- எழுதுவது சந்திரபிரதீப்
( லங்கா ஈ நியூஸ் - 2021, ஓகஸ்ட், 09, முற்பகல் 08.50 ) நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் அமைச்சுக்கு கீழ் உள்ள சில விளையாட்டு மைதானங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள நகர சபை மாநகர சபை பிரதேச சபை ஆகியவற்றால் இயக்கப்படும் விளையாட்டு மைதானங்களை வெளி நாடுகளுக்கு விற்பனை செய்வது தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒன்று இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இதற்கு தயாராகி வருகிறார்.
இன்று மாலை 5 மணி அளவில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் இடம்பெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச சமர்ப்பிக்க உள்ள அமைச்சரவைப் பத்திரத்தின் சாராம்சம் லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளது. சுமார் 30 பக்கங்கள் கொண்ட இந்த அமைச்சரவை பத்திரத்தில் 11 வது பக்கத்தில் மேற் கூறிய விளையாட்டு மைதானங்களை வெளி நாடுகளுக்கு விற்பனை செய்யும் சதித் திட்டம் குறித்து தகவல் உள்ளது.
இதில் உள்ள மிகவும் முக்கியமான விடயம் என்னவென்றால் இந்த திட்டத்தை மூடி மறைப்பதற்கான சதித் திட்டமும் இங்கே உள்ளடக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் எவன் கார்ட் நிறுவனத்தின் வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதி வழங்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரத்துடன் சேர்த்து இந்த விளையாட்டு மைதான விவகாரமும் சமர்ப்பிக்கப்பட உள்ளது. எவன் கார்ட் நிறுவன விவகாரத்தில் ஏற்கனவே நாட்டு மக்கள் பல விமர்சனங்களை முன்வைத்து எதிர்ப்புக்களை வெளியிட்டு வருவதால் அந்த விடயம் பூதாகரமாக வெடிக்கும் போது விளையாட்டு மைதான விற்பனையும் மூடி மறுக்கப்படும் என நாமல் பேபி எதிர்பார்த்துள்ளார். எவன் கார்ட் நிறுவனத்தை முன்வைத்து நாமல் பேபியின் தேசத் துரோக நடவடிக்கையை மூடி மறைக்கும் முயற்சியே இதுவாகும்.
நாமல் பேபியின் அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய விளையாட்டுத் துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இயங்கும் விளையாட்டு மைதானங்கள் அதேபோன்று நாட்டிலுள்ள ஏனைய மாகாண விளையாட்டு மைதானங்கள் மாவட்ட விளையாட்டு மைதானங்கள் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்களான நகர சபை மாநகர சபை பிரதேச சபை ஆகியவற்றின் கீழ் நிர்வகிக்கப்படும் விளையாட்டு மைதானங்கள் அரசு மற்றும் அரசுடன் இணைந்து தனியார் நிறுவனங்கள் நிர்வகிக்கும் விளையாட்டு மைதானங்கள் போன்றவற்றில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. அதனால் இதன் நிர்வாக நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் அரசு மற்றும் தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் (Public–Private Partnership -PPP) சுய நிதி நிர்வாக கட்டமைப்பின் கீழ் நிர்வகிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியார் நிறுவனங்களுடன் உடன்படிக்கை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதறகுத் தேவையான அமைச்சரவை அனுமதியை நாமல் பேபி இன்று அமைச்சரவையில் கோர உள்ளார். ( அந்த அமைச்சரவைப் பத்திரத்தின் சாராம்சம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. )
நாமல் பேபி இந்த அமைச்சரவை பத்திரம் மூலம் நாட்டு மக்களை ஏமாற்றி இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பையும் அதிகாரத்தையும் சுகததாச தேசிய விளையாட்டு அரங்கு அதிகார சபைக்கு ஒப்படைப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதாவது விளையாட்டு மைதானங்களை வெளி நாட்டுக்கு விற்கவில்லை என்பதை காட்டுவதற்காக சுகததாச தேசிய விளையாட்டு அரங்கு அதிகார சபையை இங்கே இழுத்துள்ளார்.
நாட்டில் தற்போது உள்ள பிரதான விளையாட்டு மைதானமாக கெத்தாராம மைதானம் சுகததாச தேசிய விளையாட்டு அரங்கு அதிகார சபையின் கீழ் 30 வருட குத்தகைக்கு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று தியகம விளையாட்டு மைதானமும் சுகததாச தேசிய விளையாட்டு அரங்கு அதிகார சபை மூலம் நிதி செலவிட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பிரதான மூன்று விளையாட்டு மைதானங்கள் நாமல் பேபியின் இந்த PPP திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன.
நாடு தற்போது உள்ள பொருளாதார நிலையில் நாட்டில் டொலர் இல்லாத நிலையில் விளையாட்டு மைதானங்களை புனரமைக்கும் திட்டத்திற்கு முதலீடு செய்ய PPP திட்டத்தின் மூலம் எந்த ஒரு தனியார் நிறுவனமும் முன் வராது. அதனால் நாமல் ராஜபக்சவின் இந்த திட்டத்தின் ஊடாக நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு மைதானங்களும் சீனாவிற்கு விற்பனை செய்யும் பிரதான நோக்கமே உள்ளது. ஷெங்ரிலா ஹோட்டல் வியாபாரத் திட்டத்தின் மூலம் நாமல் ராஜபக்ச 5 மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சம் பெற்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் ஒரே ஒரு இடம் ஒரே ஒரு ஹோட்டலை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த தரகு பணமாகும். கெத்தாராம, சுகததாச மற்றும் தியகம போன்ற பிரதான விளையாட்டு மைதானங்களை விற்பனை செய்தால் நாமல் பேபிக்கு எந்த அளவு தரகுப் பணம் கிடைக்கும்?
விளையாட்டு மைதானங்களின் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முடியவில்லை என நாமல் ராஜபக்ச கூறுகிறார். அது அப்படியானால் கணக்காளர் நாயகத்தின் அறிக்கை இருக்க வேண்டும். அப்படி ஒரு அறிக்கையும் இல்லை. நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு மைதானங்களையும் தனியார் மயப்படுத்த வேண்டுமானால் அதற்கான ஆய்வு அறிக்கை வேண்டும். அதுவும் இல்லை. அதனால் இங்கே முன்னெடுக்க எதிர்பார்த்துள்ள மோசடி என்ன என்பது தெளிவாகிறது.
நாட்டின் உள்ளூராட்சி சபைகள் மூலம் நிர்வகிக்கப்படும் விளையாட்டு மைதானங்கள் உண்பதற்கு கேட்பதில்லை. புல் வெட்டும் நடவடிக்கையும் ஒரு வருடத்திற்கு அவ்வப்போதே நடைபெறுகிறது. அதனைக் கூட செய்ய முடியாவிட்டால் நாமல் ராஜபக்சவிற்கு நாம் கூற வேண்டியது, "இவற்றை விற்பனை செய்யாது உனக்கு சாப்பிட இல்லை என்றால் இந்த மைதானங்களில் இறங்கி வயிறு நிறைய புல் சாப்பிடு என்பதாகும்."
பிறந்த பூமியை விற்று திண்ணும் தேசத் துரோகிகளுக்கு சாபம் கிடைக்கட்டும்..!
---------------------------
by (2021-08-09 17:26:17)
Leave a Reply