-லங்கா ஈ நியூஸ் பிரதம ஆசிரியர் சந்தருவான் சேனாதீர எழுதுகிறார்
( லங்கா ஈ நியூஸ் - 2021 , ஆகஸ்ட், 14, அதிகாலை 04.40 ) லங்கா ஈ நியூஸ் இணையத்தின் அரசியல் மற்றும் பாதுகாப்பு பிரிவு ஆய்வு விமர்சகர் கீர்த்தி ரத்நாயக்கவை வாக்குமூலம் ஒன்றை வழங்கவென இன்று 14 ம் திகதி காலை 10 மணிக்கு கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிகர் தேசபந்து தென்னகோன் தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளார். கீர்த்தி ரத்நாயக்க அதற்கு இணக்கம் தெரிவித்துள்ள போதும் நேற்று 13 ம் திகதி மாலை மற்றும் இன்று 14 ம் திகதி அதிகாலை ரத்நாயக்கவின் மனைவி மற்றும் பிள்ளைகள் வசிக்கும் கண்டி பிரதேச வீட்டிற்கும் அவரது பெற்றோர் வசிக்கும் மாவனெல்ல வீட்டிற்கும் பொலிஸ் அதிகாரிகள் சிலர் சென்று கீர்த்தி ரத்நாயக்கவை தேடி அவர்களை மிரட்டி உள்ளனர்.
சம்பவத்திற்கு காரணமாக அமைந்த விடயம் வருமாறு,
நாளை 15 ம் திகதி இந்தியாவின் சுதந்திர தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. வலயத்தில் தலிபான் தீவிரவாத அமைப்பினரின் செயற்பாடுகள் அதிகரித்து செல்வதும் அதன் பின்னணியில் இருந்து கொண்டு சீனா நாடானது இலங்கையில் அமைதியான முறையில் சுதந்திரமாக முன்னெடுத்துச் செல்லும் சதித் திட்டங்கள் குறித்து விழிப்புடன் இருக்கும் கீர்த்தி ரத்நாயக்க, நாளை இந்திய சுதந்திர தினத்தன்று கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தக் கூடும் என ஆய்வுத் தகவல் வௌியிட்டு இது குறித்து அவதானமாக இருக்குமாறு இந்திய துதரகத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். சீன மற்றும் தலிபான் தீவிரவாத அமைப்புக்கு இடையில் காணப்படும் உறவுகளை வௌிக் காட்டும் புகைப்படம் ஒன்றையும் கீர்த்தி ரத்நாயக்க வௌியிட்டிருந்தார். ( அந்த புகைப்படம் இங்கு தரப்பட்டுள்ளது ) இது குறித்து இந்திய தூதரக அதிகாரிகள் உடனடியாக புதுடில்லிக்கு அறிவித்ததை அடுத்து அங்கிருந்து உயர் அதிகாரிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழைப்பெடுத்து கொழும்பில் உள்ள தமது தூதரகத்திற்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் கிடைக்கப் பெற்றுள்ள தகவல் அடிப்படையில் பாதுகாப்பை பலப்படுத்துவதை விடத்து தகவல் வழங்கிய நபர் பின்னால் பொலிஸார் விரட்டிச் சென்று அவரை வேட்டையாட முயற்சிக்கின்றனர். அதன் விளைவாகவே பொலிஸ் நிலையத்திற்கு வருவதாக இணக்கம் தெரிவித்துள்ள போதும் கீர்த்தி ரத்நாயக்கவின் மனைவி பிள்ளைகள் வசிக்கும் வீட்டிற்கு அதிகாலை சென்று அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்டுள்ளனர்.
