- எழுதுவது சந்திரபிரதீப்
( லங்கா ஈ நியூஸ் - 2021 , ஜூன் , 24 பிற்பகல் 11.34 ) ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் தற்போது பிரதான சூத்திரமாரி என விலர் நீட்டி குற்றம் சுமத்தப்படும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ஜனாதிபதி பதவியை துஸ்பிரயோகம் செய்து முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகராக இருந்த பாரத லக்ஷமன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வரை நடு வீதியில் கொலை செய்த சம்பவத்தில் கூட்டுக் கொலையாளி என மூன்று நீதிமன்றங்களும் உறுதி செய்து மரண தண்டனை விதித்த அருமாதுர ரொமெலோ துமிந்த சில்வா என்ற 'குடு துமிந்த' வை புனித பொசன் போயா தினத்தில் 24 ஆம் திகதி ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்து வீட்டுக்கு அனுப்பி உள்ளார்.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் "கொலையாளி ஒருவரின் துயரத்தை மற்றுமொரு கொலையாளியே அறிவார்" என்று ஒருவர் பதிவிட்டிருந்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் நேரடியாக தொடர்பு வைத்திருக்கிறார் என்பதை நாம் சாட்சியுடன் கூறி வருகிறோம். பிரதான சாட்சி, மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் உயிர்த்த ஞாயிறு பிரதான தற்கொலை குண்டுதாரி சஹரான் ஹாசிமிற்கு புலனாய்வு பிரிவு ஊடாக சம்பளம் வழங்கப்பட்ட போது அதற்கு அனுமதி கொடுத்தவர் அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ ஆவார். அப்போது இராணுவ புலனாய்வு பிரிவு பிரதானியாக சுரேஸ் சாலி இருந்தார். அடிப்படைவாத தவஹித் ஜமாத் அமைப்பு, பொது பல சேனா அமைப்பு மற்றும் இந்து சேனா அமைப்பு ஆகியவற்றை உருவாக்க கோட்டாபய ராஜபக்ஷவும் சுரேஸ் சாலியும் உதவி புரிந்துள்ளனர். ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட இரத்தத்தின் ஈரம் காய்வதற்கு முன்னர் தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உள்ளதாக கோட்டாபய ராஜபக்ஷ, தனது சகோதரர்களான மொட்டுக் கட்சி பிரதானிகள் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷவை மீறி அறிவிப்பு விடுத்தார். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின் சுரேஸ் சாலி நாட்டின் புலனாய்வு பிரதானியாக நியமிக்கப்பட்டார். அப்போது ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்திக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி சானி அபேசேகர மீது பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி சிறையில் அடைத்ததுடன் ஏனைய பொலிஸ் அதிகாரிகளை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்தார் சுரேஸ் சாலி. அதன் மூலம் தாக்குதலில் உண்மையை வௌியில் வர விடாமல் தடுத்து விட்டனர். அதற்காகவே அவ்வாறு செய்தனர். இன்று வரை ஜனாதிபதி ஆணைக்குழுவில் குற்றவாளிகள் எனக் கூறப்பட்ட மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் கோட்டாபய ராஜபக்ஷவினால் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர். அதனால் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் விடயத்தில் கோட்டாபய ராஜபக்ஷ மீது நேரடியாக விரல் நீட்டி குற்றம் சுமத்தாது இருக்க முடியாது.
"கொலைகாரனின் துயரம் மற்றுமொரு கொலைகாரனுக்கெ தெரியும்" என்று சமூக ஊடகத்தில் கூறப்பட்டு இருப்பது இதனாலாகும். அதனால் ஜனாதிபதி தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து கொலை குற்றவாளி துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கியமை புதுமையான விடயம் அல்ல.
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவருக்கு பொது மன்னிப்பு வழங்கியதன் மூலம் ஜனாதிபதி அரசியல் யாப்பின் 34வது சரத்தில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளார். குறித்த சரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி முறையாக ஜனாதிபதி செயற்படவில்லை. ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படும் போது தண்டனை அறிவித்த நீதிபதிகளிடம் இருந்து எழுத்து மூலம் விருப்பம் தெரிவிக்கும் ஆவணம் பெற்றிருக்க வேண்டும். அதன் பின் சட்ட மா அதிபர் எழுத்து மூலம் அனுமதி அளித்திருக்க வேண்டும். அத்துடன் நீதி அமைச்சர் கையொப்பம் இட்டு விருப்ப ஆவணம் வழங்கி இருக்க வேண்டும். இந்த மூன்று ஆவணங்களும் கிடைத்த பின்னரே ஜனாதிபதி பொது மன்னிப்பு கோவையில் கைச்சாத்திட முடியும். ஆனால் நீதிபதிகள், சட்ட மா அதிபர் மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி போன்றவர்கள் அவ்வாறான கடிதம் எதனையும் ஜனாதிபதிக்கு வழங்கி இருக்கவில்லை. அதனால் குடு துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கும் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முழுமையாக அரசியல் யாப்பை மீறி செயற்பட்டுள்ளார்.
