~

நீதிபதிகளே, சட்டத்தரணிகளே, இரகசிய விசாரணையாளர்களே, ஆபத்து..!! குடு துமிந்தவின் விடுதலையை அடுத்து தலை தூக்கியுள்ள பாதாள குழுவினரால் கொலை அச்சுறுத்தல்..!

- எழுதுவது சந்திரபிரதீப்

( லங்கா ஈ நியூஸ் - 2021 , ஜுன் 29 , பிற்பகல் 07.15 ) கூட்டுக் கொலையாளி மற்றும் இலங்கையின் போதைப் பொருள் வியாபார ஜாம்பவான் என்று கூறப்படும் அருமாதுர ரொமேலோ துமிந்த சில்வா என்ற 'குடு துமிந்த' எந்த ஒரு நிபந்தனையும் இன்றி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்ததன் பின் அவருக்கு முதல் முதலாக மரண தண்டனை அறிவித்த நீதிபதி பத்மனி ரணவக்க மற்றும் மரண தண்டனை உறுதி செய்த நீதிபதிகள் உள்ளிட்ட சட்ட மா அதிபர் திணைக்களத்தில் குடு துமிந்தவிற்கு எதிராக வழக்கை கொண்டு நடத்திய சட்டத்தரணி துசித முதலிகே மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணையை செயற்படுத்திய சானி அபேசேகர ஆகியோருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு தெரிய வந்துள்ளது.

குடு துமிந்தவின் பாதாள உலகக் குழு உதவியாளர்கள் தனது தலைவர் விடுதலை செய்யப்பட்ட பின் புதிய உற்சாகம் பெற்று " எமது பொஸ்ஸுக்கு மரண தண்டனை கொடுத்த அனைவரையும் பலி வாங்கியே தீருவோம் " என்று கடும் நிலைப்பாட்டில் உள்ளனர்.

இந்த பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் தமது பலி வாங்கல் இலக்கை இலகுவாக அடையவென தற்போது எதுவித பாதுகாப்பும் இன்றி சேவையில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் உள்ள ஆண் மற்றும் பெண் நீதிபதிகள் ஆவர். குடு துமிந்தவிற்கு முதலில் மரண தண்டனை வழங்கியது மேல் நீதிமன்ற நீதிபதி எம். சி. பி. எஸ். மொராயஸ் மற்றும் பத்மினி என். ரணவக்க ஆகியோர் ஆவர். இந்த தீர்ப்பை உறுதி செய்து மேன்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை அறிவித்தது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் உள்ளிட்ட நலின் பெரேரா, புவனெகா அலுவிஹாரே, பரியந்த ஜயவர்த்தன மற்றும் விஜித் கே மலல்கொட ஆகிய நீதிபதிகள் குழுவாகும்.

ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் அதிகம் ...

இவர்களில் தற்போது சேவையில் இருந்து ஓய்வு பெற்றிருப்பது முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், நீதிபதி நலின் பெரேரா மற்றும் பத்மினி என். ரணவக்க ஆகியோர் ஆவர். எனவே அதிக அச்சுறுத்தல் இவர்களுக்கே உள்ளது. நீதிபதி சமத் மொராயஸ் வேலை நிமித்தம் பிஜி நாட்டுக்குச் சென்றுள்ளதால் அவருக்கான அச்சுறுத்தல் தற்போதைக்கு குறைவாகும். நீதிபதி பிரியந்த ஜயவர்த்தன ராஜபக்ஷக்களின் கூட்டில் இருப்பதால் அவருக்கு அச்சுறுத்தல் இல்லவே இல்லை. ஆனால் நீதிபதிகளான புவனெகா அலுவிஹாரே மற்றும் விஜித் கே. மலல்கொட ஆகியோர் பாதுகாப்பு அதிகாரிகள் சகிதம் கடமையில் ஈடுபட்டுள்ள போதும் அவர்களுக்கு குடு துமிந்தவின் பாதாள உலகக் குழு உதவியாளர்கள் மூலம் அச்சுறுத்தல் இருக்கவே செய்கிறது.

