சமாதான நீதவான் ஏ. ஜே. மொஹமட் பாயிஸின் அம்பலப்படுத்தல்
( லங்கா ஈ நியூஸ் - 2021 - ஓகஸ்ட் , 02 , பிற்பகல் 04.45 ) இன்று நாட்டில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் விடயமாக பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாகிய ரிசாத் பதியூதின் வீட்டில் எரி காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த 'இஷாலினி' என்ற பெண் குறித்த விடயம் காணப்படுகிறது. இஷாலினி மரணம் குறித்த நீதி விசாரணை சட்ட நடவடிக்கை முன்னெடுத்து வரப்படும் நிலையில் தனிப்பட்ட நபர்களால் சில ஊடகங்கள் மூலம் உருவாக்கப்படும் பொய் தகவல்களை வௌியிடுவதன் மூலம் இந்த சம்பவத்தை வைத்துக் கொண்டு வேறு சில நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிப்பதை காண முடிகிறது. இந்த விடயம் குறித்து நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் அதற்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் இதுவரை ஊடகங்களில் வௌி வராத உண்மை தகவல்களை இங்கு முன்வைக்கிறோம்.
நுவரெலியா மாவட்டத்தின் டயகம பிரதேசத்தில் இருந்து இஷாலினி என்ற பெண் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த தரகர் ஒருவரால் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதின் வீட்டிற்கு வேலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன் அவர் குறித்த வீட்டிற்கு வந்த நாள் தொடக்கம் இஷானி என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்துள்ளார். வீட்டில் உள்ள அனைவரும் அவரை இஷானி என்றே அழைத்துள்ளனர். வேலைக்கு அழைத்து வந்த போது அந்த பெண்ணின் வயது 18 என்றே கூறி உள்ளனர். ஆனால் தீ காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே அந்த பெண் 2004/11/12 ஆம் திகதியில் பிறந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் அவர் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட நாளில் அவரது வயது 16 மற்றும் 6 நாட்கள் என்பது தௌிவாவதோடு அதன்படி சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு பொய்யானதாகும். ஆனால் இன்னும் சில ஊடகங்கள் குறித்த யுவதியை சிறுமி என்றே சுட்டிக்காட்டி குற்றம் சுமத்துகின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதின் 2020/10/19 ஆம் திகதி தொடக்கம் 2020/12/09 ஆம் திகதி வரை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். எனவே இஷாலினி இந்த வீட்டிற்கு வேலைக்கு அமர்த்தப்பட்ட போது ரிசாத் பதியூதின் விளக்கமறியலில் இருந்துள்ளார். அதன் பின்னர் 2021/04/24 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதின் குற்றப் புலனாய்வு பிரிவினரால் பலாத்காரமாக கைது செய்யப்பட்டு அவர் இன்று வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எனவே இந்த தீ பற்றிய சம்பவம் நடைபெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்தே பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதின் குற்றப் புலனாய்வு பிரிவினரின் பிடிக்குள் உள்ள நிலையில் இஷாலினிக்கு ஏற்பட்ட தீ காயங்களுக்கும் ரிசாத் பதியூதினுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாகக் கூறியே செய்திகள் வௌியிடப்பட்டு இஷாலினியின் மரணத்தின் மீது அரசியல் செய்து வருகின்றனர்.
இந்த வீட்டில் வேலை செய்யும் போது இஷாலினி தனது வீட்டாருடன் தொலைபேசியில் உரையாட கேட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவருக்கு அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் இஷாலினி தனது வீட்டு நபர்களுடன் 30 நிமிடங்களுக்கு மேல் கதைத்து உள்ளமை தொலைபேசி அழைப்பு அறிக்கையில் தௌிவாகத் தெரிய வந்துள்ளது. இஷாலினி ரிசாட் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட பின் அவரை பார்க்க அவரது பெற்றோர் அல்லது கொழும்பில் வேலை செய்யும் அவரது சிறிய அண்ணன் ஒரு நாளேனும் சென்று இருக்கவில்லை. எனவே ஒரு சிலர் கூறுவது போல இஷாலினி அந்த வீட்டில் வேலை செய்த போது பெற்றோருடன் தொலைபேசியில் கதைப்பதற்கோ அவரை பார்ப்பதற்கோ தடை ஏற்படுத்தப்படவில்லை.
