என தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட SI - உப பொலிஸ் பரிசோதகர் 'குடு சலிது' வின் நெருங்கிய நண்பர் என்பதும் மேலதக தகவல். குடு சலிது தனது போதைப் பொருள் வியாபாரத்தை சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பூரண பாதுகாப்பு அனுசரணையுடன் முன்னெடுத்து செல்கிறார்.

சலிது மற்றும் தேசபந்து இடையே காணப்படும் நட்பு எந்த அளவு நெருக்கமானது என அறிந்து கொள்ள பின்வரும் உதாரணத்தை பார்க்கலாம். பாணந்துரை பொலிஸ் வலய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தொழில் பிரச்சினை ஒன்றை தீர்த்துக் கொள்வதற்கு குடு சலிதுவை தேடிச் சென்றார். குடு சலிது தேசபந்து தென்னகோனுக்கு எடுத்து ஒரு தொலைபேசி அழைப்பில் பிரச்சினை தீர்ந்தது. குடு சலிது மற்றும் தேசபந்து தென்னகோன் இடையே காணப்படும் நெருங்கிய நட்பை ஒட்டு மொத்த பொலிஸும் அறியும். பாதாள உலகக் குழு தலைவர் சலிதுவின் குழுவினர் பாணந்துரை நகரில் பலரும் பார்த்துக் கொண்டிருந்த போது 2021 ஜனவரி மாதம் 25 ஆம் திகதி பட்டப் பகலில் முச்சக்கர வண்டியில் சென்றவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்தனர். இந்த கொலையை மூடி மறைத்தது குடு சலிதுவின் நெருங்கிய நண்பரான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆவார். அது சுமார் இரண்டு கோடி ரூபா ஒப்பந்தம் ஆகும். இவ்வாறான சம்பவங்கள் பல குறித்து பொலிஸார் அறிவர். 

ரோஹித்த - தேசபந்து - சலிது, ஹெரோயின் முக்கோணம் இதோ ...

2021 ஜூன் மாதம் 18 ஆம் திகதி உப பொலிஸ் பரிசோதகர் ஹெரோயின் போதைப் பொருள் தொகையை பொலிஸ் சீருடையில் இருக்கும் போதே கடத்திச் சென்றுள்ளார். குறித்த உப பொலிஸ் பரிசோதகர் சி. பி. பொலி. மா அதிபர் தேசபந்து தென்னகோனின் அடியாள் என்பது பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் குடு சலிது வௌிநாட்டிற்கு தப்பிச் சென்று விட்டார் என்று தேசபந்துவின் குப்பை ஊடகங்கள் வௌிட்டுள்ள செய்தியும் உண்மைக்கு புறம்பானது என தெரிய வந்துள்ளது. இந்த பொய்யான செய்தியை ஊடகங்களுக்கு வழங்கியதும் தேசபந்து தென்னகோன் என்பது குறிப்பிடத்தக்கது.

குடு சலிது இலங்கையில் இருப்பதாக பொலிஸ் விசாரணையில் தகவல் வௌியாகி உள்ளது. குடு சலிது இப்போது வரை துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன என்ற 'ரத்தரங்' என்பவரின் வீட்டில் வசித்து வருவதாக ஒரு இரகசிய பொலிஸ் விசாரணை அறிக்கையில் தகவல் வௌிவந்துள்ளது. குடு சலிது கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ரோஹித்த அபேகுணவர்த்தனவிற்கு ஆதரவு வழங்கி பொதுஜன பெரமுன மேடைகளில் உரை நிகழ்த்தியும் உள்ளார். சலிது ரோஹித்தவின் தேர்தல் பிரச்சார செலவுகளுக்கு பிரதான பங்களிப்பாளராகவும் செயற்பட்டு உள்ளார். ( குறித்த சாட்சிகளுடன் கூடிய புகைப்படம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.)

தேசபந்து தென்னகோனின் 'ஹிட் ஸ்கொட்' பிரிவிற்கு குடு சலிது பலியாவாரா ?

