~

காப்பாற்றுமாறு கோரி கோட்டை சின்ன தேரர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் அழுது புலம்பல்..! - 15 வயது சிறுமிமை சீரழித்த நபர்களை தேடும் பணி உடனே நிறுத்தம்..!

- LeN உள்ளக செய்தி சேவை செய்தியாளர்

( லங்கா ஈ நியூஸ் - 2021, ஜூலை 12 , பிற்பகல் 7.15 ) கல்கிஸ்ஸ பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபர்களை தேடி சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையில் இதுவரை 35ற்கும் அதிகமான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விடயம் குறித்த விசாரணையை தேசபந்து தென்னகோன் உடனடியாக நிறுத்தி உள்ளதாக லங்கா ஈ நியூஸ் உள்ள தகவல் சேவைக்கு செய்தி வந்துள்ளது. 

உயர் பொலிஸ் அதிகாரியின் தகவல்படி இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் பல பௌத்த பிக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

பொலிஸ் அதிகாரியின் தகவலுக்கு அமைய தற்போதைக்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ள களனி ஈரிவெட்டி லும்பினி விகாரையின் விகாராதிபதி 50 வயதுடைய கேகாலை பஞ்சா விக்ருத்த தேரரை அடுத்து மேலும் பல தேரர்கள் குறித்த தகவல்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன. இதில் கோட்டை சின்ன தேரர் என அழைக்கப்படும் பிரபல அத்தரகம பஞ்ஞாலங்கார தேரரும் உள்ளடங்குகிறார். 

குறித்த 15 வயது சிறுமியை அதிக தடவைகள் பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபர்களில்  களனி ஈரிவெட்டி லும்பினி விகாரையின் விகாராதிபதி 50 வயதுடைய கேகாலை பஞ்சா விக்ருத்த தேரர் முன்னிலை பெறுகிறார். சிறுமிக்கு இருபது ஆயிரம் ரூபா வீதம் விலை பேசி சுமார் 10ற்கும் மேற்பட்ட தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். 

களனி ஈரிவெட்டி லும்பினி விகாரையின் விகாராதிபதி 50 வயதுடைய கேகாலை பஞ்சா விக்ருத்த தேரரை போன்று சிறுமியை வல்லுறவு செய்த இலங்கை கடற் படை விசேட வைத்திய நிபுணர் திமுத் டி சில்வா கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ள நிலையில் கோட்டை சின்ன தேரர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகக்ஷவிற்கு தொலைபேசி மூலம் அழைப்பெடுத்து தன்னை காப்பாற்றுமாறு அழுது புலம்பியதுடன் இதனால் மேலும் தேரர்கள் கைது செய்யப்பட்டு பௌத்த சாசனத்திற்கு வீழ்ச்சி ஏற்படும் எனவும் கூறியுள்ளார்.  

கல்கிஸ்ஸ சிறுமிமை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பிக்குகளின் பட்டியல் மிக நீண்டது என மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோேன் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். சேபந்துவின் தகவல்படி பௌத்த பிக்குகள் மாத்திரமன்றி பாராளுமன்ற உறுப்பினர்கள் , உயர் பொலிஸ் அதிகாரிகள், பெயர் பெற்ற வர்த்தகர்கள் பட்டியலில் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

அதன்படி சிஸ்டம் சேன்ஜ் எப்படி இருந்தாலும் நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய தேசபந்து தென்னகோனின் உத்தரவின் பிரகாரம் சிறுமி விடயத்தில் சந்தேகநபர்களை கைது செய்யும் திட்டம் உடனே கைவிடப்பட்டுள்ளது. 

குறித்த குற்றச் செயல் காபட்டிற்கு அடியில் தள்ளப்பட்டுள்ளது. 

- LeN உள்ளக தகவல் சேவை செய்தியாளர்

---------------------------
by     (2021-07-12 13:46:35)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links