( லங்கா ஈ நியூஸ் - 2021 , ஜூலை 31, பிற்பகல் 07.10 ) உலகின் நூதனமான நிதி அமைச்சரும் ஏழு அறிவுகளை கொண்ட நபருமான பசில் ராஜபக்ஷ மாகாண சபைத் தேர்தலுக்கு முன்பே அரச ஊழியர்கள் 1000 பேருக்கும் மற்றும் கைக்கூலி வேலை செய்யும் பிக்குகள் 80 பேருக்கும் தீர்வை வரி அற்ற வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரம் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிய வருகிறது.
அந்நிய செலாவணி தட்டுப்பாட்டின் காரணமாக கருப்புக் கடைகளில் அமெரிக்க டொலர் ஒன்று 250 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் நிலையில் தமக்கு ஆதரவாக செயற்படும் கைக்கூலி அரச ஊழியர்கள் மற்றும் பிக்குகளுக்கு இவ்வாறு தீர்வை வரி அற்ற வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரம் வழங்கி மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தமக்குத் தேவையான நபர்களை நியமித்து எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை வெற்றி கொள்ளும் நோக்கமாக நூதன முட்டாள் நிதி அமைச்சர் இவ்வாறு செயற்பட்டு வருகிறார்.
அரசாங்கம் தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ள அரச ஊழியர்களுக்கு ஆயிரம் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி பத்திரம் வழங்கினால் அவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக திரும்பி விடுவார்கள் என ஏழு அறிவுள்ள முட்டாள் நிதி அமைச்சர் நினைத்திருக்கக் கூடும்.
இந்த ஏழு அறிவு கொண்ட முட்டாள் நிதி அமைச்சர் தான் நிதி அமைச்சராக வருவதற்கு முன்பே நாட்டின் பொருளாதாரத்தை வழி நடத்தும் அதிகாரம் கொண்ட நபராக இருந்து வந்தார். இப்போது அதற்கு உத்தியோகபூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அரசாங்கத்தை பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் கடக்கும் நிலையில் ஏழு அறிவுள்ள நிதி அமைச்சர் உள்ளிட்ட முட்டாள்கள் கூட்டத்தின் பொருளாதார கொள்கை காரணமாக மத்திய வங்கியின் டொலர் கையிருப்பு தார் வீதியில் விழுந்த ஐஸ் கட்டி வேகமாக கரைந்து செல்வதை விட வேகமாக கரைந்து இல்லாமல் போகின்றது.
டொலர் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் தடை செய்யப்பட்டு வைத்துள்ள மோட்டார் கார், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் போன்றவற்றின் இறக்குமதியாளர்கள் தமது வியாபாரத்தை கைவிட்டு நிர்க்கதி ஆகியுள்ளனர். அவர்களது நிறுவனங்களில் தொழில் புரிந்த ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் இன்று வேலை இழந்து வருமான வழியின்றி உள்ளனர். காலி வீதியில் அமைக்கப்பட்டிருந்த வாகன விற்பனை நிலையங்கள் மூடப்பட்டு அந்த கட்டிடங்கள் தற்போது உணவு விற்பனை செய்வோருக்கு கூலி அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதை அந்த வழியாக செல்வோர் கண்கூடு பார்க்கலாம். மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்கள் நுளம்புகளால் நிரம்பி கிடக்கிறது. இலங்கை நாடானது சிம்பாவே போன்று மாறியுள்ளது.
அப்படி இருக்கையில், 1000 அரச ஊழியர்களுக்கும் 80 பிக்குகளுக்கும் தீர்வை வரி அற்ற வாகன இறக்குமதி அனுமதி பத்திரம் வழங்கி பாரிய தொகை டொலர்களை செலவு செய்வது எந்த அளவு முட்டாள் தனமான செயற்பாடு? ஆசிரியர்களின் சம்பள உயர்வு பிரச்சினைக்கு தீர்வு வழங்க அடுத்த வரவு செலவுத் திட்டம் வரை காத்திருக்க வேண்டும் எனக் கூறும் அரசாங்கத்திற்கு இந்த வாகன இறக்குமதி லஞ்சம் வழங்க எங்கிருந்த பணம் கிடைக்கும்? ஏழு அறிவுள்ள முட்டாள் நிதி அமைச்சர் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
அன்றாடம் ஒரு வேளை வயிற்றுப் பசிக்கு உணவு தேடிக் கொள்ள முடியாத மக்கள் இருக்கும் நாட்டில் அவர்களது வாழ்வை அழகாக்குவதற்கு பதிலாக 100 நகரங்களை அழகுபடுத்த பில்லியன் கணக்கில் பணம் செலவு செய்ய முன்வரும் அரசாங்கத்தில் 1000 அரச ஊழியர்கள் மற்றும் 80 பிக்குகளுக்கு தீர்வை வரி அற்ற வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படுவது அந்த அளவு ஆச்சரியப்படக் கூடிய விடயம் அல்ல. இதனுடன் தற்போது பிற்போடப்பட்டுள்ள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகன இறக்குமதி திட்டம் மெல்ல மெல்ல இரகசியமாக செயற்படுத்தப்படலாம்.
---------------------------
by (2021-08-01 13:13:50)
Leave a Reply