ரிசாத் பதியூதின் வீட்டில் இஷாலினி தங்கி இருந்த அறையின் நீளம் 7 அடி நீளம் 4 அடி அகலம் என்பதோடு அறையின் அகலம் 6 அடி நீளம் மற்றும் 3 அடி அகலம் கொண்டதாகும். இந்த அறைக்கு நன்கு இயங்கக் கூடிய மின்சார இணைப்பும் மின் குமிழும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தங்குமிட அறையுடன் இணைந்ததாக இஷாலினியின் தனி பாவனைக்கு சகல வசதியுடன் கூடி குளியல் அறையும் வழங்கப்பட்டிருந்தது. இஷாலினிக்கு தேவையான அனைத்து தனிப்பட்ட பொருட்கள் மற்றும் உடைகள் ரிசாத் பதியூதினின் மனைவினால் வழங்கப்பட்டது. அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதினின் மூத்த மகள் வௌிநாடு செல்வதற்கு முன்னர் இஷாலினிக்கு 5000 ரூபா பணத்தை அன்பளிப்பாக வழங்கிச் சென்றுள்ளார். இது இஷாலினி மீது அவர்கள் வைத்திருந்த அன்பை வௌிப்படுத்துகிறது. இஷாலினி தான் தங்கியிருந்த அறையில் குறைப்பாடுகள் என எதனையும் இதுவரை கூறி இருக்கவில்லை. மேலும் தனது மகளுக்கு குறைப்பாடு ஏதும் இருப்பதாக இஷாலினியின் தாய் கூட இதுவரை குற்றம் சுமத்தியிருக்கவில்லை. இதற்கு பின்னர் இனி ஏதேனும் குறைப்பாடுகளை கூறினால் அதனைப் பற்றி புதுமை அடைவதற்கு இல்லை. காரணம் தாய் முன்னர் கூறிய கருத்துக்களுக்கும் தற்போது கூறும் கருத்துக்களுக்கும் பின்னணியில் அரசியல் அதிகார பலமொன்று செயற்படுவதை கண்கூடு காண முடிகிறது.
2021/07/03 ஆம் திகதி ஏற்பட்ட தீ காய சம்பவத்தின் பின்னர் சுமார் 12 நாட்கள் இஷாலினி அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த போது விஷ கிருமிகள் தாக்கியதால் 2021/07/15 ஆம் திகதி அன்று உயிரிழந்தார். அதன் பின் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் முடிவில் குறித்த இஷாலினி 12 வயது தொடக்கம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அப்படி என்றால் 2016 ஆம் ஆண்டு தொடக்கம் இஷாலினி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளார். அந்த காலத்தில் இஷாலினி தனது தந்தையின் வீட்டில் இருந்து பாடசாலைக்குச் சென்றுள்ளதாக தாய் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அந்த வீட்டில் இஷாலினியின் தந்தையினது சகோதரர், தந்தையின் தாய், தந்தையின் சகோதரி மற்றும் அந்த சகோதரியின் இரண்டு மகன்கள் அந்த வீட்டில் வசித்துள்ளதாக இஷாலினியின் தாய் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஏதோ ஒரு காரணத்திற்காக 2017 ஆம் ஆண்டு இஷாலினி குறித்த பாடசாலையில் இருந்து விலக்கி டயகம வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த தகவல் ஊடகங்கள் மூலம் வௌியாகி இருந்த போதும் பல ஊடகங்கள் இது குறித்து அதிக கவனம் செலுத்தவில்லை.
இந்த சம்பவம் இடம்பெற்று நான்கு வருடங்களின் பின்னர் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டு 7 மாதங்களில் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதினின் வீட்டில் வேலை செய்த போது இஷாலினி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார் என்பதற்கு சாட்சிகள் எதுவும் முன் வைக்கப்படாத நிலையில் பதியூதின் வீட்டில் தான் அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார் என்ற முடிவுக்கு ஊடகங்கள் வந்தது எப்படி என்பது மிகவும் புதுமையான விடயமாகும்.