குடு சலிதுவை கைது செய்ய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்  பதிநாயக்கவின் தலைமையில் பொலிஸ் குழு ஒன்று தேடதல் வேட்டையில் இறங்கி உள்ளது. குடு சலிந்து கைது செய்யப்பட்டால் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவிற்கு ஏற்பட்ட நிலைமை சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கும் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. அதனால் பதிநாயக்கவை முந்திக் கொண்டு தேசபந்து தென்னகோன் செயற்பட வாய்ப்பு உள்ளது. தேசபந்து தென்னகோனின் ' ஹிட் ஸ்கொட் ' குடு சலிதுவை கொலை செய்தால் சாட்சிகள் எதுவும் இன்றி கதை அதே இடத்தில் முடிந்து விடும். எனனும் சலிதுவிற்கு நிமல் லன்சாவிற்கு கிடைக்கும் அனுசரணை போன்று கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. கல்கிஸ்ஸ குற்றப் பிரிவு  OIC ஐ அமைதியாக்கியது போலவே இந்த பொலிஸ் அதிகாரிகளையும் அமைதியாக்க முடியும். ஒரு போதும் இல்லாத வகையில் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் ஊடக சந்திப்பு நடத்தியது ஏன் என்பது இப்போது புரியும்.

உடல் மயிர் சிலிர்க்க வைக்கும் உண்மை கதை ..

சேசபந்து தென்னகோன் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் தலைவர்களை கொலை செய்வது குற்றங்களை இல்லாது ஒழிக்கும் இதய சுத்தியுடன் அல்ல என்பதையும் அதன் பின்னணியில் உள்ள வியாபார ஒப்பந்தங்கள் குறித்தும் கட்டுரையாளர் இதற்கு முன்னர் நன்கு தௌிவு படுத்தி உள்ளார். அது ஒரு தரப்பினரிடம் ஒப்பந்த அடிப்பமையில் பணம் பெற்றுக் கொணடு மற்றைய தரப்பை சேர்ந்தவர்களை கொலை செய்யும் கூலிப்படை வேலையாகும். இந்த தான்தோன்றித் தனமான கொலைகள் காரணமாக நாட்டுக்கு தற்போது மற்றுமொரு ஆபத்து வந்துள்ளது. பாதாள உலகக் குழு தலைவர்கள் பலர் கொலை செய்யப்பட்டதை அடுத்து ஹெரோயின் போதைப் பொருள் வியாபார சந்தை விரிவடைந்துள்ளது. அதாவது அரசாங்கத்தின் மற்றும் தலைவர்களின் பிடியில் இருந்து நழுவிச் சென்றுள்ளது. குடு முகவர்கள் அனைத்து இடங்களிலும் குட்டிப் போட்டுள்ளனர். விநியோகம் அதிகரித்துள்ளது. அன்று 3000 ரூபாவிற்கு இருந்த ஒரு பக்கட் குடு இன்று 500 ரூபாவிற்கு குறைந்துள்ளது.

இது குறித்து உடல் மயிர் சிலிர்க்கும் மற்றுமொரு உண்மை கதை உள்ளது. இலங்கையின் உயர் இடத்தில் இருக்கும் அரசியல் பலசாளி ஒருவர் ' குடு கோட் பாதர்' நிலைமைக்கு செல்ல திட்டம் தீட்டி உள்ளார். முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த குடு வியாபாரி ஒருவர் ஊடாக குடு சந்தையை வளைத்துப் பிடிக்க அவர் தீர்மானித்துள்ளார். 

அண்மையில் தெற்கு பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட 52 கிலோ கிராம் ஹெரோயின் தொகை குறித்த இரகசிய தகவல் முதலில் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பதிநாயக்கவிற்கு கிடைத்தது. இந்த ஹெரோயின் வியாபாரத்துடன் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் சாட்சிகளுடன் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் உள்ளிட்ட மேலும் சில சம்பவங்களால் பொலிஸ் பிரிவு இரண்டாக பிளவு பட்டுள்ளது. அவை வியாபாரம் செய்யும் பொலிஸ் பிரிவு மற்றும் வியாபாரத்துடன் தொடர்பு அற்ற பொலிஸ் பிரிவு ஆகும்.

வியாபாரத்தில் ஈடுபடும் பொலிஸாருக்கு தேசபந்து தென்னகோன் தலைமை வகிக்கிறார். பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவு (நாகொட்டி) பிரதானி மற்றும் இரகசிய பொலிஸ் பிரிவு (சிஐடி) பிரதானி ஆகியோர் வியாபார குழுவில் உள்ளனர். பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, பதிநாயக்க உள்ளிட்ட குழுவினர் வியாபாரம் செய்யாத பொலிஸ் குழுவில் உள்ளனர். பொலிஸ் துறை அமைச்சர் சரத் வீரசேகர வியாபாரம் செய்யும் தேசபந்து தொன்னகோனின் அணியில் உள்ளார்.

 - கீர்த்தி ரத்நாயக்க

முன்னாள் விமானப் படை புலனாய்வு அதிகாரி

---------------------------
by     (2021-06-24 23:42:34)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links