-வைத்தியர் ஒருவர் கூறுகிறார்
(லங்கா ஈ நியூஸ் - 2021, ஓகஸ்ட் 05 , பிற்பகல் 12.45) நமது நாட்டில் " உத்தியோக பூர்வமற்ற " கொரோனா நான்காவது அலை பரவத் தொடங்கி முழு நாட்டையும் விழுங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த குறிப்பு எழுதப்படுகிறது.
"உத்தியோக பூர்வமற்ற" என்று இந்த குறிப்பை எழுதக் காரணம் நமது நாட்டின் குப்பை ஊடகங்கள் உண்மையான சரியானத் தகவல்களை மக்களுக்கு வழங்காமல் இருப்பதன் காரணமாகவே. உண்மையில் தொலைக்காட்சியில் காட்டப்படுவது மாத்திரமே நமது நாட்டின் நிலை என மக்கள் நினைத்துக் கொண்டு உள்ளனர்.
ஆனால் தொலைக்காட்சி ஊடகங்களில் நாட்டு மக்களுக்கு காண்பிப்பதை விட பல மடங்கு மோசமான நிலையே நாட்டில் காணப்படுகிறது. சுருக்கமாகக் கூறினால் இந்தியாவை விட மிகவும் மோசமான நிலைக்கு கொரோனா பரவல் நாட்டில் ஏற்பட்டுள்ளது.
இலங்கை வரவாற்றில் என்றும் இல்லாத அளவிற்கு பிரதான இரு போதனா வைத்தியசாலைகளில் ( இரத்தினபுரி மற்றும் கராபிட்டி ) நேற்று 4 ஆம் திகதி தொடக்கம் அவசர நிலைமை பிரகடன் செய்யப்பட்டுள்ளது. " அவசர நிலைமை " என்பது வைத்தியசாலை நிறைந்து வழிவதாகவும் புதிய நோயாளர்களை சேர்த்துக் கொள்ள முடியாது என்பதை குறிப்பதாகும்.
முடிந்த அளவு சமாளித்து இயலாத நேரத்தில் தான் இவ்வாறு அவசர நிலைமை பிரகடனம் செய்யப்படும். வைத்தியசாலையில் அனைத்து வாட் அறைகளிலும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் அடையாளம் காணப்படல், வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்திய சேவையாளர்கள் பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படல், வைத்தியசாலைக்கு பொறுப்பு ஏற்க முடியாத அளவு நோயாளர்கள் சிகிச்சைக்காக அழைத்து வரப்படும் போது அவர்களுக்கான வசதி, பரிசோதனை, இரசாயன கூட சேவை உள்ளிட்ட பல கட்டமைப்புக்கள் செயலற்று காணப்படுவதால் வைத்தியசாலையை இவ்வாறு மூடி வைக்க வேண்டிய நிலை உருவாகும்.
தற்போது இந்த இயங்கும் நிலை வைத்தியசாலைகள் அவசர நிலை பிரகடனம் செய்து மூடப்படுவதால் எதிர்வரும் நாட்களில் மேலும் வைத்தியசாலைகள் இவ்வாறான நிலைக்கு தள்ளப்படும்.
இந்த நிலை உக்கிரம் அடையும் போது தான் நீங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் பார்த்தது போன்று வீதிக்கு வீதி நோயாளர்கள் விழுந்து உயிரிழக்கும் நிலை ஏற்படும். நீங்கள் இதுவரை வீதிக்கு வீதி பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டது கிடையாது. இவை அனைத்து இதுவரை வைத்தியசாலைக்கு உள்ளே இடம்பெற்றது. தற்போது நாட்டில் பிரதான வைத்தியசாலைகளின் பிரேத அறை பிணங்களால் நிரம்பி வழிகிறது. அதனால் சடலங்கள் பிரேத அறைக்கு வௌியில் கொரிடோக்களில் தரித்து வைக்கப்பட்டுள்ளது.