அத்துடன் கீர்த்தி ரத்நாயக்கவின் கையடக்கத் தொலைபேசியை பரிசோதனை செய்த பொலிஸார் அவருடன் அழைப்பெடுத்து உரையாடிய இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவரின் மனைவிக்கு தொலைபேசி அழைப்பெடுத்து விசாரணை செய்துள்ளனர். " நீங்கள் இந்த கீர்த்தியுடன் இவ்வளவு நேரம் என்ன பேசினீர்கள் ?" என்று பொலிஸார் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர் புதுமையான பதில் ஒன்றை அளித்துள்ளார். " நான் 18 வயதை கடந்த ஒருவர் அதனால் யாருடன் வேண்டுமானாலும் வேண்டிய அளவு பேசுவேன் அதனால் உங்களுக்கு உள்ள பிரச்சினை என்ன ?" என்று பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
கீர்த்தி ரத்நாயக்க என்பவர் இலங்கை விமானப் படையின் முன்னாள் புலனாய்வு அதிகாரி ஆவார். தற்போது அவர் இராணுவத்தில் இருந்து விலகி உள்ளதுடன் வலயத்தில் காணப்படும் பாதுகாப்பு மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். இது தொடர்பில் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதி கீர்த்தி ரத்நாயக்க லங்கா ஈ நியூஸ் இணையத்தில் வௌியிட்டுள்ளார். (https://www.lankaenews.com/category/48)
ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே இலங்கையில் குண்டு வெடிப்புகள் இடம்பெற வாய்ப்பு உள்ளதாகவும் அவ்வாறு நடந்தால் அது தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லது ஐஸ் ஐஸ் அமைப்புகள் பொறுப்பு அல்ல எனவும் அது கோட்டாபய குழுவின் சாக்கு விளையாட்டு எனவும் கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்திருந்தார். அது அவ்வாறே நடந்தது.
இலங்கையில் சுமார் 3 லட்சம் சீன பிரஜைகள் இருப்பதாக கீர்த்தி ரத்நாயக்க தகவல் வௌியிட்ட போது அதனை மறுத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இலங்கையில் வெறும் 28,000 சீன பிரஜைகளே இருப்பதாகக் கூறினார். ஆனால் அண்மையில் இலங்கையில் உள்ள சீன பிரஜைகளுக்கு செலுத்தவென சீன அரசாங்கம் இலங்கைக்கு 6 லட்சம் சினோபாம் தடுப்பு ஊசிகளை அனுப்பி வைத்திருந்தது. அதன் ஊடாக சீன பிரஜைகள் 3 லட்சம் பேர் இலங்கையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இராணுவ பயிற்சி பெற்ற சுமார் 500 சீன பிரஜைகள் இலங்கையில் இருப்பதாக கீர்த்தி ரத்நாயக்க தகவல் வௌியிட்டார். திஸ்ஸ வாவி புனரமைப்பு விடயத்தில் அதுவும் உறுதி செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த கொஸ்கொட தாரக்க அன்றைய தினம் இரவு சுட்டுக் கொல்லப்பட உள்ளதாக " தேசபந்துவின் ஹிட் ஸ்கொட் பிரிவு இன்று இரவு கொஸ்கொட தாரக்கவை கொலை செய்ய முயற்சி " என்று அன்றைய தினம் நண்பகல் கீர்த்தி ரத்நாயக்க தகவல் வௌியிட்டார். அதுவும் அவ்வாறே நடந்தது.
எனவே கீர்த்தி ரத்நாயக்க வௌியிட்ட இவ்வாறான முக்கிய தகவல்களில் அநேகமானவை அவர் கூறியது போலவே நடந்துள்ளது. வலய பாதுகாப்பு மற்றும் அரசியல் குறித்து கீர்த்தி ரத்நாயக்க வௌியிடும் தகவல்கள் 84% நம்பக் கூடியது என லங்கா ஈ நியூஸ் அல்ல சர்வதேச ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
கீர்த்தி ரத்நாயக்க அண்மையில் இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது 16 குற்றச்சாட்டுக்களை சுமத்தி கட்டுரை எழுதினார். சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் போதைப் பொருள் வியாபாரிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக குற்றம் சுமத்தி கட்டுரை எழுதினார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பினரும் மௌனம் காத்தனர். தற்போது இந்திய தூதரக விடயத்தை சான்றாக வைத்துக் கொண்டு கீர்த்தி ரத்நாயக்கவை வேட்டையாட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது. இருப்பினும் நாம் விழிப்புடனும் தயார் நிலையிலும் இருப்போம் ..!
லங்கா ஈ நியூஸ் பிரதம ஆசிரியர்
---------------------------
by (2021-08-14 04:13:27)
Leave a Reply