2020/11/18 ஆம் திகதி தொடக்கம் 7 மாதங்கள் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதின் வீட்டில் இஷாலினி வேலை செய்த போது பதியூதினின் மனைவி மற்றும் மாமியாரின் கண்காணிப்பிலேயே இருந்துள்ளார். அத்துடன் இஷாலினி தங்கி இருந்த அறையும் உள்ளே உறுதியாக பூட்டு போட்டுக் கொள்ளும் வசதியுடன் இருந்துள்ளது. அதனால் வேலை செய்யும் இடத்தில் இஷாலினி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட எவ்வித வாய்ப்புக்களும் இல்லை. அப்படியே பாலியல் வல்லுறவு இடம்பெற்றிருந்தால் அது DNA பரிசோதனை மூலம் வௌிப்படுத்தப் பட்டிருக்கும். குறைந்தது கண்களால் கண்ட சாட்சி அல்லது இஷாலினி கூறியதாக கூறும் சாட்சியேனும் இருக்க வேண்டும்.
2021/07/03 ஆம் திகதி இஷாலினி எரி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 5 நாட்களின் பின் ரிசாத் பதியூதினின் மனைவியின் சகோதரர் தனது குடும்பத்துடன் ரிசாத் பதியூதின் வீட்டுக்கு வந்துள்ளார். அதுவும் பல மாதங்களில் பின்னர். அதன் உண்மை தன்மை தற்போது பொலிஸாரிடம் உள்ள பதியூதின் வீட்டு CCTV பாதுகாப்பு கமரா வீடியோ ஆதாரங்களில் உள்ளது. ஆனாலும் பதியூதினின் மச்சானால் இஷாலினிக்கு ஏதேனும் துன்புறுத்தல் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பின்னர் இந்த குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு அவருக்கு சித்திரவதை வழங்கப்பட்டதாகவும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ரிசாத் பதியூதினின் மனைவியின் சகோதரரது மனைவி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதன் பின் சில வருடங்களுக்கு முன் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதின் வீட்டில் வேலை செய்த வேறு ஒரு பெண்ணிடம் வாக்குமூலம் பெற்று ரிசாத்தின் மனைவியினது சகோதரர் பாலியல் வல்லுறவு புரிந்ததாக குற்றம் சுமத்தி அவரை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர். குறித்த பெண் பதியூதின் வீட்டில் வேலை செய்து அங்கிருந்து விலகி பல வருடங்கள் இது குறித்து யாரிடமும் முறையிடாமல் திடீரென தற்போது இவ்வாறான முறைப்பாட்டை செய்வது சந்தேகத்தை ஏற்படுத்தும் விடயமாகும். வாக்குமூலம் அளித்துள்ள குறித்த பெண் இஷாலினி இந்த வீட்டில் வேலை செய்யும் போதே மீண்டும் அங்கு வந்த வேலை செய்ய விருப்பத்துடன் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் திடீரென மாறி தான் வல்லுறவு செய்யப்பட்டதாக பொலிஸாரிடம் கூறி இருப்பது சூழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து இன்னும் நிரூபிக்கப்படக் கூடிய சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் இல்லை என்பதால் நீதிமன்றில் அதற்கான இறுதி தீர்ப்பு வரும் வரை கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டு இரண்டு சிறு பிள்ளைகளின் தந்தையான அவரது குடும்பத்தை சீரழித்து விட வேண்டாம் என அனைவரிடமும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இஷாலினிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதின் வீட்டில் வைத்து பாலியல் வன் கொடுமை இடம்பெற்றதற்கான சாட்சிகள் எதுவும் இதுவரை முன் வைக்கப்படவில்லை. ஆனாலும் இஷாலினி பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதின் வீட்டில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக ஊடகங்கள் உறுதிப்படுத்தாத பொய் தகவல்களை வௌியிட்டு ரிசாத் பதியூதினின் நற்பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தும் சதித் திட்டம் முன்னெடுக்கப்படுவதை தௌிவாக காண முடிகிறது.
