- லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் பீட அறிக்கை
( லங்கா ஈ நியூஸ் - 2021, ஜூலை , 13 பிற்பகல் 07.15 ) 15 வயதுடைய கல்கிஸ்ஸ சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் 2 பௌத்த பிக்குகளை தொடர்பு படுத்தி லங்கா ஈ நியூஸ் தகவல் வெளியிட்டதை அடுத்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரச்சார பிரிவாக இயங்கும் 'ஸ்ரீ லங்கா கிரிசன்டோ' என்ற இணைய தளமும் கவுன் இராஜ் வழி நடத்தும் சமூக ஊடக வலையமைப்புகளும் திரிபு படுத்திய செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
ஹெக் கிரிசன்டோ என்ற இணையம் பொது ஜன பெரமுன கட்சியின் கைக்கூலிகள் மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவதற்கு முன்னர் அவருடைய ஊடகப் பேச்சாளராக செயல்பட்ட மிலிந்த ராஜபக்ச என்பவராலும் வழி நடத்தப்பட்ட ஒன்றாகும்.
'பெக்ட் செக்' உண்மையை கண்டறிதல் என்ற பெயரில் தகவல்களின் உண்மை தன்மையை கண்டறிய வேண்டுமானால் முதலில் செய்ய வேண்டியது குறித்த தகவலை வெளியிட்ட லங்கா ஈ நியூஸ் இணையத்திடம் அழைத்து விளக்கம் கேட்க வேண்டும். வெளியிட்ட செய்திக்கு தொடர்பான சாட்சியங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பதை அவர்கள் விசாரித்து பார்க்க வேண்டும். உண்மையில் லங்கா ஈ நியூஸ் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள ஊடகமாக இருப்பதால் சாட்சியை வெளியிட முடியாமல் இருக்கிறது. ஆனால் சாட்சியின் சுபாவம் குறித்து தேடிப் பார்க்கும் நபர்களுக்கு அதனை அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க லங்கா ஈ நியூஸ் தயாராகவே இருக்கிறது. ஆனால் இப்போது வரை கவுன் இராஜ் அல்லது மிலிந்த ராஜபக்ச அல்லது அவர்கள் பணியாற்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிகாரிகள் போன்ற எவரும் எம்முடன் தொடர்பு கொள்ளவில்லை.
பாலியல் எரியஸ் வைத்துள்ள, கெட்ட வார்த்தைகளால் உபதேசம் செய்கின்ற, கோட்டையில் விபச்சாரிகளுடன் தொடர்பு வைத்துள்ள முழு திருடன் மோசடி காரர் மற்றும் சூத்திரதாரியாக உள்ள நபரால் முன்வைக்கப்படும் தகவல்களை மாத்திரம் வைத்துக் கொண்டு தகவல் வெளியிடும் ஃபேக்ட் செக்கர்கள் எட்டுக் கோடி ரூபா 'சேதன பசளை பிரச்சார வேலைத்திட்டத்தின்' ஊடாக மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் பெறும் நபர்கள் ஆவர். இவர்கள் உண்மையை கண்டறிவதற்கு அபூர்வமான நடைமுறைகளை கையாளுகின்றனர். நாம் சூத்திரதாரியாக வெளியிட்டுள்ள நபரிடம் நீங்கள் அவ்வாறு செய்தீர்களா என்று கேட்டுள்ளனர். எந்த ஒரு திருடனும் மோசடி காரனும் தான் திருடியதாக மோசடி செய்ததாக ஏற்றுக் கொள்வதில்லை. அப்போது சூத்திரதாரி சொல்வதை வைத்துக் கொண்டு பெக்ட் செக்கர்கள் அறிக்கை வெளியிடுகின்றனர். செய்திகளை பொய்யென திரிபுபடுத்தி கூறுகின்றனர். இலங்கையில் ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற பின்னர் பேஸ்புக் நிறுவனத்துடன் இலங்கை செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இந்தக் குழுவினர் பெக்ட் செக்கர்கள் என இயங்கி வருகின்றனர்.