குடு துமிந்தவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது தேசிய மற்றும் சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதில் பிரதானமானது, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் டுவிட்டர் பதிவு ஒன்றை இட்டு வௌியிட்டுள்ள எதிர்ப்பாகும். (குறித்த டுவிட்டர் பதிவு வருமாறு) 'சக அரசியல்வாதியை கொன்ற துமிந்த சில்வாவுக்கான பொது மன்னிப்பானது, தேர்ந்தெடுக்கப்பட்ட, தன்னிச்சையான மன்னிப்பு வழங்கப்படுவதை எடுத்துக் காட்டுகிறது. இது சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்தும்.' என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதில் உள்ள மிகவும் ஆபத்தான விடயம் என்னவென்றால் ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் ஜிஎஸ்பி வரிச் சலுகையை மீளாய்வு செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணையாளர் அலுவலக அறிக்கையை மேற்கோள் காட்டு ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அந்த சலுகையை காலால் எட்டி உதைப்பதற்கு சமனாக துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட்டுள்ளார். குடு துமிந்தவிற்கு பொது மன்னிப்பு வழங்கிய நிலையில் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை இலங்க இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோட்டாய ராஜபக்ஷ குடு துமிந்தவை பொது மன்னிப்பில் விடுதலை செய்த விடயத்திற்கு கொழும்பில் உள்ள ஐக்கிய அமெரிக்க தூதுவர் கண்டனம் வௌியிட்டுள்ளார். அது குறித்து அவர் வௌியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு, 'கைதிகளின் விடுதலையை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் 2018 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் உறுதிசெய்து தண்டித்த சில்வாவின் மன்னிப்பு சட்டத்தின் ஆட்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. இலங்கை அரசாங்கம் செய்துள்ள ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான சமமான அணுகல் அடிப்படைக்கு இது விரோதமானது' என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த பதிவு ஊடாக இலங்கை ஐக்கிய நாடுகளுக்கான பொறுப்புக் கூறலில் இருந்து விலகி உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குடு துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஐக்கிய மக்கள் சக்தி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் அவரது தாய் உள்ளிட்ட பலரும் அறிக்கை விடுத்துள்ளனர்.
கோட்டாபய ராஜாக்ஷ ஜனாதிபதியான பின் குடு துமிந்தவிற்கு பொது மன்னிப்பு வழங்குவார் என்பது பகிரங்க இரகசியமாகும். குடு துமிந்த என்பவர் கோட்டாபயவின் விதை ஆவார். பாரத லக்ஷமன் கொலை செய்யப்பட்ட பின் துமிந்தவை பாதுகாத்தது கோட்டாபய ராஜபக்ஷவே. துமிந்தவை சிங்கப்பூருக்கு அனுப்ப உதவியதும் அவரே. கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க குடு துமிந்தவின் சகோதரர் ரேனோ சில்வாவின் குடு தொலைக்காட்சி பல பொய்களைக் கூறி ஆடை அவிழ்த்துக் கொண்டு விளம்பரங்கள் செய்தது. அதற்கு காரணம் துமிந்த சில்வாவிற்கு மன்னிப்பு பெற்றுக் கொள்வதற்கு ஆகும். ஆனால் அதற்கு கோட்டாபய அணிக்குள் பாரிய எதிர்ப்பு கிளம்பியதால் தான் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகும் இறுதி காலத்தில் துமிந்ம சில்வாவை விடுதலை செய்வதாக சில்வாவின் குடும்பத்தினரிடம் கோட்டாபய ராஜபக்ஷ உறுதி அளித்திருந்தார். ஆனால் தற்போது அவசரமாக கோட்டாபய துமிந்தவிற்கு பொது மன்னிப்பு வழங்கி உள்ளமை தனது இறுதி காலம் நெருங்கி விட்டது என கோட்டாபயவிற்கு விளங்கியதன் காரணமாக இருக்கும்.
---------------------------
by (2021-06-25 08:43:46)
Leave a Reply