2021/07/03 ஆம் திகதி காலை 6.45 மணி அளவில் இஷாலினி தான் தங்கி இருந்த அறையில் இருந்து சத்தமிட்ட படி வீட்டின் கீழ் மாடியில் இருந்து ரிசாத் பதியூதினின் மாமா மற்றும் மாமி இருந்த அறை நோக்கி ஓடிச் சென்றுள்ளார். இந்த சத்தத்தைக் கேட்டு அறையில் இருந்து வௌியில் வந்த ரிசாத் பதியூதினின் மாமியாருக்கு 'என்னை காப்பாற்றுங்கள்' என்ற சத்தத்துடன் ஓடி வந்த இஷாலினியை காண முடிந்துள்ளது. இஷாலினியின் உடலில் தீ பற்றி எரிவதை கண்டு அச்சத்தில் ரிசாத்தின் மாமியார் சத்தமிட்ட போது ரிசாத்தின் மாமனார் அறையில் இருந்து வௌியே வந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்த காபட் ஒன்றை எடுத்து இஷாலினியின் உடலில் போர்த்தி ரிசாத்தின் மாமனார் தீயை கட்டுப்படுத்தி உள்ளார். இந்த சம்பவத்தை முதலில் இவ்வாறே கண்டுள்ளனர். ஆனால் இந்த தீ அவசர விபத்தினால் ஏற்பட்டதா அல்லது தற்கொலை முயற்சியா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு வரவில்லை.
தீ கட்டுப்படுத்தப்பட்ட பின் இஷாலினி வீட்டில் இருந்த மீன் தொட்டிக்குள் குதித்து சிறிது நேரம் இருந்துள்ளார்.
இஷாலினி மீன் தொட்டிக்குள் இருந்த போது அங்கு வந்த சாரதி 1990 என்ற அவசர அம்பியூலன்ஸ் சேவைக்கு அழைத்துள்ளார். தொலைபேசி அழைப்பு காலை 7.3 மணி அளவில் விடுக்கப்பட்டுள்ளது. அவசர அம்பூலன்ஸ் 7.15 மணிக்கு அங்கு வந்துள்ளது. சுமார் 7.20 மணி அளவில் இஷாலினியை ஏற்றிய அம்பியூலன்ஸ் அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்றுள்ளது. அம்பியூலன்ஸிற்கு பின்னால் வீட்டில் இருந்தவர்கள் சென்று இஷாலினியை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை அனைத்தையும் எடுத்துள்ளனர். இங்கு இஷாலினி மீன் தொட்டிக்குள் இருந்த நேரத்தை விட வேறு கால தாமதம் ஏற்படவில்லை.
இஷாலியின் சரியான பிறந்த திகதி மற்றும் பெயர் போன்றவை அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஓரிரு தினங்களின் பின்னர் கிடைத்த அவரது பிறப்புச் சான்றிதல் மூலம் உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் ரிசாத்தின் வீட்டில் அவரை இஷானி என்றே அழைத்துள்ளனர். அத்துடன் இஷாலினி ரிசாத்தின் வீட்டிற்கு வேலைக்கு வந்த போது தனக்கு வயது 18 என கூறி இருந்ததால் வைத்தியசாலையிலும் அப்படியே கூறப்பட்டுள்ளது.
இஷாலினி 2020/11/18 ம் திகதி இந்த வீட்டிற்கு வேலைக்கு வந்த பின் 5 நாட்கள் கடந்து இரண்டு மாதங்களுக்கு உரிய முற்பணமாக 40,000 ரூபா அவரது தாயாரினால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன் பின் டிசம்பர் மாதம் குறித்த இஷாலினியின் தாய் தனது வீட்டு கூரை திருத்தம் செய்ய வேண்டி உள்ளதாக கூறி 60,000 ரூபா பணம் பெற்றுள்ளார். அதன் பின் ஒரு மாதத்தில் தனது பெரிய மகன் சுகயீனம் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளதால் அவருக்கு சிகிச்சை அளிக்கவென 40,000 ரூபா பெற்றுக் கொண்டுள்ளார். மேலும் இஷாலினிக்கு தீ காயம் ஏற்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரும் மேலும் ஒரு தொகை பணம் பெற்றுத் தருமாறு தரகரிடம் தாய் கேட்டுள்ளார்.