ஃபேஸ் புக் நிறுவனம் என்பது பணத்திற்காக எந்த ஒரு அழுக்கு வேலைகளையும் செய்யும் மோசடி நிறுவனம் என்பதை இந்த நிறுவனத்தின் உரிமையாளர் அமெரிக்காவில் இடம்பெற்ற சுயாதீன ஆணைக்குழு முன்னிலையில் வழங்கிய சாட்சியை படிக்கும் எந்த ஒரு நபருக்கும் விளங்கும். தற்போது பேஸ் புக் நிறுவனத்திற்கு எதிராக பிரான்ஸிலுள்ள எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு தாக்கல் செய்துள்ள பெரிஸ் வழக்கின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மேலும் பல விடயங்களை தெரிந்து கொள்ள முடியும்.
இலங்கையில் ஃபேக்ட் செக்கர்கள் என்ற பெயரில் இயங்கும் ஜனாதிபதி ஊடக பிரிவுடன் தொடர்புடைய இந்த நபர்கள் தற்போது திரிபுபடுத்தி செய்தி எழுதுவது இரகசிய பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் ஆகும். நீதிமன்றத்திற்கு போலீசார் வழங்கிய ஆவணம் குறித்து ஆகும். 11ஆம் திகதி மாலை சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் விசாரணைகளை கைவிடுமாறு பிறப்பித்த உத்தரவு தொடர்பில் ஆகும்.
லங்கா ஈ நியூஸ் ஆகிய நாம் வெளியிட்ட செய்தியின் உண்மை நிலை குறித்து நாம் தொடர்ந்தும் முன்னிலை ஆகிறோம். கல்கிசையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்கு முதலில் உட்படுத்தியது போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய மொரட்டுவ ரஜுவ் மற்றும் அவரது தகாத உறவு பெண்ணான பிரபா ஆகியோர் ஆவர். சிறுமியை பாலியல் தொழிலுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து உதவியாளராக செயல்பட்டவர் கல்கிஸை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பு அதிகாரியுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட நபர் ஆவார்.
15 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்ய பயன்படுத்திய இணையத்தள உரிமையாளரும் மேலும் ஒரு வலையமைப்பும் தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. முதலாவது வலையமைப்பின் தகவல்கள் தற்போது வெளியாகி சமூக மயப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது வலையமைப்பு தற்போது மூடி மறைக்கப்பட்டுள்ளது. அதற்கு பிரதான காரணம் பொலிஸ் திணைக்களத்தின் முக்கிய நபர் ஒருவர் அந்த வலையமைப்புடன் தொடர்பினை வைத்திருப்பதாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நெருங்கியவர்கள் பொலிஸ் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகரவிற்கு நெருங்கியவர்கள் மற்றும் பௌத்த பிக்குகள் சிறுமியை வன்கொடுமை உள்ளாக்கிய பட்டியலில் உள்ளனர்.
கூலிக்கு மாரடிக்கும் பெக்ட் செக்கர்களுக்கு நாம் சொல்ல விரும்புவது முடிந்தால் ஜனாதிபதி ஊடகப் பேச்சாளருக்கு அறிவித்து லங்கா ஈ நியூஸ் வெளியிட்ட செய்தி பொய்யானது என பகிரங்கமாக அறிக்கை விடுமாறு சவால் விடுகிறோம். அல்லது குறைந்த பட்சம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூலமாக லங்கா ஈ நியூஸ் செய்தி பொய்யானது என்பதை வெளியிடவும். அதற்கு காரணம் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக சில இடதுசாரி முற்போக்கு அரசியல்வாதிகளின் பெயர்களை பட்டியலிட்டு ஒரு இணையதளம் செய்தி வெளியிட்டதை அடுத்து உடனடியாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அந்த இணையதள செய்தி பொய்யென கூறிய போதும் லங்கா ஈ நியூஸ் வெளியிட்ட செய்தி பொய் என அவர் கூறவில்லை. அதனால் லங்கா ஈ நியூஸ் ஆகிய நாம் வெளியிட்ட செய்தியின் உண்மைத் தன்மை குறித்து தொடர்ந்தும் முன்னிலை ஆகிறோம்.
---------------------------
by (2021-07-13 19:48:06)
Leave a Reply