- நாட்டின் பொருளாதார அழிவு குறித்து ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் எழுதுகிறார்
( லங்கா ஈ நியூஸ் - 2021 , ஜூலை 30, பிற்பகல் 01.30 ) இலங்கை மத்திய வங்கியினால் புதிதாக முன் எடுக்கப்பட்ட புதிய 120 பில்லியன் பெறுமதி திரைசேறி பிணை முறி விற்பனையில் 31% ற்கு எந்த ஒரு வாடிக்கையாளரும் முன்னிலையாக வில்லை. அதனால் இந்த வருடத்தில் அச்சிடப்பட்ட மிகவும் அதிக தொகை பணம் நேற்று முன் தினம் 29 ம் திகதி அச்சிடப்பட்டுள்ளதுடன் அதன் பெறுமதி 213.48 பில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறுகிய கால பிணை முறிகளுக்கு போதுமான கேள்வி காணப்பட்ட போதும் 2028 ஆம் ஆண்டு மே மாதம் 1 ம் திகதி வரையில் முன்வைக்கப்பட்ட திரைசேறி பிணை முறிகளில் 35 பில்லியன் ரூபா பெறுமதிகள் வெறும் 11.4 பில்லியன் ரூபாவிற்கே விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இலங்கை அபிவிருத்தி பிணை முறிகளில் காலாவதியுடைய 106 மில்லியன் பெறுமதி பிணை முறிகள் 44% ( 60 மில்லியன் டொலர் ) மீண்டும் நேற்று மத்திய வங்கியால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பாரிய சிக்கலான கால கட்டத்தில் இது ஒரு ஆருதல் தரக் கூடியதாக அமைந்தது.
ஆகஸ்ட் மாதம் 1 ம் திகதி செலுத்தப்பட வேண்டிய 150 பில்லியனுக்கும் அதிகமான பிணை முறி மற்றும் கூப்பன் தொகைகள் மத்திய வங்கியின் வசம் உள்ளது.
1970 ஆம் ஆண்டுக்குப் பின் இலங்கை சந்திக்கும் பாரிய பொருளாதார நெருக்கடி நிலைமையை தற்போதைய அரசாங்கம் எதிர்கொண்டு வருகிறது. வௌிநாட்டு செலாவாணி தட்டுப்பாடு, அரச வருமானம் குறைவு மற்றும் பொருட்களின் தட்டுப்பாடு போன்றவை பிரதானமாக காணப்படுகிறது.
வௌிநாட்டில் கல்விப் பயிலும் மாணவர்கள் தங்களது கட்டணங்களை செலுத்த கடைகளில் டொலர் கொள்வனவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பபட்டுள்ளனர். ஆகக் குறைந்தது வங்கிகள் ஊடாக 1000 டொலர்களைக் கூட தமது பிள்ளைகளுக்கு அனுப்பி வைக்க முடியாத நிலைக்கு பெற்றோர் தள்ளப்பட்டுள்ளனர். இன்று கறுப்புக் கடைகளில் பிரித்தானிய பவுன் ஒன்று 305 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. அரசாங்கத்தின் தகவல் படி பவுன் ஒன்றின் விலை 277 ரூபாவாகும். ஆனால் அந்த கணக்கிற்கு எந்த ஒரு வங்கியிலும் பண மாற்றம் செய்ய முடியவில்லை.
---------------------------
by (2021-07-31 14:03:36)
Leave a Reply