(லங்கா ஈ நியூஸ் - 2021, ஆகஸ்ட், 26, பிற்பகல் 01.30 ) லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் இரகசிய பொலிஸ் பிரிவில் தடுத்து வைத்து விசாரணை செய்து வரும் நிலையில் சம்பவம் இடம்பெற்று சுமார் 10 நாட்களின் பின் இலங்கையில் உள்ள ஊடக அமைப்புகள் ஒன்றிணைந்து பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளமை தொடர்பில் இலங்கையின் புகழ்பெற்ற மற்றும் சர்வதேச பெயர் பெற்ற ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய கடும் அதிருப்தி வௌியிட்டுள்ளார். ஊடக நிறுவனங்கள் 'மீன் அதிகம் உண்ணுதல்' என்று கூறியுள்ள சுனந்த தேசப்பிரிய இந்த செயற்பாடானது 'இலங்கை ஊடக சுதந்திர போராட்டத்தின் ஒரு கறை' என்றும் விமர்சித்துள்ளார். இது குறித்து ஶ்ரீலங்கா பிரீப் ஊடாக சுனந்த வௌியிட்டுள்ள அறிக்கை வருமாறு,
மீன் அதிகம் உண்ணுதல் : கீர்த்தி ரத்நாயக்க கைது மற்றும் ஊடக சங்க ஒன்றியத்தின் கடிதம்
லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு அடிக்கடி கட்டுரை எழுதும் ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கையில் உள்ள ஊடக அமைப்புக்கள் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தில் பல குறைப்பாடுகள் காணப்படுகின்றன.
இந்த ஊடக அமைப்புகளின் தலைவர்களை விடவும் கீர்த்தி ரத்நாயக்க பல மடங்கு கட்டுரைகளை எழுதி வௌியிட்டுள்ளார். அவர் இலங்கையின் அரசியல் வாதிகள் மற்றும் இராணுவ பிரதானிகளுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
ஊடக அமைப்புக்களின் கடிதத்திற்கு அமைய கீர்த்தி ரத்நாயக்க என்பவர் வெறும் 'கீர்த்தி' என்ற பெயருடைய நபர் ஆவார்.
ஆனால் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ள துஷாரி வன்னியாராச்சி மற்றும் ஆர்.சிவராஜா ஆகியோர் ' என்ற பெயருடைய' நபர்கள் கிடையாது.
கீர்த்தி ரத்நாயக்க 'என்ற நபர்' எனவும் ஏனையவர்கள் அவ்வாறு இல்லை என்றும் எழுதப்பட்டுள்ள கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள அனைத்து ஊடக அமைப்புக்களின் பிரதானிகளும் நாட்டு மக்களிடம் அதற்கு விளக்கம் கொடுப்பார்களா..?
இரண்டாவது கீர்த்தி ரத்நாயக்க கைது செய்யப்பட்டுள்ள விடயம் அவர் பணிபுரியும் லங்கா ஈ நியூஸ் இணையத்தின் ஆசிரியர் எழுத்து மூலம் தெரியபடுத்திய பின்னரா ஊடக அமைப்பின் பிரதானிகளுக்கு தெரியும்.
இலங்கையின் பத்திரிகைகள், இணைய ஊடகங்களில் வௌிச்சம் போட்டுக் காட்டிய செய்தியை, லங்கா ஈ நியூஸ் இணைய ஆசிரியர் அனுப்பிய கடிதத்தின் மூலம் அறிந்து கொண்டோம் என கடிதம் எழுதி ஊடக அமைப்பின் பிரதானிகள் அதில் கையெழுத்திட்டது ஏன்?
துஷாரி வன்னியாராச்சியின் வீட்டில் சோதனை நடத்தியமை தொடர்பில் அவர் கூறியதால் அமைப்புகள் தெரிந்து கொண்டதாக கூறியுள்ளனர்.
அந்த கடிதத்தில் உள்ள மற்றுமொரு ஊடகவியலாளர் குறித்து அவ்வாறு கூறாதது ஏன்?
மேலும் மட்டக்களப்பு ஊடகவியலாளர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கடிதத்தில் கூறியுள்ள போதும் அவரது பெயரை வௌியிடாது தப்பியுள்ளனர்.
கடிதத்தின் மிகக் கேவலமான அங்கம் என்னவென்றால் ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க கொடிய பயங்கரவாத தடை சட்டத்தின் கைது செய்யப்பட்டமை குறித்து சுட்டிக்காட்டப்படவில்லை. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் வழக்கு தாக்கல் செய்யாமல் பல வருடங்கள் தடுத்து வைத்திருக்க முடியும்.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் அக்னாஸ் ரஸீம் ஆகியோருக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது.
கீர்த்தி ரத்நாயக்க எந்த ஒரு பயங்கரவாத செயலிலும் ஈடுபடவில்லை. அப்படி இருக்கையில் அவர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவது குறித்து ஊடக அமைப்புகள் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?
ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டு அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்படுவதை கண்டிக்காமல் அவர்களை சட்ட ரீதியாக கைது செய்யுமாறும் கைது செய்யப்படுதல் மற்றும் விசாரிக்கப்படுதல் குறித்து பகிரங்கமாக அறிவிக்குமாறும் ஊடக அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை மிகவும் கவலை அளிக்கும் விடயமாகும்.
இந்த கடிதம் இலங்கை ஊடக சுதந்திர போராட்டத்தின் ஒரு கறை
'மீனையேனும் அதிகம் உண்ணுவோம்' என்று சொல்வது ஏனோ தானோ என்று வௌியிடும் இவ்வாறான கருத்துக்களை சுட்டிக்காட்ட கூறுவதாகும்.
இந்த ஊடக அமைப்பு பிரதானிகள் மார்ட்டின் நிமோலர் என்பவரை நினைவில் கொள்ள வேண்டும் என இறுதியாக கூற விரும்புகிறேன்.
2021 ஆகஸ்ட் 23
---------------------------
by (2021-08-26 13:50:23)
Leave a Reply