(லங்கா ஈ நியூஸ் - 2021 ஜூலை 11, பிற்பகல் 11.00) துறைமுகத்துக்கு வருகை தந்துள்ள எரிபொருள் தாங்கிய கப்பலை டொலர் செலுத்தி எரிபொருட்களை நாட்டுக்கு இறக்க வக்கில்லாத மூர்க்கத்தனமான முட்டாள்தனமான மெதமுலன ராஜபக்ஷ அரசாங்கம் நாட்டை முன்கொண்டு செல்ல கையில் ஒரு சதமும் இல்லாத நிலையிலும் ஏகாதிபத்திய அடிமை நிலையிலிருந்து இன்னும் மாறவில்லை. நாட்டின் கல்வித் துறையை இராணுவ மயமாக்கி கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு எத்தனிக்கும் இந்த அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலினை அழுகிய மீன் போல நினைத்து இழுத்துக் கொண்டு சென்று முல்லைத்தீவில் இறக்கி தனிமைப்படுத்தல் என இந்த அரசாங்கம் கூறியது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின், ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் தென்னே பஞ்சானந்த தேரர் தேசிய பிக்குகள் முன்னணியின் ஊடக செயலாளர் கொஸ்வத்தே மகாநாம தேரர் உள்ளிட்ட சிலர் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து இருக்கும் வசதிகளை கொண்டு கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி சட்டமூலத்திற்கு தமது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் வண்ணம் பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அது தொடர்பான புகைப்படம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
ஆட்சி அதிகாரத்திற்கு வந்து ஒரு வருடம் கூட நிறைவு செய்யாத மெதமுலன ராஜபக்ஷ முட்டாள்களின் மூர்க்கத்தனமான அரசாங்கம் குறுகிய காலத்தில் மக்களினுடைய நம்பிக்கையை இழந்து அவப்பெயர் பெற்றுள்ள நிலையில், அடக்குமுறைக்கு எதிராக நாளை 12 ஆம் திகதி அனைத்து ஆசிரியர் அதிபர்கள் தொழிற்சங்கம் கல்வி நடவடிக்கைகளில் இருந்து முழுமையாக ஒதுங்க தீர்மானித்துள்ளது. அதன்படி தற்போது முன்னெடுக்கப்படும் ஒன்லின் முறையிலான கல்வி நடவடிக்கைகளும் நாளையில் இருந்து இடம்பெறாது.
அத்துடன் இதற்கு இணையாக இலங்கையிலுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து நாளைய தினம் லிப்டன் சுற்று வட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளனர். இதன்போது அனைத்து தொழிற்சங்க தலைவர்களையும் கைது செய்ய வேண்டும் அல்லது கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தலில் உள்ள தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்த உள்ளனர்.
முட்டாள்தனமான மூர்க்கத்தனமான ராஜபக்ச அரசாங்கம் நாளைய தினம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டால் அது அவர்களுடைய அழிவை நிரந்தரமாக தீர்மானித்து விடும். இதன் மூலம் வெளிநாடு உள்நாடு என குடியுரிமை பெற்று விளையாடும் ராஜபக்ச அணியினர் மீண்டும் ஒரு முறை நாட்டு மக்களிடம் நல்ல பாடம் கற்றுக் கொள்வர். ராஜபக்சகளுக்கும் அவர்களது கைகூலிகளுக்கும் கொடுக்கப்படும் இரண்டாவது பாடமாக இது அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
---------------------------
by (2021-07-11 18:30:13)
Leave a Reply