அதன்படி இஷாலினி ரிசாத் பதியூதின் வீட்டில் வேலை செய்த 7 மாதங்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம் 150,000 என்ற போதும் தாயிடம் 200,000 லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளமை அவர்களது குடும்ப வறுமையை கருத்தில் கொண்டாகும்.
இஷாலினி வேலை செய்வதற்கு முன்னர் இந்த வீட்டில் வேலை செய்து பின் விலகி இரண்டு வருடங்களின் பின்னர் தனது காதலனுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினால் ரயில் முன் பாய்ந்து அல்லது மோதி உயிரிழந்த பெண்ணின் சம்பவத்தை இந்த சம்பவத்துடன் இணைத்து இந்த வீட்டில் வேலை செய்த போது தற்கொலை செய்து கொண்டதாக செய்தி தயாரித்து பொது மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து பொய் தகவலை பரப்பி உள்ளனர். அத்துடன் 35 வயதுடைய பெண் ஒருவர் இந்த வீட்டில் வேலை செய்து விலகி ஒரு வருடங்களின் பின் சுகயீனம் காரணமாக உயிரிந்தார். அதனால் இந்த அனைத்தும் வேறு நோக்கங்களை கருத்திற் கொண்டு முன்னெடுக்கும் சூழ்ச்சி என்பது நன்கு தௌிவாகிறது.
இது விடயம் குறித்து ஒரு பத்திரிகை செய்தி வௌியிட்ட பின் ஏனைய ஊடகங்கள் இதனை பல அர்த்தங்கள் கொண்டு செய்தியாக வௌியிட்டு வருகின்றன. மேற்கூறிய 11 பேரிடம் 07/28 ஆம் திகதி வரை ஒரு வாக்குமூலம் கூட பெறப்பட்டிருக்கவில்லை. ஆனால் குறித்த அந்த பத்திரிகை 07/24 ஆம் திகதியே ' பதியூதீனின் வீட்டில் 11 யுவதிகளுக்கு கடும் துன்புறுத்தல்' என்ற பொய் செய்தியை தனது பத்திரிகையின் பிரதான செய்தியாக வௌியிட்டு பிரச்சாரம் செய்தது. அதில் எவ்வித உண்மையும் இல்லை என வீட்டார் தெரிவித்துள்ளனர்.
ரிசாத் பதியூதினின் மனைவியின் சகோதரர் அல்லது வேறு உறவுக்கார சகோததர் யாரும் இவ்வாறு குற்றச்சாட்டில் சிறையில் இருக்கவில்லை என்பதோடு இது மிகவும் அடிப்படை அற்ற பொய்யான குற்றச்சாட்டு ஆகும். இவ்வாறான பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி முன்னெடுக்கப்படுவது இன ரீதியான அரசியல் ரீதியான சூழ்ச்சி என்பது தௌிவாகத் தெரிகிறது.
சிங்களே என்ற அமைப்பு 07/28 ஆம் திகதி ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி இந்த முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டை முன் வைத்தது. இவ்வாறு எந்த சம்பவமும் இடம்பெறவில்லை என்பதுடன் இந்த குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிப்பதாக ரிசாத் பதியுதீனின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இது ஒரு சில இனவாத குழுக்களால் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் அரசியல் பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்தவும் அவரது நற் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தவும் அவரது நற் குணத்தை கொலை செய்யவும் முன் எடுக்கப்படும் சதித் திட்டமாகும்.
முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர்
கொழும்பு மாவட்ட அமைப்பாளர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
---------------------------
by (2021-08-05 07:38:10)
Leave a Reply