~

தனிமைப்படுத்தல் விதி முறையின் கீழ் சட்ட விரோத தடுத்து வைப்புக்கு எதிரான போராட்டம் வெற்றி..! ஸ்டாலின், நாகமுவ உள்ளிட்ட குழுவினர் விடுதலை..! கோட்டாபயவின் இராணுவமயமாக்கல் கனவை ஒரு முறை தகர்த்து சாதனை

( லங்கா ஈ நியூஸ் - 2021, ஜூலை 17 , பிற்பகல் 06.15 ) ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின் தனிமைப்படுத்தல் விதி முறை என்ற போர்வையின் கீழ் பலாத்காரமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 31 பேரும், முன்னிலை சோஷலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட 6 பேரும் தனிமைப்படுத்தல் காலம் முடிவடைவதற்கு முன்னரே நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றம் பிணை வழங்கிய பின்னரும் கடந்த 7 ஆம் திகதி துமிந்த நாகமுவ உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டமை நாட்டு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. பின்னர் அவர்கள் கண்டி பல்லேகல தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன்பின் 8 ஆம் திகதி பசில் ராஜபக்ஷ பாராளுமன்றம் பிரவேசித்த நாளன்று கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிராக பாராளுமன்ற சுற்று வட்டத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 31 பேர் பொலிஸாரினால் கடும் அடக்குமுறை அடிப்படையில் கைது செய்யப்பட்டு அன்றைய தினமே நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது நீதிமன்றம் 31 பேரையும் பிணையில் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்ட போது சட்டத்தரணிகள் கடும் எதிர்ப்பு வௌியிட்டனர். சட்டத்திற்கு புறம்பாக செயற்படும் அனைத்து பொலிஸார் மீதும் மனித உரிமை ஆணைக்குழுவில் தனித்தனி முறைப்பாடு செய்யப்படும் என சட்டத்தரணிகளான ஷிரால் லக்திலக மற்றும் குணரத்ன வன்னிநாயக்க ஆகியோர் கடும் தொனியில் எச்சரித்தனர். அதனையும் கணக்கிலெடுக்காது அனைவரையும் உடுத்த உடை கூட இன்றி பலாத்காரமாக பஸ்ஸில் ஏற்றிக் கொண்டு முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாய்க்கும் கணக்கிலெடுக்காமல் புறந்தள்ளிய விதம் ...

பலாத்காரமாக கைது செய்யப்பட்ட நபர்கள் அன்று இரவே முல்லைத்தீவு விமானப் படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு தனிமைப்படுத்தல் வசதிகள் எதுவும் இருக்கவில்லை. தடுத்து வைக்கப்பட்டு உள்ளவர்களை பார்வையிடச் சென்ற மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணை செய்யப்பட்டு வரும் சம்பவத்திற்கு முல்லைத்தீவு விமானப் படை முகாம் கட்டளையிடும் அதிகாரி ஒத்துழைப்பு வழங்காமை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விமானப் படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரணவிடம் அறிக்கை ஒன்றை கோரியுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் அதன் யாழ். கிளை இணைப்பு அதிகாரி ரி. கணகராஜ் உள்ளிட்ட குழுவினர் முல்லைத்தீவு விமானப் படை முகாமுக்கு சென்ற போது விசாரணைக்கு தேவையான தகவல்களை விமானப் படை அதிகாரிகள் வழங்கவில்லை என்பதுடன் பின்னர் இது குறித்து பிரதான அலுவலகம் ஊடாக விமானப் படை தளபதிக்கு அறிவித்து பின் இரண்டாவது நாளாகவும் குழுவொன்று ஆரம்ப கட்ட விசாரணைகளை நடத்தச் சென்றதாக மனித உரிமைகள் ஆணைக்குழு எழுத்து மூலம் விமானப் படை தளபதிக்கு அறிவித்துள்ளது.  

இரண்டாவது முறை மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் குழு முல்லைத்தீவு விமானப் படை முகாமிற்கு சென்ற போது அங்கு வாயில் அருகில் வந்த விமானப் படை முகாமின் கட்டளையிடும் அதிகாரி ஆணைக்குழு உறுப்பினர்களை சந்தித்த போதும் தனிமைப்படுத்தல் நிலையத்தை பார்வையிடவும் அங்கு உள்ளவர்களை சந்திக்கவும் அனுமதி அளிக்கவில்லை என மனித உரிமைகள் ஆணைக்குழு விமானப் படை தளபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவ்வாறு செயற்பட்டதன் ஊடாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மனித உரிமை ஆணைக்குழு, 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்திற்கு அமைய நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் அல்லது வேறு வழிகளில் நபர் அல்லது நபர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையத்தை பார்வையிடுவதற்கான அதிகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன் தடைகள் இல்லை ...