குடு துமிந்தவை விடுதலை செய்து கொள்வதற்கு முழு வீச்சுடன் பிரச்சாரம் செய்து வந்த அவரது சகோதரர் ரேனோ டி சில்வாவின் குடு தொலைக்காட்சியில் அதிக அளவு இலக்கு வைக்கப்பட்டது முதல் முறையாக மரண தண்டனை தீர்ப்பு அறிவித்த நீதிபதி பத்மினி என். ரணவக்க ஆவார். வாய் காரணமாக சிறை சோறு சாப்பிடும் முட்டாள் நடிகனின் தொலைபேசி அழைப்பு குரல் பதிவு காரணமாக பத்மினி என். ரணவக்க இழி சொல்லுக்கு ஆளாக்கப்பட்டார். அவர் சேவையில் ஒருந்து ஓய்வு பெற்றுள்ள போதும் இன்று வரை ஓய்வூதியம் வழங்கப்பட்டவில்லை. இந்த குரல் பதிவு வழக்கினால் ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பத்மினி ரணவக்க குடு துமிந்தவிற்கு மரண தண்டனை வழங்கி சில மாதங்களுக்குப் பின்னரே முட்டாள் நடிகன் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடி இருந்த போதும் குடு தொலைக்காட்சி உரிமையாளர் ரேனோ டி சில்வா அந்த குரல் பதிவை எடுத்து துமிந்தவிற்கு மரண தண்டனை வழங்குவதற்கு முன்னர் பிரயோகிக்கப்பட்ட அழுத்தமே இது என நாட்டு மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தார். அதனால் அரசியல் அழுத்தம் காரணமாக துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டதாக சமூகத்தில் குரல் பதிவு ஆதாரத்துடன் செய்தி பரப்பப்பட்டது. அந்த கருத்தானது தற்போது துமிந்தவின் விடுதலையால் உற்சாகம் பெற்றுள்ள அவரது பாதாள உலகக் குழு உதவியாளர்களின் ஆழ் மனதில் நன்கு பதிவாகியுள்ளது.  

அதனால் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மினி ரணவக்கவிற்கு அதிக உயிர் அச்சுறுத்தல் காணப்படுகிறது.  

சானி அபேசேகர மற்றும் துசித முதலிகேவிற்கு அச்சுறுத்தல் ...

துமிந்த சில்வாவிற்கு எதிரான வழக்கை வழி நடத்திய சட்ட மா அதிபர் திணைக்கள சட்டத்தரணி துசித முதலிகே தற்போது சுகயீனம் அடைந்துள்ளார். அத்துடன் துமிந்த சில்வாவிற்கு எதிராக பொலிஸ் விசாரணை முன்னெடுத்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சானி அபேசேகர பணி நீக்கம் செய்யப்பட்டு தனது துப்பாக்கியையும் பொலிஸாரிடம் ஒப்படைத்து விட்டு பாதுகாப்பற்ற நிலைமையில் உள்ளார். அதனால் இவர்கள் இருவரும் குடு துமிந்தவின் பாதாள உலகக் குழு உதவியாளர்களின் இலகுவான இலக்காக காணப்படுகின்றனர்.

அதில் சானி அபேசேகர தற்போதும் பாரிய உயிர் அச்சுறுத்தலை எதிர் கொண்டுள்ளார். நேர்மையான பொலிஸ் அதிகாரியின் சேவையை கேவலமான முறையில் நிறுத்தி வைத்திருப்பதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 இலங்கையில் மிகவும் பயங்கரமான குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி சுமார் 82 குற்றச் செயல்கள் தொடர்பான சந்தேகநபர்களை அடையாளம் கண்டு தண்டனை பெற்றுக் கொடுத்த இரகசிய பொலிஸ் விசாரணையாளராக செயற்பட்ட சானி அபேசேகரவிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கி, பிஸ்தோல் மற்றும் அவரது சொந்த பயன்பாட்டிற்காக பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று வைத்திருந்த துப்பாக்கியையும் கூட பொலிஸார் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அதன் மூலம் சானி அபேசேகரவை நிராயுதபாணியாக மாற்றி குற்றவாளிகளின் இலகுவான இலக்காக அவரை மாற்றியுள்ளனர்.  

சானி அபேசேகர 2020 ஜனவரி 7 ஆம் திகதி பதவி நீக்கம் செய்யப்பட்டார். அன்றைய தினம் இரவு சானி அபேசேகரவின் கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பு எடுத்த ஆண் ஒருவர் பெண் குரலில் பேசி அவரது உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்ததுடன் மனைவி, பிள்ளைகளின் உயிருக்கும் சேதம் ஏற்படுத்துவதாக அச்சுறுத்தல் விடுத்தருந்தார்.

