-தேசபந்து கரு ஜயசூரிய
(லங்கா ஈ நியூஸ் - 2021, ஆகஸ்ட், 15, பிற்பகல் 6.15 ) லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்ட விடயம் குறித்து நாம் கூடிய கவனம் செலுத்தி உள்ளோம். அவரது சட்டத்தரணி எமக்கு கூறிய தகவல் படி கீர்த்தி ரத்நாயக்கவை கைது செய்வதற்கான சரியாக காரணத்தை பொலிஸார் தெரிவிக்கவில்லை. ஆனால் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்திரம் பொலிஸார் கூறியுள்ளனர். இது மிகவும் அபாயமான நிலைமையாகும். அதனால் கீர்த்தி ரத்நாயக்க ஊடகவியலாளர் கைது செய்யப்படுவதற்கான உரிய காரணத்தை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துமாறு பொலிஸார் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடம் நாம் கோரிக்கை முன் வைக்கிறோம். அத்துடன் அவர் மீது ஏதெனும் குற்றச்சாட்டு இருந்தால் அதனை குறிப்பிட்டு நீதிமன்றில் அவரை நிறுத்துமாறும் இல்லாவிடின் அவரை விடுதலை செய்யுமாறும் நாம் கேட்டுக் கொள்கிறோம்.
இது குறித்து அவரது சட்டத்தரணி மற்றும் ஊடக செய்திகள் வௌியிட்டுள்ள தகவல் படி வௌிநாட்டு தூதரகம் ஒன்றின் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயம் குறித்து அந்த தூதரகத்திற்கு தெரியப்படுத்தி விடயத்தை அடிப்படையாகக் கொண்டு கீர்த்தி ரத்நாயக்க கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது அப்படியாக இருந்தால் அது தகவல் பரிமாறும் செயலாகும். எனவே அப்படியாக இருந்தால் தகவல் வழங்கிய ஒருவரை கைது செய்ததாகவே கருத முடிகிறது. விசேடமாக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் இவ்வாறான விடயத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்படுவது புதுமையான விடயமாகும். அத்துடன் அநீதியான செயற்பாடாகும். ஜனநாயக விரோத செயலாகும். ஏகாதிபதித்துவ செயற்பாடாகும்.
இந்த நாட்டில் ஊடகவியலாளர்கள் கடந்த காலங்களில் எதிர்கொண்ட அழிவுகளை உற்று நோக்குகையில் இவ்வாறான சம்பவங்கள் எமக்குள் அச்சத்தை உண்டாக்கும். அத்துடன் அவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நாட்டில் இடம்பெறப் போகிறதா என்ற பலத்த சந்தேகமும் எமக்குள் எழுந்துள்ளது. அதனால் முழு சமூகமும் இது விடயம் குறித்து அவதானமாக இருக்க வேண்டும்.
ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்கவின் உயிரை பாதுகாத்து உறுதி செய்து செயற்படுமாறு நாம் பொலிஸார் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறோம். அத்துடன் அவருக்கு எதிராக நியாயமான குற்றச்சாட்டுகள் இருப்பின் அவரை காலம் தாழ்த்தாது நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். அப்படி இல்லையேல் உடனடியாக அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.
தலைவர்
நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பு
---------------------------
by (2021-08-16 18:55:20)
Leave a Reply