- எழுதுவது சந்திரபிரதீப்
( லங்கா ஈ நியூஸ் - 2021, ஓகஸ்ட் 12 , முற்பகல் 09.00 ) நாட்டில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஒரு மணி நேரத்தில் 5 பேர் உயிரிழப்பாக தகவல் வௌியாகியுள்ள இக்கட்டான அபாய நிலைமையில் கொழும்பு துறைமுகத்தின் 13 ஏக்கர் காணியுடன் இலங்கைக்கு டொலர் உழைத்துக் கொடுக்கும் கொழும்பு துறைமுகத்தின் வியாபாரம் ஒன்றை எவ்வித விலை மனு கோரலும் இன்றி சீனர்களுக்கு சுமார் 35 வருட குத்தகைக்கு வழங்கும் தேசத் துரோக செயலை செய்ய ராஜபக்ஷ குடும்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தற்போதைய நிலையிலும் கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் பிரிவு செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள CICT என்ற சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்க முயற்சிப்பது தற்போது கொழும்பு துறைமுகத்திற்கு வருடம் ஒன்றிற்கு 500 கோடி ரூபா வருமானம் பெற்றுக் கொடுக்கும் (logistic) பகுதி என்பதுடன் கொழும்பு துறைமுக விகாரையை சுற்றி உள்ள 13 ஏக்கர் காணியும் இதனுடன் இணைத்து வழங்கப்பட உள்ளது. இந்த அளவு இலங்கைக்கு வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் செயற்திட்டத்தை சீனாவிற்கு மிகவும் குறைந்த 150 அமெரிக்க டொலருக்கு 35 வருடங்கள் குத்தகைக்கு வழங்க உள்ளனர். இலங்கை பெறுமதியில் 35 வருடங்களுக்கும் 1000 கோடி ரூபா மாத்திரமே. குறித்த திட்டத்தின் மூலம் இரண்டு வருடங்களுக்கு இந்த 1000 கோடி ரூபாவை இலங்கை வருமானமாக பெற முடியும். இரண்டு வருடங்களில் 1000 கோடி உழைக்கக் கூடிய செயற் திட்டத்தை 35 வருடங்களுக்கு 1000 கோடிக்கு குத்தகைக்கு வழங்குவது எந்த அளவு நட்டம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த செயற் திட்டப் பிரிவில் தற்போது 600 இலங்கை பிரஜைகள் பணி புரியும் நிலையில் சீனர்களுக்கு குத்தகைக்கு வழங்கிய பின் இவர்களின் வேலை வாய்ப்புக்கும் ஆபத்து ஏற்படக் கூடும்.
துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ' ரத்தரங்க' என்ற ரோஹித்த அபேகுணவர்த்தன கடந்த ஜூலை 21 ம் திகதி இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவைக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த மோசடி திட்டத்திற்கு ராஜபக்ஷ குடும்ப அரசாங்கம் விரைந்து செயற்பட்டு 'ஏழு அறிவு ' கொண்ட நிதி அமைச்சர் ஜுலை 26 ம் திகதியே இந்த பத்திரத்திற்கு அனுமதி அளித்துள்ளார். அதன் பின் 27 ம் திகதி அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டு அன்றே அனுமதியும் கிடைத்துள்ளது. ( அதனுடன் தொடர்புடைய அமைச்சரவை பத்திரம், நிதி அமைச்சரின் அனுமதி மற்றும் அமைச்சரவையில் வழங்கப்பட்ட அனுமதி குறித்த ஆவணங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. )
1. எந்த ஒரு அரச வியாபார செயற் திட்டமும் ஆரம்பிக்கப்படுவதற்கு முன் விலை மனு கோரப்பட வேண்டும் என்ற போதும் CICT சீன நிறுவனத்திற்கு இந்த திட்டத்தை வழங்கவென விலை மனு கோரப்படவில்லை.
2. இந்த திட்டத்திற்கு அரச பிரதான மதிப்பீட்டாளர்களால் மதிப்பீடு செய்து அறிக்கை பெறப்படவில்லை.
3. பேச்சுவார்த்தை குழுவில் துறைசார் நிபுணத்துவம் அடங்கிய நான்கு அதிகாரிகள் இருக்க வேண்டும் என அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதும் அந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள துறைமுக உப தலைவர் பிரசாந்த ஜயமான்ன மற்றும் மேலதிக நிர்வாக பணிப்பாளர் ஆகியோர் லொஜிஸ்டக் குறித்து ஒரு துளி அறிவும் இல்லாத நபர்களாவர். லொஜிஸ்டிக் பிரிவிற்கு நியமிக்கப்பட்ட அதிகாரி கனிஸ்ட பிரிவு அதிகாரி ஆவார். பிரசாந்த ஜயமான்ன என்பவர் நாமல் ராஜபக்ஷவின் கருப்பு பணத்தை வௌ்ளை பணமாக மாற்றும் நபர் ஆவார். லொஜிஸ்டிக் குறித்து நிபுணத்துவம் பெற்ற துறைமுகத்தில் உள்ள அதிகாரிகள் இத்திட்டத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அனைத்து திட்டங்களும் பாஸ்ட் என் போர்வாட் என்ற அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
4. லொஜிஸ்டிக் சேவையின் தனி உரிமை கொழும்பு முறைமுக அதிகார சபையிடம் உள்ள நிலையில் சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கிய பின் வெறும் 15% உரிமையே துறைமுக அதிகார சபைக்கு இருக்கும். திட்டத்தின் ஆரம்பத்திலேயே மொத்த வருமானத்தின் 60% துறைமுக அதிகார சபையில் இருந்து இலங்கைக்கு இல்லாது போகும்.
5. இந்த திட்டத்தின் மூலம் எந்த விதத்திலும் நாட்டுக்கு லாபமோ நன்மையோ கிடைப்பதில்லை. உண்மையில் ராஜபக்ஷக்களிக் கைகளுக்கு பாரிள அளவு கொமிஷன் பணம் செல்லும் ஊழல் நிறைந்த செயற் திட்டம் இது என்பது தௌிவாகிறது.
இந்த அளவு தேசத் துரோக செயல் அண்மைக் காலத்தில் கேள்விப் பட்டதில்லை.
இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு துறைமுகத்தின் பிரதான தொழிற்சங்கமான அகில இலங்கை துறைமுக பொது சேவை சங்கம், ஶ்ரீலங்கா சுதந்திர சேவை சங்கம் ( துறைமுகம் ), சுயாதீன துறைமுக சேவை சங்கம் ஆகியவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் இங்கே தரப்பட்டுள்ளது.
---------------------------
by (2021-08-12 12:20:36)
Leave a Reply