தற்போது கொழும்பு உள்ளிட்ட முக்கிய புற நகரங்களில் உள்ள கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களாக இயங்கும் ஹோட்டல்கள் கொரோனா நோயாளர்களால் நிரம்பி வழிகிறது. உண்மையில் ஹோட்டல் சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு உள்ளே அவசர சிகிச்சைப் பிரவும் ICU உருவாக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நிரம்பி வழிகிறது. அவசர சிகிச்சைப் பிரிவு ICU கட்டில்கள் போதுமான அளவு இல்லை. உண்மையைக் கூறினால் தற்போது அவசர சிகிச்சைப் பிரவு ICU கட்டிலின் கையிருப்பு பூச்சியமாகவே உள்ளது. அதாவது அவசர சிகிச்சைப் பிரிவில் ICU நோயாளர்களை அனுமதிக்கும் வசதி எம்மிடம் இல்லை.
நாட்டின் இதயமான கொழும்பு தேசிய வைத்தியசாலை செயலற்று போகும் இறுதி கட்டத்தில் உள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தொற்று நோய் பிரிவு முழுவதும் தற்போது கொரோனா தொற்று நோயாளர்களுக்கு ஒதுக்கப்பட்டு முடிந்து விட்டது. நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளின் நிலைமையும் அதுதான்.
நாட்டில் அடையாளம் காணப்படும் நோய் தொற்றாளர்களை கணக்கிடுவதும் சிரமமாக உள்ளது. உண்மையில் செய்யப்படும் ஒவ்வொரு 500 PCR பரிசோதனையிலும் 300 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது positive உறுதி செய்யப்படுகிறது. சில இடங்களில் PCR பரிசோதனை செய்யும் குப்பிகள் முடிந்து விட்டன.
அதனால் இறுதி சாரம்சமாக கூற முடிவது நாம் வீழ்ச்சி அடைந்து முடிந்து விட்டது. நாம் இதுவரை மூன்று கொரோனா அலைகளை மிகவும் கஸ்டத்திற்கு மத்தியில் தாக்குப் பிடித்து வந்தோம். ஆனால் இம்முறை ஏற்பட்டுள்ள அலை மிகவும் கடினமானது.
அதனால் முடிந்த அளவு நீங்கள் உங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள். காரணம் நாட்டை முடக்கும் Lockdown தீர்மானத்தை மீண்டும் எடுக்க வாய்ப்புக்கள் குறைவு. ( நான் நினைப்பது போல ) . நீங்கள் ரயிலில் பஸ்ஸில் வேலைத் தளம் நோக்கி செல்ல வேண்டி வரும் முடிந்த அளவு பாதுகாப்பாக சென்று வாருங்கள்.
தற்போது எமக்கு உள்ள ஒரே வழி தடுப்பு ஊசி ஏற்றிக் கொள்வதை துரிதப்படுத்துவதாகும். உங்களுக்கான தடுப்பு ஊசியை தவறாது பெற்றுக் கொள்ளவும். அது குறித்து இரண்டு தடவை யோசிக்க வேண்டாம். தடுப்பு ஊசி போட்டுக் கொண்டதால் மாத்திரம் நீங்கள் பாதுகாக்கப் பட மாட்டீர்கள். உங்களுக்கு தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றலாம். அதனால் ஏனைய நாட்களை விட மிகவும் பாதுகாப்பாக இருக்கவும்.
அதற்கு மேல் சொல்வதற்கு எதுவும் ஞாபகம் வருதில்லை. நாங்கள் அந்த அளவு கஸ்டத்தில் உள்ளோம்.
சில வேளைகளில் நாளை நீங்களே பலிகடாவாக இருக்கலாம். சில வேளை இந்த குறிப்பை எழுதும் நான் பலிகடா ஆகலாம்.
மிகவும்... பாதுகாப்பாக இருங்கள் ..!
---------------------------
by (2021-08-05 07:37:40)
Leave a Reply