உனது மனைவியின் இரு பிள்ளைகளின் மரணத்தை தோளில் சுமக்க தயாராக இரு ...

இலக்கம் 501 என பதிவாகிய குறித்த  VOIP அழைப்பில் பேசிய அந்த நபர்... , " அடே .. x மவனே நீ நடித்தது அனைத்தும் முடிந்தது. எமக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. நீ ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் சட்டிப்பானை கழுவாமல் வா என்னுடைய வீட்டில் சட்டிப்பானை கழுவ. உனக்கு அதை விட சிறந்த வேலை ஒன்று கொடுக்க நாம் நீண்ட காலமாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். உன்னை பழி எடுப்பதற்கு முன் உனது கண் பார்க்க உன் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளின் மரணத்தை தோளில் சுமக்க தயாராகவே இரு. உனக்கும் உனது குடும்ப உறுப்பினர்களுக்கும் செய்வதை பார்த்து நாம் எவ்வளவு ஆனந்தம் அடைவோம். நீ அடே தாசி மகனே உன்மை ஒரு போதும் உயிரோடு விட்டு வைக்க மாட்டோம். நீ செல்லும் இடங்கள் எங்களுக்கு தெரிகிறது. உனக்கு இடி விழ வேண்டும். இது எங்களது சந்தர்ப்பம் என்பதை நீ தெரிந்து வைத்துக் கொள். " என்று சானி அபேசேகரவிற்கு அச்சுறுத்தல் விடுத்தார்.  

இது குறித்து மறு நாளே சானி அபேசேகர பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்த போதும் இன்று வரை அது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை என்பதுடன் சானியின் கைகளில் விலங்கு மாட்டினர். 501 என்ற இலக்கம் கொண்ட VOIP தொலைபேசி அழைப்பு சட்ட ரீதியானதா அல்லது எங்கிருந்து வந்தது என்பதை கண்டு பிடிப்பது கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு மிகவும் இலகுவானது. ஆனால் அவ்வாறு செய்யவில்லை. புறக்கணித்தனர். அதனால் கோட்டாபய அரசாங்கத்திற்கும் இந்த தொலைபேசி அழைப்பிற்கும் இடையில் தொடர்பு உள்ளது என்று தானே கருத வேண்டும்?

இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டாலும் குடு துமிந்தவின் விடுதலையுடன் குடு ஜாம்பவானின் உதவியாளர்களது கடுமையான உயிர் அச்சுறுத்தல் சானி அபேசேகரவிற்கு உள்ளது.

குடு துமிந்தவின் உதவியாளர்களது அச்சுறுத்தல் சாதாரண ஒன்று அல்ல..

" எமது பொஸ்ஸுக்கு மரண தண்டனை கொடுத்த அனைவரையும் பலி வாங்கியே தீருவோம் " என்ற குடு துமிந்தவின் பாதாள உலகக் குழு உதவியாளர்களின் அச்சுறுத்தலை சாதாரண அச்சுறுத்தலாக லங்கா ஈ நியூஸ் கருதி புறந்தள்ள விரும்பவில்லை. காரணம் அவர்களது குடு வியாபாரத்தின் பின்னணியில் கொட்டிக் கிடக்கும் பணம் மற்றும் இலங்கையில் பணத்திற்காக செய்ய முடியாதது ஒன்றும் அல்ல என்பதனாலாகும். இதற்கு ராஜபக்ஷக்களின் அதிகார ஒத்துழைப்பும் கிடைத்து பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இணைந்த ராஜபக்ஷக்களின் பாதுகாப்பு அரணாக மாறியுள்ள சீன - ராஜபக்ஷ கொலனியில் இடம்பெறக் கூடிய விடயங்கள் குறித்து நாம் நன்கு கணித்து வைத்துள்ளோம்.

நீதிபதிகளே, சட்டத்தரணிகளே, இரகசிய விசாரணையாளர்களே, ஆபத்து...!!!

- சந்திரபிரதீப்

---------------------------
by     (2021-06-30 09:54:21)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links