( லங்கா ஈ நியூஸ் - 2021 , ஜூலை 10, பிற்பகல் 04.30 ) மெதமுலன மோசடி குடும்பத்தின் அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட டொலர் கையிருப்பு தட்டுப்பாட்டின் காரணமாக இலங்கைக்கு எரிபொருள் கொண்டு வந்த கப்பல் ஒன்று எரிபொருள் தொகையை இறக்கி வைக்காமல் சுமார் 5 நாட்கள் கொழும்பு கடற் பரப்பில் தரித்து நிற்பதாக தெரிய வருகிறது.
சவுதி அரேபியா நாட்டின் கொடியை தாங்கிய இந்த கப்பல் KHAFJI என்ற பெயருடைய மசகு எண்ணெய் ஏற்றிய கப்பல் ஆகும். இந்த கப்பல் 97160 டொன் கொள்ளளவு கொண்டது. மசகு எண்ணெய் தொகையை ஏற்றிய குறித்த கப்பல் சவுதி அரேபியாவில் இருந்து புறப்பட்டு கடந்த ஜூலை 5 ஆம் திகதி இலங்கை நேரப்படி மாலை 3.45 மணிக்கு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்து இன்று 10 ஆம் திகதி அதாவது 5 வது நாளாக தரித்து வைக்கப்பட்டுள்ளது. எண்ணெய் இறக்குமதி நிறுவனத்திற்கு இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் வழங்கிய எல் சி என்ற கடன் கடிதத்திற்கு தேவையான டொலர் இலங்கையின் குறித்த வங்கியால் நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படாத காரணத்தால் கொண்டு வரப்பட்ட எண்ணெய் இறக்காமல் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த எண்ணெய் இறக்குமதி நிறுவனத்திற்கு clearance documents தடையகற்றும் ஆவணங்கள் கிடைக்கப் பெறவில்லை எனவும் கூறப்படுகிறது.
கொழும்பு துறைமுகத்திற்கு எண்ணெய் கொண்டு வரும் கப்பல்கள் வேறு கப்பல்கள் போன்று தாமதித்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம் துறைமுகத்திற்கு வெளியில் ஆழ் கடலில் உள்ள Single Point Mounting Buoyancy என்று அழைக்கப்படும் SPM மிதக்கும் பகுதிக்கு சம்பந்தப்படுத்தி கடலில் வைத்தே ஒரு மணித்தியாலம் கூட தாழ்த்தப்படாது நேரடியாக கொழும்பு துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள எரிபொருள் களஞ்சியத்திற்கு மாற்றப்படும். இந்த SPM மிதக்கும் பகுதி துறைமுகத்திற்கு அல்லாது எரிபொருள் கூட்டுத் தாபனத்திற்கு சொந்தமாக உள்ளது. அதனால் KHAFJI என்ற கப்பலில் உள்ள மசகு எண்ணெயை களஞ்சியசாலைக்கு நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமைக்கு இலங்கை எரிபொருள் கூட்டுத் தாபனமே முழு காரணமாகும். எரிபொருள் கூட்டுத் தாபனத்தில் உள்ள குழப்பத்தால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை எரிபொருள் கூட்டுத் தாபனம் இதுவரை மசகு எண்ணெய் கடனுக்கு கொள்வனவு செய்து வழங்க வேண்டிய கடன் தொகை 1.2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாகும். அண்மையில் எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து கருத்து வௌியிட்ட அமைச்சர் உதய கம்மன்பில மாதத்திற்கு அன்றி 2 நாட்களுக்கு கையிருப்பில் வைத்துக் கொள்ளும் அளவு எரிபொருள் கொள்வனவு செய்ய இலங்கையிடம் டொலர் இல்லை என்பதை மறைமுகமாகக் கூறியுள்ளார்.
எரிபொருள் ஏற்றி வந்த கப்பல் ஒன்று 5 நாட்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பதாகக் கூறுவது சாதாரண விடயம் அல்ல. அநியாயமான நட்டத்தை எதிர்கொள்ளும் செயற்பாடாகும். காரணம் எரிபொருள் தாங்கிய கப்பல் ஒன்று துறைமுகத்தில் ஒரு மணித்தியாலம் தாமதித்தால் அதற்கு தாமத கட்டணமாக 2000 - 3000 அமெரிக்க டொலர் கப்பல் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும். அதன்படி ஒருநாள் தாமதம் ஏற்பட்டால் 50 , 0000 அமெரிக்க டொலர் தாமத கட்டணமாக செலுத்த வேண்டும். தற்போது 5 நாட்களுக்கு கப்பல் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இரண்டரை லட்சம் அமெரிக்க டொலர் தாமத கட்டணமாக செலுத்த வேண்டும். டொலருக்கு பிச்சை எடுக்கும் நாட்டுக்கு இது மிகப் பெரிய சுமையாகும்.
எவ்வித உயர் தர கல்வித் தகுதிகளும் இன்றி, குறைந்தது கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் கூட பொருளியல் துறை கற்றிராத, வர்த்தக வியாபார அனுபவம் இல்லாத, திருட்டுக்கு நன்கு பெயர் போன மோசடி காரர் ஒருவர் இலங்கையில் முதல் தடவையாக நிதி அமைச்சராக பதவி ஏற்றிருப்பது இவ்வாறானதொரு பின்னணியில் ஆகும்.
ராஜபக்ஷக்களின் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு எரிபொருளை ரேஷன் முறையில் வழங்கும் காலம் வெகு விரைவில்.
---------------------------
by (2021-07-10 17:34:00)
Leave a Reply