தொழிற்சங்க தலைவர்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் காரர்கள் தனிமைப்படுத்தல் சட்டம் என்ற போர்வையில் பலாத்காரமாக அழைத்துச் சென்று தடுத்து வைக்கப்பட்டுள்ளமை கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியது. வௌிநாட்டு தூதுக் குழுவும் இவ்விடயம் குறித்து கலந்துரையாடியது. வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் தனிமைப்படுத்தல் என்ற போர்வையில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவ்வாறானதொரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஜெனீவா மனித உரிமை அலுவலகத்திற்கு முன்பாக 16 ஆம் திகதி இடம்பெற்றது. (அதன் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.)

சட்ட விரோத தடுத்து வைத்தல் தொடர்பில் மனித உரிமை மீறல் மனுக்கள் பல நீதிமன்றில் முன்வைப்பு.

பலாத்கார தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் முதலில் விமானப் படை முகாமுக்குள் இருந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். ஸ்டாலின், தென்தே தேரர் உள்ளிட்ட குழுவினர் தடுப்புக் காவல் உத்தரவு எதுவும் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என மூன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. நேற்று அதன் இறுதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் அதிகளவான தொழிற்சங்க தலைவர்கள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பல தரப்பினரை காண முடிந்தது.  ஆர்ப்பாட்டம் செய்ததாக கைது செய்த அரசாங்கம் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுடன் அரசாங்கம் ஒரு படி பின்வாங்கி இருந்தது. எனினும் நேற்றைய ஆர்ப்பாட்டம் ஜனாதிபதி செயலகம் வரை பேரணியாக சென்ற போதும் அதனை தடுத்து நிறுத்த அரசாங்க தரப்பில் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. (அதன் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)
 
பலாத்காரமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர்களுக்கு பீ சி ஆர் பரிசோதனை செய்யப்பட்டு அதில் நெகடிவு என்று முடிவு வந்த பின்னரும் 6 நாட்கள் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர். எனினும் நேற்று ஜூலை 16 ஆம் திகதி மாலை திடீரென இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சட்ட விரோதமாக கடத்திச் செல்லல், தடுத்து வைத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச ஊழியர்கள் 18 பேருக்கு எதிராக தனிப்பட்ட ரீதியில் மனித உரிமை மீறல் வழக்கு பதிவு செய்ய தற்போது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அத்தோடு மனித உரிமைகள் ஆணைக்குழு, ஐரோப்பிய ஒன்றியம், பொது நலவாய நாடுகள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இராணுவமய கனவில் வீழ்ச்சி அன்றி சற்று பின் வாங்கிச் செல்லல் ...

எனினும் தனிமைப்படுத்தல் சட்டம் என்ற போர்வையில் அரசாங்கம் முன்னெடுக்க இருந்த அடக்குமுறையில் இருந்து பின்வாங்கிச் செல்ல அரசாங்கத்திற்கு நேர்ந்துள்ளது. இது மக்கள் ஒற்றுமை மற்றும் போராட்டத்திற்கு கிடைத்த பாரிய வெற்றியாகும். இது கோட்டாபய ராஜபக்ஷவின் இராணுவமயமாக்கல் சிந்தனையின் வீழ்ச்சி அன்றி ஒரு முறை பின்வாங்கல் என்று எடுத்துக் கொள்ளலாம். நபர்களை விடுதலை செய்ததால் பிரச்சினை முடிந்ததாக கருத முடியாது. காரணம் இவர்கள் முதலில் போராட்டம் நடத்தியது கல்வியை இராணுவமயப்படுத்தும் கொத்தலாவல பல்கலைக்கழக சட்ட மூலத்தை திருப்பிப் பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தியாகும். அந்த சட்ட மூலம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

இந்த மோசமான சட்ட மூலத்தை மீளப் பெறுமாறு வலியுறுத்தி இன்று 17 ஆம் திகதியும் தேசிய மக்கள் சக்தியால் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

---------------------------
by     (2021-07-18 12:53:10)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links